Friday, June 16, 2023

NUTMEG 22. ஜாதிக்காய்

 

ஆண்மை பெருக்கும் ஜாதிக்காய்


ஜாதிக்காய்
, வெப்பமண்டலத்தில் வளரும் பசுமைமாறா மரம்> பீசா பர்க கூட மணம் கூட்டலாம், உணவுப் பண்டங்களை உண்ணத் தூண் பயன்படுத்தும் இயற்கை மணமூட்டி, ஆண்மைக்குறைவு உட்பட அஞ்சிபத்து நோய்களையும் அம்சமாக குணப்படுத்தவும், ராஜாராணி காலத்திலிருந்து பாலுணைர்வுத் தூண்டியாக ஆண்டி முதல் அரசன் வரை பயன்படுத்தியும் வந்துள்ள மூலிகை என்பது ஊரறிஞ்ச ரகசியம்.

பொதுப் பெயர்கள்: நட்மெக் (NUTMEG)

தாவரவியல் பெயர்: மிருஸ்டிகா பிராக்ரன்ஸ் (MRISTICA FRAGRANS)

தாவரக் குடும்பம் பெயர்: மிருஸ்டிகேசி (MRISTICACEAE)

தாயகம்: இந்தோனேசியா

ஜாதிக்காய் மரத்தின் பிறமொழிப் பெயர்கள்

ஸ்சாமிஸ்: ய்பால் (JAIPHOL)

பெங்காலி: ட்டிப்பாலா (JATIPHALA)

குஐராத்தி: ஜெயபாலா (JAYAPHALA)

இந்தி: த்தி-பால் (JATI-PHAL)

கன்னடா: க்காயி (JAKAYI)

காசி: ய்பால் (JAIPHOL)

மலையாளம்: தி>  ஜாதிக்கா (JATHI, JATHIKKA)

கொங்கணி: யபால் (JAYAPHOL)

மணிப்புரி: ய்பால் (JAYPHAL)

ராத்தி: ட்டிபாலா> ஐயபாலா (JATIPHALA, JAYAPHALA)

நேப்பாளி: ஜய்பால் (JAYPHAL)

ஓரியா: ய்பாலா (JAIPHALA)

சமஸ்கிருதம்: ட்டி பாலா (JATIPHALA)

தெலுங்கு:ஜாஜிக்காயா (JAJIKHAYA)

உருது: யபால் (JAYAPHAL)

பசுமை மாறா மரம்    

ஜாதிக்காய் மரம்> வெப்பமண்டலத்தில் வளரும் பசுமைமாறா மரம்.  சுமார் 65 அடி உயரம் வளரும் நடுத்தரமான மரம்.  மரத்தில் பட்டை.  சாம்பல் நிறம் கலந்த கருமை நிறமாக இருக்கும். 

இதன் இலைகள் நீள் வட்டமாக கூர்மையா வேல் போல இருக்கும்.  பூக்கள் கொத்தாக குடைபோல பரந்திருக்கும்.  சந்தன நிறத்தில் வாசத்துடன் இருக்கும் பழங்கள் சக்கரை பாதாமி (APRICOT) போல இருக்கும். 

பழத்தின் தசை கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.  ஊடாக ஒற்றை விதை இருக்கும். உலர்த்திய ஜாதிக்காய்கள் சாம்பல் நிறம் கலந்த காவிநிறத்தில் இருக்கும்.

உணவுப் பொருட்களுக்கு மணம் கூட்டும்

விதையுடன் கூடிய ஜாதிக்காய் பலவிதமான உணவுப் பண்டங்களுக்கு சாப்பிடத் தூண்டும் படியான மணம் சேர்க்க பயன்படும்

அடுமனைப் பொருட்கள் என்னும் கேக்குகள்> அசைவ உணவு வகைகள்> சாசேஜ்Pகள், சைவ உணவு வகைகள்> பானங்கள் என அனைத்;து உணவு வகைளிலும் மணம் கூட்ட இதனைப் பயன்படுத்தலாம்.

மருத்துவப் பயன்கள்

ஜாதிக்காய் பலநூறு ஆண்டுகளாக இந்தியாவில் பவிதமான காரியங்களுக்கு மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ராஜாராணி காலத்தில்> முக்கியமாக பாலுணர்ச்சிக் தூண்டியாக பயன்படுத்தப் பட்டது. 

ஆண்மைக் குறைவு

அது மட்டுமின்றி> தேமல்> படை போன்ற தோல் வியாதிகள்> அம்மையினால் ஏற்படும் கொப்புளங்கள்> ஆண்மைக் குறைவு> விந்து நீர்த்துப் போதல்> நரம்புத் தளர்ச்சி> விந்தில் உயிரணுக்கள் குறைந்து போதல்> தசைப் பிடிப்பு தசை வலி> மூட்டுவலி> பக்கவாதம்> வயிற்றுவலி> வயிற்று உப்புசம் என பலவிதமான நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கொண்டது ஜாதிக்காய்.

தொழில்சாலைகளில் ஜாதிக்காய்  

அத்தியாவசிய எண்ணெய்கள் தயாரிக்கும் தொழில்> அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் தொழில்> மற்றும் மருந்துகள் தயாரிக்கும் தொழில்சாலைகளில் ஜாதிக்காய் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

இந்தொனேசியாவில் மொலுக்காய் தீவுகள்      

இந்தோனேசிய நாட்டின் மொலுக்காய் தீவுகள்தான் ஜாதிக்காய் மரத்திற்கு சொந்த ஊர்.  மொலுக்காய் தீவுகளுக்கு வாசனைத் திரவியத் தீவுகள் என்ற செல்லப் பெயரும் இதற்கு உண்டு. 

சீனாவில் குவாங்டாங்> யுன்னான் ஆகிய பகுதிகள்> டைவான்> இந்தோனேசியா> மலேசியா> கிரீனெடா> இந்தியாவில் கேரளா> ஸ்ரீங்கா> தென் அமெரிக்கா ஆகிய இடங்களில் ஜாதிக்காய் மரங்கள் பரவலாக உள்ளன.

ஜாதிக்காய் வெண்ணெய்      

ஜாதிக்காய் மற்றும் ஜாதிப்பத்ரியில் 7 முதல் 14 சதம் எண்ணெய் உள்ளது.  இதனை ஜாதிக்காய் வெண்ணெய் (Nருவுஆநுபு டீருவுவுநுசு) என்று சொல்லுகிறார்கள்.  உணவுப் பொருட்களில் நறுமணம் கூட்ட பயன்படுத்துகிறார்கள்.  அத்துடன்> சோப்பு> போன்ற இதர அழகுசாதனப் பொருட்களுக்கு மணம் ஊட்டவும் இந்த ஜாதிக்காய் வெண்ணெய் பயனாகிறது.    

வெல்வேறு நாடுகளில் வெவ்வேறு ஜாதிக்காய்    

பலவிதமான மரங்களிலிருந்து கிடைக்கும் பழங்கள் மற்றும் விதைளை ஜாதிக்காய் என்று அழைக்கிறார்கள்.  உதாரணமாக மெய்க்காவில் சொல்லும் ஜாதிக்காய் வேறு> பிரேசிலில் சொல்லும் ஜாதிக்காய் வேறு. 

ஜாதிக்காயின் சரித்திரம்      

உலகிலேயே ஜாதிக்காய் உற்பத்தி செய்யும் ஒரே இடமாக இருந்தது இந்தோனேசியாவின் பேன்டா தீவுகள். இது இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக இருந்த 11 தீவுகளின் தொகுப்புதான் இந்த பேன்டா தீவுகள். 

இந்தியப் பெருங்கடலில் குறிப்பிடத்தகுந்த வியாபார மையமாக இருந்தது மலூக்கா.  அதற்குக் காரணமாக இருந்தது அங்கிருந்து வியாபாரம் ஆன ஜாதிக்காய். 

ஐரோப்பிய நாடுகளின் சமையல் கூடங்களில்> ஜாதிக்காய் அரசாட்சி செய்த காலகட்டம் அது. 

விலை வானத்தை உரசியது

ஜாதிக்காயின் விலை வானத்தை உரசிய வண்ணம் இருந்தது.  அந்த ஜாதிக்காய் வியாபாரத்தைக் தன் வசப்படுத்த> மலூக்காவின் மீது படையெடுத்து கைப்பற்றினார் போர்ச்சுகலின் மன்னர். 

இது நடந்தது 1511 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்.  ஆனாலும் அந்த வியாபாரத்தை அவர்களால் முழுமையாகக் கைப்பற்ற முடியவில்லை.  1621 ம் ஆண்டு> இந்தியாவுடன் வியாபாரம் செய்ய உருவாக்கப்பட்ட டட்ச் ஈஸ்ட் இண்டியா கம்பெனிதான் பேண்டன்ட் உரிமையாளர்கள்> அத்தனை பேரும் கொல்லப்பட்டனர். 

இரண்டாவது உலகப்போர் வரை டச்சுக்காரர்கள் வசம் இருந்தது இந்த ஜாதிக்காய் வியாபார உரிமை.    

இன்று ஜாதிக்காயின் உலக வியாபாரத்தில் 75 இந்தோனேசியா வசமும் 20  கிரினடா நாட்டின் வசமும் உள்ளது.  ஜாதிக்காய் உற்பத்தி செய்யும் இதர நாடுகள்> இந்தியா> மலேசியா> பப்புவா நியூகினியா> ஸ்ரீலங்கா> ரிபியன் தீவுகள்> மற்றும் செயின்ட் வின்சென்ட். 

உலகில் அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகள்> ஐரோப்பா> வடஅமெரிக்கா> ஐப்பான் மற்றும் இந்தியா.   

நட்மெக் ஸ்டேட் கனெக்டிகட்

ஜாதிக்காய் வியாபாரம் சூடுபிடித்திருந்த சமயம்> அமெரிக்காவில்> சில வியாபாரிகள்> மரக்கட்டையில் ஜாதிக்காய்களை தயாரித்து விற்பனை செய்தார்களாம். 

அதனால் கனெக்டிகட்டிற்கு நட்மெக் ஸ்டேட் என்ற பெயர் ஏற்பட்டது.  ஆனால் அதற்கு வைக்கப்பட்டிருக்கும் அதிகாரப் பூர்வமான பெயர்> கான்ஸ்டிடியூவுன் ஸ்டேட் (CONSTITUTION STATE).

TO FURTHER READING

WWW.CTSSTATE LIBRARY.ORG- “CONNECTICUT’S NICK NAMES”

WWW.EN.WIKIPEDIA.ORG “MYRISTICA FRAGRANS”

WWW.BRITANNICA.COM – “NUT MEG”

WWW.EN.WIKIPEDIA.COM-“NUTMEG HISOORY”

WWW.FLOWERS OF INDIA.NET – “NUTMEG”

WWW.TAMIL.BOLDSKY.COM – “MANA AZHUTHAM MEEKKUM JAATHEKKAI” (637 WORDS)

PLEASE POST YOUR COMMENTS, REGARDS – GNANASURIA BAHAVAN D (ATHOR)

99999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...