Monday, June 12, 2023

POOR MARKETING SYSTEM IN AGRICULTURE புண்ணியம்

புண்ணியம்

கிராமியக்கதை

(இதில், சம்பவம் உண்மையானது. சிதம்பரம் பகுதியில் வெள்ளை மக்காச்சோளம் போட்ட ஒரு விவசாயியின் அனுபவத்தோடு நான் வைத்த கண் காது மூக்கோடு சேர்ந்ததுதான் இந்த கதை. இது ஒட்டுமொத்த இந்திய விவசாயம் மற்றும் விவசாயிகளின் அவலமான நிலையைப் படம்பிடிக்கிறது.)

'டவுன்காரங்களுக்கு .. டீ  காப்பி புளிச்சிப்போயிருக்கும். தாகத்துக்கு என்னா சாப்பிடறீங்க…?" சம்முகம் விருந்தாளியாய் பாவித்து உபசரித்தார்.

    “அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க…”

     “பேச வந்தது வியாபாரன்னாலும்விவசாயி ஊட்டுக்கு  வந்தவங்கள சும்மாப் போவ உட்டுடுவானா…?  ரஞ்சிதம்ரஞ்சிதம்…" வீட்டுக்காரம்மாவை கூப்பிட்டார்.

    “அது இருக்கட்டுங்க…. சரக்கு எங்க  இருக்குங்க…?"

    “சரக்கா…?"

       “அதான் மக்காச் சோளம்"

    “தோ…  இருக்குது…."

       அவர்கள் உட்கார்ந்திருந்த குறட்டுக்கு எதிர்ப்புறம் மூட்டைகள் அடுக்கப் பட்டிருந்தன.

    “  கொஞ்சம் அவுத்துப் பாக்கலாமா…? "

    “  கொஞ்சம் என்னா….?  எல்லாத்தையும் அவுத்துப் பாருங்க…. சுத்தமா இருக்கும்….”   சம்முகம் அவசரமாய் எழுந்து கூடவே போனார்.

   “  இல்ல பாத்துட்டா ஒரு திருப்தி… "

      பாருங்க…  பாருங்கசம்முகம் ஒரு மூட்டையை அவிழ்த்துக் காட்டினார். மக்காச்சோள மணிகள் முத்துக்களாய் முகம் காட்டிச் சிரித்தன.

   “  என்னங்க இது வெள்ளையா இருக்கு…? "

   “  வெள்ளைமக்காச்சோளம்…. இது புதுசுவிவசாய டிப்பார்ட்மெண்ட் குடுத்தாங்கநம்ம ஊர்லநான் ஒருத்தன்தான் போட்டேன்நம்ம நேரமோ என்னமோ அந்த அதிகாரியை மாத்திப்புட்டாங்க…” என்று ஒரு நீண்ட பெருமூச்சை விட்டார்.

    “யாரை…?"

    “இதைப் போடச்சொன்னாரே விவசாய ஆபீசர்அவரேஅறுவடை ஆகட்டும் விக்க நானே ஏற்பாடு ஏற்பாடு பண்றேன்னாரு…” இப்போ அவருக்குப் பதிலா வந்திருக்கிறவருக்கு  இதப்பத்தி விவரம் தெரியல…."

      என்னாங்க கூப்பிட்டீங்களா..? வாசப்படியில் நின்றபடி கேட்டாள் ரஞ்சிதம். 

    “ரெண்டு லோட்டா மோர் கொண்டா..."

    “இப்பத்தான் சிலுப்பிக்கிட்டிருக்கேன்.."

    “லேட்டானாலும் பரவால்ல.. கொஞ்சம் தோணவே கொண்டா"

    “முற்போக்கு விவசாயி போலருக்கு நீங்க….:”

    “ஆமாம்.."

       “எவ்ளோ மூட்டை இருக்குன்னு சொன்னீங்க…?"

   “இருவது.."

           ''ஒரு ஏக்கர்லதானுங்கள போட்டிங்க... பெரிய விவசாயம் போலருக்கு. தைரியமா போட்டிருக்கீங்க…”

   “அதல்லாம் ஒண்ணுமில்லே சின்ன விவசாயம்தான். நம்ம வீட்டப்பாத்தா  தெரியல்லீங்களா…?

   “…ம் என்னா வெல சொன்னீங்க…?" அப்போதுதான் பார்ப்பது மாதிரி வீட்டை நோட்டமிட்டார்.

     சின்னதும் பெரிசும் இல்லாத ஒரு சராசரி விவசாயியின் வீடாக இருந்தது.

  “  மூட்டை தொண்ணூறு ரூவா… "

  “  மஞ்சளே அறுவதுதானே போகுது… "

  “  அப்படீங்களா…? “

  “  ஆமாஅதுக்கு மேல எவந்தர்றான்…? "

  “  அப்போ…  என்னா வெலைக்குத்தான் எடுத்துக்குவீங்க…?  சம்முகத்தின் குரல் லேசாக கம்மியது.

     இதை எடுத்துட்டுப் போனாலும்…  ஒடனடியா ஒண்ணும் பண்ண முடியாது. நீங்களும் பாவம் சின்ன விவசாயியா இருக்கீங்க. முற்போக்கு விவசாயியாகவும் இருக்கீங்கஉங்கக்கிட்ட ரொம்பக் குறைக்கறது நல்லா இருக்காதுமூட்டைக்கு நாப்பது குடுத்துடறேன்வார்த்தைகள் சிக்கலின்றி வந்தன.

   “  நாப்பதா…?  "

   “  ……………  "

    “  நாப்பதுக்கு மேல தாளாது….   "

    “  விவசாயத்துல மூக்கப்புடிச்சா சீவம் போயிடுங்க…   ”

    “  அதெல்லாம் எனக்குத் தெரியும்ங்க…  "

    “  இதுக்கு செஞ்ச செய்நேத்தி இருக்குங்கள… "

    “  ஆமாஆமாவெவசாயத்தொறையில  அதச்செய்யி இதச்       செய்யின்னு சொல்லிகிட்டெ இருப்பாங்கள…?  ”

    “  இதுக்கு ஆன செலவு இருக்குங்கள…  "

    “  செலவு ஜாஸ்திதான். சொன்னா நம்ப மாட்டிங்க….  நானே ஒரு விவசாயிதானுங்க. 

      இனிமேல் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை -- என்பதாக வெறுமனே  உட்கார்ந்திருந்தார் சம்முகம்.  செய்நேத்திக்கு வாங்கிய அசலுக்காவது தேறுமா…?  என்று கணக்கு பண்ணினார்இன்னும் கொஞ்ச நாளில் அசலை வட்டி சாப்பிட்டுவிடும்.

      னக்கு ரொம்ப கெட்ட பேருங்க வியாபாரிங்க மத்தியில விவசாயிக்கு அதிக வெலை கொடுக்கறேன்னு

    “…………..”

   “  நான் அதப்பத்தி கவலைப்படறது கெடையாதுங்க….”

    “……………”

    “நமக்கு விவசாயின்னாலும் தொழிலாளின்னாலும் ஒரு பிரியமுங்க….”  இப்போது வியாபாரி நேராக சம்முகத்தின் முகத்தைப் பார்த்தார்.

       சம்முகத்தின் முகம் கருங்கல்லாய் இறுகியிருந்தது.

       இதே பெரிய விவசாயியா இருந்தா முப்பத்தஞ்சிக்குங் கேப்பேன் முப்பதுக்குங் கேப்பேன்.

      “………………”

      “ உங்களுக்குன்னுட்டுத்தான் இதச் சொல்றேன்…..”

     “ மக்காச் சோளத்த வாரம் ஒருதடவை  வெளிய வாரி கொட்டி ஆறவைக்கலேன்னா புழு புடிச்சிடும். இதை அறுவடை பண்ணி இன்னியோட சரியா ரெண்டு மாசம் ஆச்சிங்க…”

        “விவசாய வேலையே சிங்கநாதந்தானே…?  இவ்ளோநாளு நீங்கபண்ணீங்கஇனிமே நான்பண்ணனும்…"

     “அதனாலதான் சொல்றேன்…  ஏதோ அஞ்சிபத்தா  கொறச்சிக்கங்க…  அதுக்குன்னிட்டு …"

     “ அய்யய்யோ அதுவே அதிகங்க….”   

      'பாருங்கநீங்க கேக்கற வெலைக்கு ஆன செய்நேத்தி செலவுக்கே மூணு நோட்டு கைய கடிக்குங்க…. அப்பொறம் அதுக்கு எடுத்த பாடு இருக்கே…"

     ‘ நீங்க ஒண்ணு…. இந்த வெலையே ஒரு நாயத்துக்கு ஒரு புண்ணியத்துக்கு…. " 

      'என்ன சொன்ன…?"

      'ஒரு சின்ன விவசாயிக்கு நல்ல வெலை கொடுக்கறதும் ஒரு புண்ணியம்மாதிரிதானுங்களே…?

      'புண்ணியமா…?"

      'பின்னே இல்ல…?"

      'ராஸ்கல்எழுந்தருடாகொறட்டவுட்டு…"

      '……………..”

      'புண்ணியத்துக்கு கொடுக்கறானாம் 'புண்ணியத்துக்கு வெலைவெளியபோடா நாயே…” சம்முகம் ஆவேசம் வந்தவராய் கத்தினார்.

      'என்னடா பாக்கற…?"

      'ஏங்க மோருங்க…”    ரஞ்சிதம் மோரும் கையுமாய் வெளியே வந்தாள்.

      'லோட்டாவை அவன் கையில குடுடி…”

      '………………”

      'வாங்கிக்கடா…”

      வியாபாரி தயங்கியபடி லோட்டாவை வாங்கிக் கொண்டார்.

      'குடிடா…   எலேகுடிடான்னா…  கொடல உருவிடுவேன்…. குடிடா…”

குடிக்கவில்லை என்றால் உண்மையாகவே குடலை உருவினாலும் உருவிடுவான். எதற்கு வம்பு ? ஆழம் தெரியாமல் காலை விட்டாச்சு. பதமாகத்தான் எடுக்க வேண்டும்.

'வெலை கேக்றான் வெலை…  அடிமாட்ட கேக்கற மாதிரி…   விவசாயின்னா ஒண்ணுந்தெரியாத காட்டா மோட்டான்னு நெனச்சிட்டானுங்க…  பொட்டிய கழட்டிடுவோம் கழட்டி.... “ 

கண்களில் மிரட்சியையும் முகத்தில் பயத்தையும் தேக்கியபடி தயங்கித்தயங்கி லேட்டா மோரை ஒரே முச்சில் குடித்தார். உடனடியாக இடத்தை காலி செய்வது எப்படி?   

      இப்போ குடிச்சய மோரு...   அதுதாண்டா புண்ணியம்…”

              “………………”

சம்முகம் வேட்டியமடித்துக் கட்டியபடி குறட்டுக்கு பக்க நடையில் அப்படியும் இப்படியுமாய் நடந்தான்.

      'லோட்டாவை கீழ வச்சிட்டு  திரும்பி பாக்காம போடா…”

              ''……………….”

      குறட்டில் பரப்பி வைத்திருந்த வெள்ளமக்காச்சோள மணிகள் முத்துக்களாய் முகம்காட்டி சிரித்தன.

      வியாபாரி வேகமாய் ரோட்டீல் இறங்கி நடந்தான்.

8888888888

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...