Wednesday, June 14, 2023

PLAN TO USE YOUR GREY WATER உங்கள் வீட்டு குளியலறை தண்ணீர் வீணாய் போகிறதா ?

 

சேகரித்து செடிகளுக்கு
அனுப்புங்கள்


PLAN TO USE YOUR GREY WATER

உங்கள் வீட்டு குளியலறை தண்ணீர் வீணாய் போகிறதா ? ஆமாம் என்றால் இதைப் படியுங்கள்.


888888888888888888888888888888888888888

நீர் ஆவியாகிஆவி  நீராகி மறுபடியும் மறுபடியும் நீர் ஆவியாகிஆவி  காற்று காற்று அள்ளிச்செல்லும் மேகங்கள்

கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.  ஏரிகுளம்குட்டை . ஆறுகடல்;, அனைத்திலிருந்தும் நீர்  வெப்பத்தினால் ஆவியாகிறது.  

செடிகொடிகள்பயிர்கள்மரங்கள், மற்றும்  தாவரங்கள்  சுவாசித்தும் ஆவியை வெளிவிடுகின்றன.  இந்த ஆவி அனைத்தும் குளிர்ந்து  நீர்த்திவலைகளை   உள்;ளடக்கிய  மேகங்களாக   அவதரிக்கின்றன. 

நீர் கோர்த்த மேகங்களை காற்று அள்ளிச் செல்கிறது.   குறித்த அளவுவரை  மேகங்கள்  தொடர்ந்து  பருகுகின்றன.    மேகங்களின் தாகம் தீர்ந்ததும்தனது நீர்ச்சுமையை, மழையாகபனியாககல்  மழையாகஇந்த பூமிப்பந்தின்மீது வாரி இறைப்பதும்இந்தப் பணி  சுழற்சியாக நடைபெறுவதும்  தான்    நீர் சுழற்சி.

பசுமைநீர் 

மழைநீரில்  ஒரு பகுதி மண்பரப்பில்  வீழ்கிறது. வீழ்ந்து  மண்கண்டத்தை நீரால் நிரப்புகிறது.  இதனை மண் ஈரம்     என்கிறோம்.  பயிர்களும் மண்மீது வளரும்செடி கொடிகளும் மரங்களும்தனது வேர்களால் உறிஞ்சுகின்றன.  ஒளிச்சேர்க்கைக்கும்சுவாசத்திற்கும்பயன்படுத்திக் கொள்கின்றன.   இதுதான்  பசுமைநீர்

வெண்மைநீர்:    

ஒரு நிலம் முழுவதும்  பயிர்களால் மூடியிருக்கிறது.   பயிர்கள் அனைத்தும் ஆவியாக்கும்   நீர்  வெண்மை  நீர். அதுமட்டுமல்ல  நிலப்பரப்பின்மீது ஈரமாக இருக்கும் நீரும்  வெப்பத்தால் ஆவியாகி  மேலே பறக்கிறது.  இவை இரண்;டும்தான்  வெண்மை நீர்.

நீலநீர் மழையின்போது  தப்பி ஓடும்   தண்ணீர்  (RUNOFF WATER)   ஆறுகளில் சென்று தஞ்சமடைகின்றது.   அதில் ஒருபகுதி  நிலத்தடி நீராக  மண்ணுள்  செல்லும்.  ஆக ஓடும் நீர்தான்  நீலநீர். 

சுருக்கமாக  புரியும்படி  சொல்ல வேண்டுமானால்மானாவாரி விவசாயத்திற்கு  பயன்படும் நீர்பசுமைநீர்.   இறைவை  விவசாயத்திற்கு  பயன்படும் நீர்  அல்லது தேக்கி வைத்த பாசனத்துக்கு பயன்படுத்தும் நீர்  நீலநீர்.  

சாம்பல்வண்ணநீர்

சுமாரான அசுத்தங்களை உள்ளடக்கியது தான் சாம்பல்  வண்ண நீர்.  குளியல்நீர், துணி துவைக்கும்போது வெளியேற்றும் அழுக்கு நீர்சமையலறைக் கழிவுநீர்  ஆகியவை   சேர்ந்ததுதான் சாம்பல் வண்ணநீர்.  கழிவறை நீர்  மூலம்  டயாபர் போன்றவை  இல்லாதது   என்று பொருள்.

இதில்  அழுக்கு, உணவுகிரீஸ், மயிற்கற்றைகள், வீட்டில் பயன்படுத்தும்சோப்புவாஷிங் பவுடர்கிளீனிங்  பவுடர்போன்றவை சாம்பல் வண்ண நீரில் இருக்கலாம்.    அழுக்காக பார்க்க  அருவருப்பாக இருக்கும்.  ஆனால்  இதனை பாதுகாப்பாக  பயிர்களுக்கு  பாசனம் அளிக்க  பயன்படுத்தலாம். 

ஆறுகள், ஏரிகள், கழிமுகங்கள்ஆகியவற்றில்  சா.வ.  நீரை  நிறைத்து விட்டால் அதிலுள்ள  ஊட்டச்சத்துக்கள் (NUTRIENTS வீழ்படிவை   உண்டாக்கும்.  அதுவே  பயிர்களுக்கு பாதுகாப்பான   உணவாகும். 

சாம்பல்வண்ணநீரை  செப்டிக் டேங்க்கில் விட்டால்அது வீணாகிவிடும்.  தனியாக  அதனை சேகரிக்க முடியும்.   அது           உங்களுக்கு   உபயோகம்  ஆகும்;.  உள்ளுரில்  இருக்கும் நீர்  ஆதாரங்களை   மாசுபடுத்தாமல் இருக்கலாம்.  நமது  சுற்றுப்புறத்தை  சுகாதாரமாக  வைத்துக்கொள்ள  நம்மாலான  உதவியை  செய்ததாக  அர்த்தம். 

வீட்டுத்  தோட்டத்திற்குப் பாய்ச்சலாம்.  நகரவாசிகள் தங்களுக்கு சொந்தமான  சா.வ. நீரைப்பயன்படுத்திதனது வீட்டு புறக்கடைத்தோட்டம் அமைக்கலாம். 

வீட்டின் முன்புறமும்  பின்புறமும்   உள்ள  வெற்றிடத்தில்  பூச்செடிகளை நடலாம்.  பூ மரங்கள் நடலாம்.  அவற்றிற்கு  நேரடியாக ஒரு குழாயை  இணைத்துதாவரங்களின்   வேர்ப்பிரதேசத்தில் இந்த  சா.வா. நீரினை  பாய்ச்சலாம்.

காய்கறி செடிகளுக்குக்கூட  பாய்ச்சலாம்.  அந்த நீர்   காய்களைத்  தொடாதவாறு  பாய்ச்சலாம்.  பிரச்சனை ஏதும் இல்லை.

ஆனால்அதில் சாப்பாட்டு  உப்பு, போரான்  உப்பு,   குளோரின்  உப்பு  ஆகியவை  கலக்காமல்  பார்த்துக் கொள்ள வேண்டும்.  இந்த  உப்புக்கள்   அளவுக்கு  மேல்  இருந்தால்  செடிகளின் வளர்ச்சியை  பாதிக்கும். 

போரான்குளோரின்சோடியம் குளோரைடுஎனும் உப்புக்கள்  பயிர்  ஊட்டச்சத்துக்களைச்   சேர்ந்தவைதான்.   ஆனால்  மிகவும் குறைவான அளவுதான்  தேவை. 

குளியலறை  மற்றும் சமையலறைக்  கழிவுநீரை  சிறிய வாய்க்கால் அமைத்து தோட்டத்திற்கு பாய்ச்சலாம். சொட்டு நீர்ப்பாசனத்தை தவிர்ப்பது நல்வது.  காரணம், அடிக்கடி ஏற்படும் அடைப்பை சரிசெய்ய முடியாது.

சரிவான நிலத்தில் இந்த நீரை எடுத்துச்செல்லும்போது, மண்ணே கூட வடிகட்டியாக  செயல்பட  வாய்ப்பு    உள்ளது.

கழிவுநீரை  வீட்டுத் தோட்டத்திற்குப் பயன் படுத்துவது  நல்லது  சூழல்  சுத்தமாகும்.   நீர்ச் சிக்கனம்  சாத்தியம்.  புத்தம்புதிய  காய்கள்பழங்கள், பூக்கள்  கிடைக்கும்.  வீட்டிற்கு  அழகுதரும்.  வீட்டுச்  செலவு  குறையும்.    குடும்பத்தினர்  ஆரோக்கியம் மேம்படும்.    டாக்டர் செலவு, மருந்து செலவு  மிச்சமாகும்.   வாட்டர் பில் செலவு குறையும்.  சாம்பல்நிற நீரை  பயன்படுத்துவது  எப்படி 

குளியல்நீர்துவைக்கும்நீர்சமைக்கும்நீர்ஆகியவற்றை   தோட்டத்திற்கு  பாய்ச்சும்போது இவற்றை  சிலவற்றை கவனத்தில்  கொள்ளவேண்டும்.

1. சாம்பல் நிற  நீரை  24  மணி  நேரத்திற்கு மேல்  சேமித்து  வைக்கக்  கூடாது.  அப்படி அதை  சேமித்தால்நாற்றம் வீசத்  தொடங்கும்.

2. கை, கால்உடல், முகம்  போன்றவற்றில், இந்தநீர்  படாதவாறு  பயன்படுத்த வேண்டும்.

3. இது  தேங்கி நிற்கவோவேறு  இடங்களில்  வடிந்து போகவோ  கூடாது. இது கொசுக்கள் குடியிருக்கும்  கூடாரமாகிவிடும்;. 

4. குழாய்கள், வடிகட்டிகள்சொட்டிகள் (DRIPS)  ஆகியவற்றை   தவிர்க்கவும்.   இது  அதிக  வேலை வாங்கும். 

5. உங்கள்  வீட்டின்  சாம்பல்நிற நீர்போக்கி  வெளியேற்றும்  நீர்,   எவ்வளவு எனக்  கண்டறியுங்கள்.  அதற்குத்தக   காய்கறிச்செடிகள்பழ மரங்கள்பூச்செடிகள்பூமரங்கள்மூலிகைச்செடிகள்ஆகியவற்றைத்  திட்டமிடலாம்.

உங்கள் வீட்டின் குளீயலறைத் தண்ணீரை செடிகளுக்கு பயன்படுத்த முடியுமா ? முடியாதா ?

PLEASE POST A COMMENT, JUST BELOW IN THE COLUMN MEANT FOR IT AS NO COMMENTS. REGARDS - GNANASURIA BAHAVAN D, (AUTHOR)

888888888888888888888888888888888888888888888

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...