பெரம்பலூர் கோரையாறு அருவி |
கோரைஆறு அருவி
பெரம்பலூர் மாவட்டத்திற்கு உரியது. கோரையாறு என்னும் கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில்
இருக்கும் பச்சைமலை மீது அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. அருவி கொட்டும் இடத்தில் ஒரு நீர் தேக்கமும் உள்ளது. இந்த நீர் தேக்கத்தின் ஆழம் சுமார் 60 அடி.
மழைக்கால அருவி (SEASONAL WATERFALLS)
ஒரு சின்ன மழை பெய்தால் கூட இந்த அருவி கொட்ட ஆரம்பித்து விடும். ஆனால் ஒரு ஆண்டில் மூன்று அல்லது நான்கு மாதங்கள் தான் இந்த அருவி ஆரவாரமாக இருக்கும். குறிப்பாக தென்கிழக்கு பருவமழைக் காலத்தில் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களை இந்த ‘அருவிசீசன்’ (FALL SEASON)என்று சொல்லுகிறார்கள்.
கல்லாற்றில் கலக்கிறது (CONFLUENCE WITH KALLARU RIVER)
கோரையாற்றில் அதிகப்படியாக கொட்டும் நீர்ஆறாக ஓடி தொண்டமான்துறை வழியாக சென்று அப்படியே கல்லாற்றில் கலந்து தனது பயணத்தை முடித்துக் கொள்கிறது.
ஊருக்கு ஒரு கல்லாறு மண்ணார் இருக்கும் போல இருக்கிறது. “இது சின்ன கல்லாறா ? இது பெரிய கல்லாறா ?” என்று தெரியவில்லை உங்களுக்கு தெரியுமா
சுற்றுலா செல்லும் ஊர் (PERAMBALUR TOURIST SPOT)
பெரம்பலூர் மாவட்டத்துக்காரர்கள் இந்த கோரையாறு அருவியை சுற்றுலா செல்லும் ஊராக மாற்றி விட்டார்கள்.
இதுவரை பார்க்காதவர்கள் வரும் மழைப்பருவத்தில் மறக்காமல் கோரையாறு அருவியை குடும்பத்துடன் சென்று பார்த்து வாருங்கள். கோரையாறு கிராமம் என்று கேளுங்கள். அரசு டவுன் பஸ் அந்த அருவி ஊர் எல்லை வரைப் போகிறது. கார், இருசக்கர வாகனங்கள், எதன் மூலமாகவும் கோரையாறு போகலாம்.
அதற்கு அப்பால் பச்சைமலை மீது உள்ள ஆற்றைக் கடந்து 3 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். அந்த ஆறு அதிக ஆழமா ? கடந்து செல்ல பாலம் இருக்கா ? எல்லோரும் இறங்கிப் போக முடியுமா? குழந்தைகளைக் கூட்டிச் செல்ல முடியுமா ? விசாரியுங்கள்.
அங்கு உயரத்திலிருந்து கருங்கல் பாறைகள் சூழப்பட்ட ஒரு குளத்தில் குதிக்கிறது இந்த அருவி. நகரங்களில் வாழும் நம் குழந்தைகளுக்கு அருவி என்றால் என்ன என்று காட்ட இந்த உள்ளூர் அருவிகள் உதவுமா இல்லையா ?
இதைப் பற்றி கூடுதல் தகவல் இருந்தால் எனக்கு சொல்லுங்கள். இந்த அருவியில் எடுத்த புகைப்படங்கள் ஏதும் இருந்தால் எனக்கு அனுப்பி வையுங்கள். எந்த அருவியின் படமாக இருந்தாலும் பரவாயில்லை, அனுப்புங்கள். நன்றி வணக்கம் !
GNANASURIA BAHAVAN D
gsbahavan@gmail.com
No comments:
Post a Comment