Tuesday, June 27, 2023

POOVARASU VILLAGE CHILDREN PLAYING TREE 134. குழந்தைகlளின் விளையாட்டு மரம் பூவரசு


குழந்தைகளின்
விளையாட்டு மரம் பூவரசு


(INDIAN TULIP TREE)

நாட்டுத்தேக்கு எனும் பூவரசு மரம் கிராமத்து குழந்தைகளுடன் விளையாட இலை, காய், கட்டை தரும்தழை விளை நிலங்களுக்கு உரமாகும்.   கதவு, ஜன்னல், வாசக்கால், கட்டுமான பொருட்கள்தட்டு முட்டு சாமான்கள், எண்ணை செக்குமற்றும் உரல், உலக்கை செய்ய மரக்கட்டைகள் தரும். ரத்த அழுத்த நோய், மூட்டு வீக்கம், தோல் நோய்கள், உட்பட பல நோய்களை குணப்படுத்தும். அடுப்பெரிக்க விறகு தரும், மணலில் விரும்பி வளரும் இந்த மரங்களை வளர்த்தால், இயற்கை சீற்றங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.  பூவரசு மரத்தின் ஆங்கிலப்பெயர் இண்டியன் ட்யூலிப் ட்ரீ (INDIAN TULIP TREE), தாவரவியல் பெயர் தெஸ்பீசியா பாப்புல்னேயா (THESPESIA POPULNEA).

திரும்பி வராத சந்தோஷங்கள்

பூவரசுஇலைகளில் நாதஸ்வரம் செய்து பீப்பிஊதுவோம். மழை நாளில் ஓடும் நீருக்கு குறுக்கே தடுப்பணை கட்டுவோம். கட்டிய தடுப்பணையில் பூவரசு இலை குழாய் வைத்து தேங்கிய நீரை வடிப்போம். காய்களில் பம்பரம் விளையாடுவோம்.

எனது பேரக் குழந்தைகளுக்கு இப்படி விளையாட வாய்க்கவில்லையே என வருத்தமாய் இருக்கிறது. அந்த நாளில் ஒரு தெருவுக்கு ஒரு பூவரசு மரமாவது நாங்கள் விளையாட காத்திருக்கும். திரும்பி வராத சந்தோஷங்கள் !

கதவு, ஜன்னல், வாசக்கால்

கதவு, ஜன்னல், வாசக்கால் செய்ய வேண்டும் என்றால் காசு பணத்தப் பத்தி கவலப்படாத பூரச மரத்திலயே போட்டுடு ஆசாரிஎன்பார்கள். மரவேலை செய்யும்  கார்பெண்ட்டருக்கு அந்த காலத்துப் பெயர் ஆசாரிதான்.

அதேபோல பம்பர விளையாட்டும் பையன்களிடையே பிரபலம். அன்று பம்பரம் செய்ய சுலபமாய் கிடைக்கும் மரம் பூவரசுதான். வேப்பமரம், வேலமரம்,  நுணாமரம் என்று பலவகை மரங்களிலும் பம்பரம் செய்வோம்.

இதில் வேலமர பம்பரம் ரொம்ப ஸ்ட்ராங். குழுவாகச் சேர்ந்து விளையாடும் பம்பர விளையாட்டில் வேலமரப் பம்பரங்கள் மற்றவற்றை சுலமாய் உடைத்துவிடும்.

பூவரசு மரத்தின் பலமொழிப் பெயர்கள்:

தமிழ்: பூவரசு, பூப்பருத்தி (POOVARASU, POOPARITHI

பொதுப் பெயர்: இண்டியன் டியூலிப் ட்ரீ (INDIAN TULIP TREE)

தெலுங்கு: கங்கா ராவி(GANAGA RAVI)

கன்னடம்: அடவி பெண்டி மரா (ADAVI BENDI MARA)

மலையாளம்: பூவரசு (POOVARASU)

இந்தி: பராஸ் பிபால் (PARAS PIPAL)

தாவரக்குடும்பம் :  மால்வேசி (MALVACEAE)

தாவரவியல் பெயர் :    தெஸ்பீசியா பாப்புல்நேயா (THESPESIA POPULNEA)

பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : இண்டியன் டியூலிப்  ட்ரீ (INDIAN TULIP TREE, ADEN APPLE, PORTIA TREE)

தழை உரம்தீவனம் –– கட்டிட சாமான்கள் கட்டை வண்டிகள்

தழை, விளை நிலங்களுக்கு தழை உரமாகும். கால்டைகளுக்கு    நல்ல தீவனமாகும். அடர் இலைகளுக்கு ஊடாக, கந்தக மஞ்சள் நிறத்தில், பளிச்சென்று பூக்களை பூத்துக் குலுங்கும். சில வெளிர் ரோஜா நிறத்திலும் இருக்கும்.

கண்ணைப் பறிக்கும் பூக்களுடன், வீட்டு முகப்பிற்கும், தோட்டத்திற்கும், சாலை ஓரங்களுக்கும்,       சுற்றுப்புறத்திற்கும் அழகூட்டும் அலங்கார மரம்.

 மரத்தில், எண்ணெய்ச் செக்கு, உரல், கரும்பு மரஆலை, உலக்கை, மாட்டு வண்டிகள், செய்யவும், கரும்பு மர ஆலைகள், வேளாணமைக் கருவிகள் , கம்பங்கள், கட்டிட சாமான்கள் முட்டுக் கட்டைகள், பந்தல் கால்கள், மற்றும் தூண்கள் செய்யலாம்.

ரத்த அழுத்த நோய்க்கு மருந்தாகும்

தோல் நோய்கள், சீதபேதி, மூட்டு வீக்கம், ரத்த அழுத்த நோய் ஆகியவற்றை குணப்படுத்தும் மருத்துவப் பண்புகள் கொண்ட மரம்.

ஏற்ற மண்: பரவலான மண்வகைகளில் வளரும். ஆயினும் மணல்சாரி மண்ணில் பிரியமாய் வளரும்.

நடவுப் பொருள் : போத்துகளை வெட்டி நடலாம். சுலபமாய் 6 - 10  மீட்டர்  வரை உயரமாய் வளரும்.

நாட்டுத்தேக்கு என்றழைக்கப்படும் பூவரசு மரம் இன்றும் கூட கிராமங்களில் பிரபலமான மரம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

  

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...