பெருங்காரை தெய்வீக மல்லிகை மரம் |
(DIVINE JASMINE TREE)
பெருங்காரை மரம், விவசாய
கருவிகள், வீட்டு உபயோகத்துக்கு தட்டு முட்டு சாமான்கள்,
பந்தல் கம்புகள், முட்டுக்கம்புகள் ஆகியவற்றிற்கு
மரங்கள் தரும், தழைகள் தீவனம் தரும், தழை
உரம் ஆகும், சமைத்து சாப்பிட கீரை ஆகும், பழங்கள் சாப்பிட, சமைக்க உணவாகும், தேனீக்களுக்கு தேன் தரும், சதுப்பு நிலங்களில்
6 முதல் 8 மீட்டர் உயரம் வளர்ந்து, காற்றில் உள்ள மாசுப்பொருட்களை வடிகட்டி சூழலுக்கு உதவும், பருவக்கால மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை சீற்றங்களை தடுக்க உதவும்.
இந்த மரத்தின் பொதுப்பெயர் டிவைன் ஜேஸ்மின் ட்ரீ (DIVINE
JASMIN TREE), தாவரவியல் பெயர் ரேண்டியா அல்ஜினோசா (RANDIA
ULGINOSA)
தழை உரம்-தீவனம்-கீரை-கனிகள்- பூதேன் – வாசனைத் தைலம்
இதன் தழை, விளை நிலங்களுக்கு தழை உரமாகும். கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகும். இதனை உண்ணும் கீரையாக சமைத்து சாப்பிடலாம்.
மரத்தில் வெண்ணிற பூக்கள் மரம்
முழுவதும் பூத்துக் குலுங்கும், பூக்களை போர்த்தியபடி, வீட்டு
முகப்பிலும், தோட்டத்திலும், சாலை ஓரங்களிலும்,
சுற்றுப்புறத்திலும் நின்று அழகூட்டும் அலங்கார மரம்.
இந்தப் பூக்கள், தன்னைத் தேடிவரும்
தேனீக்களுக்கு, தனது மலர்க் கிண்ணங்களில், தேன் தரும்.
நறுமணம்
மிக்க இதன் வெண்ணிற
பூக்கள் , வாசனைத்தைலம் தயாரிக்க, உதவும்.
கனிகளை ,
சமைத்து உண்ணலாம், பழமாகவும் சாப்பிடலாம்.
வேளாண்மைக்
கருவிகள் - தட்டு முட்டு சாமான்கள்
வேளாண்மைக் கருவிகள், தட்டு முட்டு சாமான்கள்,
கம்பங்கள், முட்டுக்கட்டைகள், பந்தல் கால்கள், தூண்கள் செய்ய மரம் தரும். காகிதம் தயாரிக்க மரக்கூழ் தரும்.
இலைகள், கிளைகள், மரம், ஆகியவை அடுப்பெரிக்க விறகு தரும். வீசும் காற்றின் மாசுத் தூசுகளை
வடிகட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்கும்.
இந்திய மரம்
இந்தியாவை தாயகமாகக்
கொண்ட இந்த மரம் சதுப்பு நில மண்ணில் சகஜமாக வளரும். விதை, நாற்று,
வேர்க்குச்சி ஆகியவற்றை பயன்படுத்தி
புதிய மரங்களை உருவாக்கலாம். மரங்கள்
அதிகபட்சமாக 6 முதல் 8 மீட்டர் உயரம் வரை
வளரும்.
பெருங்காரை மரத்தின் பலமொழிப் பெயர்கள்:
தமிழ்:
பெருங்காரை, வாகாட்டா, காலிகாரை (PERUNKARAI, VAKATTA, KALAIKARAI)
கன்னடம்: காரி
(KARE)
மலையாளம்:
பிண்டிசக்கா (PINDICHAKKA)
தெலுங்கு:
குக்கா எல்கா (KUKKA ELKA)
இந்தி: பிண்டாரா (PINDARA)
தாவரவியல்
பெயர் :-- ரேண்டியா
அல்ஜினோசா (RANDIA ULGINOSA)
பொதுப்பெயர்
/ ஆங்கிலப்பெயர் :-- டிவைன் ஜேஸ்மின் ட்ரீ (DIVINE JASMINE
TREE, TAMILNADIA)
தாவரக்குடும்பம் :--
ரூபியேசி (RUBIACEAE)
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment