Tuesday, June 13, 2023

RAJENDERSINGH MADE JOHATHS ALIAS PERCOLATION PONDS ராஜேந்திர சிங் வெட்டிய ஜோகாத் குளங்கள்

  

ராஜேந்திர சிங்  வெட்டிய
ஜோகாத்  குளங்கள்     


888888888888888888

விருப்பமில்லாமல் செய்த வேலைகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு உத்திரப்பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குப் போனார் ராஜேந்தர்சிங்.

ஊரில் தனக்கு சேரவேண்டிய சொத்துக்களையெல்லாம் விற்று அவர் பணமாக மாற்றினார். மாற்றிய பணத்தை மூட்டையாக கட்டிக்கொண்டு ராஜஸ்தான் மாநிலத்திற்கு புறப்பட்டார்.

வசதியே ,இல்லாத ஒரு வண்டுபோன ஒரு கிராமத்தில் தேர்வு செய்து அங்கு வைத்தியம் பார்க்க முடிவு செய்தார். ஆர்வார் என்ற கிராமம் அதற்கு தோதாய் அகப்பட, அங்கு தனது ஆயுர்வேத மருத்துவச் சேவைக்கு பிள்ளயார் சுழி போட்டார்.  

போட்ட சுழி போட்டபடியே இருந்தது. தொட்டபணியை தொடர முடியவில்லை. சட்டைபோடாத அந்த கிராமத்து மக்கள் யாரும் அதனை சட்டை செய்யவில்லை. தனக்கு தெரிந்த சேவையை செய்வதைவிட அவர்களுக்கு தேவைப்படும்  சேவையைச்செய்ய  என்னவழி என்று ஆய்வு செய்தார்.

பிறகுதான் தெரிந்து கொண்டார், அவர்களின் அவசர அவசியத் தேவை தண்ணீர் வைத்தியம் என்று..

பின்னர்தான் தண்ணீர் சேமிப்பு என்னும் தண்ணீர் வைத்தியத்தைத் தொடங்கினார்.

ஆர்வார் என்னும் அந்த பாலைவன கிராமத்தில் கடப்பாரை பிடித்து மண்வெட்டி பிடித்து ஒரு ஜோஹாத் வெட்ட முடிவு செய்தார்.

நம்ம ஊரில் குளம், குட்டை ஏரி எல்லாவற்றிற்கும் ராஜஸ்தானியில் ஜோஹாத் என்ற ஒரு வார்த்தைதான்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஒரு ஜமீந்தார் வாரிசு ஒரு ராஜஸ்தான் கிராமத்தில் தனி ஆளாக ஒரு ஜோஹாத் வெட்டத் தொடங்கினார்.

ஆவார் கிராமத்தில் எல்லோரும் அவரைப் பார்த்து பைத்தியக்காரன்என்று கேலி பேசினார்கள்.

அவருக்கு பழக்கப்படாத ராஜஸ்தான் வெய்யிலும் வெப்பமும் அவரை சுட்டெரித்தபோதும் ஜோஹாத் வெட்டுவதுதான் அவருக்கு தினசரி வேலை ஆனது..

சரியாக விழும் ஒவ்வொரு கோட்டின் வளைவிற்கும் சந்தோஷமடையும் ஒரு ஓவியன் போல ஒவ்வொரு மண்வெட்டியின் கொத்துக்கும்  சிங் சந்தோஷம் அடைந்தார்.

அந்த ஒரு குளம் வெட்டியபோது அவர் உடலில் வடிந்த வியர்வையை தேக்கியிருந்தால் ஒரு ஜோஹாத் நிரம்பியிருக்கும்.

பசி நோக்கார் கண் துஞ்சார் என கருமமே கண்ணாகி வெட்டத் தொடங்கிய வேகத்துடன் ஜோஹாத்தை வெட்டி முடித்ததும் தனது முதல் கண்டுபிடிப்பாய் மகிழ்ந்தார்.

ஆடுகள் எப்போதும் கசாப்புக் கடைக்கார்ர்களைத்தான் நம்பும். அப்படி ஆர்வார் கிராமத்து மக்கள் அப்போதும் ராஜேந்தர்சிங்கை நம்பவில்லை.

ஒன்றும் இல்லாமலா இவர் கடப்பாரை போடுகிறார்.. பெருசா எதையோ பிடிக்கப்போறார்’  என்று வெறும் வாயை மென்றது ஊர்வாய்.

குளம் வெட்டிவிட்டால் போதுமா ? மழை பேய வேண்டாமா ? ஜோகாத் நிரம்ப வேண்டாமா ?’ இப்படி சிலர்.

இந்த சமயம் ராஜேந்தர்சிங்கின் முதல் ஜோகாத்தை முதல் மழை முத்தமிட்டு நிரப்பியது - எதிர்பாராத முத்தம்.

பெண்கள் குட வரிசையுடன் குளத்தில் இறங்க, சிறுவர்களும் வாலிபர்களும் ஓரி விளையாட, கால்நடைகள் கால் நனைய நின்று தொண்டயை நனைத்துக்கொள்ள. ஆவார் கிராமம் ஈரமானது.

ஆவார்  கிராமத்து மக்கள் தங்கள் மனதின் ஓரத்தில் ராஜேந்தர்சிங்குக்கு ஒரு ஈரமான இடத்தை .ஒதுக்கித் தந்தார்கள்.

அதன் பிறகு எப்படி வறண்டுபோன  ஆறு ஆறுகளை ஓட வைத்தார் ? அய்ந்தாயிரம் கிராமங்களை மக்களின் துணைகொண்டு தண்ணீர் தன்னிறைவு கிராமங்களாக மற்றினார்நாமும் அதைச் செய்யலாம்தானே ?

PLEASE POST A COMMENT, REGARDS GNANASURIA BAHAVAN D (AUTHOR);

10000000000000000000000000000000000000000000010

 


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...