Tuesday, June 20, 2023

NUTRITIOUS FRUIT CEYLON OLIVE 58. ஊட்டச்சத்து மிக்க பழமரம் சிலோன் ஆலிவ்

 

பழமரம் சிலோன் ஆலிவ் 

சிலோன் ஆலிவ் மரம், இது பாரம்பரியமாக ஸ்ரீலங்காவிற்கு சொந்தமான மரம், இந்தியா, இந்தோசைனா, மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் பரவியிருக்கும் பழமரம், இந்த மரத்தின் பழங்கள் பசுமையாக இருக்கும்>  ஊட்டச்சத்து மிக்க பழம்,  அதுமட்டுமல்ல, அது மருத்துவ குணங்கள் கொண்டதும் கூட,  இந்த பழங்களில் கூடுதலான மாவுச்சத்து மற்றும் சர்க்கரைச்சத்தும் அடங்கியுள்ளது> சிலோன் ஆலிவ் மரம் உத்ராட்சம் அல்லது ருத்ராட்சம் என்றும் தாவரவகையைச் சேர்ந்ததுதான்.  அந்த மரமும் இந்த தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான்.  ஆனால் இது வேறு மரம். இதன் கொட்டைகளை ருத்ராட்சம் மாதிரி பயன்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

தமிழ்: காரை, ஒலன் காரை, காரமரம், லங்காரை, ருத்ராட்சம் (KARAI, OLAN KARAI, KARAMARAM, RUDRAKSHAM)

பொதுப் பெயர்கள்: சிலோன் ஆலிவ் ட்ரீ,  ஒயில்ட் ஆலிவ் ட்ரீ (CEYLON LIVE TREE, WILD OLIVE TREE)

தாவரவியல் பெயர்: எலியோகார்பஸ் செராட்டஸ் (ELAEOCARPUS SERRATUS)

தாவரக்குடும்பம்: எலியோகார்ப்பேசி (ELAEOCARPACEAE)

தாயகம்: ஸ்ரீலங்கா

பலமொழிப் பெயர்கள்:

மலையாளம்: அவி, அவில், காரமாவு, நல்ல காரா, பெரின்காரா, பெருங்காரா,ருத்ராட்சா (AVI, AVIL, KARA MAVU, NALLA KARA, PERIN KARA, RERUNG KARA, RUDRAKSHA)

தெலுங்கு: அத்தகுஞ்சி, பீகாடா மரா (ATHAKUNJI, BECADAMARA)

அசாமிஸ்: ஜோல் பாய் (JOLPAI)

பெங்காலி: ஜோல் பாய் (JALPAI)

மணிப்பூர்: கோர்பான் (CHORPHON)   

இந்தியா, இந்தோசைனா, மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் பரவியிருக்கும் பழ மரம் இந்த சிலோன் ஆலிவ் மரம், ஆனால் இது பாரம்பரியமாக ஸ்ரீலங்காவிற்கு சொந்தமான மரம்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது      

இந்த ஆலிவ் மரத்தின் பழங்கள் பசுமையாக இருக்கும்.  முட்டை வடிவத்தில் இருக்கும்.  அது ஊட்டச்சத்து மிக்க பழம்.  அதுமட்டுமல்ல> அது மருத்துவ குணங்கள் கொண்டதும் கூட.  இந்த பழங்களில் கூடுதலான மாவுச்சத்து மற்றும் சர்க்கரைச்சத்தும் அடங்கியுள்ளது. 

இது மலச்சிக்கலுக்கு அற்புதமான மருந்து.  இந்த சிலோன் ஆலிவ் பழங்கள் ஸ்ரீலங்காவின் பிரபலமான ஊறுகாய். 3 முதல் 5 விதைகள் உள்ள இந்தப் பழங்கள் உருண்டை மற்றும் முட்டை வடிவத்தில் இருக்கின்றன.  பழங்களில் காவிநிற விதைகள் இருக்கும்.

மரங்கள் பரவியிருக்கும் இடங்கள்      

இந்தியாவில் கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, அசாம், மணிப்பூர்மற்றும் நேப்பாளம், பங்ளாதேஷ், ஸ்ரீலங்கா, இந்தோசைனா, மியான்மர், மலேசியா ஆகிய இடங்களிலும் இந்த மரங்கள் பரவியுள்ளன.

சிலோன் ஆலிவ் மரங்கள் 18 மீட்டர் வரை உயரமாக வளரும்.  பசுமை மாறாத இந்த மரங்கள்> கடல்மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் வளரும்.  மரத்தின் பட்டைகள் வழுவழுப்பாக இருக்கும்.  காவி நிறமாக இருக்கும்.  பட்டை நீக்கினால் உட்புற மரம்> அழகான ஆரஞ்சு நிறமாக இருக்கும்.

பூக்கள் சிறியதாக இருக்கும்.  வெண்மை நிறமாக இருக்கம்.  ஒற்றைக் கிளைகள் கொண்ட பூங்கொத்துக்களில் பூக்கும்.

இது ருத்ராட்சம் அல்ல      

சிலோன் ஆலிவ் மரம் உத்ராட்சம் அல்லது ருத்ராட்சம் என்றும் தாவரவகையைச் சேர்ந்ததுதான்.  அந்த மரமும் இந்த தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான்.  ஆனால் இது வேறு மரம். அதன் தாவரவியல் பெயர் எலியோகார்யஸ் கேனிட்ரஸ் (ELAEOCARPUS SERRATUS).  இந்த மரங்கள் பெரும்பாலும் இமயமலைப் பகுதிகளில் உள்ளன.  தென்னிந்தியாவில்> வை நீலகிரி> மைசூர் ஆகிய இடங்களில் மட்டும் உள்ளன.

தமிழில் என்ன பெயர் ?    

ஆங்கிலத்தில் சிலோன் ஆலிவ் என்றாலும் தமிழில் இதற்கு பல பெயர்கள் உண்டு.  காரை, ஒலன் காரை, காரமரம், உலங்காரை, மற்றும் ருத்ராட்சம் என்றும் சொல்லுகிறார்கள்.  உத்தராட்சம் என அழைத்தாலும் ருத்ராட்சம் என்பது வேறு மரம். இது வேறு மரம்.  ஆனால்

இரண்டும் எலியோகார்ப்பேசி என்றும் ஒரே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை.  அதனால் உத்ராட்சம் என்றதும் குழம்ப வேண்டாம்.  

FOR FURTHER READING

WWW.EN.WIKIPEDIA.ORG/ELAECARPUS SERRATUS

WWW.BIOTIK.ORG/ELAECARPUS SERRATUS.

WWW.FLOWERSOFINDIA.NET/ CEYLON OLIVE

WWW.INDIABIODIVERSITY.ORG/ ELAEOCARPUS  SERRATUS.

WWW.FRLHT.ORG/ PLANT DETAILS OF ELAEOCARPUS SERRATUS.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

   

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...