Tuesday, June 20, 2023

POPULAR CHINESE FRUIT TREE PEACH 66. பிரசித்தி பெற்ற சீனப் பழ மரம் பீச்

 

 பிரசித்தி பெற்ற 
சீனப்பழ மரம்  பீச்

பீச் உலகம் முழுவதும் அறிமுகமான பழமரம், சைனாவைத் தாயகமாகக் கொண்டது, பழங்களின்  தசை ஆப்பிளை விட இறுக்கம் குறைவாக இருக்கும்,  சாறு நிரம்ப இருக்கும், மிகவும் உயரமான மலைகளில் மட்டும் வளரும். மூலிகை மரமாக சீனாக்காரர்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பீச் மரக்கட்டைகளைப் பயன்படுத்தினால், பேய் பிசாசுள் அண்டாது என்றும் நம்புகிறார்கள்.

தமிழ்: பீச் (PEACH)

பொதுப் பெயர்கள்: பீச், நெக்டரின் (PEACH, NECTARINE)

தாவரவியல் பெயர்: புரூனஸ் பெர்சிகா (PRUNUS PERSICA)

தாவரக்குடும்பம் பெயர்: ரோசேசி (ROSACEAE)

தாயகம்: சைனா

பீச் பழமரத்தின் பிறமொழிப் பெயர்கள்:

இந்தி: ஆடூ (ADOO)

மணிப்புரி: சும்பிரி (CHUMBHREI)

கன்னடா: பிச்சோ (PICHESU)

ஒரியா: பீஷூ (PISHU)

இலை உதிர்க்கும் பழமம்.  சைனாவைத் தாயகமாகக் கொண்டது.  ழமரம்.  பார்க்க ஆப்பிள் மாதிரியே இருக்கும்.  பழத்தின் தசை ஆப்பிளை விட இறுக்கம் குறைவாக இருக்கும்.  சாறு நிரம்ப இருக்கும்.  பீச் என பிபலமாக அழைக்கப்பட்டாலும் இதனை நெக்டரின என்றும் சொல்லுகிறார்கள்.

குளிர்ப் பிரதே பழங்கள்

பீச், பிளம் ஆகியவை குளிர்ப்பிரதேசத்துக்கு உரிய பழமரங்கள்.  இவற்றை சீமை அல்லது இங்கிலீஷ்; பழங்கள் என்று சொல்லுவார்கள்.  இந்தப் பழங்கள், கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களில் ரோட்டோரப் பழக்கடைகளில் விசேமாக விற்பனை ஆகும். 

ஆனால் இப்போதெல்லாம் மற்ற இடங்களில் கூட எல்லா பழங்களுமே விற்பனை ஆகின்றன.  கொஞ்ச நாட்களுக்கு முன்னால், மலேசிய நாட்டில் முதல் முதலாக டிராகன் ப்ரூட் என்னும் பழத்தை முதன் முதலாகப் பார்த்தேன். 

கொஞ்ச நாட்களில் அதே பழம் வாணியம்பாடி பழக்கடையில் மிதிபட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்தேன். வேட்டிகனும் வாணியம்பாடியும் பக்கத்து பக்கத்து ஊர் மாதிரி ஆகிவிட்டது, உலகம் மிகவும் சுருங்கிவிட்டது.

பீச் மூலிகை தேநீர்

பீச் இலைகளில் தேநீர் போட்டு குடிக்கும் பழக்கம் மேலை நாடுகளில் உள்ளது, பீச் இலைகளில் தேநீர் தயார் செய்கிறார்கள், இதில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிகம் உள்ளன.

, சி, , கே, மற்றும் பி வைட்டமின்களும், பாஸ்பொரஸ், பொட்டாசியம், மேங்கனீஸ், மக்னீசியம் ஆகிய தாது உப்புக்களும் கணிசமான அளவில் உள்ளது. 

வால்மார்ட்டில் பெரிய பழங்கள்

பிளானோ என்னும் நகரத்தில் வால்மார்ட்ல் பீச் பழங்களைப் பார்த்து மிரண்டு போனேன்.  ஆப்பிளைவிட பெரிதாக இருந்தன.  பிளம்  அதில் கால்வாசி சைஸ்தான் இருந்தது.  கொடைக்கானல் பகுதியில், பழனி செல்லும் பாதையில் இரு புறங்களிலும் பிளம் பழங்கள் சாகுபடி செய்வதைப் பார்த்திருக்கிறேன்.  பீச் சாகுபடி செய்கிறார்களா, எனத் தெரியவில்லை.

புரூனஸ் பெர்சிகா என்னும் தாவரவியல் பெயரில் பெர்சிகா என்பது பெர்சியா வைக் குறிக்கும்.  பெர்சியா வின் இன்றையப் பெயர் ஈரான்.  அங்கிருந்துதான் ரோப்பிய நாடுகளுக்கு பரவியதாகச் சொல்லுகிறார்கள். 

பீச் மரங்கள் புரூனஸ் (PRUNUS) என்றும் தாவர கையைச் (SPECIES) சேர்ந்தது.  செர்ரி, ஆப்ரிகாட், அல்மாண்ட், பிளம் ஆகியவை கூட புரூனஸ் தாவர வகையைச் சேந்தவைதான்.  இவை எல்லாமே ரோசேசி குடும்பத்தைச் சேர்ந்தவைதான்.

பீச் மற்றும் நெக்டரின் பழங்களும் இருவேறு மரங்கள்.  ஆனால் ஒரே தாவர வகையைச்  சேர்ந்தவை.  ஆனால் சந்தையில் தனித்தனி பெயர்களிலேயே விற்பனை ஆகிறது.

முதலிடத்தில் சீனா

பீச் மற்றும் நெக்டரின் பழங்கள் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது சைனாதான்.  கிட்டத்தட்ட 58 சதவிகித பழங்களை உற்பத்தி செய்கிறது.

இந்தியாவில் பீச்மரம். கிறிஸ்து பிறப்பதற்கு 1700 ஆண்டுகளுக்கு முன் ரப்பா நாகரீகக் காலத்திலேயே> அறிமுகம் ஆனது என சரித்திரக் குறிப்புகள் சொல்லுகின்றன.

அலக்சாண்டரின் அறிமுகம்

கிரேக்க நாட்டில் கி.பி.  300 ல் மாவீரன் அலக்ஸாண்டரால் அறிமுகம் செய்யப்பட்டது என ஒரு செய்தி உள்ளது.  அலக்ஸ்hண்டர் பெர்சியாவை வெற்றிகண்டபோது, அங்கிருந்து பீச் மரத்தை கொண்டு போய் ஐரோப்பியாவில் அறிமுகம் செய்தார்.

வடஅமெரிக்காவில் முதன் முதலாக இங்கிலாந்திலிருந்து> விர்ஜீPனியாவில் பீச் அறிமுகம் ஆனது.  17ம் நூற்றாண்டில் பீச்பழமரம் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தது.

உயரமான மலைகள்

பொதுவாக பீச் மரங்களுக்குக் கூடுதலான குளிர்ச்சி தேவை.  மிதமான வெப்பநிலைகூட பீச் மரங்களுக்கு ஏற்றதல்ல.  ஆனால் மிகவும் உயரமான மலைகளில் மட்டும் வளர்கின்றன.  உதாரணமாக> க்வேடர், கொலம்பியா, எத்தியோப்பியா, மற்றும் இந்தியாவில் ஆகிய பகுதிகளில், பீச் மரங்களைப் பயிர் செய்கிறார்கள்.

பீச் பழமர மாநிலம்

வட அமெரிக்காவில், ஜார்ஜியா மாநிலத்திற்கு பீச்ஸ்டேட் என்று பெயர். 1571 ம் ஆண்டிலிருந்து ஜார்ஜியா மாநிலத்திலிருந்து பீச் சாகுபடி செய்யப்படுகிறது.  இங்கு உற்பத்தியாகும் பீச் பழங்கள் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  2014 ம் ஆண்டு கலிபோர்னியா மற்றும், சவுத் கரோலினா ஆகிய மாநிலங்கள் ஜார்ஜிpயா மாநிலத்தைவிட அதிக பீச் உற்பத்தி செய்தன.

பேய் ஓட்டும் மந்திரக்கோல்

பீச் பழக் கொட்டைகளிலிருந்து எடுத்த பருப்புகளை சீனர்கள் தங்களின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தி உள்ளனர்.  பீச் மரங்களில் வில்அம்புகள் தயாரிக்கும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. 

வீடுகளில் கதவுகள் மற்றும்  வாசக்கால்களுக்கு பீச் மரக்கட்டைகளைப் பயன்படுத்தினால், பேய் பிசாசுள் அண்டாது என்றும் சீனர்கள் நம்பினர்.  பேய் பிசாசு ஒட்டும் மந்திரவாதிகள் பீச் மரக் கட்டையில்  மந்திரக் கோல்களை செய்யும் வழக்கமும் சீனர்களிடம் இருந்து வந்துள்ளது.

இந்தியாவில் பீச்

பீச் இந்தியாவில் அறிமுகம் ஆனது 126 பி.சி இல்.  ஆனால் 19ம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில்தான் பீச் பழமரங்க்ள வணிக ரீதியில் பயிரிடப்பட்டது.  தற்போது இந்தியாவில், ஐம்மு காஷ்மீர்;> ஹிமாச்சலப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய இடங்களில் பீச் பயிரிடப்படுகிறது.

FOR FURTHER READING

WWW.THEINDIAN WAGAN.BLOGSPOT.COM “ALL ABOUT PEACH & NECTARINE IN INDIA”.

WWW.EN.WIKIPEDIA.ORG-“PEACH

WWW.PEAF.ORG-“PRUNUS PERSICA.PEACH.

WWW.GOBOTANY.NEWENGLANDWILD.ORG – PRUNUS PERSICA.

WWW.MISSOORI BOTANICAL GARDEN.ORG – “PRUNUS PERSICA”

WWW.FLOWERS OF INDIA.NET –PRUNUS PERSICA – PEACH

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...