Saturday, June 10, 2023

PLASTIC GARBAGE HILLS பிளாஸ்டிக் தொடர்ச்சி மலைகள்


பிளாஸ்டிக் தொடர்ச்சி மலைகள்


 இந்தியாவின் முக்கியமான மலைகள்  மூன்று ஒன்று இமயமலை(HIMALAYAN HILLS), இரண்டு  மேற்குத் தொடர்ச்சி மலை(WESTERN GHATS) மூன்று கிழக்கு தொடர்ச்சி மலை(EASTERN GHATS), நான்காவதாக  ஒரு மலை உருவாகியுள்ளது, இந்திய பிளாஸ்டிக் தொடர்ச்சி மலைகள்(INDIAN PLASTIC GHATS) 

1.உலகில் உள்ள பிளாஸ்டிக்குகள் எவ்வளவு கரியமில வாயுவை உற்பத்தி செய்கின்றன?

ஒரு ஆண்டில் 750 மில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயு உற்பத்தி என்பது சர்வதேச அளவில் பிளாஸ்டிக்கின் கைங்கரியமாக உள்ளது. இது 2050 ஆம் ஆண்டில் 2.8 ஜிகா டன் அளவு ஒரு ஆண்டின் கரியமிலவாயு உற்பத்தியாக இருக்கும் என்கிறார்கள். 

2.பிளாஸ்டிக்குகள், சர்வதேச அளவில் எத்தனை சதவீதம் கரியமலவாயுவை நமது சுற்றுச்சூழலில் சேர்க்கின்றன ?

உலகில் வெளியாகும் மொத்த கரியமில வாயுவில் 3.8 சதவிகிதம் உற்பத்தி செய்கின்றன பிளாஸ்டிக்குகள். சர்வதேச அளவில் ஐந்தாவது நிலையில் அதிக அளவில் கரியமலவாயுவை பிளாஸ்டிக்குகள் உற்பத்தி செய்கின்றன. 

3.பிளாஸ்டிக்கை குறைவாகப் பயன்படுத்துவதால் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவதை குறைக்க முடியுமா?

பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்கள் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசும் படியாக உள்ளது. அதனால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை குறைப்பதால் பசுமை இல்ல வாயுக்கள் (GREEN HOUSE GASES) வெளியேற்றத்தை குறைக்க முடியும். 

4. உலகிலேயே அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்து சுற்றுச்சூழலுக்கு மாசுபடுத்தும் நிறுவனங்கள் எவை?

சர்வதேச அளவில் அதிக அளவு பிளாஸ்டிக்குகளை உற்பத்தி செய்வதில் ஐந்து நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. அவை கொக்கோகோலா, பெப்சிகோ, நெஸ்லே, யூனிலீவர், பிராக்டர் அண்ட் கேம்பிள்(COCO COLA, PEPSICO, NESLE, UNILEVER, PROCTER & GAMBLE). 

5.சர்வதேச அளவில் எந்த நாடு அதிக அளவு பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்கிறது ?

சீனா தான் சர்வதேச அளவில் அதிக பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. உலக உற்பத்தியில் 32% உற்பத்தி செய்கிறது, 20% உற்பத்தி செய்து இரண்டாம் நிலையில் இருப்பது அமெரிக்கா. 

6.உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவில் குப்பை சேர்க்கும்  நாடுகள் எவை ?

உலக அளவில் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவது அமெரிக்கா இரண்டாவதாக இந்தியா. சைனா, பிரேசில், இந்தோனேசியா, ஆகிய நாடுகள் மூன்றாவது நான்காவது ஐந்தாவது இடங்களில் உள்ளன. 

7. உலக அளவில் கடலில் அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை தண்ணீரில் கொட்டி கடல் பரப்பில் மாசுபடுத்தும் நாடுகள் எவை?

இதில் முதல் நிலையில் இருப்பது பிலிப்பைன்ஸ், இரண்டாவது இந்தியா. மலேசியா சைனா இந்தோனேசியா ஆகிய நாடுகள் அதற்கு அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

8. பிளாஸ்டிக் பொருட்களால் மாசு அடையாத நாடு உலகில் எந்த நாடு?

ரீபண்ட் டெபாசிட் ப்ரோக்ராம் (REFUND DEPOSIT PROGRAM)என்னும் திட்டத்தின் மூலமாக தனது பிளாஸ்டிக் பொருட்களில் 97 சதவீதத்தை மறு உற்பத்திக்கு பயன்படுத்துகிறது ஜெர்மனி என்கிறார்கள். அதுபற்றி இன்னொரு நாள் பார்க்கலாம். 

எனக்கு ஒரு சந்தேகம் ! அதை நீங்கதான் தீத்து வைக்கணும் ? யோசிச்சு யோசிச்சு மண்டை காஞ்சி போச்சி ! பிளாஸ்டிக் குப்பை மலைமலையா குவியக் காரணம் ஜனங்களா ? ஜனநாயக அரசாங்கமா ? நல்லா யோசிசு சொல்லுங்க ! 

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

 

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...