தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் ஓடும் ஒரு முக்கியமான ஆறு. பவானி ஆற்றின் துணை ஆறு. மசினகுடிக்கு அருகில் மாயாறு என்னும் மலைப்பகுதியில் உருவாகிறது.
இந்த மசனகுடி ஊர் ஊட்டி சாலையில் அமைந்துள்ளது. மாயாறு என்ற இடத்தில் பிறக்கும் இந்த ஆற்றினை மோயாறு என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
பந்திப்பூர் தேசிய
பூங்கா (BANDHIPPUR NATIONAL PARK)
மாயாறு பிறக்கும் பகுதி என்பது தோராயமாக பந்திப்பூர் தேசிய பூங்கா மற்றும் முதுமலை சரணாலயத்திற்கு இடைப்பட்ட பகுதி.
மாயாறு
பள்ளத்தாக்கு (MAYAAR GORG)
மாயாறு சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் மிகவும் ஆழமான பள்ளத்தாக்குப் பகுதியில் ஓடுகிறது. இதனை மாயாறு பள்ளத்தாக்கு என்று சொல்லுகிறார்கள்.
மாயாரு
நீர்வீழ்ச்சி (MAYARU FALLS)
பள்ளத்தாக்குகளின் வழியாக ஓடி வரும் மாயாறு தெப்பக்காடு என்னும் இடத்தில் முரட்டுத்தனமான நீர்வீழ்ச்சியாக விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சி விழும் சத்தத்தை சிங்கம் கர்ஜிப்பதற்கு இணையாகச் சொல்லுகிறார்கள்.
பவானிசாகர் அணை (BAVANISAHAR DAM)
பவானிசாகர் அணை நீர்வீழ்ச்சியாக இறங்கும் மாயாறு சமவெளியில் பாய்கிறது, சத்யமங்கலம் அருகில் பவானிசாகர் அணை, இந்த ஆற்றினை தடுத்து நிறுத்துகிறது. இங்குதான் மாயாறு பவானி ஆற்றுடன் ஒன்று சேர்ந்து அதன் துணைநதியாக மாறுகிறது.
மூக்கூர்த்தி மலை (MUKKURTHY HILLS)
நீலகிரி மலையின் மேற்கு உச்சி ஆன மூக்கூர்த்தி மலை தான் மாயாறு நதியின் உண்மையான பிறப்பிடம். இங்கிருந்துதான் அது பைக்காரா, முதுமலை, மசினகுடி, டெங்கு மராட்டா, (PYKKARA, MUTHUMALAI, MASINAKUDI, THENGU MARATTA )ஆகியவற்றின் வழியாக பாய்ந்து இறுதியாக பவானி ஆற்றுடன் சங்கமம் ஆகிறது.
வனவிலங்குகளை பார்க்கலாம் (WILD LIFE IN MAYARU BELT)
மாயாறு தடுப்பணை மாயத்தின் மீது ஒரு தடுப்பணை கட்டி இருக்கிறார்கள் ..காட்டு மரங்கள் சூழ்ந்த இதற்கான இயற்கையான பாதை சுற்றுலா பயணிகளை கவர்ந்திருக்கிறது. மசனகுடியில் இருந்து தடுப்பணை பகுதிக்கு ஜீப்புகள் பறக்கின்றன
இந்த பயணத்தின் போது வனவிலங்குகளை பார்ப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருக்கிறது இந்த தடுப்பணை வசனகுடியில் இருந்து 9 km தொலைவில் உள்ளது தடுப்பணைக்கு போகும் வழியில் சிக்கமன் கோவில் என்ற ஒரு கோவில் உள்ளது தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிக்கமணியும் தரிசிக்க தவறவில்லை தவறுவதில்லை.
ஊட்டியில் இருந்து பக்கம் (NEAR TO OOTACAMUND)
மாயார் ஒரு சிறிய கிராமம் ஊட்டியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மசினகுடி மசனகுடிக்கு அருகில் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மாயாறு, மசனகுடி பஞ்சாயத்தை சேர்ந்த ஒரு சிறிய கிராமம்தான்.
மைசூர் முதல்
உதகமண்டலம் வரை (MYSORE TO OOTACAMUND)
ஒருமுறை மைசூரில் இருந்து ஊட்டிக்கு நான் குடும்ப சகிதமாக காரில் பயணம் செய்தேன். அந்த சமயம் முதுமலை புலிகள் சரணாலயத்தின் வழியாகத்தான் பயணம் செய்தேன்.
ஒரே ஒரு புலியாவது தென்படுகிறதா என்று பார்த்தேன். அன்று பார்த்து ஒரு பூனைகூட தென்படவில்லை.
இந்த தேசிய பூங்காவினை யுனெஸ்கோ (UNESCO HERRITAGE SITE)அமைப்பில் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறார்கள்.
பழைய பெயர் முதிரமலை (MUTHIRAMALAI
ANCIENT NAME)
இதன் பழைய பெயர் முதிரமலை. சங்ககாலத்தில் முதுமலை என்ற இந்தப் பகுதியை முதிரமலை என்று அழைத்தார்கள். வள்ளல் தன்மைக்குப் பெயர்போன குமணன் மற்றும் இளம் குமணன் ஆகிய மன்னர்கள் ஆண்டுவந்த பகுதி இது.
இந்த சரித்திர
குறிப்புகளை எல்லாம் கேள்விப்படும்போது இன்னொரு தடவை அந்த முதல் மலைக்கு போக
வேண்டும், அந்த முதிரமலையைப்
பார்க்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது
உங்களுக்கு எப்படி ?
GNANASURIA
BAHAVAN D
gsbahavan@gmail.com
No comments:
Post a Comment