பசுமுன்னை தாய்களுக்கு பாலூட்டும் மரம் |
பசுமுன்னை
மரம், கிழக்கு ஆப்ரிக்கா, ஆசியாவின் வெப்பம் மிகுந்த பகுதிகள், ஆஸ்திரேலியா,
மற்றும் பசுபிக் தீவுகளில் இந்த மரங்கள் காணப்படுகின்றன, இதன் இலைகளை கீரையாகவும் காய்கறிகள்
போலவும் சமைத்து சாப்பிடுகிறார்கள், விதைகளை குழந்தைகள்
விரும்பிச் சாப்பிடுகிறார்கள்,
பாரம்பரிய மருத்துவ முறைகளில் பரவலாக உபயோகிக்கிறார்கள், வீடுகள் மற்றும் இதர கட்டிடங்கள் கட்ட, வேளாண்மைக்
கருவிகள், மரப்பாத்திரங்கள்,
போன்றவற்றைச் செய்ய இந்த மரங்கள் உதவும். பால்பாக்கியம் இல்லாத தாய்மார்களுக்கு பால்சுரப்பை அதிகரிக்கும், பசுமுன்னையின் இலைகள்.
தமிழ்:
பசுமுன்னை (PASUMUNNAI)
பொதுப்
பெயர்: ஹெட் ஏக் ட்ரி (HEAD ACHE TREE)
தாவரவியல்
பெயர்: பிரேம்னா சேராட்டிபோலியா (PREMNA SERRATI FOLIA)
தாவரக்
குடும்பம் பெயர்: லேமியேசி (LAMIACEAE)
தாயகம்: ஆசியா, ஆஃப்ரிகா
பசுமுன்னை
மரத்தின் பல மொழிப் பெயர்கள் (VERNACULAR NAMES)
கன்னடா:
அக்னிமந்தா, அக்னி மாந்தா,
பச்சானிகே மரா (AGNIMANDHA, AGNIMATHA, BACHANIGE
MARA)
மலையாளம்:
ஆப்பெல். பென்மோயெஞ்சா (APPEL,
BENMOENJA)
மராத்தி:
ஆரணி, சாமரி, கரனார்வேல் (ARANI,CHAMARI, KHARANARVEL)
சமஸ்கிருதம்:
கானகசிகா, அக்னிமாதா (GANAKASIKA,AGNIMATHA)
தெலுங்கு:
கப்பு நெல்லி, கட நெல்லி, கனிகா (GABBUNELLI,
GADANELLI, KANIKA)
பசுமை மாறாத சிறு மரம் பசுமுன்னை
பசு
முன்னை மரம் பசுமை மாறாத சிறு மரம்: அதிகபட்சமாக 8 மீட்டர்
உயரம் வரை வளரும். பெரிய இலைகள்
அதிகபட்சமாக அரையடி நீளம் இருக்கும்.
அகலம் 9.5 செ.மீ
வரை இருக்கும் பூக்கள் வெளிர் பச்சை நிறத்தில் சிறியதாக இருக்கும். கொத்தாக இருந்தாலும், பூக்களை
ஒரே உயரத்தில் நிறுத்தியது போலத் தோன்றும்.
கிழக்கு
ஆப்ரிக்கா, ஆசியாவின்
வெப்பம் மிகுந்த பகுதிகள்> ஆஸ்திரேலியா> மற்றும் பசுபிக் தீவுகளில் இந்த மரங்கள் பரவலாகக் காணப்படுகின்றன.
ஏழு மாதங்கள் பூக்கும்.
பூக்கள்
சிறியவை, 3 மி.மீ. அளவுக்கு மேல்
பூக்காது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரை
பூக்கும். பழங்கள் கனிந்தால் கருப்பு நிறமாக இருக்கும்.
பசுமுன்னை
மரம், எக்கச் செக்கமான கிளைகளுடன், உயரம் குறைவாக அடர்ந்து வளரும் மரம்.
பெரும்பாலும் தரயோடு தரையாக தாழப் பரந்து
வளரும் மரம்.
சமைத்து
சாப்பிடலாம்
இந்த
மரங்களை சிலர் வேலிகளில் வளர்க்கிறார்கள்.
இதன் இலைகளை
கீரையாகவும் காய்கறிகள் போலவும் சமைத்து சாப்பிடுகிறார்கள்.
உள்ளுர் காய்கறிக் கடைகளில் விற்கவும் செய்கிறார்கள். விதைகளை குழந்தைகள் விரும்பிச்
சாப்பிடுகிறார்கள்.
கனிந்த பழங்களை கருணைக் கிழங்குடன் சேர்த்து சாப்பிடும் பழக்கம்> பசுபிக் தீவுகளில் வசிக்கும்
மக்களிடையே காணப்படுகிறது.
பாரம்பரிய மருத்துவ மூலிகை
பாரம்பரிய மருத்துவ முறைகளில் இதனைப் பரவலாக உபயோகிக்கிறார்கள். வயிற்றில் இருக்கும் குடற் புழுக்களை நீக்குதல், வயிற்று வலி, சிறுநீர் போக்கை
சீர் செய்தல் போன்றவற்றிற்கு பசுமுன்னை மரத்தின் இலைகள் மற்றும் பட்டைகள் பயனாகின்றன.
இதன் வேரிலிருந்து எடுக்கும் காயம் கசப்புத் தன்மையும் லேசான காரமும்
உடையதாக இருக்கும். இதனைப் பயன்படுத்தி
இதயம் சம்மந்தமான பிரச்சினைகளையும்,
வயிற்றுவலி, போன்றவற்றையும் குணப்படுத்துகிறார்கள்.
இதன்
இலைகள் மற்றும் கிளைத் துண்டுகளை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அதன்
ஆவியினை ‘வேது’ பிடித்துவிட்டு, அந்தத் தண்ணீர் குளிர்ந்த பின்னால் அதில் குளிப்பதனால் காய்ச்சல் குணமாகும்.
பசுமுன்னை இலைகளில் தேநீர் தயாரித்து சாப்பிடுவது, உடல்வலி, முதுகுவலி, இடுப்பு வலி போன்றவற்றை எல்லாம் அது குணப்படுத்தும்.
பசுமுன்னையுடன் நோனி
பசுமுன்னை
இலைகளையும், நோனி இலைகளையும் (MORINDA CITRIFOLIA)
கசக்கிப்பிழிந்து சாறெடுத்து தண்ணீருடன்
கலந்து குடிப்பதனால் கடுமையான மலேரியா காய்ச்சலும் குணமாகும்.
நோனி
என்பது நமக்கு நன்றாக அறிமுகமான நுணா மரத்தின்
நெருக்கமான உறவுள்ள ஒரு சிறு மரம்.
அதிலிருந்து எடுக்கும் ‘டானிக்’ தற்போது
உலகம் முழுவதும் பரவலாக விற்பனை ஆகிறது.
பால்கொடுக்கும் தாய்மார்கள்.
சில
தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு கொடுக்கும் அளவு பால் சுரக்காது. சிலருக்கு சுத்தமாகவே பால் சுரக்காது. அப்படிப்பட்ட தாய்மார்களுக்கு பசுமுன்னை இலைகளை மருந்தாகக் தருவதன் மூலம் பால் சுரப்பினை அதிகப்படுத்தலாம்.
இலைச்
சாறாகவோ, இலைக் கஷாயமாகவோ அந்தக் தாய்மார்களுக்குக் கொடுக்கலாம். அது மட்டுமில்லாமல், கீல்வாதம்,
மூட்டுப்பிடிப்பு, உடல்வலி,
வாய்வுத் தொல்லை, இருமல், தலைவலி, காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
இதன்
பட்டையிலிருந்து சாறெடுத்து, அதில் தேநீர் தயாரித்து சாப்பிட்டு வந்தால் நரம்பு சம்மந்தமான நோய்கள்
குணமாகும்.
கூந்தல் வளர்க்கும்.
இலைகள்
மற்றும் வேர்களை தேங்காய்
எண்ணெயில் போட்டு வைத்தால்> நீங்கள் தலைக்குத் தடவும் எண்ணெய் கமகமக்கும். கூந்தல் தைலமாக உதவும்.
உடல் எடை குறைக்கும்
இதன்
இலைகளில் உடல் பருமனாவதைக் குறைக்கும் சக்தி உள்ளது. தினசரி பசுமன்னையின் பசுமையான இலைகளிலிருந்து
எடுக்கும் சாற்றினை 20 மில்லி
என்ற அளவில் காலை> மாலை என இரு வேளை என மூன்று மாதம்
சாப்பிட அற்புதமான பலன் தரும்.
மூல நோய் தீரும்.
இதன்
இலைக் கஷாயத்தை ‘சிட்ஸ்
பாத்’ (SITS
BATH) தில் இட்டு அதில் அமர்வதன் மூலம் மூலநோயினை குணப்படுத்தலாம். முழுவதுமாக குணமாகும் வரை இந்த சிகிச்சையைத்
தொடர வேண்டும்.
சந்தன
நிற கட்டைகள்.
பசுமுன்னை
கட்டைகள் லேசானவை. சந்தன நிறத்தில் இருக்கும்: அற்புதமான வாசம் வீசும். ஆனால் கட்டைகள் உறுதியானவை: சமயங்களில் இவை
முண்டும் முடிச்சுமாகக் கூட இருக்கும்.
வீடுகள்,
இதர கட்டிடங்கள் வேளாண்மைக்
கருவிகள், மரப்பாத்திரங்கள் போன்ற வற்றைச் செய்ய இந்த மரங்கள் உதவும். இவை போக நல்ல விறகாகவும் பயன்படும்.
அலையாத்தி
மரங்களோடும் வளரும்
இந்த
மரங்கள், பரவியுள்ள இடங்களில், மணற்
சாரி நிலங்கள்> மற்றும் சுக்காம் பாறை நிறைந்த மண்கண்டத்திலும் தானாக இயற்கையாக
வளர்ந்து கிடக்கின்றன.
ஈரப்பசை
மிகுந்த மணற்பாங்கான நிலம் இதற்கு ஏற்றது.
கடலோரத்தில் உள்ள புதர்க்காடுகள் மற்றும் சதுப்புநில மாங்குரோவ் என்றும்
அலையாத்தி மரங்களோடும் நட்பாக வளரும்.
பிலிப்பைன்ஸ்
நாட்டின் செபு
தீவுகளில் தென் பகுதியில் உள்ள நீர்க்காடுகளில் (WATERY
FOREST OF SOUTHERN CEBU) இந்த மரங்கள் அதிகம் உள்ளன.
கொசுறு !
பசுமுன்னை இலைகளை கசக்கி முகர்ந்து பாருங்கள், பூனையின் சிறுநீர் வாசனை வீசுமாம் ! இதனை ஒரு ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்திருக்கிறார்.
ஆராய்ச்சியாளர்களே இது உங்களுக்கு.
ஆராய்ச்சி செய்பவர்களுக்கு அற்புதமான சுரங்கம் இது, குறிப்பாக உடல் எடை குறைப்பு, புற்று
நோய் மற்றும் இதய நோய் பாதுகாப்பு சம்மந்தமான ஆராய்ச்சியாளர்களுக்கு இது உதவும்.
FOR
FURTHER READING
WWW.EN.WIKIPEDIA.ORG-“PREMNA SERRATIFOLIA
WWW.TROPICAL.THEFERNS.INFO -“PREMNA SERRATIFOLIA
WWW.HERBAPATHY.COM-“PREMNA SERRATIFOLIA”
WWW.AYURTIMES.COM-AGNIMAHTHA-PREMNA INTEGRIFOLIA
WWW.FLOWERS OF INDIA.COM- PREMNA
SERRATIFOLIA
WWW.NCBI.NLM.NIH.GOV/ PHARMACOLOGICAL POTENTIALS OF - PREMNA
INTEGRIFOLIA
REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment