Wednesday, June 14, 2023

PALMYRA TREE 01. பனை மரமே பனை மரமே

 

பனை மரமே பனை மரமே

பனைமரம், இந்தியா உட்பட தெற்கு ஆசியாவின் பல நாடுகளுக்கு சொந்தமானது. தமிழ்நாட்டின் அரசுமரம் என்ற அங்கீகாரம் பெற்றது. ஒரு மரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு சமூகம் உருவானது,  தமிழ்நாட்டில் மட்டுமாகத்தான் இருக்கும், அதற்குக் காரணமாக இருந்தது பனை. திருப்பனந்தாள், திருப்பனங்காடு, திருப்பனையூர்> திருமழைப்பாடி> திருவோத்தூர் ஆகிய சிவன் கோவில்களின் ஸ்தல விருட்சமாக பெருமைப்படுத்தப் பட்டிருக்கும் இந்த மரம்> பனையேறி> மரமேறி> கிராமணி> மற்றும் நாடார் என்றழைக்கப் படும் அனைத்து  சமூகமும் உருவாகக் காரணமாக இருந்தது பனைமரம்,

பொதுப் பெயர்கள்: டவுப் பாம்> பல்மைரா பாம்> டாலாபாம்> ஒயின்பாம்,    ஐஸ் ஆப்பிள் பாம் (DOUB PALM, PALMYRA PALM, TALA PALM, TODDY PALM, WINE PALM, ICE APPLE PALM)

தாவரவியல் பெயர்: பொராசஸ் பிளாபலிஃபெர் (BORASSUS FLABELLIFER)

தாவரக்குடும்பம்: அரிகேசி (ARICACEAE)

தாயகம்: இந்தியா

பனை மரத்தின் பல மொழிப் பெயர்கள்

தமிழ்: பனை மரம் (PANAI MARAM)

இந்தி: தாட், தால், திரீராஜ்;( TAAD, TAL, TRINARAAJ)

மராத்தி: தாட்(TAAD)

மலையாளம்: கரிம்பனா (KARIM PANA)

தெலுங்கு: தட்டி சேட்டு(TATI CHETTU)

கன்னடா: ஒலிகரி தாலிகாரி (OLEGARI,TAALI GARI)

பெங்காலி: தாலா (TAALA)

கொங்கணி: எரோல் (EROAL)

உருது: தாட் (TAAD)

குஐராத்தி:தாட் (TAAD)

சமஸ்கிருதம்:தாலா (TAALA)

பனையின் சொந்த இடம்

இந்தியா உட்பட தெற்கு ஆசியாவின் பல நாடுகளுக்கு சொந்தமானது பனை மரம்.  அவை நேப்பாளம்> பங்களாதேஷ், ஸ்ரீலங்கா> கம்போடியா> லாவோஸ், பர்மா> தாய்லாந்து> வியட்நாம்> மலேசியா> இந்தோனேசியா> மற்றும் பிலிப்பைன்ஸ்.  சொந்த ர்போல பனை பரவி இருக்கும் பிற நாடுகள்> பாகிஸ்தான்> சோகோத்ரா தீவு> மற்றும் சைனா.

தமிழக முதல்வருக்கு நன்றி

தமிழ்நாட்டின் அரசுமரம் என்ற அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.  அந்த ங்கீகாரத்தோடு வேறு எவ்விதமான அங்கீகாரமும் இதற்கு தரப்படவில்லை என்பது வருத்தமான அம்சமாக இருந்தது. தாமதமாக இருந்தால் கூட தற்போது அந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.

பனை மரங்களின் பண்புகள்

பனை மரங்களில் அதிகபட்சமாக 30 மீட்டர் வரை உயரமாக வளரும். 

பனை இலைகளை மட்டைகள் என்று சொல்லுவோம், பனை மட்டைகள் விசிறி போல் இருக்கும், 3 மீட்டர் அளவுக்கு நீளமாக இருக்கும்.

இந்த பனை மரங்களில் காம்புகளில் கருப்பு நிறமான கருக்குகள் இருக்கும். பற்கள் மாதிரியான இந்த கருக்குகள் மிகவும் கூர்மையாக இருக்கும். 

பனையில் ஆண் பெண் மரங்கள் தனித்தனியாக இருக்கும். அதே போல் அந்தந்த மரங்களில் அந்தந்த பூக்கள் பூக்கும். 

மகரந்த சேர்க்கைக்கு பிறகு 15 முதல் 25 சென்டி மீட்டர் அகலத்திற்கு உருண்டை வடிவில் காய்கள் தோன்றும். 

ஒவ்வொரு காயிலும் மூன்று கொட்டைகள் இருக்கும். சிலவற்றில் இரண்டு இருக்கும். சிலவற்றில் ஒன்று கூட இருக்கும். இதைத்தான் நாம் நுங்கு என்கிறோம். நுங்குதான் முதிர்ந்தவுடன் கோட்டைகளாக  அல்லது விதைகளாக மாறுகின்றன.

பனையில் ஆண் பூக்கள் தடிமனான குச்சிகள் போல இருக்கும். காவி நிறத்தில் இருக்கும். 

ஆழமாக போகாத வேர். 

பனை மரத்தின் வேர்கள் எவ்வளவு தூரம் பரவி வளரும் எவ்வளவு காலத்துக்கு செல்லும் என்பதும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். 

காரணம் பனை மரத்தின் வேர்கள் மிகவும் ஆயிரம் அடிக்கு கீழே இருக்கும்  தண்ணீரையும் சேமிக்க கூடிய தன்மை உடையது என்று சிலர் சொல்லி வருகிறார்கள். 

ஆனால் ஆராய்ச்சி பூர்வமாக இது நிரூபணம் ஆனதாக தெரியவில்லை.

அதனால் ஆராய்ச்சி பூர்வமாக எவ்வளவு நீளம் அல்லது எவ்வளவு தொலைவிற்கு இந்த  வேர்கள் பரவிச் செல்லும் என்பதை பற்றி பார்க்கலாம். 

 இருபது ஆண்டுகள் வயதுடைய ஒரு பனை மரத்தின் வேர்கள் அதன் அடிமரத்திலிருந்து சுமார் 5 அடி தொலைவிற்கு பரந்து வளரும்.

இருபது ஆண்டு வயதுடைய ஒரு பனை மரத்தின் வேர்கள் அதனுடைய அடி மரத்தில் இருந்து ஒன்று முதல் மூன்று அடி ஆழத்திற்கு மட்டுமே செல்லும் என தெரிகிறது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர்  ஒய் எஸ் ஆர் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிசி வெங்கையா அவர்களும், இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச் அமைப்பினை சேர்ந்த ஹெச்.பி. மகேஸ்வரப்பா என்பவரும் இணைந்து இந்த ஆராய்ச்சியினை செய்து முடித்துள்ளார்கள். 

பனை ஒலை காத்தாடி

கிராமப்புற மக்களின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையது பனைமரம்.  முழுக்க கிராமத்தில் எனது அரை டிராயர் பருவத்தைக் கழித்தவன் நான்.

பனை ஒலைகளில் காத்தாடி செய்து விளையாடி இருக்கிறேன்.  அதைச் செய்ய ஒரு பனை ஒலை> சப்பாந்திக்கள்ளியின் ஒரு முள்> ஒரு சோத்தக்கை மூன்றும் தேவை. 

இரண்டு அல்லது மூன்று அங்குலத்தில் பனை ஒலையை தறித்துக் கொள்ள வேண்டும்.  அதன் நடுப்பகுதியில்> சப்பாத்தி முள்ளால் ஒட்டை போட்டு ஒலை நன்கு சுற்றுமாறு ஒட்டையைப் பெரிது பண்ணிக் கொண்டு அதனை அப்படியே பென்சில் சைசில் இருக்கும் சோளத் தட்டையில் பொருத்திக் கொள்ள வேண்டும். 

சோளத்தட்டைதான் காற்றாடியின் கைப்பிடி.  இப்போது காற்றடிக்கும் திசையில் பிடித்தால் சுழலும்.  காற்றுக் குறைவாக இருந்தால் காற்று வரும் திசையில் காற்றாடியை கையில் பிடித்தபடி ஒட வேண்டும்.  அப்படி ஒடினால் மிக வேமாய் சுழலும்.

மாவலி சுற்றுவது                                                                                                                              அதேபோல கார்த்திகைத் திருநாள் கொண்டாட்டத்தில் கிராமங்களில் மாவலி சுற்றுவது என்பது பிரபலமானது.  இந்த கார்த்திகையும்> பொங்கலும்தான் அந்த சமயம் கிராமத்தின் விசேமான பண்டிகைகள். 

க்குக் தெரிந்து தீபாவளிகூட சமீபகாலத்தில் தான் பிரபலமானது.  பட்டாசு என்பது தான் அதில் கவர்ச்சிகரமான சமாச்சாரம்.

மாவலி காத்தி சுற்றுவது என்பார்கள்.  அதைக்கூட நாங்களே தயார் செய்வோம்.  கார்த்திகைப் பண்டிகை வருவதற்கு ஒரு வாரம்> பத்து நாட்களுக்கு முன்னதா இதற்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்து விடுவோம். 

தற்கு காய்ந்த பனம்பூக்கள் வேண்டும்.  அதனை சேகரித்து உலர்த்தி>  நெருப்பில் எரித்து  அதன் கரிகளை மட்டும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.  எரிக்கும் போது சாம்பலாகாமல் பதமாக> நெருப்பை அணைத்து கரிகளை சேகரிக்க வேண்டும். 

இந்தக் கரிகளை பொடியாக்கி> அதனை ஒரு பருத்தித் துணியில் பொதித்து சுருணையாகப் பாய் சுருட்டுவது மாதிரி சுருட்டி> பனை மட்டைகளின் ஊடாக வைத்து இறுக்கமாகக் கட்ட வேண்டும்.  அதனைச் சுற்றுவதற்குத் தோதாக இரண்டு மார்பளவு கயிறு அல்லது பனை நாரினைக் கட்டிக்கொள்ள வேண்டும். 

இப்போது மாவலி ரெடி.  மாலை மங்கிதும் மாவலியில் நெருப்பு வைத்து  அது கனிந்ததும் எடுத்து சுற்ற ஆரம்பிப்போம்.  நெருப்புப் பொரிகள் வட்ட வடிவமாகக் கொட்ட ஆரம்பிக்கும்.  நினைத்துப் பாருங்கள். 

நெருப்புப் பூக்களால் அலங்காரம்

ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் நான்கைந்து மாவலிகன் சுற்ற கிராமமே நெருப்புப் பூக்களால் அலங்கரித்தது போல இருக்கும்.  எத்தனைப் பட்டாசு வெடித்தாலும் மாவலி சுற்றும் அழகுக்கு அருகில் கூட நிற்காது.  அது மட்டுமல்ல பட்டாசுகளால் ஏற்படும் புகையும் கந்தக நெடியும் சுற்றுச் சூழல் பாதிப்பும் மாவலியினால் ஏற்படாது என்கிறார்கள்ல்லாம் பனையின் உபயம்.

விசிறிகள் காய்க்கும் மரம்.

கோடை ஆனால் போதும். கிராமங்களில் ஒவ்வொருத்தர் கையிலும் ஒரு பனைவிசிறி இருக்கும்.  விசிறிகளையே இலைகளாக வைத்துக் கொண்ட மரம் பனை மரங்கள்.  ஒரு முறை அதன் மட்டைகளைப் பாருங்கள். ஒவ்வொரு பனை மட்டையும் ஒரு விசிறிபோலத் தென்படும். விசிறிகள் காய்க்கும் மரம்.

கோனடக்கு விசிறி மழை வந்தால் சம்பு

கோனடக்கு பனை விசிறிபோல மழைக்காலம் வந்தால் சம்பு வேண்டும்.  பனைமட்டைகளின் ஒலைகளைக் கொண்டு பனம் சம்பு தயார் செய்வார்கள்.  எப்பேர்பட்ட காற்றுமழையும் கையில் சம்பு இருந்தால் போதும்.  எந்த வம்பும் செய்யாது. 

ஆனால் இப்போது வரும் குடைகள் கொஞ்சம் லேசாக காற்று அடித்தால் போதும்> என்னை என்ன பண்ணச் சொல்றீங்க சாரி என்று தலைக்குமேல் எதிர்ப்பக்கம் சுருக்கிக் கொண்டு ஓய்வு எடுத்துக் கொள்ளும்

ஒரு சம்பு ஒருத்தருக்கு வசதியாய் இருக்கும்.  இரண்டு பேர் கூட ஒரு சம்பில்  நெருக்கியபடி செல்வது வழக்கம்தான். சம்பு ஒரு முரட்டு குடை. எப்படிபட்ட மழையையும் தாக்குப் பிடிக்கும்.

கோடையில் கொளுத்தும் வெய்யிலை சமாளிக்கக்கூட ஒரே ஒரு பனை மட்டையை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு போகலாம்.

னஞ்;சாறு அல்லது பதநீர்

பனம் பூக்களிலிருந்து வடித்து எடுக்கப்படுவதை பனஞ்;சாறு அல்லது பதநீர் என்கிறோம்.  பனஞ்சாறு புளித்தால் பனங்கள்.  பனங்கள் போதை தரும் பானம்.  இயற்கை ஒயின் அல்லது பீர்.  பனஞ்சாறு புளிக்காமல் இருக்க பதனீர் வடிக்கும் கலயங்களில் முதல் நாள் மாலையே சுண்ணாம்பு தடவி வைப்பார்கள்.  அடுத்த நாள் பதநீர் இறக்கி பல மணிநேரம்.  ஆனாலும்  புளிக்காமல் இருக்கும்.  பதனீர் இனிப்பும்> துவர்ப்பும் சேர்ந்த மாதிரியான சுவை.

 யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணேன் என்று பாடிபாரதிக்கு பதனீர் கொடுத்திருந்தால் யாமருந்திய பானங்களிலே பதனீர் போல இனிதாவது எங்கும் காணேன் என்று பாடி இருப்பார். 

பனை ஒரு தின்பண்டமரம்.

பனஞ்சாறு> பனை நூங்கு> பனம்பழம்> பனை வெல்லம்> பனங்கற்கண்டு பனம் கிழங்கு எல்லாமே சுவையான தின்பண்டங்கள். பனை ஒரு நல்ல தின்பண்டமரம்.

பனை மரத்தை அடிப்படையாகக் கொண்டு பல பழமொழிகள் புழக்கத்தில் உள்ளன.  பனை மரத்தின் கீழே நின்று பாலைக் குடித்தாலும்> கள் என்றுதான் சொல்வார்கள்  என்பதும்> பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்பதும் மிகவும் பிரபலமான பழ மொழிகள்.

 ஒருவர் தினை அளவு நன்றி செய்தாலும் அதனைச் சிறியது.  என எண்ணாமல்> அதனைப் பனை அளவு பெரிதாக எண்ணுவர்> பயன் தெரிந்தவர்என்று தனது திருக்குறளில் பனையை உவமையாக்ச் சொல்லுவார் திருவள்ளுவர்.

    தினைத்துனை நன்றி செயினும்

    பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரிவார் (திருக்குறள் - 104).

இன்று இந்தக் திருக்குறளை மேற்கோள் காட்டுவதற்குக் காரணமாக இருப்பதுகூட பனை மரங்கள்தான்.  திருக்குறள் உட்பட தொல்காப்பியம்> சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்கள் எல்லாம் எழுதி வைத்தது பனை ஒலைகளில்தான்.

ழ்தெங்க நாடு ஏழ்பனை நாடு

தமிழர்களுக்கும்> தமிழுக்கும் பனை மரத்திற்கும் ஒரு தொன்மையான தொடர்பு இருந்து வருகிறது. தமிழன் பிறப்பிடமான குமரிக்கண்டம்> தினான்கு மாநிலங்களாக இருந்தன.  அவை ழ் தெங்க நாடு மற்றும்  ஏழ்பனை நாடு.

நாயக்க மன்னர்கள் மதுரையை ஆக்கிரமித்தபோது> சான்றோர் சமூகத்து மன்னர்கள்தான்  அதனை ஆண்டு வந்தனர்.  அங்கிருந்து துரத்தப்பட்ட அவர்கள்> தென் மாவட்டங்களில் தேரிக்காட்டில் குடியேறி பனை மரங்களை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்தனர்.  இவர்கள் பிற்காலத்தில் மரமேறிகள் என்றும் பனை எறிகள் என்றும் அழைக்கப் பட்டார்கள்

ஒரு மரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு சமூகம் உருவானது> தமிழ்நாட்டில் மட்டுமாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீபீஷணன் தந்த பரிசு

வீபீஷணன் இலங்கையின் மன்னனாக முடி சூட்டிக் கொண்டபோது> தனது நன்றியின் அடையாளமாக அவன் ராமபிரானுக்கு பரிசுப் பொருளாகத் தந்தது எது தெரியுமா ? தங்கத்தால் செய்யப்பட்ட ஏழு பனை மரங்கள் என்று சொல்லுகிறது ராமாயணம்.

விவசாயத்தை பெருமைப்படுத்தும் விதமாக தனது தோளில் கலப்பையை சுமந்து கொண்டிருப்பவர்> கிருஷ்ணபரமாத்மாவின் அண்ணன் பரசுராமன்.  அவர் தனது கொடியில் பனை மரத்தை இலச்சினையாகக் கொண்டவர் அவர்.

ங்க காலத்தில் தோல்வி அடைந்த காதலன் மடலேறினான் என்பார்கள்.  பனை மட்டைகளைக் கொண்டு> குதிரை செய்து அதில் ஏறி ஊர்வலம் வந்த்தாக  சங்க இலக்கியங்கள் சொல்லுகின்றன.

மராமரம் என்பதும் பனைமரம்தான்

ராமபிரான்> ஏழு மராமரங்களை துளைத்துச் செல்லும்படியாக அம்பு எய்து> வாலியைக் கொல்லுவதற்கான வீரம் உடையவர் என்று  நிரூபித்தார்.  ராமாயணத்தில் இப்படி ஒரு சம்பவம்  வருகிறது.  அதனை மராமரம் என்று நான் படித்திருக்கிறேன். 

ஆனால்> மராமரம் என்பது> பனைமரம் என்று லண்டன் சுவாமிநாதன் தனது கட்டுரையில் எழுதி உள்ளார். அதற்கு ஆதாரமாக ஒரு புகைப் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.  அது அம்ரிட்டேஷ்வர் கோவிலின் உள்ள சிற்பத்தின் புகைப்படம் அது.

திருப்பனந்தாள்> திருப்பனங்காடு> திருப்பனையூர்> திருமழைப்பாடி> திருவோத்தூர் ஆகிய சிவன் கோவில்களின் ஸ்தல விருட்சமாக பெருமைப்படுத்தப் பட்டிருக்கும் மரம் பனை.

தமிழ்நாட்டில் பனைமரங்கள்

இந்தியாவில் மொத்தம் 8 கோடி பனை மரங்களும்> அதில் தமிழ்நாட்டில் இருந்தவை மட்டும் 5 கோடி என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  ஆனால் ஏகப்பட்ட பனை மரங்கள் வெட்டப்பட்ட நிலையில்> இப்போது எத்தனை மரங்கள் இருப்பில் உள்ளன என்று தெரியவில்லை. 

பனை தொடர்பான உற்பத்திப் பொருட்களுக்கு க்குவிக்க கை செய்ய வேண்டும்.  இல்லை என்றால் பனை இனி மெல்ல அழியும் என்ற சூழல் உருவாகும்.

ஆனால் சமீபகாலமாக பனைமரங்கனை மீண்டும் நடும்பணியை தமிழ்நாட்டின் இளைஞர்கள் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.  அரசும் இதற்கு ஆவன செய்துள்ளது..  பனைமரம் மட்டுமல்ல இன்னும் பல மரங்கள் சார்புடைய தொழில்களை க்குவிக்க வேண்டும்.  இதனால் மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

புயலும் வெள்ளமும் புறப்பட யோசிக்கும்

இதனால் சூழலில் இருக்கும் கரியமிலவாயுவை மரங்கள் உறிஞ்சி தனக்குள்ளே சேமித்து வைத்துக்கொள்ளும். காலநிலை  மாற்றத்தினால் ஏற்படும் புயலும் வெள்ளமும் புறப்பட்டுவர யோசிக்கும்.

கிராமப்புற பொருளாதாரம் மேம்படும்.  சுற்றுச் சூழல் மேம்படும்.  பருவக்கால மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

சென்னைப் பல்கலைக்கழக நூலகம்

சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் ஒலைச் சுவடி நூலகம் ஒன்று உள்ளது.  முதல் முறையாக அதில் நுழைந்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அதன் பிறகு நான் அங்கு பலமுறை சென்றிருக்கிறேன்.  தமிழறிஞர் டாக்டர் மீ. ராNஐந்திரன் அப்போது அங்கு பணி செய்து கொண்டிருந்தார். 

நண்பர் ராஜேந்திரன் தற்போது கணையாழி பத்திரிக்கையின் ஆசிரியராக உள்ளார்.  அதற்கும் முன்னதாக அவர் தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியவர்.  ஒரியண்டல் மேனுஸ்கிரிப்ட் லைப்ரரி என்பது அதன் பெயர்.  மிகவும் பழமையான பனை ஒலைச் சுவடிகளை நான் அங்கு பார்த்திருக்கிறேன். 

பக்கோடா வாங்க உதவிய ஓலைச்சுவடிகள்

அதேபோல எங்கள் வீட்டிலும் நிறைய ஒலைச் சுவடிகள் இருந்தன.  என்னுடைய தாய்வழி தாத்தாக்கள் ராஜாக்களிடம் வைத்தியர்களாக இருந்தவர்களாம். அவர்கள் வைத்திருத்து ஒலைச் சுவடிகள் மிச்ச சொச்சமாக கறையான் அரித்தும் அரிக்காமலும் நிறைய இருந்தன.

என் தந்தை அவற்றை எல்லாம் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் பல ஆண்டுகளாக மாற்றி எழுதிக் கொண்டிருந்தார்.  அவற்றைப் பற்றிய மதிப்பு தெரியாததாலும்>  நாங்கள் சிறுவர்களாக இருத்தாலும் அவற்றை பாதுகாக்க முடியாமல் கறையான்கள் சாப்பிடக் கொடுத்துவிட்டோம். 

என் தந்தையார் மாற்றி எழுதிய நோட்டுக்களை எல்லாம் என்னைவிட புத்திசாலியான  எனது உறவினர் ஒருவர் எடைக்குப் போட்டு பக்கோடா வாங்கி சாப்பிட்டு விட்டார் எனும் ரகசியத்தை  பல ஆண்டுகள் கழித்து நான் தெரிந்து கொண்டேன்.

சேரமன்னர்கள் அணிந்த பனைமாலை

பனையில் ஆண்பனை> பெண்பனை என்று தனித்தனி மரங்கள் உண்டு.  ஆண்பனைக்கு ஏற்றப்பனை என்று பெயர்.  பெண்பனைக்கு பெண்ணைப் பனை என்றும் பெயர்.  பெண் பனையில் மட்டுமே நுங்கு கிடைக்கும்.  ஆனால் இருபால் மரங்களிலும் பதநீர் இறக்கலாம்.

பூம்பனை> காயாப்பனை> அலகுப்பனை> கதிர்ப்பனை போன்றவை ஆண்பனையைக் குறிக்கும் பெயர்கள்.  ஆண்பனையின் பூக்களால் செய்த மாலையை சேரமன்னர்கள் அணிவது வழக்கம்.

பனை ஓலையில் தாலி

ஒரு காலத்தில் ஆண் பனையின் ஒலையை திருமணத்தின்போது பெண்ணிற்கு தாலியாகக் கட்டும் வழக்கம் இருந்தது. அதனால் அந்த பனையை தாலிப்பனை என்று அழைப்பார்களாம்.

ன்றில் என்றும் கிரவுஞ்சம் என்றும் சொல்லும் நெய்தல் நிலப்பறவை (PLEGADIS FALCINELLUS) பெண்பனையைத் தேடிப் பிடித்து கூடு கட்டுமாம்.  இவை தவிர தூக்கணாங் குருவிகளும் பனையில் கூடுகட்டும்.

மரமேறி சமூகம்

ஒரு சமூகமே இந்த மரத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளது.  பனையேறி> மரமேறி> கிராமணி> மற்றும் நாடார் என்றழைக்கப் படும் அனைத்துமே> இந்த மரத்திலிருந்து கிடைக்கும்> பதனீர்> நுங்கு> கருப்பட்டி எனும் வெல்லம்> பனங்கற்கண்டு> பனம்பழம்> பனங்கிழங்கு> மற்றும் இதர பனைப் பொருட்களை மையமாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள்.  இந்தத் தொழில்களை மேம்படுத்த போதுமான அரசின் உதவி இல்லாததால்> இவை அனைத்தும் நசிந்தும் மறைந்தும் வருகின்றன.

தமிழ்நாட்டின் அரசு மரமாக அறிவிக்கப்பட்ட மரம்.  பனைவேரி அம்மன்> மற்றும் தாலவிலாசினி என்னும் மரங்களுக்கான கடவுளாக  தமிழ் மக்களால் வணங்கப்பட்டது.

குறிப்பாக கிழக்கு ஆசியாவில் இந்தியா> நேப்பாளம்> ஸ்ரீலங்கா> மியான்மர்> தாய்லாந்து> மலேசியா> இந்தோனேஷேசியா> நியூகினியா ஆகிய நாடுகளில் பனை பரவலாகப் பரவியுள்ளது.

பங்ளாதேஷ், கம்போடியா> லாவோஸ், வியட்நாம்> பிலிப்பைன்ஸ்> பாகிஸ்தான்> மற்றும் சீனாவின் சில பகுதிகளிலும் பரவியுள்ளது.

மணல் சாரி> இருமண்பாடான மண்> களிமண்> அமில மண்> மற்றும் காரமண் என்று பலவகை மண்ணிலும் வளரும்.  நிழலில் வளராது.  பனங்கொட்டைகளை வெதுவெதுப்பான தண்ணீரில் 24 மணிநேரம் ர வைத்து விதைப்பதால் முளைப்புத் திறன் கூடுதலாகும்.    ஆனால் விதைத்த பனை விதைகள் முளைக்க குறைந்தபட்சம் 12 மாதங்கள் ஆகும்.

ஆசியாவில் முதலிடம்:

211 புள்ளிகளுடன் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுடன் சிய நாடுகளிலேயே முதலிடத்தில் உள்ளது> இந்தியா ! பிரச்சினைகள் இல்லாத அல்லது குறைவான பிரச்சினைகளுடன் இருக்கும் நாடு பூடான் !

லகத்திலேயே பனை மரத்தில் ஆராய்ச்சி செய்து அதில் ஒரு எஸ். வி. பி. ஆர். 1  என்ற ஒரு குட்டைப் புனையை வெளியிட்டது தமிழ்நாடு தான்.  இது நடந்தது 1992 ம் ஆண்டு.  இந்த குட்டைப் பனை ரகத்தின் ஒரு மரம் ஒர் ஆண்டில் 298 லிட்டர் பதநீரும் 144 கிராம் பனஞ் சக்கரையும் தரும்.  இது பற்றிய செய்தியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வலைத்தளத்தில் பார்க்கலாம்.

கொசுறு

 உலகத்திலேயே இதுதான் பனைக்கான முதல் ஆராய்ச்சி நிலையம் என்ற செய்தியை> ஒலிப்பதிவு செய்து மதுரை வானொலியில் ஒலிபரப்பும் பெருமை எனக்குக் கிடைத்தது.  அரிதான ஆராய்ச்சி.  ரிதான ஆராய்ச்சி நிலையம் !

கூடுதல் தகவலுக்கு..

WWW.EN.M.WIKIPEDIA.ORG / BORASSUS FLABELLIFER

WWW.FLOWERSOFINDIA.NET / PALMYRAH PALM – BORASSUS FLABELLIFER

WWW.USES.PLANTNET.PROJECT.ORG / BORASSUS FLABELLIFER

WWW.INDIANBIODIVERSITY.ORG / BORASSUS FLABELLIFER

WWW.PALMPEDIA.NET / BORASSUS FLABELLIFER

WWW.FORESTTREESAGROFORESTRY.ORG / BORASSUS FLABELLIFER   

                         99999999999999999999999999999                    

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...