Monday, June 12, 2023

ROOF WATER HARVESTING IS THE ONLY SOLUTION குடிநீர் பஞ்சத்திற்கு ஒரே தீர்வு கூரைநீர் அறுவடை

கூரைநீர் அறுவடை
குடிநீர் பஞ்சத்திற்கு ஒரே தீர்வு 


1.
மழைக் காலத்தில் முதன்முதலாக பெய்யும் நீரை சேகரிக்கக் கூடாது என்கிறார்களே, அது ஏன் ..

மழை பெய்ய ஆரம்பித்ததும்,  முதல் 10 அல்லது 20 நிமிடங்களுக்கு சேமிக்காமல் விட்டுவிடலாம்;.    இதனால் கூரையில் ஏதாவது அசுத்தம் சேர்ந்திருந்தால்,  அது தானாகக் கழுவிக்கொண்டு போய்விடும்.;

2. கூரைநீர் அறுவடையை எந்தெந்த பகுதிகளில் எல்லாம் கடைபிடிக்கலாம் ..?  

உலகின் அதிக மழை பெறும் பெருமை உடைய சிரபுஞ்சியில் கூட மக்கள் கோடைக் காலத்தில் ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய் விலை கொடுத்து வாங்குகிறார்கள். இப்போது நீங்களே சொல்லுங்கள்,  கூரைநீர் அறுவடை எந்தெந்த பகுதிகளில் எல்லாம் கடைபிடிக்கலாம் ..?

3. மழை அறுவடையில் எத்தனை முறைகள் உள்ளன...?   

இன்று இயற்கையான நீர் ஆதாரங்களில்,  செயற்கையான தொட்டிகளில்,  நிலத்தடியில் உள்ள மண் கண்டத்;தில்,   வீடுகள் அல்லது இதர கட்டிடங்களின் கூரைகளின் மூலம்,   என நான்கு முறைகளில் மழை அறுவடை செய்யலாம்.

4. பயன்படும் வகையில் மழைநீர் அறுவடையை எத்தனை  வகைகளில் பிரிக்கலாம் ..?  

இரண்டு வகைகளில்ஒன்று உடனடியான உபயோகத்திற்கு,  இரண்டு நிலத்தடியில் சேகரித்து  எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கு.

5. கூரை நீரை அறுவடை செய்வதால் கிடைக்கும் பயன்கள் யாவை ..?  

பணம் மிச்சம்;,  மின்சாரம் மிச்சம்,; பெண்களின் பெண் குழந்தைகளின் உழைப்பு மிச்சம்,; படும் மன உளைச்சல் மிச்சம்,; தண்ணீரினால் பரவும்; நோய்களுக்காக செய்யும் செலவு மிச்சம்;,   நமக்குத் தெரியாமல் அதிகப் படியாய் கலந்திருக்கும் நச்சு உப்புக்கள், மற்றும் கனரக உலோகங்களினால் ஏற்படும் உடல் உபாதைகளைத் தீர்க்க செய்யும் செலவு மிச்சம்.

எங்கெல்லாம் கூரை நீரை அறுவடை செய்யலாம் ?

குன்றிருக்கும் இடங்களில் எல்லாம் குமரன் இருப்பான். அது போல கூரை இருக்கும் இடமெல்லாம் மழை நீரை அறுவடை செய்யலாம்.

இது தனியார் வீடுகள்,  அரசு மற்றும் தனியார் அலுவலகக் கட்டிடங்கள்,  தொழிற் கூடங்கள்,; பள்ளிக் கூடங்கள்,; கல்லூரிகள்> பல்கலைக் கழகங்கள் - இப்படி எல்லா கட்டிடக் கூரைகளிலும் மழை அறுவடை செய்யலாம். அவர்கள் தண்ணீருக்காக செய்யும் செலவு மிச்சம்.

குறிப்பாக அங்கிருக்கும் கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க முடியும். பொது மக்கள் வந்து செல்லும் அலுவலகங்களில் (மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் உட்பட) உள்ள கழிப்பறைகளில் உள்ளே நுழைய முடிவதில்லை. இதற்கெல்லாம் தீர்வு மழைநீர் அறுவடை ஒன்றுதான்.

அறுவடை செய்யும் மழை நீரின் அதன் கார அமிலத்தன்மை எப்படி இருக்கும்  ..?  

அறுவடை செய்த நீர்  காரத்தன்மை இல்லாமல் நடுநிலையான கார அமிலத் தன்மையுடன்  இருக்கும். இதனை வீடுகளில் தொழிற்சாலைகளில்; இதர நிறுவனங்களில் அப்படியே பயன்படுத்தலாம். சில இடங்களில் லேசான அமிலத் தன்மையுடன் இருக்கும்.

கூரைநீர் அறுவடையை நகர்ப்புறத்தில் செய்வதால் என்ன மாற்றம் நிகழும் ..?   வெள்ள அபாயம் குறையும். குடிநீர் பிரச்சனை தீரும். குடிநீருக்காக செய்யும் செலவு மிச்சப்படும்; நீர் எடுப்பது விநியோகம் செய்வது ஆகியவற்றிற்கு செலவு செய்யும் மின்சாரம்  மற்றும் எரிபொருள் மிச்சமாகும்..  பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் வேலைப்பளு குறையும்.

பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் அலுவலகங்களில் உள்ள கழிப்பறைகளில் தைரியமாக உள்ளே நுழையலாம். ஊராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் குழாய்நீருக்காக நீண்ட வரிசைகளில் தாய்மார்கள் குடங்களுடன் காத்திருக்க வேண்டாம். குற்ற உணர்ச்சி இல்லாமல் செடிகளுக்கு நீர் ஊற்றலாம்; சைக்கிள் கழுவலாம்;. டுவீலர் கழுவலாம்;. மற்றும் கார் கழுவலாம்.

வெளி நாடுகளில் மழை நீரை அறுவடை செய்து பயன்படுத்துகிறார்களா ?

சீனா அர்ஜென்டினா பிரேசில் ஆகிய நாடுகளில் மழை நீரை சேமித்து குடிக்க, குளிக்க துவைக்க சமைக்க கழுவ செடி வளர்க்க என்று பயன்படுத்துகிறார்கள்.

இஸ்ரேலில் அதிகம் மழை நீரை அறுவடை செய்து பயன்படுத்துவதாகச் சொல்லுகிறார்களே ?

ஆமாம் இஸ்ரேல் நாட்டினர் பயன்படுத்தும் மொத்த நீரில் 10 முதல் 12 சதவிகித நீர் மழை நீரை அறுவடை செய்தது. உலகிலேயே மழை நீரை சேமித்து பயன்படுத்துவதில் முதல் நிலையில் இருப்பவர்கள் தாய்லாந்து நாட்டினர்.

கோவில்களில் மழைநீர் சேகரிப்பு

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 2014 ம் ஆண்டு தமிழ்நாட்டில் 1500 கோவில்களில் மழைநீர் அறுவடைக் கட்டமைப்புகளை போர்க்கால அடிப்படையில் ஒரே மாதத்தில் உருவாக்க உத்தரவிட்டார்.

தமிழ் நாட்டில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மொத்தம் 38500 கோவில்கள் உள்ளன. மழைநீர் கட்டமைப்புகள் இல்லாமல் ஏறத்தாழ 30000 க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன என அறிகிறோம். இந்தக் கோவில்களிலும் மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளை உருவாக்க முடியும்.

தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்களில் ஏற்கனவே 2359 மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகள் உள்ளன ஆனால் அவை பழுது பார்க்கப் படாமலும் பராமரிக்கப் படாமலும் உள்ளன. அவற்றை பழுது பார்க்கவும் பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

மழைக்காலம் முடிவதற்குள் இந்தப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடித்தால இன்றைய அரசுக்கு தமிழகத்தின் சரித்திரத்தில் ஓர் இடம் கிடைக்கும் என்கிறேன் நான் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ?

PLEASE POST A COMMENT, REGARDS GNANASURIA BAHAVAN D (AUTHOR);

55555555555555555555555555555555555555555555555555555

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...