நீர்க்கடம்பை ஸ்ரீ கிருஷ்ணாவின் விளையாட்டு மைதானம் |
இந்திய மரம்.
உண்மையான கடம்ப மரம். கிருஷ்ணபரமாத்மா ஓடிப்பிடித்து விளையாடிய மரம். பல நோய்களை
குணப்படுத்தும் மருத்துவப் பண்புகளைக் கொண்ட மரம்.
ஐம்பதடி உயரம்
வரை வளரும். தோள்மட்டத்தில் கைகளை உயர்த்தியது போல பக்கவாட்டில் 15 அடி நீளம் வளரும். வாசமுள்ள மஞ்சள்
நிறத்தில் பேன்ட்மின்ட்டன் பந்து மாதிரியான பூக்களைப் பூக்கும் மரம்.
மேற்கத்திய
நாடுகளில் இதே போன்ற ஒரு மரம் பிரபலமாக உள்ளது. அதன் தாவரவியல் பெயர் மித்ரகைனா
ஸ்பீசியோசா. நீர்கடம்பையின் தாவரவியல் பெயர் மித்ரகைனா பார்விபோலியா.
மஞ்சள்காமாலைக்கு
நீர்க்கடம்பையின் இலைச் சாறு
இந்த வகை
மரங்கள் ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் அதிகம் காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவின்
சதுப்புநிலப் பகுதிகளிலும், ஆசியாவின்
மழைக்காடுகளிலும் இம்மரங்கள் அதிகம் உள்ளன.
சென்ச்சஸ், ஏறுகாலஸ், யானாதிஸ், சுகாலிஸ், சுகாலிஸ் ஆகிய ஆந்திரமாநிலத்து
பழங்குடிகள்; மஞ்சள்காமாலை
நோயைக் குணப்படுத்த நீர்க்கடம்பையின் இலைச் சாற்றைக் கொடுக்கிறார்கள்.
உடலின்
காயங்கள், புண்கள், மற்றும், தசைப்பிடிப்பு அவற்றால் ஏற்படும் வலி
ஆகியவற்றைக் குணப்படுத்த கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்ட மக்களும் உத்தரப்பிரதேசத்தின் சோனாகட்டி
என்னும் பழங்குடிகள் காய்ச்சலைக்
குணப்படுத்தவும், தமிழ்நாட்டில் சிறுமலைப்பகுதி பழங்குடி மக்கள்
மூட்டுப்பிடிப்பு, மற்றும்
மூட்டுவலியைக் குணப்படுத்தவும்
நீர்க்கடம்பையின் மரப்பட்டையை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
காகிதம்
தயாரிக்க மரக்குழம்பு தரும்
ஒரு ஆச்சரியமான
செய்தி ! நீர்கடம்பை மரத்திற்கு தமிழ்மொழியில் மட்டும் ஐம்பது பெயர்கள் உள்ளன.
கன்னடத்தில் பத்தொன்பது பெயர்களும், மலையாளத்தில் ஏழும், இந்தி மற்றும் தெலுங்கில் தலா பதினைந்தும், மராத்தியில் ஐந்தும், சமஸ்கிருதத்தில் மூன்றும் உள்ளன.
கிழக்கு
ஆசியாவில் இந்த மரங்கள் அநேக நாடுகளில் உள்ளன. அவற்றில் முக்கிய இடங்கள், இந்தியா ஸ்ரீலங்கா, நேப்பாளம், பங்ளாதேஷ், மியான்மர், மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள்.
தழை
கால்நடைகளுக்கு தீவனமாகும், பட்டை டேனின்
நிறைந்தது; தோல் பதனிடலாம்.
மரம் கடைசல் வேலைகளுக்கு பயன்படும்; கருவிகளின் கைப்பிடிகள், விளையாட்டு சாமான்கள், தீக்குச்சிகள், தீப்பெட்டிகள்
செய்யலாம்; காகிதம்
தயாரிக்க மரக்குழம்பு தரும்; கணிதவியல் சாதனங்களான, டீஸ்கொயர், ஸ்கேல், மணிச்சட்டம், செய்யவும், சிலேட் பலகை செய்யவும் அமிலத்தால்
அரிக்கப்படாத பேட்டரி மரப் பெட்டிகள், பீப்பாய்கள் செய்யவும் ஏற்ற மரம்.
தூசியினை
வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்.
இலைகள், கிளைகள், மரம் அடுப்பெரிக்க விறகு தரும். மரங்கள் வீசும் காற்றின் வேகத்தை
தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை
தூய்மைப்படுத்தும். காட்டு ஓடைகளின் ஓரமாக அருமையாக வளரும் அழகு மரம்.
அக்டோபர்
நவம்பர் மாதங்களில் நீர்கடம்பை விதைகளை சேகரிக்கலாம். ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள்
வரை விதைகளை சேமித்து வைத்திருந்து விதைக்கலாம். நூற்றுக்கு முப்பது முதல் அறுபது விதைகள் முளைக்கும். ஒரு கிலோ எடையில் 4000 முதல் 5000 விதைகள்
இருக்கும்.
இந்தோ மலேசியப்
பகுதியில் இம்மரங்கள் கடல் மட்டத்திற்கு மேல் 1300 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன. சில நாடுகளில் இதனை எல்லோ கோல்ட்
என்று சொல்லுகிறார்கள்.
நீர்க்கடம்பையின்
பலமொழிப் பெயர்கள்
தமிழ் : நீர்க்
கடம்பை, கடம்பை, சின்னகடம்பு (NEER KADAMBAI, KADAMBAI, CHINNA
KADAMBU)
இந்தி: கெய்ம், கட்டம் கம்கி (KEYMA, KATTAM KEYMA)
கன்னடம்: கோங்கு, கடசா (KONGU,
KADASA)
மலையாளம்:
விம்ப்பு, நீர்கடம்பு, ரோசு, கடம்பு (VIMPU, NEER KADAMBU, ROSU, KADAMBU)
தெலுங்கு:
நீர்கடம்பா (NEER KADAMBA)
தாவரவியல்
பெயர்: மித்ரகைனா பார்விபோலியா (MITRAGYNA PARVIFLORA)
பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : கெயிம், லீச்சர்ட் ட்ரீ, சீஸ்வுட்;, வாட்டா கடம்பா பங்க்கால் (KEYIM, LEECHERT TREE, CHEESE WOOD, WATER
KADAMBA, BANKAL)
தாவரக்குடும்பம்
பெயர் : ரூடேசி (RUTACEAE)
கிரேட்டம்
என்னும் தாய்லாந்து மரம் பல நாடுகளில்
பிரபலம். ஒரு காலத்தில் தாய்லாந்து மற்றும் மலேசியாவில் இதிலிருந்து
தயாரிக்கப்பட்ட போதைப்பொருள் கொடிகட்டிப் பறந்தது.
ஆனால் அது
உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என பல நாடுகள் தடை செய்தன. இந்த
கிரேட்டம் மரத்திற்கு நம்ம ஊர் நீர்க்கடம்பை ஒரு மலிவான மாற்று ஏற்பாடு
என்கிறார்கள்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU
FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,
PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW
THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO
COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY.
GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment