Friday, June 30, 2023

NUNA NOW A BUSINESS TREE 184. ராவணன் தலை மரம் நுணா

 

ராவணன் தலை மரம் 
நுணா

(NUNA, INDIAN MULBERY, TOGARY WOOD, MORINDA CORIEA, RUBIACEAE )

தாவரவியல் பெயர் :    மொரிண்டா கொரியா (MORINDA CORIEA)

பொதுப்பெயர் ஃஆங்கிலப்பெயர் : இண்டியன் மலபெரி, டோகரி வுட் ஆப் மெட்ராஸ் (INDIAN MULBERY, TOGARY WOOD)

தாவரக்குடும்பம் :  ரூபியேசி   (RUBIACEAE)

தாயகம்: இந்தியா, தென் கிழக்கு ஆசியா

நுணாவின் நெருக்கமான உறவு மரம் நோனி (NONI)

இதிலிருந்து எடுக்கும் டானிக் அயல்நாடுகளில் கூட சக்கைப்போடு போடுகின்றது. உலகம் முழுவதும் விற்பனை ஆகிறது. இந்திய மரங்கள் நுணாவுக்கும் நோனிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை. நுணாவும் நோனியும் ஒன்றுதான் என்றால் நம்ப மறுக்கிறார்கள்.

ஏங்கள் தோட்டத்து மூலையில் ஒரு நுணாமரம் இருக்கிறது. நோனிபற்றி தெரிந்த நாளிலிருந்து அந்த தோட்டத்து மூலை எங்கள் பயிற்சி மையங்களில் ஒன்றாகிவிட்டது.

நுணா சூப்பு

ஒரு விவசாயிதான் எனக்கு சொன்னார். நுணா சூப்பு சூப்பரா இருக்கும் சார்.. எலும்பு சூப்பு மாதிரி இருக்கும். சாப்பிட்டுப் பாருங்க.”. நினைத்த போதெல்லாம் எங்கள் வீட்டில் நுணா சூப்புதான்.

இளசும் அல்லாத முற்றியதும் இல்லாத ஒரு பத்து இலைகளை இரண்டு மூன்று டம்ளர் தண்ணீர், கொஞ்சம் மிளகு, கொஞ்சம் நெய், அப்புறம் சூப்’  பார்முலாவில் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள். உற்சாக உணர்வுகள் பீறிட்டு எழும்.

நோனி டானிக்

நோனியை முதன் முதலில் ஹசர்காத்தா, ஐ ஐ எச் ஆர் (RUBIACEAE) தோட்டத்தில்தான்; பார்த்தேன். நோனி டானிக் உலகம் பூரா சக்கைப்போடுது தெரியுமாஎன்றார் அந்த ஆராய்ச்சி நிலையத்தின் அன்றைய இயக்குநர் மற்றும் விஞ்ஞானி டாக்டர்.சித்திரைச்செல்வன். பூவோடு சேர்ந்த நார் மாதிரி அவரோடு நான் படித்தேன் வேளாண்மைக் கல்லூரியில். ஆதற்குப் பறகுதான் நான் நோனிபற்றி நோண்டிப் பார்க்க ஆரம்பித்தேன்.

சாக்லெட்டுகளுக்கு நிறம்

இதன் பட்டை மற்றும் வேரிலிருந்து எடுக்கும் மொரிண்டேன் என்னும் சாயம் பருத்தி, பட்டு மற்றும் கம்பளித் துணிகள் மற்றும் சாக்லெட்டுகளுக்கு நிறம் தர பயன்படுத்துகிறார்கள்.

நுணா வேரிலிருந்து எடுக்கும் சாயம் சாரான்ஜிஎன்ற வியாபாரப் பெயரில் விற்பனை ஆகிறது. இதன் சாயத்தின் பெயர் மொரிண்டோன்’. சுமார் மூன்று நான்கு ஆண்டுகள் வளர்ந்த மரத்தில்தான் இந்த மொரிண்டோன் எடுக்கலாம்.இந்த சாயம் தயாரிப்பதற்காக இந்தியா முழுவதும் சாகுபடி செய்வதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் யாரும் சாகுபடி செய்வதாகத் தெரியவில்லை. மதுரை பக்கம் இதன் பெயர் ராவணன்தலை. வெட்டவெட்ட வளருவதால் அதற்கு அந்தப் பெயராம். பருத்தி விளையும் கரிசல்காடுகளில் இதனை களை மரம் என்று சொல்லுகிறார்கள். தமிழ்நாட்டில் இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் மரம் என்று நினைக்கிறார்கள்.

புளியின் பலமொழிப் பெயர்கள்

தமிழ் : நுணா, மஞ்சணத்தி, ராவணன் தலை, மஞ்சணாறி (NUNA, MANJANATHTHI, RAVANAN THALAI, MANJANARI)

இந்தி: ஆல் (AAL)

தெலுங்கு: மத்தி (MADDI)

கன்னடம்: மத்தி (MADDI)

மலையாளம்: மஞ்சபாவட்டா (MANJAPAVATTA)

ஒரியா: அச்சு, பிந்தரா (ACHU, BINDARA)

உருது: போகர் முகாலய் (BOGAR MUHALAI)

மராத்தி: அசெட்டி (ASETTI)

சமஸ்கிருதம்: பாப்பனா (PAPPANA)

மூட்டுவலி

சக்கரை நோயைக் கட்டுப்படுத்தல், ரத்தத்தில் சக்கரை அளவைக் குறைத்தல், உடலின் இரும்பு சத்து கிரகிக்கும் சக்தியை அதிகரித்தல், பல் ஈறுகளின் ரத்தக் கசிவை தடுத்தல், வயிற்றில் ஏற்படும் புண்களை குணப்படுத்துதல், ஜீரணக்கோளாறுகளை சரி செய்தல், மூட்டு வலியினை குணப்படுத்துதல், எலும்புகளை வலுப்படுத்துதல், ஈரல் மற்றும் மண்ணீரல் செயல்பாடுகளை சீர் செய்தல், புற்று நோயை வராமல் தடுத்தல், மலச்சிக்கலைத் தடுக்கும், மிகக் குறைவான கலோரிச் சத்து உடையதால் இது உடல் எடையைக் குறைக்க உதவும்.

இதன் இலைச் சாந்தைப் மூட்டுக்களில் பூசினால்  மூட்டு வீக்கம், மூட்டு வலி, மூட்டுவாதம் ஆகியவை குணமாகும். இலையிலிருந்து தயாரிக்கும் டிகாக்ஷனை குடிப்பதன் மூலம் வயிற்றில் இருக்கும் குடற் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

மேஜை நாற்காலிகள்

இலை தழை விளை நிலங்களுக்கு தழை உரமாகும.; பட்டை தோல்பதனிட டேனின் தரும். சிறுவர்கள் சுவைக்க பழம்  தரும்.  சமைத்து சாப்பிடகாய்கள் தரும்.கடைசல் வேலைகளுக்கும், மரக்குவளைகள்மரத்தட்டுகள், பொம்மைகள் , மேஜை நாற்காலிகள், தறி நெசவிற்கு உதவும்  பாபின்  செய்ய, காகிதம் தயாரிக்க, அடுப்பெரிக்க எல்லாவற்றிற்கும் உதவும். சாலைகளில் இருக்கும் மரங்கள் காற்றைத் தடுத்து, தூசியினை வடிகட்டி சுற்றுச் சூழலுக்கு உதவும்.      

கரிசல் நிலங்களில் தன்னிச்சையாக வளரும். மணல்சாரி வறண்ட மண் இதற்கு மிகவும் பொருத்தமானது.

 A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...