செஞ்சந்தன சிற்பங்கள் |
செஞ்சந்தன மரம், அணு உலைகளில் அணுக்கதிர்களை கசியவிடாமல் தடுப்பது, கடைசல்
இழைப்பு வேலகளுக்கு மரக்கட்டைகள் தருவது, இசைக்கருவிகளுக்கு உதிரி
பாகங்கள் தயாரிக்க உதவுவது, உணவுப்பொருட்களுக்கு நிறம் தர சாயம் தருவது, மேக நோய்கள், சொறி சிரங்கு போன்ற தோல்
நோய்களை குணப்படுத்துவது, கால்நடைகளுக்கு
தீவனம் தருவது. கடினமான
தரமான விலை மதிப்பு அதிகம் உள்ள மரக்கட்டைகளைத் தருவது. ஒலி அலைகள் மற்றும் வெப்பத்தை குறைவாகக் கடத்துவது, கடைசல் மற்றும் இழைப்பு வேலைகளுக்கு
கட்டைகள் தருவது, வறண்ட பிரதேசங்களில் வெப்பமான பகுதிகளில் வளருவது, இப்படி பல சிறப்புகளை உடைய இந்த மரத்தின்
ஆங்கிலப்பெயர் ரெட் சேண்டர்ஸ் (RED SANDERS), தாவரவியல் பெயர்
டெரோகார்ப்பஸ் சேன்ட்டாலினஸ் (PTEROCARPUS SANTALINUS).
அணுக்கதிர்கள் தடுத்து நிறுத்தும் மரம்
தமிழ் நாட்டில் நிறைய பேர் துப்பாக்கி குண்டுக்கு பலியாக காரணமாக
இருந்தது, சமீப காலத்தில் பத்திரிகைகள் மூலம் மிகவும் பிரபலமானது, நிறையபேரை
சிறைக்குள் தள்ளி கம்பி எண்ண வைத்திருப்பது, உலகிலேயே அணுக் கதிர்களைக் கூட தடுத்து நிறுத்தக்கூடியது என்னும்
பெருமைக்கு உரியது செஞ்சந்தன மரம்.
இதற்கு சந்தனவேங்கை என்ற ஒரு
பெயரும் உண்டு.
கடத்தப்படுவது செம்மரமா ..? செஞ்சந்தனமா ..?
கடத்தப்படுவது செம்மரமா ..? செஞ்சந்தனமா ..? என்று
நிறைய பேருக்கு சந்தேகம் உள்ளது; இதற்கு
காரணம் பத்திரிகைகள் செம்மரம் என்றே எழுதுகிறார்கள். ஆனால் செம்மரம் என்ற பெயரில் நாட்டுக்கொரு மரம் உள்ளது; ஆக
கடத்தப்படுவது செம்மரம் அல்ல, செஞ்சந்;தனம்.
செம்மரம் வேறு செஞ்சந்தனம் வேறு
தமிழ்நாட்டின்
செம்மரத்தின் தாவரவியல் பெயர் அபனாமிக்ஸிஸ்
பாலிஸ்டேகியா ( APHANAMIXIS POLYSTACHIA)
வட அமெரிக்காவில் செம்மரத்தின் பெயர் ராட்சச செம்மரம். (GIANT RED
WOOD) இதன் தாவரவியல் பெயர்
செக்கோயா டென்ட்ரான் ஜெய்ஜாண்டியம்(SEQUOIADENDRON GIGANTEUM).
பிரேசில் நாட்டிலும் செம்மரம் உள்ளது. அந்த நாட்டு செம்மரத்தின் தாவரவியல்
பெயர் பாப்ரசில்லா எக்கினேட்டா (PAUBRASILLA ECHINATA). ஆனால் மரத்தின் நிறம் கருதி
செம்மரம் என்கிறார்கள்.
அணுக்
கதிர்களைத் தடுக்கும் மரம்
செஞ்சந்தன
மரத்தை கரையான் அரிக்காது. இதன் வைரப்பகுதி கவர்ச்சியான கருஞ்சிவப்பு நிறம், கடினமான மரம். காய்ந்தால்
மேலும் கடினமாகும். கடைசல் மற்றும் இழைப்பு வேலைகளுக்கு
என்றே பிறந்த மரம்.
அணு
உலைக் கூடங்களில், அணுக்கதிர்களை கசியவிடாமல், தடுக்கிறது இந்த செஞ்சந்தனம்.
ஜப்பான்காரர்கள் 'ஷமிசான்"
(SHAMISAN) என்னும் இசைக் கருவியை இந்த மரத்தில்தான் செய்வேன் என்று அடம்
பிடிக்கிறார்கள்.
கால்நடைகளுக்கு
தீவனம் தருவது, கடினமான
தரமான மரம் அளிப்பது. ஒலி
அலைகள் மற்றும் வெப்பத்தை குறைவாகக் கடத்துவது, உணவுப் பொருட்களுக்கு நிறம் தரும் இயற்கை சாயம்
அளிப்பது, சீதபேதி,
மேக நோய்கள், சொரிசிரங்குகள், கண் நோய்,
கட்டிகள், தலைவலி ஆகியவற்றை குணப்படுத்துவது போன்ற பெருமைகளை உள்ளடக்கியது
செஞ்சந்தனம்.
பல மண்
வகைகளில் வளரும்
செஞ்சரளை,
செம்புறை, படுகை நிலங்கள், வடிகால் வசதி உள்ள பல்வகை மண்
வகைகளில் வளரும். இந்தியாவில் கோதாவரி நதிக்கும் பாலாற்றுக்கும் இடைப்பட்ட
நிலப்பகுதிகள்தான், செஞ்சந்தன மரங்களுக்கு ஏற்றப் பகுதி.
உலகிலேயே
இந்தப்பகுதியில்தான் செஞ்சந்தன மரங்கள் அதிகமாக வளர்கின்றன. அதிக வெப்பமான வறண்ட
பகுதிகள்தான் செஞ்சந்தன மரத்திற்கு பிடித்தமானப் பிரதேசங்கள். ஆனால்
தமிழ்நாட்டின் வறட்சியான எல்லா மாவட்டங்களிலும் இது வளர வாய்ப்ப உள்ளது.
வெளிநாடு
போக கப்பலேறும் மரம்
சீனா,
ஹாங்காங், அமெரிக்கா, குவைத், ஜப்பான், மற்றும் கிழக்கு ஆசியாவில் சில நாடுகள்,
நம்மிடமிருந்து செஞ்சந்தன மரங்களை
இறக்குமதி செய்கின்றன. தமிழ்நாடு ஆந்திரா மாநிலங்களில் மட்டுமே வளரும் இந்த
மரங்கள் இந்தியாவில் சென்னை, தூத்துக்குடி, கொல்கத்தா, கிருஷ்ணப்பட்டினம், நவசேவா கடற்பகுதிகளிலிருந்து
வெளிநாடு போக கப்பலேறுகின்றன.
உள்ளுரிலும்
குறைந்த அளவு விற்பனை ஆகிறது. பாபா
ராம்தேவ் மட்டும் 707 டன் செஞ்சந்தன மரங்களை 207 கோடி ரூபாய்க்கு ஆயுர்வேத மருந்துகள்
மற்றும் அகர்பத்தி தயாரிக்க வாங்கியுள்ளார் என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தி ஒன்று.
கோடிக்
கணக்கில் விலைபோகும் மரம்
2014 ஆம்
ஆண்டின் கணக்குப்படி செஞ்சந்தனம் ஒரு டன்
மரத்தின் விலை 27 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய். ஆயினும்
முதல் தர மரம் சர்வதேச அளவில் ஒரு
டன் ஒண்ணரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில்
விற்பனை ஆகி உள்ளது அதே ஆண்டில்.
வெளிநாடுகளின் தேவைதான் அதிகம்
ஆண்டுதோறும் 3000 டன்
செஞ்சந்தன மரங்கள் வெளிநாடுகளில் தேவை என்று மதிப் பிடப்பட்டுள்ளது இந்திய அரசு. உள்ளுர் தேவை என்பது அதிகம் இல்லை. அழிந்து வரும் மரங்களின் பட்டியலில்
செஞ்சந்தனம் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின்
ஜவ்வாது மலையிலும், ஆந்திராவின் கடப்பா சித்தூர், ராயலசீமா, நெல்லூர்
மற்றும் பிரகாசம் மாவட்டங்களில், செஞ்சந்தனம்
பெருகி வருகின்றது.
பதினெட்டு ஆண்டு மரங்களில் வயிரம் பாயும்
வேலூர்
மாவட்டத்தின் பல இடங்களிலும் செஞ்சந்தனம் நன்கு வளர்கிறது. தெக்குப்பட்டில் உள்ள
எங்கள் தோட்டத்தில்கூட 20 முதல் 30 மரங்கள்,
செடிகளாக உள்ளன. இவை எல்லாமே மெல்ல வளர்கின்றன. 40 முதல் 45 ஆண்டுகளில் மரங்களை அறுவடை செய்யலாம்.
நடவு
செய்த 18 ஆண்டுகள் கழித்துத்தான் மரத்தின் மையப்பகுதியில் வயிரம் பாய ஆரம்பிக்கும். இது 40 முதல் 45 ஆண்டுகளில் முழுமையடையும் என்கிறார்கள்.
அழிந்துவரும்
மரவகை
அழிந்துவரும்
மர இனம் (ENDANGERED TREE SPECIES) என்று
அரசு ஆணை அறிவித்துள்ளது. ஆயினும் அவ்வப்போது ஏற்றுமதிக்கு ‘நோ
பிராப்ளம்’ என்று ‘சைட்ஸ’
(CITES) என்னும் சர்வதேச அமைப்பு அனுமதியும் தருகிறது. அழிந்த வரும் மர
இனங்களை ஏற்றுமதி செய்ய இந்த சைட்ஸ்’ன்
அனுமதி தேவை.
வெளி நாடுகளில் செஞ்சந்தனம் இல்லை
வேலூர்
மாவட்டத்தில் பல பகுதிகளில் செஞ்சந்தனம் இயல்பாக வளர்கிறது. இதன் உள்நாட்டுத் தேவை மிகவும் குறைவு. அதனால்
வெளிநாடுகளின் தேவை அறிந்து நமது உற்பத்தியை அதிகரிக்கலாம்.
காரணம்
உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் செஞ்சந்தனம் இல்லை என்கிறார்கள். அதனால் தமிழ்நாட்டில்,
அநேகமாய் குளிர்ச்சியான பகுதிகளைத்
தவிர வறண்ட பிரதேசங்களில் எல்லாம் இதனை சாகுபடி செய்யலாம்.
பண மதிப்புடைய மரங்கள் சாகுபடி
ரகசிய சாகுபடியாக, இது இல்லாமல் இருந்தால், மரங்களை
கடத்தல்காரர்களிடம் பறி கொடுப்பதை நிச்சயமாக தடுக்க முடியும். அதற்கு
செஞ்சந்தனம், சந்தனம்
போன்ற விலை மதிப்புடைய மரங்களை சாகுபடி செய்வதற்குரிய நடைமுறைகளை சட்டப்படி தீர்மானிக்க முடியும்.
இது
போன்ற மதிப்பு மிக்க
மரசாகுபடியை ஊக்குவிப்பது நமது சுற்று சூழலுக்கு உகந்தது. மேலும் பருவகால
மாற்றத்தினால், ஏற்படும் பாதிப்புக்களை தள்ளிப்போடும் முயற்சியாகவும் இது இருக்கும்.
குளிர்
தாங்காத மரம்
செஞ்சரளையுடன்
கூடிய இருமண்பாடு மற்றும் சுண்ணாம்புக்
கற்களையுடைய மண்கண்டத்திலும் வளரும்.
ஆனால் வடிகால்வசதி அவசியம். கற்கள் மற்றும் பாறைகளையுடைய மண்கண்டத்திலும் வளரும்.
செஞ்சந்தனம்
8 மீட்டர் உயரமும் 150 செ.மீ. வரை விட்டமும் கொண்ட மரங்களாக வளரும்.
மோசமான மண் அமைப்பு உடைய
நிலங்களில் கூட மூன்று
ஆண்டுகளில் ஐந்து மீட்டர் உயரம் வளரும். ஆனால் ஒரு டிகிரி செண்டிகிரேட் குளிரைக்கூட தாங்காது.
செஞ்சந்தனத்தின் பல மொழிப்பெயர்கள்
தமிழ்:
செஞ்சந்தனம் ;(SENJCHANTHANAM
தெலுங்கு: எர்ர சந்தனம் (ERRA CHANDHANAM)
கன்னடம்:
அக்ஸ்லியு (AGSLIYU)
மலையாளம்:
பத்ரங்கம் (BATHRANGAM)
இந்தி:
லால் சந்தன் (LALCHANDAN)
தாவரவியல்
பெயர்;டெரோகார்பஸ் சாண்டாலினஸ் (PTEROCARPUS SANTALINUS)
தாவரக்
குடும்பம்: பாபேசி (FABACEAE)
வெளிய
சொல்லாதிங்க ரகசியம்
சீனாக்காரர்கள்
செஞ்சந்தன மரங்களை வாங்கி ‘லேகியம்
கிண்டுகிறார்கள், சூரணம் இடிக்கிறார்கள், என்றெல்லாம் சொல்லி வந்தார்கள். ‘அதெல்லாம்
சும்மா’ என்கிறார்கள். அவர்களின் ‘நியூக்ளியார் ரியாக்டர்’களில் ‘கூலண்ட்ட’டாக
உபயோகப் படுத்துகிறார்களாம். அதுதான் ரகசியம்.
இன்னொரு செய்தியும் உள்ளது. என்ன என்கிறீர்களா? காதைக்
காட்டுங்கள். செஞ்சந்தன மரங்களில் தயாரிக்கும் மாத்திரைகள் ‘வயக்ரா’வை
ஓரங்கட்டிவிடுமாம். ஏன் இந்த மரத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறார்கள்
என்று நிறைய பேர் மண்டையை பிய்த்துக் கொண்டார்கள். சும்மா ஆடுமா சீனாக்காரன்(ர்) குடுமி ..?
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment