Thursday, June 8, 2023

PONNIYIN SELVAN RIVER MUDIKONDAN பொன்னியின் செல்வன் ஆறு முடிகொண்டான்

 



இது காவிரி ஆற்றின் ஒரு கிளைஆறு. திருவாரூர் மாவட்டத்தில் முடிகொண்டான் என்ற இடத்தில் ஓடும் ஆறு. இது பாபநாசத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  வாழைப்பழக்கடை என்ற இடத்தில் குடமுருட்டி  ஆற்றில் இருந்து பிரியும் ஒரு கிளை ஆறு. பின்னர் அது திருமலைராஜன் ஆற்றுடன் கலக்கிறது.  இந்த ஆற்றினை பழையாறு என்று அழைக்கப்பட்டதாக தேவாரப் பாடல்கள் தெரிவிக்கின்றன. 

பொன்னியின் செல்வன் ஊர்

பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி அவர்களால் மிகவும் போற்றப்படும் ஊர் இந்த பழையாறை. ஆறை, பழசை, மழபாடி, பழையாறு, இவை எல்லாமே பழயாறைக்கான பழைய பெயர்கள். 

குந்தவை மற்றும் வானதி (KUNTHAVAI & VANATHI)

பொன்னியின் செல்வன் கதைப்படி ராஜராஜனின் தமக்கை குந்தவை வசித்த இடம் பழையாறை. அவருடைய முதல் மனைவி வானதி வசித்ததும் பழையாறைதான். 

சோழர்களின் தலைநகரம் (CAPITAL OF CHOLAS KINGDOM)

சரித்திர பிரசித்தி பெற்ற பழையாறை சோழர்களின் தலைநகர்களில் ஒன்றாக விளங்கியது. பாண்டியர்களின் ஆட்சி மாறிய பின்னரும் அவர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கியது பழையாறு. 

அரிசில் ஆறு மற்றும் முடிகொண்டான் ஆறு (ARISIL RIVER & MUDIKONDAN RIVER)

அரிசில் ஆற்றுக்கும் முடிகொண்டான் ஆற்றுக்கும் இடையில் ஐந்து மைல் நீளமும் மூன்று மைல் அகலமும் கொண்ட பகுதி தான் இந்த பழையாறை. பழையாறை சோழர்கள் காலத்தில் சிறப்புகளை பெற்ற ஒரு நகரமாக இருந்தாலும் தற்போது சிறு சிறு ஊர்களாக பிரிந்து கிடக்கிறது.  

கும்பகோணத்திற்கு அருகில் (VILLAGES NEAR KUMBAKONAM)

அவை கீழப் பழையாறை, பழையாறை, வடதளி ,தென்தளி, திருமேற்களி, பட்டீச்சரம், சோழன்மாளிகை, தாராசுரம், திருசக்திமுற்றம், அரிச்சந்திரன்பாற்குகுளம், மு ழை யூ ர், ராமநாதன்கோவில், ஆரியப்படையூர்பம்பப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர், நாதன் கோவில், உடையாளூர் ஆகியவை. இந்த ஊர்கள் எல்லாம் கும்பகோணத்திலிருந்து ஏழு முதல் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. 

ராஜேந்திர சோழன் (KING RAJENDRA CHOZHA)

சோழப் பேரரசர்கள் ஆட்சி செய்த 430 ஆண்டு கால வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்று விளங்கியது முடிகொண்டான் ஆறும் ஊரும்.  .இந்த நகரம் ராஜேந்திரசோழன் காலம் முதல் முடிகொண்ட சோழபுரம் என்று அழைக்கப்பட்டது. 

பழையாறை சோழர்களின் தலைநகரம் (CHOLA’S CAPITAL CITY)

சுந்தர சோழன் காலத்தில் சோழர்களுடைய தலைநகரம் தஞ்சைக்கு மாற்றப்படும் வரை பழையாறை தான் சோழர்களுக்கு தலைநகராக விளங்கியது. வந்தியத்தேவன் இங்குதான் குந்தவையை சந்தித்து ஆதித்த கரிகாலன் கொடுத்து அனுப்பிய ஓலையைக் கொடுப்பான். 

இந்த ஊருக்கு தெற்கில் முடிகொண்டான் ஆறும் வடக்கில் திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறுஎன்று அழைக்கப்பட்டதால் அதன் கரையில் உள்ள ஊர் பழையாறை என்று அழைக்கப்பட்டது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் பழையறை கிராமத்தில் ஓடும் முடிகொண்டான் ஆற்றில் கதவணை ஒன்றை அமைத்தார்கள். அதன் மூலமாக அங்கு உள்ள மேலப்பழையாறை,  கீழப்பழையாறை ஆகிய கிராமங்களில்   சுமார் 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது. ஆறு பற்றிய கூடுதலான செய்திகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

முடிகொண்டான்ஆறு பற்றிய வேறு சுவையான செய்திகள் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள். 

நன்றி வணக்கம் ! 

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com  

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...