Friday, June 30, 2023

PARANGI SAMBIRANI CURES OSTEOARTHRITIS 189. முடக்குவாத நோய்களை குணமாக்கும் குரு பறங்கிச்சாம்பிராணி

முடக்குவாதம் குணமாக்கும் 
பறங்கிச்சாம்பிராணி


(PARANGI SAMBIRANI)

தாவரவியல் பெயர் :  பாஸ்வெல்லியா செரேட்டா (BOSWELLIA    SERRATA)

பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : இண்டியன் ஒலிபானம், இண்டியன் பிராங்கின்சென்ஸ் (INDIAN OLIBANUM, INDIAN FRANKINCENCE)

தாவரக்குடும்பம் : பர்ஸரேசி டார்ச் வுட் பேமிலி (BURSERACEAE – TORCHWOOD FAMILY)

தாயகம்: இந்தியா

இந்தியாவிற்கு குறிப்பாக பஞ்சாப் பகுதிக்கு சொந்தமான மரம். கிழக்கு இந்தியப் பகுதியில் அதிகம் காணப்படுகிறது. ஆங்கிலத்தில் இண்டியன் பிராங்கின்சென் என்று பெயர்.

பல நூறு ஆண்டுகளாக இந்த சாம்பிராணி ஆயுர்வேத மருத்துவத்தில பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக முடக்கு வாதம் என்று சொல்லும் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் (OSTEOARTHRITIS) என்பதை சரி செய்யக்கூடிய மூலிகை. வயதானாலே ஒரு சில நோய்கள் கண்டிப்பாய் வரும். அவற்றில் ஒன்றுதான் இந்த முடக்குவாதம.;    கைகள், கால்கள், இடுப்பு, முட்டிகள், கழுத்து இப்படி உடலின் எல்லா பகுதிகளிலும் உள்ள மூட்டுக்கள் சரிவர வேலை செய்யவில்லை என்றால் நம்மை எந்த வேலையும் செய்யவிடாமல் முடக்கிப்போட்டுவிடும். முடக்கிப் போடும் நோய் முடக்குவாதம்.

நூறு விதமான ஆர்த்ரைட்டிஸ்

ஆண்களுக்கு 45 வயதுக்கு முன்னாலேயே வரும். பெண்களுக்கு 55 வயதுவரை காத்திருக்குமாம். ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் மாதிரி கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட நோய்கள் புழக்கத்தில் உள்ளதாம். அதிகமான எடை தாங்கும் கை. கால்கள், இடுப்பு மற்றும் தண்டுவடம் ஆகிவற்றை தாக்குவது, ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ். வெயிட்டான நோய்.

மூட்டுக்களில் இரண்டு எலும்புகளுக்கு இடையே உள்ள மிருதுவான தன்மைகொண்ட குருத்தெலும்புகளை (CARTILAGE BONES) ஒரு குஷன் போல வடிவமைத்துள்ளது இயற்கை. இந்த குருத்தெலும்புகள் பாதிக்கப்படுவதுதான் ஆர்த்ரைட்டிஸ் என்கிறார்கள்.

ஓன்றுதான் ஆனால் வேறுவேறு

ருமாட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் (RHEUMATIC ARTHRITIS) என்கிறார்களே, அதுவும் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ்ம் ஒன்றா ?” என்று ஒரு டாக்டரிடம் கேட்டேன். ஒன்றுதான் ஏறத்தாழ. ஆனால் வேறுவேறுஎன்று வடிவேல் பாணியில் சொன்னார். அது உடலின் எல்லா பாகங்களையும் தாக்குமாம். பாதிக்கப்பட்ட மூட்டுக்களோடு நுரையீரல், கண்கள், மற்றும் தோலையும் பாதிக்குமாம். இது அதைவிட மோசம்.

மூட்டு வீக்கம், மூட்டு வலி, மூட்டுக்களை சரிவர அசைக்க முடியாமல் விரைப்படைதல (STIFFNESS)

முடக்குவாதம் இவை எல்லாமே ஒன்றுடன் ஒன்று சம்மந்தப்பட்டதுதான். இவை எல்லாவற்றையும் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது பறங்கிச்சாம்பிராணி என்கிறார்கள்.

இவை தவிர சுவாச மண்டலம் சம்மந்தப்பட்ட நோய்கள், மூச்சுவிட சிரமப்படுதல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் மருந்துகள் தயாரிக்க பறங்கிச் சாம்பிராணியைப் பயன்படுகிறது.

மரத்தின் தமிழ்ப் பெயர் :  குமாஞ்சம், குங்கிலியம், மரத்து வெள்ளை, பறங்கிச் சாம்பிராணி, வெள்ளைக்கீரை (KUMANJAM, KUNGILIUM, MARATHU VELLAI, PARANGI SAMBIRANI, VELLAI KEERAI)

குஜராத்தி: சாலெடி, சலாய் குகுல் (SAALEDI, SALAAI GUGUL)

இந்தி: ஷாலக்கி, குண்டுர், லுபான் (SHALAKI, KUNDUR, LUBAN I)

கன்னடா: குக்குலு மரா (GUGGULA MARA)

மலையாளம்: குங்கிலியம் (KUNGILIUM)

மராத்தி: டுப்பாலி, தூப்சாலி;, குருந்தா, சலப்பாலி, சாலி (DHUPALI, DHUPASALI, KURUNDA, SALAPHALI, SALI)

ஒரியா: சாலை (SALAI)

சமஸ்கிருதம்: பிஷான், குக்குலா, ஹஸ்தினஷானா, பாலங்க், பார்வதி, ஹ்ராதினி, குருந்தா, சல்லகி, ஸ்ருவா (BISHAN, GUGGULA, HASTINASHANA, PALANK, PARVATHI, HRADINI, KURUNDA, SALLAKI, SRUVA)

தெலுங்கு: குக்கிலமு, பரங்கி சாம்பிராணி சேட்டு, சல்லகி (GUGGILAMU, PARANGI SAMBRANI SETTU, SALLAKI)

உருது: குண்டுர், லோபனா (KUNDUR, LOBANA)

சாம்பிராணி பெயிண்ட் - வார்னீஷ் 

இதன் இலைகள் விளை நிலங்களுக்கு தழை உரமாகும்; நீராவி மூலம் நறுமணத் தைலம் வடித்தெடுக்கலாம். மரத்திலிருந்து கசியும் மரப் பாலே பறங்கிச்    சாம்பிராணியாகிறது. எண்ணெய், பெயிண்ட் மற்றும் வார்னிஷ் செய்ய, சாம்;பிராணி பிரித்தெடுக்கப்பட்ட மரப்பால், உதவும். காகிதம் தயாரிக்க  மரக்குழம்பு தரும். இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகு தரும். எந்த ஒரு மரத்தைப் போலவும் வீசும் காற்றின் வேகத்தைத் தடுக்கும். தூசியினை வடிகட்டும். காற்றை தூய்மைப்படுத்தும். பசுமை இல்ல வாயுக்களின் தாக்கத்தைக் குறைக்கும்.

பெரும்பாலும் மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. விதைகள் ஊற்பத்தியும் குறைவு. முளை;ப்புத் திறனும் குறைவு. கிளைகளை வெட்டி நடலாம். வேர்க்குச்சிகள் மூலமும் கன்றுகளை உற்பத்தி செய்யலாம். இது போன்ற அழிந்துவரும் மரவகைகளைக் காப்பாற்ற கைவசம் இருக்கும் ஒரே தீர்வு திசுவளர்ப்பு முறையில் கன்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்வதுதான்.

ஓவ்வொரு மாவட்டத்திலும் ஒரு திசு வளர்ப்பு மையம் ஒன்றை உருவாக்கி இதுபொன்ற அழிந்துவரும் மரவகைகளின் கன்றுகளை உற்பத்தி செய்யலாம் என்று கருத்து சொன்னார், வனத்துறையில் பணியாற்றிய எனது நண்பர் ஒருவர்.  

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE  A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...