Monday, June 12, 2023

PINK AND RED FLESH DRAGON FRUITS VARIETY ஹைலோசெரியஸ் பாலிரைசஸ் சிவப்பு தசை ரகம்

 

சிவப்புத்தசை டிராகன்
ஹைலோசெரியஸ் பாலிரைசஸ்

உலகம் முழுக்க இன்று நான்கு டிராகன் பழ ரகங்கள் பரவியுள்ளன. அந்தந்த நாடுகளின் பருவநிலை, மண்தன்மை, மக்களின் விருப்பம் இவற்றைப்பொறுத்து, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.  சிவப்பு, ஊதா, மஞ்சள், நீலம் என்று நான்கு வகைகள் டிராகன் பழங்களில் பிரபலமாக உள்ளன.

இந்த நான்கு டிராகன்பழ ரகங்களில் இன்று ஊதா தோல் சிவப்பு தசை ரகம், அதன் அடிப்படை பண்புகள் என்ன ? இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னென்ன, எல்லாவற்றையும் இந்தப் பதிவில் சொல்லுகிறேன்.

ஊதா தோல் சிவப்பு தசை ரகம் – அடிப்படைத் தகவல்கள் (BASIC FACTS)

1.பொதுபெயர்கள்: ரெட் பித்தாயா – (RED PITHAYA)

2. தாவரவியல் பெயர்: ஹைலோசெரியஸ் பாலிரைசஸ் (HYLOSEREUS POLYRHIZUS) ஹைலோசெரியஸ் பாலிரைசஸ் எனும் இந்த ரகம்

3. நிறம்: அழகான ஊதா தோலையும் அற்புதமான சிவப்பு தசையையும் உடையது.

3. சொந்த ஊர்: மெக்சிகோ (MEXICO)

4. பரவி உள்ள நாடுகள்: வியட்னாம், தைவான், தெற்கு சைனா, இஸ்ரேல், தாய்லாந்து, ஆஸ்ட்ரேலியா, அமெரிக்கா, மலேஷியா

பரவியுள்ள நாடுகள் (DISTRIBUTION)

வியட்நாம், டைவான், தெற்கு சீனா, இஸ்ரேல், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.

இந்த ரகத்தின் முக்கியத் தேவைகள் (ESSENTIAL NEEDS)

1.பூக்கும் பருவத்தில் முழுமையான சூரிய ஒளி அவசியத் தேவை. 

2.தோட்டத்தில் அதிகப்படியான நிழல் பூக்கள் பூப்பதை பாதிக்கும்.

3.வெப்பம் 80 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக இருந்தால்,50 முதல் 60 சதவீதம் நிழல் தர வேண்டும். 

4.இந்த ரகத்திற்கு ஓரளவு நிழல் தந்தால் 125 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தைக் கூட இது தாங்கும். 

5.இந்த ரகத்திற்கு எப்படி பார்த்தாலும் 40 சதவீதம் முழுச்சூரிய ஒளி அவசியம் தேவை.

ஊதா மற்றும் சிவப்பு நிறம் (PINK AND RED COLOUR)

இனி நாம் இதை ஊதாசிவப்பு என குறிப்பிடலாம். இதன் முக்கியமான அம்சங்கள் என்றால் முதலில் இதன் கவர்ச்சிகரமான நிறம், அடுத்து இதிலுள்ள கணிசமான ஆன்ட்டி ஆக்சிடெண்ட்ஸ்.

டிராகன் பழங்களின் நிறம் (COLOURS IN DRAGON FRUITS)

1. டிராகன் பழங்களில் முக்கியமாக நான்கு வண்ணங்களை உள்ளன. ஒன்று அழுத்தமான சிவப்பு நிறம், இன்னொன்று ஊதா நிறம், மஞ்சள் மற்றும் நீல நிறம்..

2. உலகில் உள்ள பழங்களிலேயே இவ்வளவு அழகான கவர்ச்சிகரமான நிறங்களை உடைய பழங்கள் இருக்கிறதா என்று கேட்டால் சந்தேகம்தான்.

3. டிராகன் பழங்களுக்கு நிறம் தருவது பீட்டாலைன்ஸ் என்ற ஒரு தாவரரசாயனம் தான். இந்த வித்தியாசமான நிறங்களை தருவது இந்த பீட்டா லைன்ஸ்தான்.

4.பீட்ரூட் காய்கறியும் அமராந்தஸ் என்று சொல்லப்படும் தண்டிக்கீரையிலும் உள்ள சிவப்பு நிறத்திற்கு முக்கியமான காரணம் இந்த பீட்டாலைன்தான்.

5. வேறு எந்த வகை உணவு வகைகளிலும் இருந்து இந்த சத்து நமக்கு கிடைப்பதில்லை. இன்று பீட்டாலைன்களின் புதையல் ஆக விளங்குவது இந்த டிராகன் பழங்கள் தான். 

பிளடி மேரி என்னும் சிவப்பு தசைப் பழம் (BLOODY MARRY RED FLESH VARIETY)

1. இதன் தசை ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் இருப்பதால் இதில் ஆண்டி ஆக்சிடன்ட்கள் அதிகம்.

2.இந்த ரகம் அதிகமாக கிளைக்கும் தன்மை உடையது அதிக வெப்பத்தையும் தாங்கும். 

3. முதிர்ந்த கிளைகளிலிருந்து பூக்கள் பூக்கும், இவை 15 அங்கு நீளம் இருக்கும். 

4.பூக்களின் இதழ்கள் வெண்மை நிறமாக இருக்கும். பூக்களின் அடிப்பகுதியில் இருக்கும் இதழ்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமாக இருக்கும்.

5. இதன் இளம் கிளைகள் சிவப்பு நிறமாகவும் பின்னர் நீலம் கலந்த வெண்மை நிறமாகவும், அதன் பிறகு பசுமை நிறமாகவும் மாறும்.  

6.இதன் கொடிகள் மொட்டு விட்ட பின்னர் இது முழுமையாக பூக்களாக மலர 30 நாட்கள் பிடிக்கும்.

7.முழுமையாக பூத்த மலர்கள் காய்களாக கனியாக மாறுவதற்கு மீண்டும் 30 நாட்டில் எடுத்துக் கொள்கின்றது. 

நீர்ப்பாசனம் (WATERING  NEEDS) 

1. டிராகன் பழப்பயிர்கள் கற்றாழை குடும்பத்தைச் சேர்ந்தவை, எனவே இதற்கு அதிகம் பாசனம் தேவையில்லை. ஆனால் தேவையான அளவு  நீரை முறையாகத் தர வேண்டும். 

2.இந்தக் கொடி மரங்களுக்கு அடியில் ஈரம் இருக்கலாம், ஆனால் தண்ணீர் தேங்கி நிற்க கூடாது. இது நோய்கள் வவாய்ப்பாக அமையும். 

3.பூக்கும் மற்றும் காய்க்கும் காலங்களில் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு ஒரு பாசனம் தந்தால் போதும்.

4.மழைக்காலங்களில், பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம் அல்லாத காலங்களில், மாதம் ஒரு முறை பாசனம் தந்தால் போதுமானது. 

எப்படிப்பட்ட மண் தேவை? (SUITABLE SOIL)

1.நல்ல வடிகால் வசதி உள்ள அங்ககச் சத்து (ORGANIC MATTER) நிறைந்த மண் இதற்கு ஏற்றது. 

2.மண்ணின் கார அமிலத்தன்மை 6.1 முதல் 7.5 வரை இருக்கலாம் லேசாக அமிலத்தன்மை உடைய  மண்ணாக இருக்கலாம்.

3. காரத் தன்மையுடைய மண்ணில்(ALKALI SOILS) சாகுபடி செய்தால் அதில் சத்துக்குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

எப்படி உரம் இட வேண்டும் (ORGANIC MANURING)

1.மரங்கள் வளரும் பருவத்தில், கூடுதலாக இயற்கை அல்லது தொழு உரங்களை இடலாம், கொஞ்சம் கூடுதலாக தழைச்சத்து இருக்கும்படியாக பார்த்துக் கொள்ள வேண்டும். 

2.எப்போது உரம் இடக்கூடாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பூக்கும் சமயத்திலும் குளிர்ச்சியான சமயங்களிலும் உரமிடாமல் இருப்பது நல்லது.

3.செடிகளின் அடிப்பகுதியில் இலைதழை போன்றவற்றைக் கொண்டு மூடாக்கு போடுவது நல்லது. 

4.மூடாக்கு போடுவது, கூடுதலான வெப்பத்திலிருந்து செடிகளை பாதுகாக்கும். செடிகளின் அடிப்பகுதியில் உள்ள ஈரம் ஆவியாகாமலும் இது தடுக்கும். 

5. ஹைலோசெரியஸ் பாலிரைசஸ் ன்னும் ரகத்திற்கு 65 முதல் 80 டிகிரி ஃபாரன்ஹீட் வரையான வெப்பம் வேண்டும்.

பழமழுகல் நோய் (FRUIT ROT DISEASE)

1.ஆந்த்ரக்ஸ் எனும் பழமழுகல் நோய். வயலிலும் பழங்களை சேமித்து வைத்திருக்கும்  கிடங்குகளிலும் பழங்களை சேதப்படுத்தும்.

2. கொல்லட்ரோடிரைக்கம் குளோஸ்பொரியாய்டஸ் (COLLETROTRICUM CLOSPORIYOIDES) எனும் பூசணங்கள் இந்த பழமழுகல் நோயை ஏற்படுத்துகின்றன.

பழங்கள் அறுவடை (HARVESTING OF FRUITS)

1.இந்த பழங்களை அறுவடை செய்த பின்னர் 8 நாட்கள் வரை வைத்திருக்கலாம்.

2.தாமதித்தால் பழங்களின் மேல்தோலில் வயதான மனித முகம்போல சுருக்கம் விழ ஆரம்பிக்கும்.

3. எட்டு நாட்களுக்குப்பிறகு புதிய பழங்களின் மெருகினை அழகினை அதில் பார்க்க முடியாது.

விரைவாக  விற்பனை செய்ய வேண்டும்

1. இந்த ரக டிராகன் பழங்கள் வேகவேகமாக சுவாசிக்கும்.

2. இந்த பழங்களும் வேகமாக கனிந்து பழமாக மாறும்.

3. அதுமட்டுமல்ல சீக்கிரமாகவே அழுகிப்போகவும் செய்யும்.

4. இதனை விரைந்து பழுக்கும் தன்மை உடைய ரகம் (ACCELERATED RIPENING VARIETY) என்பார்கள்.

வியாபார ரீதியான ரகம் (COMMERCIAL VARIETY)

1. இந்த ஹைலோசெரியஸ் பாலிரைசஸ் என்ற டிராகன் பழரகம், செயற்கையாக உருவாக்கப்பட்ட தோட்டங்களில் மிக நன்றாக வருகிறது. 

2.உலகம் முழுக்க வியாபார ரீதியாக பெரும்பாலும் இந்த ரகத்தை தான் விரும்புகிறார்கள். 

3. வீட்டுத் தோட்டத்திற்கும் இது  ஏற்ற ரகம். 

4. வீட்டின் ஒரு பகுதியில் அல்லது ஒரு வீட்டு தோட்டத்தில் வளர்க்க விரும்புவர்கள் இந்த ரகத்தை சிறப்பாக வளர்க்க முடியும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...