சமுத்ரப்பழம் அழகு அலையாத்தி |
சமுத்ரப்பழம், மிகவும் அழகான அலையாத்தி வகை மரம்.
பெரிய இலைகளை உடையவை. வாடாமல்லி
மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்கும்.
பழங்கள் கொய்யா பழங்களைப்போல இருக்கும், இது உலக அளவில் ஒரு முக்கிய மான மூலிகை மரம், சின்கோனா மரத்திற்கு சமமான மருத்துவ
குணங்களைக் கொண்டது> இந்த மரத்தின் விதைகள், மற்றும் பட்டைகள் மலேரியா காய்ச்சல் மற்றும் சரும நோய்களைக்
குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள், வீடுகள் கட்ட, கட்டில் செய்ய, தரைகள் மேவ, மரச் சாமான்கள் செய்ய, இப்படி பல வகைகளிலும் பயனாகிறது, இலைகளில் இருக்கும் அதிகபட்சமான டேனின்
தோல் பதப்படுத்தவும், சாயங்கள் தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.
தமிழ்: அரட்டம், ஈசுதரு, ஈஸ்வர தரு, கடம்பும், சமுத்ரா பழம் .(ARATTAM,
ISUTARU, ISWARA TARU, KADAMBAM, SAMUTHRA PAZHAM)
பொதுப் பெயர்கள்: பவுடர் பப் மேங்குரோவ், பிஷ்;
கில்லர் ட்ரீ, பிஷ்; பாய்சன் வுட், பிரெஷ்; வாட்டர் மேங்குரோவ், சுமால் லீவ்டு பேரிங்டோனியா.
தாவரவியல் பெயர்: பேரிங்டோனியா ரெசிமோசா (BARRINGTONIA RACEMOSA), யூஜிpனியா ரெசிமோசா (EUGENIA
RACE MOSA)
தாவரக் குடும்பம் பெயர்: லெசித்திடேசி (LECYTHIDACEAE)
தாயகம்: பிலிப்பைன்ஸ்
பிறமொழிப் பெயர்கள் (VERNACULAR
NAMES)
பெங்காலி: சமுத்ரப்பால், குண்டா (SAMUDRAPHAL,
KUNDA)
இந்தி: லிஜ்ஜுல், நோவிஸ்னி (LIJJUL,
NOVISNI)
கன்னடா: கனகிநத்தோரா, கெம்புகனிகுலு, நிவார், சமுத்ரபவா (KANAGINATORA, KEMPUGANIGULU> NIVAR,
SAMUDRA PHALA).
மலையாளம்: கடம்பு, சம்ஸ்டரவட்டி, சமுத்ரம் (KADAMBU,
SAMSTARAVATI, SAMUTRAM)
மராத்தி: நிவார், சத்பாலி (NIVAR,
SADPHALI)
ஒரியா: சமுரப் பூ (SAMUDRAPOO)
சமஸ்கிருதம்: ஹிஜோலா, நிச்சுலா, நிப்பா, சமுத்ரவாடி, சமுத்ரபாட் (HIJJOLA, NICHULA, NIPA,
SAMUDRAVADI, SAMUDRAPAD)
தெலுங்கு: கடப்பா, கணப்பா, சமுத்ரப்பண்டு (KADAPPA,
KANAPPA, JAMUDRA PANDU)
மரங்கள் பரவி இருக்கும் நாடுகள்
ஆஸ்திரேலியா, புரூனே, கம்போடியா, எத்தியோப்பியா, ஜப்பான், கென்யா, இந்தோனேசியா, நியூசிலாந்து, பப்புவா நியூகினியா, சமோவா, சாலமன் தீவுகள் சோமாலியா, தான்சானியா, தாய்லாந்து, டோங்கா உகாண்டா, வியட்நாம் மற்றும் ஜான்சிபார்.
இந்த மரங்கள் பெரும்பாலும் இந்தியப் பெருங்கடலின் கடலோரங்களில்
காணப்படுகின்றன. வங்காளம் முதல் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் அழகுக்காக
வளர்க்கிறார்கள். சுந்தர்பன் காடுகள், மற்றும் அந்தமான் நீவுகளின் சதுப்பு நிலப்
பகுதிகளில் இம்மரங்கள் வளர்ந்துள்ளன.
சர்வதேச அளவில் இந்தியா உட்பட மொசாம்பிக், மடகாஸ்கர், ஸ்ரீலங்கா, மலேசியா, தாய்லாந்து, லாவோஸ், தெற்கு சைனா, வடஅமெரிக்கா, டைவான், பாலிநேசியன் தீவுகள், கிழக்குஆப்ரிக்கா முதல் மேற்கு பசிபிக் வரை உள்ள பகுதிகளில் இந்த
மரங்கள் பரவலாகக் காணப்படுகின்றன.
அழகான மரம்
சமுத்ரப் பழ மரம் மிகவும் அழகான மரம். பெரிய
இலைகளை உடையவை. வாடாமல்லி மற்றும் வெள்ளை
நிறத்தில் பூக்கும். பழங்கள் கொய்யா
பழங்களைப்போல இருக்கும்.
பூக்கள் சரஞ்சரமாகக் தொங்கும்.
இனிமையான வாசம் தரும். நான்கு
மூலைகளைக் கொண்ட வடிவத்தில் இருக்கும். இதன் பழங்கள். பழத்தசை நார்தன்மை
உடையதாக இருக்கும். பழங்கள் பெரும்பாலும்
நீரில் அடித்துச் செல்வதன் மூலம் பரவும்.
மூச்சுவேர்’களை உருவாக்கிக் கொள்ளும்
சமுத்திரப் பழ மரம் அலையாத்தி மரங்களுக்கு தொடர்புடைய மரம். அலையாத்தி மரங்களைப்போல சதுப்பு நிலங்களில்
சகஐமாக வளரும். மூச்சுவிடுவதற்கான பிரத்தியேகமான ‘மூச்சுவேர்’ களை (PNUE METAPHORES) உருவாக்கிக் கொள்ளும்.
தோல் பதப்படுத்தலாம்
இலைகளை உணவாகப் பயன்படுத்துகிறார்கள். கீரையாக>
காய்கறியாக> மற்றும் ‘கேக்’குகள் தயார் செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
இலைகளில் இருக்கும் அதிகபட்சமான டேனின் தோல் பதப்படுத்தவும்> சாயங்கள் தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் சிவப்பு> காவி>
சாம்பல் மற்றும் கருப்பு நிற சாயங்களை தயாரிக்கிறார்கள்.
பழங்குடி மக்களின் மருந்து
சமுத்திரப்பழ மரம்> உலக அளவில் ஒரு முக்கியமான மூலிகை மரம்> சின்கோனா மரத்திற்கு சமமான மருத்துவ
குணங்களைக் கொண்டது இந்த மரம்.
இந்த மரத்தின் விதைகள், மற்றும் பட்டைகள் மலேரியா காய்ச்சல் மற்றும் சரும நோய்களைக்
குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.
இதன் வேர்கள், பட்டைகள், சாறு ஆகியவற்றை மருந்துகள் செய்ய பயன்படுத்துகிறார்கள். மலேரியா மஞ்சள் காமாலை> ரத்த அழுத்தம், சின்னம்;மை, ஆஸ்துமா உட்பட பல சில்லறை நோய்களையும் குணப்படுத்த இந்த மரம் மூலிகையாகப் பயன்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் மச்சல் ஆற்றுப் படுகைகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் இதனை உடலைக் குளிர்விக்கும் மருந்தாகப்
பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
அவர்கள் சமுத்திரப்பழ மரம் பற்றி
‘யூஸ்புல் நேட்டிவ் பிளாண்ட்ஸ் ஆஃப் ஆஸ்ட்ரேலியா’ என்ற புத்தகத்தில் இதுபற்றி விளக்கமாக
எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் 1889 ம் ஆண்டு வாக்கில் வெளியிடப்பட்டது.
பிளைவுட் போர்டுகள்
கட்டைகள் வெளிர் மஞ்சள் மற்றும் சிவப்பு சாயை உள்ளதாக இருக்கும்.
நடுத்தமான எடை உள்ள கடினமான மரம்.
பல்வேறு விதங்களில் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.
வீடுகள் கட்ட, கட்டில் செய்ய, தரைகள் மேவ, மரச் சாமான்கள் செய்ய> கருவிகளுக்கு கைப்பிடிகள் போட, சமையல் பாத்திரங்கள், உரல் உலக்கைகள்> வேளாண்மைக் கருவிகள், பெட்டிகள், பிளைவுட் போர்டுகள், பார்ட்டிகில் போர்டுகள். வீனீர் மரத் தகடுகள், வண்டிகள், படகுகள், கடைசல் சாமான்கள் இப்படி பல வகைகளிலும் பயனாகிறது.
விதை மற்றும்
கிளைத்துண்டுகளை வெட்டி நட்டு புதிய மரங்களை உருவாக்கலாம்.
கொசுறு:
விதைகளில் சாப்பனின்கள் (SAPPONINS) அதிகம் இருப்பதால் மீன் நஞ்சாக மீன்பிடிக்க பயன்படுத்துகிறார்கள். விவசாயத்தில் பூச்சிக்கொல்லியாகவும்
பயன்படுத்துகிறார்கள்.
FOR
FURTHER READING
WWW.EN.M.WIKIPEDIA.ORG / BARRINGTONIA RACEMOSA
WWW.WORLDAGROFORESTRY.ORG /
BARRINGTONIA RACEMOSA, LECYTHIDACEAE
WWW.FLOWERSOFINDIA.NET / POWDER PUFF MANGROVE
- BARRINGTONIA RACEMOSA
WWW.TROPICAL.THEFERNS.INFO /
BARRINGTONIA RACEMOSA – USEFUL TROPICAL PLANTS
WWW.NPARKS.GOV.SG
/ BARRINGTONIA RACEMOSA (L) SPRENG – NATIONAL PARKS BOARD
A REQUEST
I LOVE TO SEE
YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment