ஹாலிவுட் பூமரம், எனும் ஊதாப்பூ இலவம்பஞ்சு
அல்லது முள் இலவு மரம், இதன் தலையணைகள் உலகம் பூராவும் பிரபலமானவை, சித்த மருத்துவம், போன்ற பாரம்பரிய மருத்துவம் முறைகளில் முக்கியமான மூலிகை, இது. பலவிதமான நோய்களை குணப்படுத்தும் மருந்துகளைத் தயார் செய்யலாம், பழங்குடி மக்கள் பயன்படுத்தும்
‘கெனோ போட்’ எனும் ஒருமரப்படகுகள் (CANOE BOATS)செய்யலாம், இதன் பட்டைகளில் செய்யும் கயிறுகள் உறுதியானவை, இதன்
எண்ணையில் சமைக்கலாம். அழகான இந்த ஊதாப்பூ இலவம் மரங்களை ஆலிவுட்டிலும்
பார்க்கலாம் ஆலங்காயத்திலும் பார்க்கலாம்.
எனது நெருக்கமான தோழர்களுக்குத் தெரியும். நான் கொஞ்சம் டாகுமெண்டரி படங்களை எடுத்துள்ளேன். நான் எழுதி இயக்கிய ஒரு செய்திப்படத்தின் பெயர் “கடைசி மணிதனை கவனி”.
அது ஒரு சமூகம் சார்ந்த படம். “மக்கள் பங்கேற்பு”
பற்றிய படம்.
1994 வெளிவந்த அந்தப் படம் பற்றிய இரண்டு
பக்க விமரிசனத்தை ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் “மணா”
அவர்கள் அற்புதமாக எழுதி இருந்தார்.
அதன் பின்னர் அதனை ஆங்கிலத்தில் சப்டைட்டில் போடப்பட்டு பல நாடுகளில்
பயன்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் பல
மாநிலங்களின் பயன்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டிலும் பல அரசுத்துறைகள் “மக்கள் பங்கேற்பு”
குறித்த பயிற்சிக்காகப் பயன்படுத்தின.
அதனைத் தொடர்ந்து சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட குறும்படங்கள்
செய்ததுடன் அவை சம்மந்தமான வேலைகளை முடித்துக் கொண்டேன்.
ஆனால் அமெரிக்காவில் திரைப்பட உலகின் தலைமைப்பீடம் “ஹாலிவுட்”டுக்கு சென்று நான் ஒரு படம் எடுத்தேன் ? அதுபற்றிய கட்டுரைதான் இது.
என்னுடைய அமெரிக்க பயணத்தின் போது,
சுற்றிப்பார்ப்பதற்காக கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள “ஹாலிவுட் நகரம் சென்றிருந்தேன். அங்கு இரண்டு மலைகளுக்கு ஊடாக “ஹாலிவுட்”
என எழுதி இருக்கும். அது தெரியுமாறு ஒரு புகைப்படம் எடுக்க விரும்பினான்> எனது மகன். அதற்கான ஒரு இடத்தைக் கண்டுபிடித்து இரண்டு
மூன்று புகைப்படங்களை எடுத்தோம்.
அங்கு ஒரு வீட்டின் முகப்பில் அற்புதமான, அழகான கவர்ச்சிகரமான ஒரு மரம். மரம் முழுவதும் ஊதா நிறப் பூக்கள். கிளைகளும் இலைகளும் தெரியாத அளவுக்குப் பூக்கள். என்ன பூவாக
இருக்கும் ? என்ன மரமாக இருக்கும் ? அங்கும் நாங்கள் நின்று நிறைய புகைப்
படங்கள் எடுத்துக் கொண்டோம்.
இதுதான் “ஹாலிவுட்”
டில் நான் எடுத்த படம். மரத்தின் அருகில் சென்று பார்த்தேன். பூக்களைப் பார்த்தேன். கொள்ளை அழகு. மரத்தின் இலைகளைப் பார்த்தேன். நம்ம ஊரில் இருக்கும் ஏதோ ஒரு மரத்தின்
சாயல். கைவிரல் போன்ற இலைகள் அடர்த்தியான பச்சை நிறம். ஆமணக்கு இலைபோல. மரவள்ளளி இலைபோல. ரப்பர் மரத்தின் இலைபோல, ஏழிலைப்பாலை மரத்தின் இலைபோல.
கடைசியாய்த் தோன்றியது இலவம்பஞ்சு மர இலைபோல. உடனடியாகச் சொன்னேன் “அநேகமாய் இது இலவம்பஞ்சு மரத்தின் ஒரு வகையாக இருக்கும்” என்று.
நம் இந்தியாவில் இலவம் பஞ்சு மரங்கள் மஞ்சளாகப் பூக்கும். வெள்ளையாகப் பூக்கும். சிவப்பாகப் பூக்கும். இதன் பூக்கள் ஊதா நிறம். லேவண்டர் நிறம். ஐக்ரந்தா பூக்கள் மாதிரி. ஒரு நிறம்.
மஞ்சள் இலவு மரத்தின் தாவரவியல் பெயர் கோச்லோஸ்பெர்மம் ரெலிஜியோசம் (COCHLOSPERMUM RELIGIOSUM) சிவப்பு இலவு அல்லது செவ்விலவு மரத்தின் தாவரவியல் பெயர் பாம்பேக்ஸ் சிபா (BOMBAX CIBA). வெள் இலவம் பஞ்சு மரத்தின் தாவரவியல் பெயர் சீபா பெட்டாண்ட்ரா (CIBA PETANDRA) “ஹாலிவுட்”ல் நான் பார்த்த இலவம் பஞ்சு மரத்தின் தாவரவியல் பெயர், சிபா ஸ்பீசியோசா (CIBA SPECIOSA)
இன்று நாம் பார்க்கப் போகும் மரத்தின் பெயர் ஊதாப்பூ இலவம்பஞ்சு மரம்.
ஊதாப்பூ இலவம் பஞ்சு மரம்
(SILK FLOSS TREE)
தாவரவியல் பெயர்: சீபா ஸ்பீசியோசா (CEIBA SPECIOSA)
தாவரக்குடும்பம்: மால்வேசி (MALVACEAE)
பொதுப் பெயர்கள்: சில்க் பிளாஸ் ட்ரீ, கபாக், ஃபிளாஸ் சில்க்
ட்ரீ, ரேஷம்
ரூய் (SILK FLOSS TREE, KAPOK, FLOSS SILK TREE, RESHAM RUI)
தாயகம்: தென் அமெரிக்காவின் வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகள், பிரேசில், அர்ஜெண்டினா, மற்றும் பெரு.
இயற்கையாகப் பரவியிருக்கும் பகுதிகள்
இயற்கையாக இந்த மரம் பல நாடுகளில் பரவியுள்ளது. அவை அர்ஜென்டினா, கிழக்கு பொலிவியா, பேராகுவே, உருகுவே, மற்றும் தெற்கு
பிரேசில் பகுதிகள்.
அடிமரம் பாட்டில் போல அகன்று
பருத்து வளரும்
இந்த மரத்தின் அடிமரம் பாட்டில் மாதிரி பருத்து வளரும். அடிமரம் வெகுவாகப் பருத்த ஆப்ரிக்க மரம் பேவோ பாப் (BAO BAB).
மரம் கூட அடிமரம். அநியாயத்திற்கு பருத்துக் காணப்படும்.
அடி மரத்தில் புதைத்து வைத்த மாதிரி மொத்தமான முட்கள் இருக்கும்> பார்க்க சிறிய பம்பரங்களை மரத்தில் புதைத்தது போலத் தோன்றும். மரத்தில் ஏறுவதுபற்றி யாரும் யோசிக்கக் கூட கூடாது. இதன் கிளைகள் மடக்காமல் நீட்டிய கைகள் போலத் தோன்றும். கிளைகளிலும் எராளமான முட்கள் இருக்கும். இளம் மரங்களில்
அதிக முட்கள் இருக்கும்.
ஐந்து இதழ்கள் கொண்ட அழகான பூக்கள்
இதன் பூக்கள் ஐந்து இதழ்கள் உடையதாக இருக்கும். இதழ்கள் ஊதா நிறமாக, இருக்கும். இதழ்களின் நடுப்பகுதி அழுக்கு வெள்ளை நிறமாக “கிரீம்”
தடவியதுபோல இருக்கும். பூக்கள் 10 முதல் 15 செ.மீ நீளம் இருக்கும்.
தோராயமாகப் பார்க்க செம்பருத்திப் பூவைப்போல இருக்கும். பிப்ரவரி முதல் மே மாதம் வரை கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் பூக்கும். இதர மாதங்களிலும் இது
பூக்கும் எனத் தோன்றுகிறது.
காரணம் முழு மரமும் பூக்களோடு நான் பார்த்தது, அக்டோபார் மாதத்தில் . இது இலை உதிர்க்கும் மரம் என்பதால்
குளிர்ப்பருவத்தில் இலைகளும் பூக்களும்
இல்லாமல் மரங்கள் மொட்டையாக நிற்கும்.
திறந்த வாயை மூடி முடியாமல் செய்யும் பூக்கள் என்கிறார்கள்.
இலவம் பஞ்சு தலையணைகள்
இலவம் பஞ்சு தலையணைகள் உலகம் பூராவும் பிரபலமானவை. நுரை ரப்பர் பஞ்சு அடைத்தத் தலையணைகள்
தான் கடைகளில் விற்பனை ஆகின்றன. என்னதான் அவை “மெத்மெத்” தென இருந்தாலும் இலவம்பஞ்சுக்கு இணை ஆகாது. ஈடாகாது.
சில கடைகளில் இலவம் பஞ்சு என்று சொல்லி கலப்படம் செய்து கண்ட பஞ்சு தலையணைகளை விற்பனை செய்கிறார்கள்.
சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம்
சித்த மருத்துவம்,
ஆயுர்வேத மருத்துவ முறைகளில் முக்கியமான மூலிகை> இலவு.
இதன் பூக்களை பயன்படுத்துகிறார்கள்.
பலவிதமான நோய்களை குணப்படுத்தும் மருந்துகளைத் தயார் செய்கிறார்கள்.
“கேனோ”
படகுகள் செய்யலாம்
ஓற்றை மரத்தைக் குடைந்துவிட்டுச் செய்யும் படகுக்கு “கேனோ”
என்று பெயர்.
கேனோ மரத்தில் செய்வதில் படகுகள் அகலம் குறுகலாக இருக்கும்> நீளம் அதிகம் இருக்கும்.
கெனோ படகுகள் செய்வதற்கான மரங்கள், நேராக நிமிர்ந்து கிளைகள் இல்லாமல் வளர வேண்டும். அகலம் அதிகம் இருக்க வேண்டும். குடைவதற்குச் சுலபமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மரங்களில்தான் “கேனோ”
படகுகள் செய்யலாம்.
மரங்கள் அதிக எடை இல்லாமல்> தண்ணீரில் சுலபமாக மிதக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இவ்வளவு குணங்கள்
இருந்தால்தான் அதில் “கேனோ படகு” செய்ய முடியும்.
அத்துடன் இந்த மரங்களில் மரக்கூழ் தயாரித்து, அதில் காகிதம்
தயாரிக்கலாம். தீக்குச்சிகள்
தயாரிக்கலாம்.
பட்டைகளில் கயிறு திரிக்கலாம்
இதன் பட்டைகளில் கயிறு திரிக்கலாம்.
இலவம் பஞ்சு தான் மிருதுவானைவ.
பட்டைக் கயிறு மிகவும் உறுதியானவை.
இதன் கொட்டைகள் அல்லது விதைகளிலிருந்து.
எண்ணெய் பிழிந்து எடுக்கலாம்.
இந்த எண்ணெயை சமைக்கப் பயன்படுத்தலாம். மேலும்
இதனை தொழிற்சாலைகளில் உயவு எண்ணெயாவும் பயன்படுத்தலாம். எண்ணெயில் சோப்பு தயாரிக்கலாம்.
உலகம் முழுக்க அழகு மரம்
உலகம் பூராவும் இந்த இலவம்
பஞ்சு மரத்தை அழகு மரமாகப் பயன்படுத்துகிறார்கள்.
“கோங்கம் பூக்கள் பெரியவை, இதழ்கள் சிறியவை: குடைபோல் வளைந்தவை, பூக்கும் பருவம் இது, பூக்கள்
உதிர்ந்து கிடக்கின்றன> அவை காலைநேர வானத்தில்
மின்னும் மீன்கள் போல மனதை கொள்ளையடிக்கின்றன, அந்தக் காட்டுவழி பூ மணத்தால் நிரம்பி வழிகிறது”
“புல் இதழ்க் கோங்கின் மெல்லிதழ்கள் குடைப்பூ
வைகுறு மீனின் நினையத்
தோன்றிப்
புறவானி கொண்ட பூ நாறு
கடத்திடை….”
நற்றிணை- 46.3.5)
ஆலிவுட்டில் எடுத்த படம்
அமெரிக்காவில் ஆலிவுட்டில் சுற்றிசுற்றி
நான் எடுத்தவை அத்தனையும் மரங்களைத்தான்,
கதை சினிமாதான் எடுக்கவேண்டுமா என்ன ?
FOR
FURTHER READING
NATRINAI
JANGA JLAKKIAM – (46.3.5)
WWW.(CEIBA SPECIGA) EN.M.WIKIPEDIA.ORG
WWW.FLOWERS OF INDIA. ORG. CEIBA SPECIOSA
WWW.FRUSTRATED GARDMER.COM. DAILY FLOWER CANDY:
CEIBA SPECIOSA.
A
REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment