நியூசிலாந்தின் காவுரி மரம் |
நியூசிலாந்து
நாட்டின் பாரம்பரியமான பெரிய மரம், இந்த காவ்ரி மரங்கள் அடர்ந்த காடுகள்தான் உலகில் டைனோசரஸ் மிருகங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய பழமையான
காடுகள், இன்றளவும் நியூசிலாந்து நாட்டின் புராதன காலத்தின் அடையாளமாக இருக்கும் மரங்கள், உலகின் உய்ரமான மரங்கள் என சொல்லப்படும் செக்கோயா
மரங்களுடன் ஒப்பிடும்படியான மரங்கள், இந்த மரத்தின் பிசின்களில் வார்னீஷும், பெயிண்ட்டும், லினோலியமும் செய்கிறார்கள்.
காவ்ரி
மரம் (KAURI
TREE)
தாவரவியல்
பெயா் – அகாத்திஸ் ஆஸ்ட்ரேலிஸ் (AGATHIS
AUSTRALIS)
தாவரக்
குடும்பம் – அரவ்காரியேசி (ARAUCARIACEAE)
பொதுப்பெயர்: நியூசிலாந்து காவ்ரி (NEWZEALAND KAURI)
சுமார் 190
மற்றும் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், ஐீராசிக் காலத்திய
மரங்கள்.
டைனோசரஸ் மிருகங்கள் ஓடிப்பிடித்து
விளையாடிய காலத்து மரங்கள் இந்த காவ்ரி மரங்கள். காவ்ரி மரங்கள் அதிகம் இருந்தால் அந்த காடுகளின் பெயா் காவ்ரி காடுகள் என்று பெயா்.
காவ்ரியின் தனிப்பட்ட
குணங்கள்
ஒரு இடத்தில் ஒரு மரத்தை நடவு செய்தால் அந்த இடத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அந்த மரத்தின் வளா்ச்சி இருக்கும்.
ஆனால் ”காவ்ரி” மரங்கள் அப்படி
அல்ல. காவ்ரி மரங்கள் வளா்ந்தால் அந்த இடத்தின் சூழல்களை மாற்றி, அங்கு புதிய தாவர இனங்கள் உருவாக வழி செய்யும். இவற்றை
தாவரவியல் அறிஞா்கள் அடிப்படைத் தாவர இனங்கள் (FOUNDATION SPECIES) என்று குறிப்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட அபூர்வமான மரம் அரிதான மரம்.
காவ்ரி
மரமும் செக்கோயாவும்
காவ்ரி
மரம் உயரமாக வளராது.
ஆனால்
அதன் விட்டம் அதன் பருமன் ஆகியவை செக்கோயா மரத்திற்கு சவால் விடும் என்கிறார்கள். அதனால்
தான் இதனை உலகின் அதிசய மரங்களில் ஒன்று என்கிறார்கள், தாவரவியல் வல்லுநா்கள்.
நியூசிலாந்தின்
நார்த் ஐலேண்ட்
நியூசிலாந்தின் ”நார்த் ஐலண்ட்” என்பது அளவில்
சவுத் ஐலண்ட்’ ஐவிட சிறியது, ஆனால் மக்கள்
தொகை அதிகம் கொண்டது நார்த் ஐலண்ட்தான். நியூசிலாந்தின் 77 சதவிகித மக்கள் இங்குதான் வசிக்கிறார்கள்.
வாய்போவா
எனும் ”காவ்ரி” காடு
நியூசிலாந்தின்
நார்த் ஐலண்டில், வாய்போவா (WAIPOUA FOREST) என்ற
”காவ்ரி” மரங்களை உடைய காடு ஒன்று உள்ளது.
இந்த
வனத்தில் ராட்சசமாக வளர்ந்துள்ள ”காவ்ரி” மரங்கள் சுற்றுலாப்
பயணிகளை வெகுவாகக் கவா்ந்துள்ளது.
1952 ஆண்டுதோறும்
லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த ”காவ்ரி” மரங்களை கண்டு வியந்து போகிறார்கள். 1952 ம் ஆண்டிலிருந்து
இந்த ”காவ்ரி” மரக்
காட்டினை காப்புக் காடாக (SANCTOARY) மாற்றி இருக்கிறார்கள்.
சமூகம்
சார்ந்த ஒரு தொண்டு நிறுவனம் இந்த காவ்ரி வனத்தை பாதுகாக்கும் மற்றும் பராமரிக்கும் பொருப்பினை ஏற்றுள்ளது. இந்த
காவ்ரி காப்பு வனம் நார்த் ஐலண்டில் சுமார் 860 ஏக்கா் பரப்பில் பரந்து விரிந்துள்ளது.
பார்க்க
வேண்டிய காவ்ரி மரங்கள்
டேனி
மஹூத்தா (TANE MAHUTA) மற்றும் டி மடுத்தா நகேரி (TE MAHUTA NGAHERE) ஆகிய இரண்டும் ”காவ்ரி” மரங்களின் ”ராஐாக்கள்” என்று சொல்லலாம். இந்த
இரண்டு மரங்களைப் பார்க்க மட்டும் ஒர் ஆண்டில் இரண்டு லட்சம், உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டு பயணிகள் இங்கு வந்து போகிறார்கள்.
உலகின்
உயரமான மரம் என்று செக்கோவா மரங்களைச் சொல்லுவதைப் போல பெரிய மரங்கள் (LARGEST TREES) என்று காவ்ரி மரங்களைச் சொல்லுகிறார்கள். இந்த
மரங்களின் வயது 2000 முதல் 3000 ஆண்டுகள் இருக்கும் என்கிறார்கள்.
வாய்போவா, வரவரா, புக்கெட்டி காடுகள்
நியூசிலாந்தில்
உள்ள வாய்போவா, வரவரா, புக்கெட்டி (WAIPOUA,
WARAWARA & PUKETI) ஆகிய
காடுகள் பிரபலமானைவை. இந்த காடுகளில் உள்ள மரங்களில் மூன்றில் இரண்டு பங்கு மரங்கள் ”காவ்ரி” தான். இவற்றில்
அதிகமான காவ்ரி மரங்கள் இருப்பது, ”வாய்போவா” காட்டில்தான்.
வாய்போவா
தொண்டு நிறுவனம்
”வாய்போவா
ஃபாரெஸ்ட் டிரஸ்ட்” என்பது ஒரு
சழூகம் சார்ந்த ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு.
இதனை
1999 ஆண்டு, இந்த ”வாய்போவா” வனத்தை
பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டது. இது
அரசாங்கத்தின் இயற்கை வனப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து செயல்படுவது.
மூவாயிரம் ஆண்டு வயது
இந்த
காவ்ரி மரங்களின் தாவரவியல் பெயா் அகத்திஸ் ஆஸ்ட்ரேலிஸ் (AGATHIS AUSTRALIS) என்பது, ஐம்பது மீட்டா்
வரை அதிகபட்சமாக வளரும் இந்த மரத்தின் வயது, 2000 முதல் 3000 ஆண்டுகள், இந்த மரத்தின்
பருமன் அல்லது சுற்றளவு 16 மீட்டா் வரை இருக்கும்.
இலைகள் 3 முதல் 7 செ.மீ. நீளமும், ஒரு செ.மீ அகலமும், தொட்டுப் பார்த்தால்
முரட்டுத்தனமாகவும் சொரசொரப்பாகவும் இருக்கும்.
தற்போது
உயிருடன் இருக்கும் என்னும் காவ்ரி மரத்தின் வயது 2000 ஆண்டுகள். இதற்கு ”டானி
மஹுத்தா” என்று தனியாக
ஒரு பெயரும் வைத்துள்ளார்கள்.
இந்த டானி
மஹுத்தா மரத்தின் உயரம் 52 மீட்டா், மரத்தின் குறுக்களவு 4.6 மீட்டா்.
”காவ்ரி” மரங்கள் இந்த உலகில் 20 மில்லியன் ஆண்டுகளாக உயிர் வாழுகின்றன. ஜுராசிக் காலத்தில் டயனோசரஸ் குட்டிகள் இந்த மரத்தை சுற்றி ஓடி விளையாடி இருக்கலாம் என்கிறார்கள் அறிவியல் நிபுணர்கள்.
”காவ்ரி” மரங்கள்தான் இன்றளவும் நியூசிலாந்து
நாட்டின் புராதன காலத்தின் அடையாளமாக உள்ளன.
வளா்த்த ”காவ்ரி” மரங்கள் 50 மீட்டா்
உயரமும் 13 மீட்டா் சுற்றளவும் கொண்டவையாக வளர்ந்து சுற்றுலா பயணிகளை மிரட்டுகின்றன..
ஐரோப்பியா்கள்
இங்கு குடியேறிய போது லாப நோக்கம் கருதி கணக்கில்லாத அளவு காவ்ரி
மரங்களை வெட்டி கட்டைவண்டி முதல் கப்பல்
கட்டுவது வரை செய்து காசு
பார்த்தார்கள்.
1900 ம்
ஆண்டுகளில், இந்த மரங்களை வெட்டி காயப்படுத்தி, அவற்றிலிருந்து, வழியும் பிசின்களை வழித்து வார்னீஷும், பெயிண்ட்டும், லினோலியமும் செய்தார்கள்.
காவ்ரி
மரக்காடுகளின் கண்ணீர்க் கதை
1772 ம்
ஆண்டு மேரியன் டு ஃபிரெஸ்னி (MARION DU FRESNE) என்ற, பிரான்சு நாட்டினைச்
சோ்ந்த கண்டுபிடிப்பாளா்தான், முதன் முதலாக நியூசிலாந்து நாட்டின், ”காவ்ரி” மரத்தினை வெளி
உலகிற்கு பிரபலப்படுத்தினார்.
”மேரியன்” என்ற பிரஞ்சுக்காரா் நியூசிலாத்தின் ”நார்த் ஐலண்ட்” டில் கால்வைத்த சமயம், அங்கு சுமார் ஒரு மில்லியன் எக்டா் பரப்பில் பூதாகரமாக அடிமரம் பெருத்த, காவ்ரி மரங்கள் காடுகளாய் பரவி இருந்து அவரை மிரட்டின,
எச் எம் எஸ் டுரோமடெரி கப்பல்
1820ம்
ஆண்டு எச் . எம்.எஸ் ”டுரோமடரி” என்னும் கப்பலில், ”காவ்ரி” மரங்கள் வெட்டப்பட்டு
நார்த் ஐலண்டிலிருந்து முதன் முதலாக ஏற்றுமதி ஆனது. அதன் பிறகு
எத்தனை கப்பல்கள் இப்படி இந்த காவ்ரி மரங்களை வெட்டி ஏற்றிக்கொண்டு போயின என்ற தகவல் மட்டும் சரியாக கிடைக்கவில்லை.
நியூசிலாந்தில், எண்ணி
3000
அணைக்கட்டுகளை இன்று காவ்ரி
மரங்கள் சுமந்து கொண்டிருக்கின்றன. காவ்ரி மரக் கட்டைகளைப் பயன்படுத்திதான் 19 ம் நூற்றாண்டிலிருந்து, நியூசிலாந்து
,
இந்த அணைக்கட்டுகளைக் கட்டி முடித்தது.
அப்படி
என்றால் எத்தனை காவ்ரி
மரங்கள், கட்டப்பட்ட அணைக்கட்டுகளுக்கு
காவு கொடுத்திருப்பார்கள்,
என்று யோசித்துப் பாருங்கள்.
1830 வாக்கில்
நியூசிலாந்தின் நார்த் ஐலண்டில் திரும்பிய பக்கம் எல்லாம் இரண்டு வகை மனிதர்களைத்தான் பார்க்க முடியுமாம். ஒருத்தர் காவ்ரி மரம் வெட்டி, இன்னொருத்தர்
காவ்ரி மர வியாபாரி. காவ்ரி
மரம் வெட்டுவதும், காவ்ரி மரம்
விற்பதும்தான் அந்த
சமயம் கொடிகட்டிப் பறந்த தொழில்.
காவ்ரி
மரங்களின் பண்புகள்
காவ்ரி
மரங்களின் நீடித்த உழைப்பு, அதன் உறுதியான
தன்மை, நெளிவு சுளிவு இல்லாத, முடிச்சுகள் இல்லாத
ஆணி அடித்தால் பிளவுபடாத தன்மை கொண்ட மரங்களை, எளிதாக, எவ்வளவு வேண்டுமாலும், தட்டுப்பாடு இல்லாமல் தரும் காடுகள்.
இதனால்
அங்கு மரவேலை செய்யும் திறன் மிகுந்த தச்சா்கள், கப்பல்கட்டும் நிபுணர்கள்
அனைவரும் காவ்ரியின் பின்னால் அலைந்தனா்.
ஆண்டுதோறும்
வெட்டப்பட்ட காவ்ரி மரங்கள்
இரண்டு
லட்சத்து 36 ஆயிரம் கியூபிக் மீ்ட்டா் காவ்ரி மரங்கள் ஆண்டுதோறும் வெட்டி விற்பனை செய்த விபரீத சாதனை 20ம் நூற்றாண்டு வரை மெகா-சீரியல் மாதிரி
தொடா்ந்தது.
இதுதான்
கடல்போல வியாபித்து இருந்த காவ்ரி மரங்களை நியூசிலாந்து நாடு, காவு கொடுத்த
கண்ணீர்க் கதை.
டிம்பர் ஸ்டேஷன்கள்
1820 முதல்
1830 வரையான காலகட்டங்களில் நார்த்லேண்ட்’ டின் துறைமுகங்களில் எல்லாம் ”காவ்ரி மரக்கட்டை
சேமிப்பு கிடங்குகள் நிறைந்திருந்தன. இவற்றை ”டிம்பா் ஸ்டேவுன்” என்று அழைத்தார்கள். வெட்டிக்
கொண்டு வந்த மரங்களை கப்பலில் ஏற்றுவதற்கு ஏற்ப அவற்றை ஒழுங்குபடுத்தி துண்டாடுவது தான் இந்த டிம்பா் ஸ்டேவுன்களின் முக்கிய வேலையாக இருந்தது.
இந்த
மரங்கள் எல்லாம் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் புதிய காலனி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
மவோரி
எனும் பழங்குடி மக்கள்
டங்கட்டா
வெனுவா (TANGATA WHENUA) எனும் பழங்குடிகளை மவோரி (MAORI) என்றும் சொல்லுகிறார்கள். இவா்கள்தான் நியூசி்லாந்தின் பழங்குடிகள். இன்றும்
கூட நியூசிலாந்துகாரா்களில்
ஏழு போ்களுக்கு ஒருத்தா் இந்த மவோரி இனத்தைச் சோ்ந்தவா். நியூசிலாந்துகாரா்களின் சரித்திரம், பாரம்பரிய கலை, கலாச்சாரம், மொழி ஆகிய எல்லாவற்றிலும் மவோரிகளின் வோ்கள் பரவியிருக்கும் என்கிறார்கள்.
மவோரிகளுக்கு
பிடித்த வியாபாரம்
மவோரிகளுக்கு
காவ்ரி மரவியாபாரம் பிடித்திருந்தது. மரங்களை
வெட்டுதல், மரங்களை ஒழுங்கு
செய்தல், இப்படி அவை தொடர்பான கடினமான வேலைகள்
அனைத்தையும் மவோரிகளே செய்ய விரும்பினார்கள்.
சிலா்
மரம் அறுப்பது, அது தொடா்பான
வியாபாரங்களைச் செய்வது ஆகியவற்றிலும் ஈடுபட்டார்கள். தங்கள்
சொந்த மண்ணின் இயற்கை வனங்களை இழக்கிறோம் என்ற விழிப்புணா்வு அந்த சமயத்தில் அவா்களுக்கு இல்லை என்று இப்போது வருந்துகிறார்கள்.
காவ்ரி – பிசின் வார்னீஷ்
இங்கிலாந்தில்
செய்யப்படும் 70 சதவிகித ஆயில் வார்னீஷ்கள் (OIL VARNISH) அனைத்திலும் ”காவ்ரி பிசின்” பயன்படுத்துகிறார்கள். பெயிண்ட் மற்றும் லினோலியம் தயாரிப்பிலும் இதனை வெகுவாகப் பயன்படுத்தினார்கள்.
1930 ம் ஆண்டு வாக்கில் இதற்கான செயற்கை மாற்று வந்தவுடன் இந்த நிலை மாறியது.
கழுதை தேய்ந்து கட்டெரும்பாய்
ஆனதுபோல, 1772 ல் ஒரு
மில்லியன் எக்டா் பரப்பாய் இருந்த காவ்ரி மரக்காடுகள் தனி மனிதர்களின் வியாபார பேராசையின் விளைவாக, வெறும் ஏழாயிரம் எக்டராக
மெலிந்து நலிந்து போனது இன்று.
இளைஞர்கள் மெல்லும் சீவிங்
கம்
நியூசிலாந்தின் சிறுவர்கள்
மற்றும் இளைஞர்களுக்கு தெரிந்தது காவ்ரி சீவிங்-கம்தான். காவ்ரி
மரங்களிலிருந்து எடுக்கும் காவ்ரி பிசின்களில் ஒருவகையான ”சிவிங்கம்” (CHEWING SUM) செய்ய பயன்படுத்துகிறார்கள். அது
மட்டுமல்ல நகைகள் மற்றும் சில அலங்காரப் பொருட்கள் செய்வதற்கும். வார்னீஷ்
போன்றவற்றை செய்யவும் ‘காவ்ரி-கம்’தான்
கையடக்கமான கச்சாப்பொருள் என்கிறார்கள்.
கொசுறு
செயற்கைக்கு
கையசைத்து விடை கொடுக்கவும் இயற்கைக்கு கைகைகூப்பி வரவேற்கவும் தொடங்கியுள்ள இந்த காலம் மீண்டும் காவ்ரி மரங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் என்கிறார்கள்.
FOR FURTHER READING
WWW.EN.M.WIKIPEDIA.ORG
/ AGATHIS AUSTRALIS
WWW.DOC.GOVT.NZ
/ KAU: NEW ZEALAND NATIVE PLANTS – DEPARTMENT OF CONSERVATION
WWW.CONIFERS.ORG
AGATHIS AUSTRALIS (KAURI) DESCRIPTION – THE GYMNOSPERM DATABASE
WWW.NZPEN.ORG.NZ
/ AGATHIS AUSTRALIS – NEW ZEALAND PLANT CONSERVATION NETWORK
WWW.BRITANNICA.COM
/ KAURI PINE / PLANT – ENCYCLOPEDIA BRITANNICA
PLEASE POST YOUR COMMENTS, REGARDS – GNANASURIA BAHAVAN D
(AUTHOR).
999999999999999999999999999999
No comments:
Post a Comment