Monday, June 12, 2023

PLEASING PAVALAMALLI TREE - NICTANTHUS ARBORTRISTIS - பவளமல்லி என்னும் பாரிஜாதம்

 

 

பவழமல்லி - TREE OF SORROW
Nictanthus Arbortristis


பூக்கள் மல்லிகையாய் வாசம் தரும். நாசியை மிரட்டாத சுவாசம் தரும். வள மல்லி பூக்கள் வெள்ளை வெளேர் என்று இருக்கும். இதன் காம்பும் பூவின் உட்புறமும் பவள  நிறத்தில் இருக்கும். பூவின் காம்புகள் கொஞ்சம் நீளமாக இருக்கும். இந்த பூவின் வாசத்தை வைத்தே இந்த மரம் அருகில் உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

02. பவளமல்லி என்னும் பாரிஜாதம்

தாவரவியல் பெயர்: நிக்டேன்தஸ் ஆர்பட்டிரிஸ்டிஸ் (Nictanthus arbortristis)

தாவரவியல் குடும்பம்: ஓலியேசியே (Oliaceae)

ஆங்கிலப் பெயர்: ட்ரீ ஆஃப் சாரோ (Tree of Sorrow)

இமயம் முதல் குமரி வரை வளரும் இந்திய மரம்; உயரம் அதிகம் வளராத அகத்தியர் மரம்; சில இடங்களில் குறு மரம். பல இடங்களில் சிறு மரம்பவள நிறக் காம்பில் சங்கு நிறப் பூக்கள்; ஆண்டு முழுவதும் அயராமல் பூக்கும்; மழை வந்தால் மரம் நிறைய பூக்கும்; ஆசைக்கும் சூடலாம்; பூசைக்கும் சூடலாம்; தைலம் தரும் பூக்கள்; சாயம் தரும் காம்புகள்; முட்டைக்கு மூக்கு வைத்தது போன்ற நீள்வடிவ இலைகள்; பயிர்களுக்கு இட்டால் உரமாகும்; நிலங்களுக்கு இட்டால் அவை ரமாகும்; நட்டு வளர்த்தால் கண்ணுக்கு விருந்தாகும்; கசக்கிப் பிழிந்தால் மருந்தாகும்: பூக்களை கட்டி விற்றால் காசாகும்.

பலமொழிப் பெயர்கள்:

Ø  தமிழ்: பவளமல்லி (PAVALAMALLI)

Ø  இந்தி: ஹர்சிங்கர் (HARSINGAR)

Ø  மலையாளம்: பாரிஜாதம் (PARIJATHAM)

Ø  பெங்காலி: ஷிபாலி (SHEFALI)

Ø  சமஸ்கிருதம்: பாரிஜாத் (PARIJAT)

பாரிஜாதம் ஒரு ராஜகுமாரி

ஒரு ஊரில் ஒரு அரசகுமாரி இருந்தாள்; அழகான அரசகுமாரிகள் அரிதாக இருந்த காலம்அதுஅவள் பெயர் பாரிஜாதம். அவனி அம்பத்தாறு தேசத்தின் அரசகுமாரர்களும் அந்த அதி ரூபினியான அந்த அரசகுமாரியைக் காதலித்தார்கள்.

ஆனால் அவளோ ஆயிரம் கிரணம் அணிந்து  ஆகாயத்தில் பயணிக்கும், ஆதவனைப் பார்த்து மயங்கினாள். அருணன் ஓட்டிய அழகு ரதத்தில் ஆதவன் அனுதினமும் பயணம் செய்தான். அணையா அனலையும் காதல் தணலையும் அழகாய் மூட்டிச் சென்றான், அவள் மனதில்.

பாரிஜாதம் தன் மனதில் ஆசை விதையை விதைத்தாள்விதை, முளைவிட்டு கிளைவிட்டு காதலாய் முகிழ்த்தது; விரைவாய் முகிழ்த்த காதல் ராட்சசமாய் வளர்ந்தது.பாரிஜாதம் நீ அழகின் சிகரமாக இருக்கலாம். ஆனால் என் மனதில் நீ ஒரு மண்மேடாகக் கூட இல்லைஎன்றான் ஆதவன் ஒரு நாள்; அவள் மனதில் இடியாய் இறங்கியது அந்த சேதி. 

பூமிக்கு பூச்சூட்டுவாள்

பாரிஜாதம், அழுது புரண்டாள்; வெடித்து விம்மினாள்; அவள் காதல் கானல் நீரானது; ஒரு தலையாய் தொடர்ந்த காதல் ஒன்றுமே இல்லாமல் போனது; மனம் உடைந்த அந்த மகாரூபினி மரணத்தின் கரம் பற்றினாள்அவள் உடல் எரிந்து சாம்பல் ஆனது. அவள் அஸ்தியிலே அதிசயமாய் முளைத்தது ஒரு அபூர்வ மரம். அந்த அபூர்வமே பாரிஜாதம் ஆனது; பவளமல்லியும் ஆனது. மரமாக ஜனித்த பாரிஜாதம் அர்த்த ராத்திரியில் பூ பூப்பாள். அடுத்த நாள் ஆதவன் முகம் காட்டும் முன்னால் அத்தனையும் உதிர்த்துவிட்டு நிற்பாள்.

அவள் கரம்பற்ற மனம் இன்றி கைவிட்ட ஆதவனின் முகம் பார்க்க விரும்பாமல் முகிழ்த்த பூக்கள் அத்தனையும் முற்றாக உதிர்ப்பாள். உதிர்த்து பூமிக்கு பூச்சூட்டுவாள்.

அதனால்தான் நடு இரவில் பூத்து இதன் பூக்கள் காலையில் சூரிய உதயத்திற்குள் உதிர்ந்துபோகும். சூரியன் முகத்தில் அவை விழிக்க விரும்பவில்லையாம்

இதுதான் பாரிஜாத மரத்தின் சோக சரித்திரம் !

பாரிஜாத பூக்கள்:

பூக்கள் மல்லிகையாய் வாசம் தரும். நாசியை மிரட்டாத சுவாசம் தரும். வள மல்லி பூக்கள் வெள்ளை வெளேர் என்று இருக்கும். இதன் காம்பும் பூவின் உட்புறமும் பவள  நிறத்தில் இருக்கும். பூவின் காம்புகள் கொஞ்சம் நீளமாக இருக்கும். இந்த பூவின் வாசத்தை வைத்தே இந்த மரம் அருகில் உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.  இதன் பூக்கள் நள்ளிரவில் பூத்து விடியற்காலையில் உதிர ஆரம்பிக்கும். காலையில் பார்த்தால் மரத்தடியில் பாய் விரித்தது போல  பூக்கள் உதிர்ந்து கிடக்கும்.  இந்த பூக்கள் முன்னிரவில் அதாவது பிரம்ம முகூர்த்ததில் பூப்பதால் இதனை வடமொழியில்  பிரம்ம தர்ஷன் என்று அழைக்கிறார்கள்.
சங்க காலத்தில் தமிழில் இந்த பூவின் பெயர்  சேடல். சேடல் என்றால் சிவப்பு அல்லது நீல நிறத்தை குறிக்கும்.

நடவு செய்யும் இடங்கள்

பாரிஜாத மரங்களை வீட்டின் முகப்பில் நடலாம். வீதியின் முகத்தில் நடலாம். கும்பிடும் கோயிலில் நடலாம். மகிழ்வாய் மசூதியில் நடலாம். தேடிப்பிடித்து தேவாலயத்தில் நடலாம்.

போத்துக்களை நடலாம்

இந்த தேவ விருட்சத்தின் விதை எடுத்தும் விருப்பமாய் நடலாம்; வெட்டி எடுத்த போத்தையும் நடலாம். வளர்ந்த செடியை வெட்டிவிட்டால் குட்டிப் புதராய் குறுகி வளரும்; வெட்டாமல் விட்டாலும் சிறு மரமாய் சிக்கனமாய் வளரும். 

காசு மண்டலமே கதி என ஆனதனால் காற்று மண்டலமே தூசு மண்டலமானது. பசுமை இல்ல வாயு பலமாய் சேர்ந்து அது மாசு மண்டலமானது. தூசையும் மாசையும் துடைத்து எடுத்து சுத்தமான காற்றை மட்டுமே சுவாசிக்கத் தரும்.

Please post your pleasing comments - Gnanasuria Bahavan (author)

22222222222222222222222222222222222222222222

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...