Thursday, June 29, 2023

PUNGAN TREE NATURE'S AIRCONDITIONER 168. இயற்கை அருளிய குளிர்சாதனம் புங்கமரம்

 

இயற்கை தந்த 
குளிர்சாதனம் புங்கமரம்


(PUNGA MARAM, DERRIS INDICA, FABACEAE)

தாவரவியல் பெயர்: டெர்ரிஸ் இண்டிகா (DERRIS INDICA)

தாவரக் குடும்பம்:  ஃபேபேசியே(FABACEAE)

பொதுப் பெயர்: புங்கம் (PUNGAM)

தாயகம்: கிழக்கு வெப்பமண்டல ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள்

தமிழ் இலக்கியங்களில் அகம் சார்ந்த பாடல்கள், அந்த சுற்றுச் சூழலையும் சேர்த்துப் பிரதிபலிக்கும் என்பார்கள்.

அப்படி ஒரு பாடலில், தலைவனைப் பிரிந்த தலைவி அவனுக்காக காத்திருக்கிறாள். அப்போது  வேனில் என்ற வெயில் முடிந்து இளவேனில் மழையை வருவிக்கிறதுஆறு நிரம்பி ஓடுகிறதுகரையோர மரங்களில் மலர்கள் குலுங்குகின்றன் இதனை கலித்தொகை பாடல் ஒன்று காட்சிப்படுத்துகிறது.

'எரிஉரு  உறழ  இலவம்  மலர

பொறிஉரு  உறழ  புன்குபூ  உதிரப்

புதுமலர்க்  கோங்கம்  பொன்னைத்  தாதூழிப்பத்

தமியார்ப்   பிறந்துஎறிந்து  எள்ளி முனிய வந்து

ஆர்ப்பது   போலும்  பொழுது;   என் அணிநலம் . "

'செவ்விலவு மரங்கள்  நெருப்பை அணிந்துக் கொண்டிருக்கின்றன.  பொறியினை  வாரி இறைத்ததைப்          போல   புங்க மலர்கள்  உதிர்ந்து கிடக்கின்றன  !  கோங்கம் பூக்கள்  பொன் தூள் போல சிதறிக்  கிடக்கின்றன. இந்த  மலர் சூடும்படி  என்னவன் வரவில்லையே ... " என்று ஏங்குகிறாள் அந்தத் தலைவி.

புங்க மரத்தின் பலமொழிப் பெயர்கள்

தமிழ்: புங்கம் மரம் (PUNGAM MARAM)

இந்தி: கரஞ் (KARANJ)

மலையாளம்: பொன்னு, உன்னு (PONNU, UNNU)

தெலுங்கு: புங்கு (PUNGU)

கன்னடம்: ஹோங்கி (HONGI)

சமஸ்கிருதம்: கரஞ்சா(KARANJA)

ஒரியா: கொரஞ்சோ (KORONJO)

மராத்தி: கரஞ்சா (KARANJA)

பெங்காலி: கரஞ் (KARANJ)

அசாமிஸ்: கரச்சாவ் (KARACHAV)

குஜராத்தி: கரஞ்சா (KARANJA)

நேப்பாளி: கேரங்கி (CARANGI)

எனக்கு அரைக்கால் சட்டை வயசிலேயே  அறிமுகமானது புங்கன் கொட்டைகள்தான்அவற்றை நான் தாயத்து என்று நினைத்திருந்தேன். குழந்தைகள் கழுத்திலும், அரைஞாண் கயிற்றிலும் கட்டிக்கொண்டு இருப்பார்கள்.  பேய் பிசாசு வராது எனபார்கள். 

யார் சொன்னார்கள் ..நான்கு சுவர்களுக்கு இடையேதான் குளிர் சாதனம் செய்ய முடியுமென்று  ..? நான்கு மூலை  ரோட்டில்கூட குளிர்சாதனம் செய்யலாம்அய்ந்தாறு புங்கம் மரங்களை நட்டுப் பாருங்கள் !

குளிர்சாதனம் காற்றுக்கு குளிர்ச்சி மட்டும்தான் கொடுக்கும். ஆனால் இம்மரத்தின் தழை காற்றில் கரைந்திருக்கும் தூசையும், மாசையும் துப்புரவாய் துடைத்துத் தரும்

அது போல புங்கன் கிளைகள் கோணல் மாணலாய் இருந்தாலும், அழகாய் வளரும். முழுசாய் பயன்படுத்த்படாத மரங்கள் என்று பட்டியல் போட்டால், அது முன்னூற்றைத்  தாண்டும் ! 

அதில் பிரதானமான ஒன்று தான்  புங்க மரம் ! இலைகள் தோல் பதனிடும் தொழிலுக்கு உதவும். பயிருக்கு  உரமாக்கலாம்தானியம் குதிர்களில் இலைப்பொடி இட்டு  பூச்சிகள்  வராமல்  அடித்து விரட்டலாம்.

விதைகளில் வடிக்கும் எண்ணெயில் சோப்பு செய்யலாம்.   தோல் பதனிடலாம்பயோடீசல் தயாரிக்கலாம்.   வேம்பு எண்ணெய்ப் போலவே புங்கன் எண்ணெயும் பூச்சிகளை விரட்ட புத்திசாலித்தனமாய், உபயோகப்படுத்தலாம்.

புங்கன் கொட்டைகள் பார்க்க அழகாய் இருக்கும். தொட்டுப் பார்க்க மெத்தென இருக்கும். முதிர்ந்த விதைகள் பார்க்க  'லெதர் கோட் "  போட்டது மாதிரி  தெரியும் !

புங்கன் மரத்தை தோட்டத்தைச்  சுற்றிலும் நட்டால் அது காற்றுத்தடுப்பு மரம். வயலில் நட்டால் அது  தழை உர மரம். மண்ணில் நட்டால் அது காற்று அரிப்பு தடுப்பு மரம். சரிவு நிலங்களில் நட்டால் அது மண்அரிப்பு தடுப்பு மரம். சாலைகளில்  நட்டால்  அது  நிழல்  மரம். பூங்காக்களில் நட்டால் அது பூ மரம். சாகுபடிக்கு நட்டால் அது எண்ணெய்  மரம். ஆனால் எங்கு நட்டாலும் அது பருவகால மாற்றத்திற்கு மருந்து  மரம் !

மணல்சாரி, செவ்வல், கரிசல், உவர் இப்படி எத்த்தனை வகை மண்ணாக இருந்தாலும்  புங்கன் சாதனை நிகழ்த்தும் !

உகாண்டாகேமரூன், ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில், பாலைவனம் பரவுவதைத் தடுக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக புதிய புங்கன் விதை ஒன்றை தெரிந்தெடுத்திருக்கிறார்கள்; இதன் தாவரவியல் பெயர் மில்லேஷியா  பின்னேட்டா (MILLETIA PINNETA)

புங்கன் மரம் ஒரு புதையல் மரம் ! எல்லோரும் சொல்கிறார்கள் இது பயோ டீசல் தரும் என்று ! அங்கொன்றும் இங்கொன்றும் ஆமை வேகத்தில், சில ஆய்வுகள் நடக்கின்றன. இந்த ஆய்வுகள் வெற்றி கண்டால், புங்கன் மரம் 'டீசல் மரம்" என்ற புதிய நாமகரணம் பெறும் !

புங்கன் ஓர் எண்ணெய் மரம்இதன் பயோ டீசலில் கார்கள் ஓட்டலாம்.   உயவு எண்ணெய்யாக உபயோகப் படுத்தலாம்பெயிண்ட் மற்றும் வார்னிஷ் செய்யலாம். சோப்பு செய்யலாம். சீப்பு செய்ய பிளாஸ்டிக் செய்யலாம்பூச்சிகளைக் கொல்லவும்  மருந்துகளைத் தயாரிக்கலாம். மனிதர்களைப் பாதுகாக்கவும் மருந்துகளைத் தயாரிக்கலாம்.

ஆராய்ச்சியாளர்களுக்கு ஓர் கேள்வி. ஏப்போது புங்க மரத்தை டீசல் மரமாக அறிமுகம் செய்யப் போகிறீர்கள் ?

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...