புளோரிடா சாவன்னா ஹோலி மரம் |
சாவன்னா
ஹோலி மரம், புளோரிடா மாநிலத்தின் அழகான காட்டுமரம், சாலைகளில்,
தெருக்களில் நடுவதற்கு மிகவும் ஏற்ற மரம். இந்த
சாவன்னா ஹோலி மரத்தின் கவர்ச்சிகரமான அம்சமே இதன் பழங்கள்தான், கண்ணைப்
பறிக்கும் பளபளப்பான சிவப்பு நிறத்தில் கொத்துக் கொத்தாகக் காய்க்கும், இவற்றை சாப்பிட என்று அரைடஐன் பறவைகள் எப்போதும் காத்திருக்கும் இதன் மரங்களை மரச்சாமான்கள்
செய்யவும் கலைநுட்பமான வேலைகள் செய்யவும்,
இதன் மரக்கட்டைகளுக்கு சாயம்.
ஏற்றி, “எபனி” மரத்தைப்போலவும் உபயோகப்படுத்தவும், அமெரிக்கப்
பழங்குடிகள் இதனை பெருமளவு பயன்படுத்தினர்.
தமிழ்ப்பெயர்: சாவன்னா
ஹோலி மரம் (SAVANNAH HOLY TREE)
பொதுப்பெயர்:
டோப்பல் ஹோலி, சாவன்னா ஹோலி ட்ரீ (TOPAL HOLY, SAVANNAH HOLY TREE)
தாவரவியல்
பெயர்: அட்டென்னுவேட்டா சாவன்னா (ATTENUATA
SAVANNAH)
தாவரக்
குடும்பம் பெயர்: அக்யுபோலியேசி (AQUIFOLIACEAE)
தாயகம்:
அமெரிக்கா
பொதுப்பெயர்:
டோப்பல் ஹோலி, சாவன்னா ஹோலி ட்ரீ (TOPAL HOLY, SAVANNAH HOLY TREE)
அழகான
காட்டுமரம்
அமெரிக்காவின்
உள்ளுர் மரம். ஒரு காலத்தில் புளோரிடா மாநிலத்தில்
தானாக முளைத்து. தானாய்
வளர்ந்து, தானாகப் பரவிய அழகு மரம். ஒரு
காலத்தில் கேட்பாரற்ற இருந்த மரம். இன்று பிரபலமான அழகுமரம்.
நகர்ப்புறத்தை அழகுபடுத்தும் மரங்கள் என்று பட்டியல் தயாரித்தால் அதில் கண்டிப்பாய் சாவன்னா ஹோலி மரம் இருக்கும். அதற்கான சகலவிதமான சாமுத்ரிகா லட்சணங்களும்
இதனிடம் உண்டு. ஒரே வரியில் சொல்வதனால் புளோரிடா மாநிலத்தின் அழகான காட்டுமரம் (WILD
TREE)
சாவன்னா
பழமையான நகரம்.
சாவன்னா
என்பது வட அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தின் பழமையான நகரம்.
அமெரிக்கப் புரட்சியின்போது முக்கியமான துறைமுக நகரமாக இருந்தது இன்று அது
ஒரு முக்கியமான தொழில் நகரமாக இருக்கிறது.
முக்கியமான
துறைமுகமாகவும் இருக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடலின் முக்கியமான துறைமுகமும் கூட, “சாவன்னா” என்ற பெயரில்
ஒர் ஆறு ஒடுகிறது அதன் கரையில்தான் சவுத் கரோலினா
மற்றும் ஜார்ஜியா
மாநிலங்கள் அமைந்துள்ளன.
“சாவன்னா” புல்வெளிகள்
நாம்
எல்லோருமே “சாவன்னா புல்வெளிகள்”
எனப் படித்திருப்போம்.
அதற்கும் இந்த “சாவன்னா”
வுக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை. ஆனல் சாவன்னா
புல்வெளி என்றால் அங்கு புல்வகைகள் படர்ந்து இருக்கும். அதற்கு அடுத்தபடியாய் நிறைய குறு மரங்கள்
அல்லது சிறு மரங்கள் (SHRUBS) அதிகம்
இருக்கும்.
மரங்கள் கூடுதலான இடைவெளியில் இருக்கும். இந்தப் புல்வெளிகள் எங்கு இருந்தாலும், அவற்றின்
பெயர் சாவன்னா புல்வெளிகள்தான். வட
அமெரிக்காவில், தென்
அமெரிக்காவில், ஆப்ரிக்காவில்,
இந்தியாவில் என எல்லா இடங்களிலும் “சாவன்னா”
புல்வெளிகள் இருக்கின்றன.
புல்வெளிகளும்
காட்டுத் தீக்களும்
புற்களும்,
மரங்களும் சேர்ந்திருக்கும் நிலப்பகுதிதான் சாவன்னா, ஜார்ஜியாவின்,
“பிளாக்லேண்ட்
பிரெய்ரி” என்னும்
பகுதியை இதுபோன்ற புல்வெளிகளாகச் சொல்லுகிறார்கள்.
இந்தியாவில்,
இமயமலைப் பகுதிகள், கங்கை மற்றும் பிரம்மபுத்திரா
நதிப் பள்ளத்தாக்குகள்,
கட்ச் வளைகுடாப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் ஆகிவற்றில் இது போன்ற புல்வெளிகள்
இருக்கின்றன.
இனி
சாவன்னா ஹோலி மரம்பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
இந்த மரங்கள் 10 முதல் 20 அடி உயரத்திற்கு வளரும்.
மரங்கள் “குச்சி
ஐஸ்” தோற்றத்தில்
கூம்பு. வடிவத்தில் வளரும். பூக்கள் பசுமை
கலந்து வெண்மை நிறத்தில் இருக்கும். அவை பார்க்கும்படியானவை அல்ல>
ரசிக்கும்படியானவை அல்ல.
பறவைகள் பசியுடன் காத்திருக்கும்.
ஆனால் இந்த சாவன்னா ஹோலி மரத்தின் கவர்ச்சிகரமான அம்சமே இதன் பழங்கள்தான்,
அசத்தலானவை. கண்ணைப் பறிக்கும் பளபளப்பான
சிவப்பு நிறத்தில் கொத்துக் கொத்தாகக் காய்க்கும்.
இதன் பழங்களை சாப்பிட என்று அரைடஐன் பறவைகள் எப்போதும் பசியுடன்
“கியூ” வரிசையில்
காத்திருக்குமாம்.
இந்த
மரங்கள் அமிலத்தன்மை உடைய மண்ணி;ல் நன்கு வளரும். சுமாரான
ஈரப்பசை உள்ள மண்ணிலும் வளரும். நல்ல
வடிகால் வசதி உள்ள மண்ணிலும் நன்கு வளரும்.
சுமாரான சூரிய வெளிச்சம் இருந்தாலும் சுமாராக வளரும்.
இன்று
நகர்ப்புறங்களில், பூங்காக்கள், தோட்டங்கள், சாலைகள், தெருக்கள்
என்று அவற்றை அழகுபடுத்துவதற்கு நமக்குக் கைவசம் உள்ள ஒரே தொழில்நுட்பம், மரங்களை
செடிகளை நடுவதுதான்.
லேண்ட்ஸ்காப்பர் மரம்
இதனைச்
செய்வதில் திறமைசாலிகளை லேண்ட்ஸ்காப்பிஸ்ட் (LANDS CAPIST) எனச்
சொல்லுகிறார்கள். இதற்கு உதவியாக
இருக்கும் மரங்களை “லேண்ட்ஸ்கேப் ட்ரீஸ்”(LANDS CAPE TREES) என
அழைக்கிறார்கள். இந்த “சாவன்னா
ஹோலி” மரத்தையும்
அப்படித்தான் சொல்லுகிறார்கள்.
ஒரு
காலத்தில் காடுகளில் இருந்து வெட்டுபட்டு தட்டுப்படாமல் போன
மரங்கள் எல்லாம் நகரங்களில் நடப்பட்டு வருகின்றன.
அப்படி நகரங்களுக்குக் குடியேறி வரும் மரங்களின் ஒன்றுதான் இந்த “சாவன்னா
ஹோலி”.
இந்தியாவின் பிரபலமான மரங்கள்
அப்படித்தான்
இந்தியாவின் நொச்சி மரமும், பூமரமும்,
ஆத்தி, இருவாட்சி,
மத்தாரை என அத்தனை மரங்களும் வட அமெரிக்க மாநிலங்களை எல்லாம்
அழகுபடுத்தி வருகின்றன.
இந்த
மரமே களிமண், மணல்சாரி, இருமண்பாடான
மண், லேசான உப்புமண், போன்றவற்றிலும்
நன்றாக வளரும். அத்தோடு கடுமையான
வறட்சியையும் தாங்கி வளரும்.
சாலைகளில்,
தெருக்களில் நடுவதற்கு மிகவும் ஏற்ற மரம். வயல் வரப்புகளில் நடலாம். நிறைய வேர்கள் விட்டு வளரும். ஆனால் அதிக தூரம் பரவாது. அகலமான இதன் இலைகள், உதிராதத் தன்மை உடையவை.
அதனால் மரங்கள் ஆண்டு முழுவதும் கொப்பும் குலையுமாக காட்சி தரும்.
இதன்
மரங்களை மரச்சாமான்கள் செய்யவும் கலைநுட்பமான வேலைகள் செய்யவும் அமெரிக்கப்
பழங்குடிகள் இதனைப் பயன்படுத்தினர். இதன்
மரக்கட்டைகளுக்கு சாயம். ஏற்றி>
“எபனி” மரத்தைப்போல
உபயோகப்படுத்தினார்கள். இதன் இலைகள்
மற்றும் பழங்களை புனிதமானவைகளாகக் கருதி வணங்கினார்கள்.
கொசுறு
இந்த
மரங்களில் கிளைகளை, வெட்டி நடலாம். பதியன்கள்
தயாரித்தும் நடலாம்.
FOR
FURTHER READING
WWW.EN.M.WIKIPEDIA.ORG – SAVANNA, GEORGIA
WWW.BACKYARDGARDNER.COM/ ATTENUATA SAVANNAH
WWW.SERVESCAPE.COM / ILEX X ATTENUATA
WWW.MAGNOLIAGARDENNURSERY.COM // SAVANNAH HOLY
WWW.MONROVIA.COM / ATTENUATA SAVAMMAH (556 WORDS)
A
REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment