ரோட்டோர மூக்குத்திச்செடி |
உண்ணி மரம் அல்லது ரோட்டோரத்து புதர்ச்செடி, அல்லது காடுகளின் களை மரம், நிறைய வீடுகளில், வீட்டுத் தோட்டங்களில், அலுவலகக் கட்டிட வளாகங்களில், பூந்தோட்டங்களில் அழகுச் செடி, நோய்களை குணப்படுத்தும் மருந்து, வளர்ந்த, முதிர்ந்த மரங்கள் மேஜை நாற்காலி மற்றும் படுக்கை, இதர தட்டுமுட்டு மரச் சாமான்கள் செய்ய வளைந்து கொடுக்கும்.
தமிழ்ப்பெயர்: உண்ணி செடி, பீநாறிப்பூண்டு,
மூக்குத்திச்செடி (UNNICHEDI,
PINARIPOONDU, MOOKKUTHICHEDI)
பொதுப் பெயர்கள்: பிக்சேஜ், ஒயில்ட்சேஜ், ரெட்சேஜ், டிக்பெர்ரி. வெஸ்ட்இண்டியன் லெண்டானா (BIG SAGE, WILD SAGE, RED SAGE, TICK BERRY, WEST
INDIAN LANTANA)
தாவரவியல் பெயர்: லெண்டானா கேமரா (LANTANA CAMRA)
தாவரக் குடும்பம் பெயர்: வெர்பனேசி (VERBANACEAE)
தாயகம்: அமெரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதிகள் (AMERICAN TROPICS)
எங்லோருக்கும் தெரிந்த பெருஞ்செடி, குறுமரம்: அதாவது, சிறிய மரம்
பெரிய செடி. எல்லோருக்கும் தெரிந்த பெயர்
உண்ணி செடி. சீமைக் கருலை மரத்தைப்போல, அங்கிங்கெனாதபடி பரவி இருக்கும் இன்னொரு சீமை சரக்கு.
“அழகான ஆபத்து”
என்று வருணிக்கிறார்கள் தாவரவியல் அறிஞர்கள்.
அமெரிக்கா அனுப்பிவைத்த அழகான ராட்சசி (A BEAUTIFUL INVASIVE PLANT)
இதன் தாயகம் அல்லது சொந்த ஊர் அமெரிக்கா, மற்றும்
ஆப்ரிக்காவின் வெப்பமானப் பகுதிகள்.
அமெரிக்காவில், குறிப்பாக மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா அறிமுகமான நிறைய நாடுகளில் வேண்டாமரம் (INVASIVE
SPECIES) என்று பெயர் எடுத்துள்ளது.
இப்படி “அழகான செடி”
என்று இறக்குமதி செய்துவிட்டு அல்லல் படுபவை> தெற்கு ஆசியா> தெற்கு ஆப்ரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா. முக்கியமான இடங்களை மட்டும் சொல்லியிருக்கிறேன்.
“அழகான ராட்சசியே” என்று ஒரு சினிமாப்பாட்டு வந்ததாக
ஞாபகம். அதுபோல இது அமெரிக்கா
அனுப்பிவைத்த அழகான ராட்சசி ! ஆனால் இந்த ராட்சசியைக் கொண்டு
வந்தது, பிரிட்டிஷ் வெள்ளைக் காரர்கள். இனி நாம் இம்மாதிரி மரங்களை வேண்டாமரம் என்று
அழைக்கலாம்.
அழகான பூக்கள் (BEATIFUL FLOWER)
உண்ணிச் செடியின் பூக்கள் எந்த நிறம் என்று யாராலும் சொல்ல முடியாது. காரணம், எல்லா நிறத்திலும் இருக்கும். நீளமான காம்பில் ஒரு மலர்க் கொத்து. கைப்பிடி வைத்த பூச்செண்டு.
ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, மற்றும், சிவப்பு (VIBGYOR). அநேகமாய் வானவில்லின்
எல்லா நிறங்களையும் குத்தகை எடுத்துள்ள உலகின் ஒரே செடி இதுவாகத்தான்
இருக்கும்.
கெட்டதில் நல்லவை (GOOD IN BAD)
இன்வேசிவ் (INVASIVE) செடிகள் அல்லது மரங்கள் என்றால்> என்ன என்று நான் பல கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து என்னைத் தொடரும் வாசகர்களுக்கு தெரியும். ‘இன்வேசிவ்” என்றால் இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் மரங்கள் என்று அர்த்தம். ஒண்ட வந்த
பிடாரி.
ஒண்டவந்த பிடாரி
மனிதர்களில் கூட, அப்படிப்பட்ட மனிதர்களை சந்திக்கிறோம். “கூடாரத்திற்குள் தலையை மட்டும் நுழைக்கும் ஒட்டகம் போல, உள்ளுர் மரங்களை வசிக்க விடாது சுவாசிக்க விடாது. “ஒண்டவந்த பிடாரி”
என்பது கூட “இன்வேசிவ்” என்பதற்கு சரியான அர்த்தமாகச் சொல்லாம்.
வேறு என்ன நன்மைகள் கிடைக்கும்? இதை வேறு எந்த விதத்திலாவது பயன்படுத்திக் கொள்ள முடியுமா?
அழகான குறுமரங்கள் (BEAUTIFUL SHRUBS)
நிறைய வீடுகளில், வீட்டுத் தோட்டங்களில், அலுவலகக் கட்டிட வளாகங்களில்,
பூந்தோட்டங்களில் அழகுச் செடியாக வளர்க்கிறார்கள். அதற்கு எற்றபடி நிறைய இதிலும் வித்தியாசமான
வண்ணங்களில் ஒட்டுச் செடிகள் வந்துள்ளன. இதை யெல்லாம்
தாண்டி இந்த பூக்கள் எனக்குப் பிடிக்கும்.
பட்டாம் பூச்சிகள் மற்றும் பறவைகளுக்கு தேன்தரும் (PPROVIDES
NECTAR TO BUTTERFLIES AND SMALL BIRDS)
லெண்டானா தாவரக் குழுவில் சுமார் 150 வகையான சிறு
செடிகளும், குறு மரங்களும் (HERBS
SHRUBS) இருக்கின்றன. வெவ்வேறு நிறங்களின் தொகுப்பாக இருக்கும், இதன்
மலர்க்கொத்து.
நிறம் மாறும் பூக்கள்
லென்டானா எங்கு இருந்தாலும், அதிகப் பூக்களுடன் இருப்பவை
அதுவாகத்தான் இருக்கும். ஏகப்பட்ட பட்டாம்பூச்சி இனங்களுக்கு லெண்டானாதான் வாழ்வாதாரம்
என்கிறார்கள்.
இவை இளம் பூவாக இருக்கும் போது ஒரு நிறத்தில் இருக்கும். பூக்கள் நாளாக நாளாக இரண்டு மூன்று நிறங்களில் நிறம் மாறும். இதற்கு முக்கியமான
காரணம், பட்டாம்பூச்சிகளையும், சிறு பறவைகளையும் கவரத்தான், “எங்கிட்ட தேன் தயாரா இருக்கும். வீணா எங்கயும் போய் அலையாதிங்க, வாங்க”
என்று சொல்லத்தானாம்.
பட்டாம்பூச்சிகளுக்கும், இதர பூச்சிகளுக்கும் உண்ணிப்
பூக்களின் தேன் உள்ளூர் சரக்கு மாதிரி.
புற்றுநோயை குணப்படுத்தும்
புற்றுநோய், தொழுநோய், வெறிநோய் ஆகியவற்றை குணப்படுத்தும் (LANTANA CAN CURE DISEASES)
நம் நாட்டில் செய்த ஆய்வுகளில், இதனை பல நோய்களை குணப்படுத்தும்
மருந்தாக பயன்படுத்தலாம். அது கூட சாதாரண
நோய்கள் அல்ல. புற்றுநோய், தொழுநோய், வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் “ரேபிஸ்”
என்னும் கொடூரமான நோய், சின்னம்மை, குழந்தைகளுக்கு வரும் மணல்வாரி அம்மை, ஆஸ்துமா, குடற்புண், தோல்
சம்மந்தமான நோய்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளார்.
இதன் இலைகளின் சாற்றில் (LEAF
EXTRACT) நுண்ணுயிரிகள்> பூசணங்கள்> மற்றும்
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் சக்தி (ANTI-MICROBIAL, FUNGICUIDAL AND INSECTICIDAL
PROPERTIES) உள்ளது.
இயற்கை விவசாயிகள் இதன் இலைச்சாற்றை பயிர்பாதுகாப்புக்கு பயன்படுத்துவதாக நான்
கேள்விப்பட்டிருக்கிறேன்.
உண்ணிச் செடிகளை நீக்குவது எப்படி? (HOW TO CONTROL LENTANA ?
இதுவரை 33 உயிரின வழிமுறைகளை (BIO CONTROL AGENTS) கடைபிடித்து ஆய்வு செய்ததில் எதுவும் வெற்றிகரமாக அமையவில்லை, ஆள்வைத்து> அல்லது Nஐ சி பி வைத்த நீக்குவது அதிக செலவு
வைக்கும்.
இந்தச் செடிகளை தூரோடு வெட்டி எடுத்துவிட்டு களைக்கொல்லிகளை பயன்படுத்துவது இன்னொரு
முறை, இதுவும் அதிக செலவு வைக்கும். இன்னொன்று
அதிகப் பிரச்சினைகளைக் கொண்டுவரும்.
அப்படி என்றால் இதற்கு என்னதான் வழி ?
தொடர்ந்து நாம் நல்ல மரங்களை, நம்மஊர்
மரங்களை நட்டு அதனை வெளியேற்றுவது மட்டும்தான்
சரியான வழியாகும், என்கிறார்கள் விஷயம் தெரிந்த விஞ்ஞானிகள்.
இது ஒரு நீண்ட நாள் திட்டம், நீண்ட நாள் திட்டம்தான் நீடித்தத்
தீர்வு தரும் (SUSTAINABLE
SOLUTION) என்றும் சொல்லுகிறார்கள்.
இன்னும் சில உபயோகமான செய்திகள்
இதன் இலைகளை ஆடுமாடுகள் மேய்வதில்லை. காரணம் இவை நச்சுத்தன்மை உடையவை. பென்டாசைகிளிக் டிரைடெர்பினாய்ட்ஸ் (PENTACYCLIC TRITERPENOIDS) என்றும் ரசாயனம் இந்த நச்சுத் தன்மைக்கு காரணமாக உள்ளது.
ஒரு உண்ணி மரம் ஒர் ஆண்டில் 12000 பழங்களை, விதைகளை உற்பத்தி செய்கிறது.
ஆப்ரிக்காவில், கொசுக்கள் மற்றும் “ட்சீட்சி”
ஈக்கள் உற்பத்திக்கு இடம் தருகிறது.
இதனை நெருப்பு வைத்து கொளுத்தினால் கூட, அடிக்கட்டைகள்
மீண்டும் துளிர்த்து வளரும்.
அல்லிலோபதி
செடிகள்
அல்லிலோபதி
(ALLELOPATHY) என்பது இந்தக் செடிகள் உற்பத்தி செய்யும் ரசாயனம். இது மற்ற தாவரங்களின் விதைகளை முளைக்க
விடாது. வேர்களின் வளர்ச்சியைத் தடை
செய்யும்.
பசுமையாக, பழுக்காமல் இருக்கும் காய்கள் நச்சுத்தன்மை உடையவை. அவற்றை சாப்பிடக் கூடாது. பழுத்த, கனிந்த பழங்களை சாப்பிடலாம்.
வளர்ந்த, முதிர்ந்த மரங்களில் மேஜை நாற்காலி மற்றும் படுக்கை, இதர தட்டுமுட்டும் சாமான்கள்
செய்கிறார்கள். “டி வி எஸ்”
குழு நண்பர்கள் பழங்குடி மக்களுக்கு பயிற்சி
தந்து இதனைச் செய்கிறார்கள். இந்தப்
பொருட்களுக்கு “மவுசு” உள்ளது என்கிறார்கள்.
“டிஞ்சிட் பக்”(TINGID BUG) என்னும்
பூச்சியினைக் கொண்டு இதனை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கர்நாடகா “மந்திப்பூர் வனப்பகுதியில் பீநாறிப் பூண்டுக்கு எதிரான இந்தப் போரைத் தொடங்கி உள்ளார்கள். இந்த முயற்சி “வெற்றி பெறும்” என்கிறார்கள், கர்நாடகாக்காரர்கள்.
“டெலியோநீமியா ஸ்குருப்புலோசா” (TELEONEMIA SCRUPULOSA) என்னும் ஒருவகை பூச்சிகள் (LACE BUGS) லெண்டானா
செடிகளைத் தாக்கி உலரவைப்பதாகச் சொல்லுகிறார்கள், கர்நாடக மாநிலத்தின் வேளாண்மைப் பல்கலைக் கழக விஞ்ஞானிகள்.
இது இயற்கையான கட்டுப்பாடு பந்திப்பூர் வனப்பகுதியில் நடந்து வருவதாக டைமஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த லெண்டானா பிரச்சினைக்கு பந்திப்பூர் நேஷனல் பாரெஸ்ட்டிலிருந்து
ஏதாவது நல்ல செய்தி கிடைக்கிறதா, என்று பார்ப்போம் !
உலகின் மோசமான களைகளை ஒரு பட்டியிலாக வெளியிட்டிருக்கிறார்கள். அதில் முதல் 10 களைகளில் ஒன்று நம் உண்ணிச்செடியும் ஒன்று.
FOR
FURTHER READING
WWW.EN.WIKIPEDIA.ORG/”LANTANA CAMARA”
WWW.EN.M.WIKIPEDIA.ORG/”LANTANA CAMARA”
WWW.CABI.ORG
/ LANTANA CAMARA
WWW.IUCN.GISD.ORG / LANTANA CAMARA
WWW.ITIS.GOV / LANTANA CAMARA – INTEGRATED
TAXONOMIC INFORMATION
A
REQUEST
I LOVE TO SEE
YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment