வனமீட்பு மரம் ஆல்டர் |
ஆல்டர் மரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு
அதிகம் அறிமுகமான மரம். நேப்பாளத்திற்கு ரொம்ப நெருக்கமான
மரம். வனமீட்பு
வேலைகளுக்கு உதவும் மரம். நாட்டு மருந்துகள்
செய்ய. கட்டுமானச் சாமான்கள் தயாரிக்க, கயிற்றுப்பாலங்கள் அமைக்க, பட்டைகளில் சாயம் எடுக்க,
தோல் பதனிட, ராபின் எனும் கருஞ்சிட்டுக்கள் போன்ற பறவைகளுக்கு பழங்கள் பரிமாற, என பல வகைகளில் பயன்தரும் மரம் அல்டர்.
தமிழ்ப்பெயர்: ஆல்டர் மரம்
பொதுப் பெயர்கள்: நேப்பாள் ஆல்டர், இமாலயன் ஆல்டர்> இண்டியன் ஆல்டர், நேப்பாள் பிளாக் செடார் (NEDAL ALDER, HIMALAYAN ALDER,
INDIAN ALDER, NEPAL BLACK CEDAR).
தாவரவியல் பெயர்: ஆல்நெஸ் நேப்பாலென்சிஸ் (ALNUS NEPALENSIS)
தாவரக் குடும்பம் பெயர்: பெட்டுலேசி (BETULACEAE)
தாயகம்: இந்தியா
மரத்தின் வகை: பலபயன் தரும் மரம்
ஆல்டர் மரத்தின் பிற மொழிப் பெயர்கள்
இந்தி: உதிஸ் (UTIS)
மிசோ: அல்னோ (ALNA)
நேப்பாளி: உதிஸ், போஷிஸ் ஸ்வா (UTHIS SWA, BOSHIS SWA)
பர்மா: மைபாவ் (MAIBAU)
வியட்நாம்: டாங்க் குவான் சு,
டாங்க் குவா மு, டாங்க் போ மோ (TONG QUAN SU> TONG QUA MU, TOHG PO MO)
சைனா: மெங்க் சி கி, ஹான் டங்க்
குவா (MENG-ZI-QI-MU,
HAN-DONG-GUA)
பெட்டுலேசியே குடும்பம்
பெட்டுலேசியே குடும்ப தாவரங்கள் மரங்கள்
அல்லது சிறு மரங்களாக இருக்கும்,
இலைகளின் விளிம்புகள் ரம்பம் போல இருக்கும், ஒரே
மரத்தில் ஆண்பெண் பூக்கள் தனித்தனியாக இருக்கும், ஆண் பூக்கள்
நீளமான உருளையான சரங்களாக கயிறுபோல தொங்கும், பெண்பூக்கள் குட்டையான
உருளையான விரைப்பான, நேர்க்குத்தாக நிற்கும் சரங்களாக இருக்கும்.
இந்தியா பாக்கிஸ்தான் சீனா
இமயமலையில்,
பாகிஸ்தானில் தொடங்கி நேப்பாளம் மற்றும்
பூட்டான் வரை சீனாவின் தென்மேற்குப் பகுதியில்
யுன்னான் பகுதிகளில் எல்லாம் பரவியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி,
பாக்கிஸ்தான், கிழக்கு தேப்பாளம், பூடான், வட இந்தியா, தென் மேற்கு
சைனா, மியான்மர், மற்றும் இந்தோசீனா ஆகிய இடங்கள் இந்த
மரத்திற்கு சொந்தமான நாடுகள்.
ஆப்ரிக்கா, சென்ட்ரல் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியாவில் ஆகிய பகுதிகளில் இந்த மரம் பரவி உள்ளது.
கருஞ்சிட்டு குருவிகள்
ஆல்டர் பழங்களை பறவைகள் விரும்பி சாப்பிடும், அது மட்டுமல்ல இதன் கிளைகளில்
பறவைகள் விரும்பி கூடுகட்டவும் செய்யும். குறிப்பாக ராபின் என்னும்
வாலாட்டி கருஞ்சிட்டுக்களுக்கு மிகவும் பிடித்தமான மரம்.
பரவி இருக்கும் இடங்கள்
இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், அசாம், இமாச்சலப்பிரதேஷ்;, மணிப்பூர், மேகாலிய, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், உத்ராஞ்சல் ஆகிய இடங்களில் இந்த
மரங்கள் பரவி உள்ளன.
மரக்கட்டை கடினமானது என்று சொல்ல முடியாது. ஒரளவு மிருதுவான மரம். இந்த மரங்களில் பலவகையான பெட்டிகள்
செய்யலாம்.
கட்டுமான மரச் சாமான்கள்
கட்டுமான மரச்சாமான்கள் செய்யலாம்,
ஆனாலும் அதிக அளவில் விறகாகப் பயன்படுகிறது. நின்று நிதானமாக எரியும். அது மட்டுமல்லாமல்
கரிகள் தயாரிக்கவும் உதவும்.
வயிற்று உபாதைகள்
வெட்டுக்காயங்கள், மற்றும் புண்களை குணப்படுத்த இதன் இலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
இதன் வேர்களைப் பயன்படுத்தி வயிற்றுப்போக்கு> வயிற்றுக் கடுப்பு மற்றும் வயிற்று வலி
ஆகியவற்றை குணப்படுத்தலாம்.
கயிற்றுப் பாலங்கள்
இந்த மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களில் எல்லாம் இதனைப் பலவிதமாகப்
பயன்படுத்துகிறார்கள். வீடுகள்
கட்டுவதற்கு> மேஜை நாற்காலிகள் போன்ற மரச்சாமான்கள் செய்ய,
தேனீர்ப் பெட்டிகள் (TEA
BOXES) செய்ய, கயிற்றுப் பாலங்கள் (ROPE BRIDGES) அமைக்க எனப் பயனாகிறது.
நமது நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மரங்களை அடித்தூரோடு வெட்டி வேரோடு விறகாகப் பயன்படுத்துகிறார்கள்.
பிற பயன்கள்
இதன் பட்டைகளை சாயம் எடுக்கவும்; தோல் பதனிடவும் பயன்படுத்துகிறார்கள். காரணம், பட்டைகளில்
இருக்கும் அபரிதமான டேனின் சத்து. ஆல்டர்
மரப் பட்டைகளில் டானின் சத்து நிரம்ப உள்ளது.
பாரம்பரிய மருந்துகள்
உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள எல்லா மருத்துவ முறைகளுக்கும் அடிப்படை பாரம்பரிய மருத்துவ முறைகள்தான்.
அந்தந்தப் பகுதிகளில் பழங்குடி மக்களால் தங்களின் அனுபவ அறிவால்
கண்டு பிடிக்கப்பட்ட மருத்துவ முறைகள்.
அப்படி அறியப்பட்ட மூலிகைகளில் ஒன்றுதான் ஆல்டர் மரம்.
மூலிகை அகராதி
சீனாவில் ஒரு மூலிகை அகராதியை (DICTIONARY OF HERBS) உருவாக்கி உள்ளார்கள்.
அதில் கூட ஆல்டர் மரம் இடம் பெற்றுள்ளது.
சுரங்கங்களில் வாரிப்போட்ட மண்
தரம் குறைந்த மண்ணுடைய சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பில் நடுவதால் அந்த நிலங்களை இந்த மரங்கள் மேம்படுத்தும். சரிவான நிலங்களில்,
ஏற்படும் நிலச்சரிவான நிலப்பரப்பிலும் இந்த மரக்கன்றுகளை விதைக்கலாம்.
வன மீட்புப் பணிகள் (REFORRESTATION ACTIVITIES)
வேகமாக வளரும் மரம். இதன் வேர்கள் மலை சரிவுகளில் மண் அரிப்பைக் கட்டுப்படுத்தும். காற்று மண்டலத்தில் இருக்கும் தழைச்சத்தை கிரகித்து மண்ணில் நிலைப் படுத்தும்.
வடக்கு வியட்நாம் பகுதி பழங்குடி மக்கள் அழிந்து போன வனங்களை
மீட்கும் முயற்சியில் இந்த மரங்களைத்தான் முழுமூச்சாக நட்டு வருகிறார்கள்.
தண்ணீர் தேங்காத மண்
கடல் மட்டத்திலிருந்து 500 முதல் 3000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில்
இந்த மரங்கள் நன்கு வளரும்.
எரிமலையில் பகுதிகளில் இருக்கும் இருமண் பாடான நிலங்கள். களிமண் நிலங்கள், மணல் சரிவுகளிலும் நன்கு வளரும்.
நல்ல வடிகால் வசதி வேண்டும். தண்ணீர்
தேங்குவதைத் தாங்காது.
சேகரித்த விதைகளை அதிக நாட்கள் சேமிக்காமல் ஒரு ஆண்டிற்குள் விதைப்பது நல்லது.
நவம்பர் முதல் மார்ச் வரையான காலத்தில் விதைகளை சேகரிக்க வேண்டும்.
இதன் விதைகள் நுண்ணியவை. 28 முதல் 43 கிராம் எடையில் 1000 விதைகள் இருக்கும்.
FOR FURTHER READING
WWW.BSIENVIS.NIC.IN-‘NAGALAND’
WWW.SL.KU.DK/BADPORTER - SEED LEAFLET - ‘ALNUS NAPALENSIS’
WWW.EN.WIKIPEDIA.ORG-‘ALNUS NAPALENSIS’
WWW.NATURAL MEDICINAL HERBS.NET/HERB:
NETPALESE ALDER –(536 words)
A
REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment