Tuesday, June 20, 2023

OSAGE ORANGE A TREE OF BOW AND ARROW 69. வில் அம்பு செய்த மரம் ஓசேஜ் ஆரஞ்சு

      

வில் அம்பு செய்த மரம்
ஓசேஜ் ஆரஞ்சு


ஓசேஜ் ஆரஞ்சு மரம், நேட்டிவ் அமெரிக்கன்ஸ் என்னும் அமெரிக்க பழங்குடிகள் வில் அம்பு செய்த மரம். இந்த முரட்டு முள் மரத்தைப் பயன்படுத்தி வேலிகள் அமைத்தார்கள். கிரவுண்ட் ஸ்லாத் என்னும் வட அமெரிக்காவின் பழங்கால ராட்சச விலங்குகளுக்கு இதன் பழங்கள் உணவாக இருந்து. 1934 ம் ஆண்டு வட அமெரிக்காவில் மண்அரிப்புத் தடுப்பு நடவடிக்கையாக  நடப்பட்ட 220 மில்லியன்  மரங்களில் பிரதானமா பயன்படுத்தப்பட்டது இந்த மரம்தான். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டுக்கு பிடித்தமான மரம்.

தமிழ்ப்பெயர்: ஓசேஜ் ஆரஞ்சு (OSAGE ORANGE)

பொதுப் பெயர்கள்: ஒசேஜ்; ஆரஞ்சு, ஹார்ஸ் ஆப்பிள், பொடார்க், ஹெட்ஜ்; ஆப்பிள், மங்கி பால், போவுட், எல்லோ வுட், மாக் ஆரஞ்ச், பாய்ஸ் டி ஆர்க்;(OSAGE ORANGE, HORSE APPLE , BODARK, HEDGE APPLE , MONKEY BALL, BOW WOOD, YELLOW WOOD, MOCK ORANGE, BOIS D ARC).

தாவரவியல் பெயர்: மேக்லூரா போமிபெரா (MACLURA POMIFERA)

தாவரக் குடும்பம் பெயர்: மோரேசி (MORACEAE)

பாய்ஸ் டி ஆர்க் என்பது ஒரு பிரென்ச் பெயர்.  இதற்கு போ வுட் என்ற பெயரும் உண்டு.  போவுட் என்றால் வில் அம்பு செய்யப் பயன்படும் மரம் என்று அர்த்தம்.

ஒரு காலத்தில் இந்த மரத்தில்தான் வில் அம்பு செய்தார்கள்.  நேட்டிவ் அமெரிக்கன்ஸ் என்று சொல்லப்படும் புராதன அமெரிக்க மக்கள் வில்அம்பு செய்வதற்காக இந்த மரத்தைப் பயன்படுத்தினார்கள்.

 வேலிகள் அமைக்க முள்கம்பிகள் பயன்படுத்துவதற்கு புதிலாக இந்த பாய்ஸ்டி ஆர்க் என்ற இந்த மரத்தைப் பயன்படுத்தினார்கள்.  இதுவும் ஒரு முள் மரம்தான். 

நம்ம உரில் சீமைக் கருவைக்கு இன்னொரு பெயர், வேலிகாத்தான்.  அதுபோல இந்தப் பகுதியின் வேலிகாத்தான்.  இயற்கைவேலி அமைக்க வேண்டும் என்றால், எங்கே பாய்ஸ் டி ஆர்க் மரம் என்றுதான் கேட்பார்களாம்>

இந்தப் பகுதி மக்கள்.  வட அமெரிக்காவைத் சேர்ந்த மரம்தான் இது.  அதிலும் குறிப்பாக டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த மரம்.   

நான் டல்லஸ் நகரின் தாவரவியல் தோட்டத்திற்குச் சென்றபோது> தோட்டத்தின் வேலிக்கு வெளியே இருந்து ஒரு மரம் என்னைக் கவர்ந்தது. என்னைவாஎன்று அழைத்தது, போனேன்.   

அந்த மரத்தில் பச்சை நிறத்தில், ஆரஞ்சுப் பழம், மாதிரியான பழங்களைப் பார்த்தேன்.  தோட்டத்திற்கு உள்ளிருந்தபடி ஒன்றிரண்டு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம். 

தோட்டத்தை விட்டு வெளியே போனதும், அந்த மரத்தைச் தெடிச் சென்றோம்.  மரத்தில் நிறையப் பழங்கள் எமரால்டு பச்சை நிறத்தில் இருந்தன.

மரத்தடியிலும் கொஞ்சம் பழங்கள் கொட்டிக் கிடந்தன.  ஆனால் என்ன மரம் என்று மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.  ஒரு பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பி வந்துவிட்டோம்.   

கிட்டத்தட்ட ஒருவாரத் தேடலுக்குப் பின்னால் இந்த மரத்தின் பெயர் சேஜ்; ஆரஞ்சு என்றும், இந்தப் பழங்களை சாப்பிட முடியாது> வேலிகளாக வளர்க்க ஏற்ற முள் மரம் என்பதும் தெரிந்தது.   

அதன் பின்னர்தான் எனக்குத் தெரிந்தது, தாவரவியல் தோட்டத்தில் பாய்ஸ் டி ஆர்;க் என்ற பெயரில் நான் தெரிந்து கொண்டதும் வேலிக்கு வெளியே பார்த்ததும் ஒரே மரம்தான் என்று.    

இதன் மரங்கள் உறுதியானவை.  கடினத்தன்மை உடையவை.  எடை அதிகமானவை.  வெகு நாட்களுக்கு உழைக்கும். மண்ணில் புதைப்பதனால் மற்ற மரங்கள்போல சுலபமாக மக்காதவை

இதன் வயிரப் பகுதி மரம் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.  புதிய மரங்கள் வெட்டிய பின் சிறிது நேரம் ஆனால் அவை காவி நிறமாக மாறும்.  இந்த மரங்களை வேலிக்கால்களாக (FENCE POSTS) அதிகம் பயன்படுத்துகிறார்கள்.   

பழங்கள் உருண்டையாக,  பெரிய ஆரஞ்சு பழங்கள் மாதிரியே ஆனால் பச்சை நிறத்தில் இருக்கும்.  பழங்களைத் தொட்டுப் பார்த்தால் கெட்டியாக இருக்கும். 

பழத்திற்குள் சிறிய விதைகள் நிறைய இருக்கும்.  இதற்கு குதிரை ஆப்பிள் மற்றும் வேலி ஆப்பிள் (HORSE APPLE, HEDGE APPLE) என் பெயர்களும் வழங்குகின்றன.    

ஆண், பெண் பூக்கள் தனித்தனியான மரங்களி;ல் பூக்கும். ஆண் பூக்கள்.  சிறிய,  நீளமான பூங்கொத்துக்களாகப் பூக்கும்.  பெண் மரங்களில்,  பெண் பூக்கள்,  சிறிய உருண்டையாக இலைக்கணுக்களில் பூக்கும்.    

இதன் இலைகள் சாதாரணமானைவ.  3 முதல் 5 அங்குல நீளமும் 2 முதல் 3 அங்குல அகலமும் இலை நுனி கூர்மையாகவும்> இலைகளின் மேற்பகுதி அடர்த்தியான பச்சை நிறத்திலும் அடிப்பகுதி வெளிர்பச்சை நிறத்திலும் இருக்கும்

இலைகள் உதிர்வதற்கு முன்னால் பளிச் சென்ற மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்.  மரத்தின் சிம்புகளில், மொத்த மொத்தமான முட்கள் இருக்கும்.  சிம்புகளை உடைத்தால் பிசுபிசு வென கைகளில் ஒட்டும்படியான வெள்ளைநிறப் பால் வடியும்.    

இந்த மரங்கள் நடுத்தரமான அளவில் வளரும் மரம்.  நன்கு வளர்ந்த மரங்கள் 40 அடி உயரமும், 3 அடி குறுக்களவும் கொண்ட முரட்டு மரமாக வளரும் மரத்தின் தலைப் பகுதி நன்கு பரந்து வளரும்.    

ஓஹையோ மற்றும் மிசிசிப்பி பள்ளத்தாக்குகளில் ஒசேஜ்; நேன் என்னும், பழங்குடி மக்கள் வசிக்கும் ஓசேஜ் தேசம் இருந்தது.  அங்கிருந்துதான் இந்த மரம்

அமெரிக்காவின் பிற பகுதிகளுக்குப் பரவியது.  அதனால்தான் அதன் பெயர் ஒசேஜ்; ஆரஞ்சு என்னும் பெயர் பெற்றது.    

நியூ மெக்சிகோ மற்றும்  டெக்சாஸ் மாநிலத்தின் மேற்குப் பகுதிக்கு கொம்த்சீரியா என்று பெயர்.  இந்தப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட அமெரிக்கன் இண்டியன் கள் வசித்து வந்தார்கள்.

அந்த காலகட்டத்தில் வட அமெரிக்கா முழுவதிலும் சுமார் 50 க்கும மேற்பட்ட அமெரிக்கப் பழங்குடிகள் வசித்து வந்தார்கள்.  அவர்கள் எல்லோருமே இந்த ஒசேஜ்; ஆரஞ்ச் மரத்தை வில்அம்பு செய்வதற்காகப் பயன்படுத்தி வந்தார்கள். 

அதனால்தான் இந்த மரத்திற்கு போ வுட் என்னும் பெயர் வந்தது.  அதுபோல ஒசேஜ்  தேசத்தின் பழங்குடிகளின் (OSAGE NATIVE AMERICANS) பெயர்தான் இந்த ஒசேஜ்

கிரவுண்ட் ஸ்லாத் ராட்சச விலங்கு    

வடஅமெரிக்காவின் மிகவும் பழமையான சரித்திரத்தோடு நீண்  நெடிய தொடர்புடையது.  கிரவுண்ட் ஸ்லாத் என்று சொல்லப்படும் பழங்கால மிகப்பெரிய விலங்குகள் இதனை சாப்பிடும் வழக்கம் இருந்து வந்தது.

கிரவுண்ட் ஸ்லாத்என்னும் ராட்சச விலங்குகள் வட மற்றும் தென் அமெரிக்காவில் சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக  சொல்லுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அந்த விலங்குகள் எல்லாம் அழிந்து அருகிப் போய்விட்டன.  

1934 ம் ஆண்டு வட அமெரிக்காவில் 29900 கி.மீ. தொலைவிற்கு ஷெல்டர் பெல்ட் என்னும் மண்அரிப்புத் தடுப்பு நடவடிக்கையாக 220 மில்லியன்  மரங்கள் நடப்பட்டன. இதில் பிரதானமான மரமாகப் பயன்படுத்தப்பட்டது நமது ஓசேஜ்; ஆரஞ்சு மரம்தான். 

நியூடீல்இயற்கைவள பாதுகாப்பு திட்டம் 

உலகத்திலேயே மண்அரிப்பு, மரம் நடுதல்> வன உருவாக்கம்> வனங்களை மறு சீரமைப்பு செய்தல், நீர்வடிப்பகுதி மேம்பாடு போன்ற இயற்கை வளப் பாதுகாப்பு பணிகளுக்கு முன்னுரிமை தந்து செயல்படுத்திய ஒரே அரசியல் தலைவர், பிராங்ளின் டிலானோ ரூஸ்வெல்ட்.  அவர் செயல் படுத்திய அந்தத் திட்டத்தின் பெயர் நியூடில்.

அமெரிக்காவை காப்பாற்றிய திட்டம்   

இந்த நியூடில் திட்டம் குறிப்பாக விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள், மற்றும் முதியோர்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட உலகின் புரட்சிகரமான திட்டம்.  கிரேட் டிப்ரன் னிலிருந்து அமெரிக்காவை காப்பாற்றிய புதுமையான திட்டம் இது.    

முள் இல்லாத இதன் ஆண்பால் மரத்தை அழகு மரமாக வளர்த்துள்ளார்கள்.  அதுமட்டுமல்ல> இத்தாலி, யூகேஸ்லேவியா, ரோமானியா,  கென்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இந்த மரங்களை சாகுபடி செய்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன.

FOR FURTHER READING

WWW.TEYASTREEFD.TAMU.EDU  – “OSAGE – ORANGE ‘ MACLURA POMIFERA’.

WWW.EN.WIKIPEDIA.ORG “MACLURA POMIFERA”

WWW.BRITTANICA.COM / OSAGE – ORANGE / DESCRIPTION & USES

WWW.SRS.FS.USDA.GOV MACLURA POMMIFERA (RAF – SOUTHERN RESEARCH STATION USDA)

WWW.SCIENCE DIRECT.COM /  MACLURA POMMIFERA

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...