Friday, June 30, 2023

PARAMBAI SACRED TREE OF SOUTH INDIA 185. நவராத்திரியில் வணங்கும் மரம் ப ர ம் பை

 

நவராத்திரி மரம்
ப ர ம் பை


(PARAMBAI, RUSTY ACACIA, ACACIA FERRUGINEA, MIMOSACEAE)

தாவரவியல் பெயர்: அகேசியா பெருஜினியா (ACACIA FERRUGINEA)

பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர்: ரஸ்டி அகேசியா (RUSTY ACACIA)

தாவரக்குடும்பம்:  மைமோசி (தொட்டார் சுருங்கி குடும்பம்) (MIMOSACEAE)

தாயகம்: இந்தியா, இலங்கை, நேப்பாளம்

பரம்பை கருவேல மரத்தின் குடும்பத்தைச் சேர்ந்தது. பார்க்க துரிஞ்சி மரம் போலத் தெரிந்தாலும்  ஓங்கி உயர்ந்து வளரும். திருவண்ணாமலை போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் இயல்பாக வளரும். பல்வேறுவிதமான மரச்சாமான்கள் செய்யவும் ஏற்ற மரம் என வனத்துறை அதிகாரிகள் சிபாரிசு செய்கிறார்;கள்.

இந்தியாவில் தென்னிந்தியப் பகுதிகளிலும், குஜராத்திலிருந்து கிழக்கில் கஞ்சம் மலைப் பகுதி வரை, இலங்கையில் வறட்சியான வனப்பகுதிகளிலும் பரம்பை மரங்கள் பரவியுள்ளன. இந்தியா, இலங்கை, நேப்பாளம் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான மரம்.

ஆயுர்வேதத்துக்கு உதவும் மரம்     

பல் சம்மந்தமான நோய்கள், லியுகோடெர்மா, குடற்புண், ரத்த சம்மந்தமான நோய்கள், கல்லீரல் நோய்கள், நமைத்தல், வாய்ப்புண் போன்றவற்றை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருத்துவத்தில் பரம்பை பயன்படுகிறது.

இந்த மரம் 6 முதல் 9  மீட்டர் உயரம் வரை வளரும் இந்திய மரம்;. செவ்வல் மற்றும் செம்புறை மண் வகைகளில் வளரும். வெப்பமான வறண்ட பகுதிகளில் நன்கு வளரும்.

தெனிந்தியாவின் புனிதமான மரம்

பரம்பை மரத்தையும் மகாபாரதத்துடன் தொடர்புபடுத்தி சொல்லுகிறார்கள். பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாத வாச காலத்தில் தங்கள் ஆயுதங்களை இதன் மரப் பொந்தில் மறைத்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது. வன்னி மரத்தையும் இதே சம்பவத்துடன் இணைத்து சொல்லுகிறார்கள். வன்னியும் பரம்பையும் வேறுவேறு மரங்கள். வன்னி மரத்தின் தாவரவியல் பெயர் அகேசியா சினரேரியா (ACACIA CINERARIA). பரம்பை மரத்தின் தாவரவியல் பெயர் அகேசியா பெருஜினியா (ACACIA FERRUGINEA). தென்னிந்தியாவில் தசரா மற்றும் நவராத்திரி விஜயதசமி காலங்களில் புனிதமான மரமாகக் கருதி வணங்கும் பழக்கம் இன்றளவும் உள்ளது. 

பரம்பைப் பற்றிய  பல மொழிப் பெயர்கள்

தமிழ்:  பரம்பை, சீமை வெள்வேல் (PARAMBAI, SEEMAI VELVEL)

இந்தி: கெயகர், கல்கர்கிங்கோர், சபேத் கெய்ர் (KEYAKAR, KALKAR, KINGOR, SAFEDH, KEYR)

கன்னடம்: பன்னி, பன்னி மரா, பானு, கீரிபன்னி (PANNI, PANNI MARA, BAANU, KEERI PANNI)

மலையாளம்;: கரிவேலம், திமை வேலம், வன்னி (KARIVELAM, THIMAI VELAM, VANNI)

மராத்தி: தாவி காய்ர், பந்த்ரா காய்ர் (THAVI KAIR, BANTHRA KOIR)

நேப்பாளி: கவுர் (KAVUR)

சமஸ்கிருதம்: அரிமேடா, பிரம்மசால்யா, டிவிஜப்பிரியா (ARIMEDA, BRAMMA SALYA, DIVIJAPRIYA)

தெலுங்கு: அனச்சந்த்ரா, இனுபா தும்மா (ANUCHANDRA, INUPA,THUMMA)

கடைசல்வேலை செய்ய ஏற்ற மரம்

தழை  கால்நடைகளுக்கு தீவனமாகும். பட்டை  தோல் பதனிட டேனின் தரும். பிசின் கோந்து தயாரிக்க உதவும். மரம் கடினமானது.  கடைசல் வேலைகள் செய்யலாம்; வண்டிச் சக்கரங்கள், தூண்கள், உத்திரங்கள்,   வேளாண் கருவிகள் செய்யலாம். காகிதம் செய்ய மரக்குழம்பும்அடுப்பெரிக்க  விறகும் தரும்;. மண் அரிப்பையும், வீசும் காற்றின் வேகத்தையும் தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும். அரக்குப் பூச்சி வளர்க்க ஏற்ற அருமையான மரம்.

மரங்களை மறந்துவிட்டோம்

ஒரு கிலோ எடையில் 5900 விதைகள் இருக்கும். விதைகள் பிரச்சினையில்லாமல் முளைக்கும். எவ்விதமான விதை நேர்த்தியும் தேவையில்லை. ஓராண்டு வரை விதைகளின் முளைப்புத் தன்மை தாக்குப்பிடிக்கும். அதற்குப் பிறகு கோஞ்சம் கொஞ்சமாய் குறையும். 

பொதுவாக மரங்கள்பற்றி ஆய்வு செய்தால் உண்மையாகவே பெரும்பாலானவை மூலிகை மரங்கள், எனத் தெரிகின்றன. இவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளைப் பெரும்பாலும் கிராமப்புற மக்கள் ஒரு காலத்தில் தெரிந்து வைத்திருந்தனர்.

அதிலும் குறிப்பாக பழங்குடி மக்கள் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். நாம் அந்த மரங்களையும் அழித்து விட்டோம். அந்த மரங்கள் தொர்பான மருத்துவ முறைகளையும் அழித்துவிட்டோம். காசு கொடுத்து மருந்து வாங்கி சாப்பிடும் கலாச்சாரத்திற்கு அடிமையாகிவிட்டோம். பழங்குடி மக்கள் கூட அவர்களைச் சுற்றி இருக்கும்  மரவகைகளைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் இன்று தடுமாறுவது ஆச்சரியம் தருகிறது.

பட்டைச் சாராயம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா ?

அந்த சாராயத்தின் முக்கிய கச்சாப் பொருள் வெள்வேல மரத்தின் பட்டை. இது தெரியாத சமயம,;  சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கிராமத்துக்குப் போனேன். அங்கு  ஒரு மலைக் குன்று. அங்கு மரம் நட முடியுமா என்று பார்க்கத்தான்; போனேன். அங்கு ஏற்கனவே நிறைய வெள்வேல மரங்கள் இருந்தன. ஆனால் ஒன்றில் கூட பட்டைகள் முழுசாய் இல்லை. மரங்கள் பட்டை இல்லாமல் பரிதாபமாய் இருந்தன.  இந்த பட்டையில் மருந்து ஏதாச்சும் செய்கிறார்களா ?” என்று நான் கேட்க சிரித்துக் கொண்டே சொன்னார். பட்டை சாராயத்துக்கு இதுதான் ரா மெட்டீரியல’; என்றார். பிறகு எப்படி அதை தயார் செய்வது என்று கூட எனக்கு விளக்கமாகச் சொன்னார்.

ரொம்ப நாளைக்குப் பிறகு நானாக ஒரு செய்தியைத் தெரிந்து கொண்டேன். இந்த மரங்களில் இருந்த பட்டைகளை பாதிக்கு மேல் உறித்தது அவர்தான் என்று.

அதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால் பரம்பை கூட ஒரு வகையில் வேள்வேல் மாதிரிதான். இதன் பட்டையையும் உறித்து பட்டைச் சாராயம் தயார் செய்யலாமாம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...