Monday, June 12, 2023

PEOPLE OF DIFFERENT C0LOURS மூன்று மனிதர்கள்

 

(ரகசியமாய் பூக்கும் அத்தி ஒருத்தர், எப்போதும் சொந்த மேளம் வாசிக்கும்   முந்திரிகொட்டை இன்னொருத்தர், மண்ணை பொன்னாக்குவதிலேயே பொழுது போக்குபவர் மூன்றாவது நபர். இந்த மூவரின் சந்திப்புதான் இந்த கதை)

07. மூன்று
மனிதர்கள்

    ஆறு மாசமாய் அவனுக்கு அல்வா கொடுத்து வந்தேன்

      இன்றைக்கு தப்ப முடியாது…. எதிர் சீட்டில் வந்து உட்கார்ந்து விட்டான் சாந்திகாளிதாசன்.

      எனது நண்பனும் பிரபலமான எழுத்தாளருமான தேவதா வீட்டிற்கு வனை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த வேண்டும். தேவதா, அதில்என்ன சிக்கல்…? இதற்கு நீங்கள் சாந்தி காளிதாசனின் கேரக்டரைப் புரிந்து கொள்ள வேண்டும்.

      சாந்திகாளிதாசனின் இயற்பெயர் மூக்கையா. இனி சா.கா.தா என்று நாம் அழைக்கலாம்.

      மூக்கையா என்னைப் போல சாதாரண அரசாங்க குமாஸ்தா.

      இடைக்காலத்தில் திடீரென்று வெந்தயம் " என்ற கையெழுத்துப் பிரதி பத்திரிக்கை ஆரம்பித்து இலக்கிய பிரவேசம் செய்து, மூக்கையா சா.கா.தாவாக மாறினான்.

பீசில் சஹ  குமாஸ்தாக்கள் என்ன மூக்கையா சவுக்கியமா…? என்று கேட்டாலும் சரி கூடுவாஞ்சேரிக்கு எத்தனை மணிக்கு பஸ்…? என்று முகம் தெரியாத ஆசாமி கேட்டாலும் சரி வன் சொந்த ஊர் குலம், கோத்திரம், பட்ட கஷ்ட நஷ்டங்கள்,  வெந்தயம் " கையெழுத்துப் பிரதி சா.கா.தா பெயர் மாற்றம், அத்தனையும் சொன்ன பிறகுதான் ஜன கண மன.

      இவனிடம் பேச ஆரம்பித்து, பஸ்ஸை விட்டவர்கள், ரயிலை விட்டவர்கள், ஏன் கல்யாணத்தில் தாலிகட்ட தாமதமானவர்கள் என்ற ஒரு பெரிய பட்டியலே போடலாம்.

      இவரிடம் என்னைத்தவிர இரண்டாம் முறையாக மாட்டிக் கொண்டவர்கள் எவரும் இல்லை. சுருக்கமாக சொன்னால் மூக்கையா எனும் சாந்திகாளிதாசன் ஜலதோஷம் மாதிரி. பிடித்தால் சீக்கிரம் விடாது. என்னைப்பிடித்த  ஜலதோஷம் என்னோடு இருந்துவிட்டு போகட்டுமே என்றுதான்.

      இந்த சமயத்தில் எழுத்தாளர் தேவதா பற்றியும் சொன்னால்தான் எனது புலம்பலின் அர்த்தம் புரியும்.

      நானும் தேவதாவும் ஒரே ஊர், ஒரே பள்ளிக் கூடம். ஒரே வகுப்பு. அடுத்தவர் தோட்டத்தில் திருட்டுமாங்காய் அடித்தது எல்லாம் கூட்டாக செய்ததுதான்.

      ஆனால் அவன்மட்டும் எழுத்தாளராகிவிட்டான். ஞானபீட விருதுகூட கிடைத்தது.

      நம்ம சா.கா.தாவுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. மாங்காய் அடித்ததற்கும், ஓணான் அடித்ததற்குமா கொடுப்பார்கள்…? என்று சிலர் இவனை கலாய்த்தனர்.

      பேனா சரியாக எழுதவில்லையென்று தேவதா மையை உதறினால்கூட அதை கதை என்று சொல்லி இன்று சினிமா தயாரிப்பாளர்கள் லட்சக்கணக்கில் மொய் எழுத தயாராக இருக்கிறார்கள்.

      கழுகு மாதிரி காத்திருந்தான் மூக்கையா எதிர்சீட்டில்.

      இவனை எப்படி தவிர்ப்பது…?  மறுபடியும் யோசித்தேன்.

      'என்னப்பா பலமா யோசனை…?" இது சா. கா. தா.

       “ஓண்ணுமில்ல, வீட்டுக்காரிக்கு ஒடம்பு சரியில்ல. டாக்டருக்கிட்ட போகணும். தேவதா வீட்டுக்கு அடுத்த வாரம் போகலமான்னு பாத்தேன்….”  என்று பச்சையாக அவிழ்த்துவிட்டேன் (பொய் நெம்பர் 1).

      அவன் முகத்தில் வழக்கமான ஏமாற்றம்.

      ஆபீஸ் முடிய நான் பைல்களை ஏறக்கட்டி சோத்து மூட்டையை எடுத்துக்கொண்டு, சா.கா.தா சகிதமாக,பீசைவிட்டு வெளியில் வர, வாசலில் என்பையன் ராஜா.

      'அப்பா நாங்க  ஏமாறாதே ஏமாற்றாதே  படத்துக்கு போறோம்.  சாவி பக்கத்து வீட்ல குடுத்திருக்கோம். அம்மா சொல்லச் சொன்னாங்க."

காலையில ஒடம்பு சரியில்லன்னாஇப்போ சினிமாவுக்கு கௌம்பிட்டா… (பொய் நெம்பர் இரண்டு.)  பையன் கேட்டுவிடாமல் ஜாக்கிரதையாக  சொன்னேன்.

      சா.கா.தா முகத்தில் முதலில் சந்தேகம். பிறகு சந்தோஷம்.

      பையன் அடித்த பந்தாய் திரும்பினான். சினிமா அவசரம்.

      சா. கா. தாவை தேவதாவிடம் கொண்டு போய் விட, அவனைப் பேசியே இவன் காலிபண்ணி அவன் கோபத்தில் என்னையும் சேர்த்து இடத்தை காலி பண்ணச் சொல்லப் போகிறான்.

      இதைத்தான் விதி என்பது.

      பஸ் ஸ்டாப்பில் நின்றோம்.

      த்து நிமிஷம் ஆனது.

      தினைந்து நிமிஷம் ஆனது.

      இருபதும் ஆனது….. பஸ் வரவில்லை

      அருகிலிருந்தவரை விசாரித்தேன். ஸ்ட்ரைக்காம். பஸ் ஓடாதாம். அப்பா கும்பிடப்போன தெய்வம் ஸ்ட்ரைக் வடிவில் குறுக்கே வந்து நின்றது. சந்தோஷம்.

      சா.கா.தா காலியாகப் போன ஆட்டோ ஒன்றை மடக்கினான்.

      மறுவார்த்தை பேசாமல் ஆட்டோவில் ஏறினேன்.

      ஆட்டோவிலிருந்து இறங்கினோம்.

      எல்.ஐ.சியில் பாதி உசரக்கட்டிடம். அதைச்சுற்றி மதில். மதிலை மீறிய பொகைன்வில்லாபூக்கள்; வாசலில் கூர்க்காகாவல்;  ப்ளஸ் நாய்கள் ஜாக்கிரதை போர்ட். அத்தனையும் சேர்ந்ததுதான் தேவதாவின் வீடு.

      ஒரு கூட்டம் தேவதாவின் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தது.

    “ தேவதா சார் இல்லையா…? " நான்.

    “ அண்ணன் ஊட்டி போயிருக்காராம்….” தம்பிகள் அண்ணனை பார்க்க முடியாத சோகத்தில் சென்றனர்.

      தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது.

      சா.கா. தாவின் சந்தோஷம் மணலில் ஊற்றிய தணணீர் மாதிரி சட்டென்று மறைந்தது.

      'எதுக்கும் கேட்டுப் பார்க்கலாமே…” என்றான்  சா.கா.தா. (விடாக்கண்டன்.)

'ஆண்டவனே !  தேவதா இல்லாவிட்டால், தேங்காய் உடைக்கிறேன்" ரகசியமாய் வேண்டிக்கொண்டேன்.

      கூர்க்கா ராம்சிங் சல்யூட் அடித்தான். எனக்கு ஏற்கனவே பழக்கம்;. 

      'தேவா இல்லையா…?" நான். 

   “ஐயா இருக்குநீங்க உள்ள போறது…” கூர்க்கா மழலை. அவனுக்கு நான் நெருக்கமான நண்பன் என்பது தெரியும். இவன் வந்தால் உடனே அனுப்ப வேண்டும் என்பது தேவதாவின் உத்தரவு. எனக்காக எதையும் செய்வான் தேவதா. எனக்கு எதையும் அவனிடம் கேட்க பிடிக்காது.

      சா. கா. தாவுக்கு ஏதோ ஒர இடத்தில் மச்சம் இருக்க வேண்டும்.

தேவதா சிம்பிளா இருந்தான். கீழே  சங்கு மார்க் மேலே மெட்ராஸ் பிலீடிங்…” 

உள்ளே போய் உட்கார்ந்தோம்.

      தேவதா பஸ்ஸரை அழுத்த ஒல்லியான கிளாஸ் டம்பளர்களில் ஆப்பிள் ஜூஸ் பைவ் ஸ்டார்  ஸ்டூவர்ட் கணக்காய் ஒருத்தன் பணிவாய் கொண்டுவந்தான். பணம் வந்தால் இதெல்லாம் தானாய் வருமோ ?

      ஏதிரில் கோட் சூட் சகிதமாய் ஒருவர். நியூஸ்பேப்பர்களில் டீவியில் அடிக்கடி பார்த்தமுகம்.

    “ஐயாம் சாரிஇவரை ஒனக்கு அறிமுகப்படுத்தல இல்ல…? மிஸ்டர் விஜய் அமிர்தராஜ்….”

   “மிஸ்டர் சிங்காரம் (நான் தான்; ) மை குளோஸ் ஃபிரண்ட்ஹி ஈஸ் மிஸ்டர் சாந்தி காளிதாசன் சிங்காரத்தோட தோஸ்த்;;…. குட் ரைட்டர்"   தேவதா  அறிமுகப்படுத்தி வைத்தான்.

     “குட் ரைட்டர் "  மீண்டும்மீண்டும் சா. கா. தாவின் காதுகளில் எதிரொலித்தது. பிறவி எடுத்ததன் பலாபலன் கிடைத்துவிட்டது. தோன்றிற் புகழோடு தோன்றுக…. வசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி. மனசு படபடத்தது.

      கொஞ்ச நேரத்தில் விஜய் அமிர்தராஜ் தேவதாவிடம் விடை பெற்றார்.

      இப்போது நான் தேவதா, சா.கா.தாசன் மட்டுமே. மூக்கையா மெதுவாக ஆரம்பித்தான். "

      தேவதாவின் கதையை முதலில் படித்தது. ஒரு சோகமான கதையை படித்துவிட்டு ஆபீஸ_க்கு லீவு போட்டுவிட்டு அறைக்குள்ளேயே அடைந்துக் கிடந்து அழுதது. ஒரு நகைச்சுவை கதையை படித்துவிட்டு வயிற்றுவலி சிகிச்சைக்கு வெ.சீத்தாராமனிடம் சென்றது. ஆபீசுக்கு ஒரு வரரம் லீவ போட்டுவிட்டு படித்த 1001 இரவுகள் நாவல். இன்னும் தான் ஆரம்பிக்க இருக்கும் தேவதா ரசிகர் மன்றம். இப்படியாக சா.கா.தாவின் அறிமுகக்காண்டம் முடிந்தது. 

      தேவதா அமைதியாய் இருந்தான்.

      நான் உட்கார்ந்திருந்தேன். தேவதா சில சமயம் முகத்தில் அடித்தபடி பேசிவிடுவான். எனக்கு பயமாக இருந்தது.

      இரவு மணி எட்டு.  தேநீர் வந்தது. சா. கா. தா. புராணத்தின் இரண்டாம் காண்டம் துவங்கியது.

     சா.கா. தாசன் சின்ன வயசில் படித்த சிந்துபாத் சித்திரக்கதை, கல்கண்டு துணுக்குகள்சங்கர்லால் துப்பறிகிறார்கலாதரின் மர்ம நாவல்கள் எல்லாவற்றையும் பட்டியலிட்டான்.

     மணி ஒன்பது. சூடாய் காபி வந்தது. தேவதாவின் விருந்தோம்பல் எனக்கு பிடிக்கும்.

     இலக்கிய தாகமெடுத்து கள்ளோகாவியமோ…?  குருவிப்போர் வகையறாபடித்தது  ….   அகிலன்…..என்றான். சுவர்க்கடிகாரம் பத்து முறை அடித்தது.

      இரவு சாப்பாடு வந்தது.

      இதெல்லாம் திருப்தி அடையாமல் கொஞ்சம் பின்னால் போய் புதுமைபித்தன். ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, அப்புறம் செல்லப்பாவின் வாடிவாசலில் வந்து நின்றபோது

      இரவு மணி பதினொன்று. சூடாய் தேநீர் வந்தது.

      எனக்கு அடுக்கடுக்காய் கொட்டாவி வந்தது.

      அதிலும் திருப்தி அடையாமல் சங்க இலக்கியம், மலையாள இலக்கியம். அப்புறம் டால்ஸ்ட்டாய், கார்க்கி, ஓ. வெறன்றி,  ஆலன் போ என்றான்.

      மணி பன்னிரண்டு என்றது கடிகாரம்.

      தொடர்ந்து தன் இலக்கிய பிரவேசம்,  தனது முதல் காதல் தோல்வி, முதல் கவிதை, வெந்தயம் கையெழுத்துப் பிரதியின் வரலாறு தொடர்ந்து தனது எதிர்கால திட்டங்களை சொல்லிக் கொண்டிருந்த போது, ஒரு மோட்டாவான ஒரு ஆள் உள்ளே வந்து உட்கார்ந்தார்.

      'மிஸ்டர் ரபீக் சினிமா புரொட்யூசர்" என்று எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான், தேவதா.

பின்னர் அவரிடம் சொன்னான் தேவதா. 'உங்க படத்துக்கு டைட்டில் வேணும்ணு கேட்டீங்க…. இல்ல…?   சுயபுராணம் சுப்பையா.. நீங்க நாளைக்கே பேப்பர்விளம்பரம் குடுத்திடலாம். எண்ணிப் பத்தே நாளில் உங்களுக்கு கதையை குடுத்திடறேன்…."

      ஓ.கே. தேங்க் யூ சார்…. அப்படியே ஹீரோவா யாரைப் போடலாமுன்னு சொன்னீங்கன்னாஅதையும் சேத்து போட்டுடலாம்….” புரொட்யூசர் ரபீக் குரலில் உற்சாகம் கரைபுரண்டது.

    “ மிஸ்டர் ரபீக் .. மீட் மிஸ்டர் சாந்தி காளிதாசன்இவர்தான் இந்தப் படத்தின் வறீரோ…. மிஸ்டர் சாந்தி இனிமே உங்க பேரு முகேஷ்…”

      சுயபுராணம் சுப்பையா சினிமா பேனர், மவுன்ட்ரோட் ரவுண்டானாவில் அறுபதடி உயரத்தில் மூக்கையா.  சாரி மூகேஷ், நின்று கொண்டிருந்தான்.

     'நான்தான் இவனை சினிமாவில் சேர்த்தேன்" என் பையனிடம் சொன்னேன்….  அவன் அண்ணாந்து பார்த்துவிட்டு சொன்னான்….

ரீலெல்லாம் சுத்தாதீங்கப்பா… "

88888888888888

 

No comments:

A CITY COLLEGE EDUCATE STUDENTS TO CONSERVE RIVERS - ஆறுகள் பாதுகாப்புக் கல்வி நூல் வெளியீடு

  ஊர் கூடி  தேர் இழுக்கலாம்  வாங்க (ஆறும் ஊரும் தமிழ் நாட்டின் நூறு ஆறுகளின் கதை சொல்லும் நூலிலிருந்து ஒரு பகுதி)   நான் எழுதிய “ஆறும்...