Wednesday, June 28, 2023

NEEM TREE VILLAGE PHARMACY 140. வேப்ப மரம் கிராமத்து மருந்துகடை

கிராமத்து மருந்துகடை
வேம்பு





 கிராமத்து மருந்துகடை என்ற பெயர் பெற்ற வேப்பமரம், வறண்ட பிரதேசங்களுக்கு ஏற்ற மரம், விவசாயத்துக்கு உதவும் மரம், தழை உரம் தரும், இலை, காய்கள், கொட்டைகள், எண்ணை அனைத்தும் இயற்கை விவசாயத்திற்கு உதவும், பூச்சி பூசணங்களை கட்டுப்படுத்தும், கதவு, ஜன்னல், வாசக்கால் என கட்டுமான வேலைகளுக்கு மரங்கள் தரும், பாரம்பரிய மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் அனைத்திற்கும் தனது, இலை, காய், கனி, பட்டைகள் என அனைத்தையும் கொடையாகத்தரும், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் சோப்பு தயாரிக்க விதை எண்ணை தரும் இதன் ஆங்கிலப்பெயர் நீம் ட்ரீ (NEEM TREE), தாவரவியல் பெயர் அசாடிரேக்டா இண்டிகா (AZADIRACTA INDICA)

வேம்பு பழுத்தால் கிளிகள் வரும்

வேம்பு பழுத்துவிட்டால் எங்க ஊர் கிளிகளுக்கும் பள்ளிச் சிறுவர்களுக்கும் கொண்டாட்டம்தான். பெரியவர்களுக்கு சுலபமாகக் கிடைக்கும் பல்குச்சி. அவர்கள் பல்விளக்கி முடித்துவிட்டு அந்தக் குச்சியை இரண்டாய்ப் பிளந்து நாக்கை வழிக்கும் காட்சி இன்னும் பசுமையாய் உள்ளது.

அது பூக்க ஆரம்பித்தால் மரத்தடியில் பூக்கள், பாய்போட்ட மாதிரி கொட்டிக் கிடக்கும். பழங்களும் அப்படித்தான். பழங்களைப் பொறுக்கி காயவைத்து செட்டியார் கடையில் போட்டால் முழுசாய் ஒரு அச்சு வெல்லமும் கொஞ்சம் பொட்டுக் கடலையும் கிடைக்கும்.

கிராமத்து மருந்துக்கடை

வயதான பெண்மணிகளுக்கு முக்கியான வேலை கூடைகூடையாய் வேப்ப முத்து பொருக்குவதுதான். இப்போதெல்லாம் வேப்ப மரத்தையும் பார்க்க முடியவில்லை; கிளிகளையும் பார்க்க முடியவில்லை. முது கன்னிகளுக்கும் பழம் பொறுக்க முடிவதில்லை.

வேப்ப மரத்திற்கு வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் கிராமத்து மருந்துக்கடை அதாவது வில்லேஜ் பார்மசி. நோய்களை குணப்படுத்துவதில் வேப்ப மரத்திற்கு நிகர் வேப்ப மரம்தான்.

வெள்ளை ஈக்களை  விரட்டி அடித்த வேப்ப எண்ணெய்

ஒரு சமயம் பருத்திப் பயிரில் வெள்ளை ஈ தாக்கிதால் நஷ்டப்பட்டு ஏகப்பட்ட விவசாயிகள் தங்களையே முடித்துக் கொண்டார்கள். அப்போது வெள்ளை ஈக்களை வெற்றிகரமாக விரட்டியடித்து விவசாயிகளுக்கு கைகொடுத்தது வேப்ப எண்ணெய்தான்.

வேப்பந்தழை, அதன் கொட்டை, பருப்பு, எண்ணெய், பிண்ணாக்கு, பட்டை, வேர் அத்தனைக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவை.

அமுதக் கலசம் உனக்கா எனக்கா’ ?

அமுதக் கலசம் உனக்கா எனக்காஎன்று ஒரு சமயம் அசுரர்களும் தேவர்களும் சண்டை போட்டுக்கொண்டார்கள். அப்போது அமுதக் கலசம் கைதவறி கீழே பூலோகத்தில் விழ அதில் முழுசாய் குளித்தது வேப்பமரம். அதனால்தான் அதற்கு அவ்வளவு தெய்வீக சக்தியாம்.

 மருத்துவப்பண்புகள்

பாரம்பரிய மருத்துவத்தில் வேம்பின் வயது சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள்.

வேம்பு இலைக்கூழ் உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் பூச்சிக்கடிகளை குணப்படுத்தும்,

வேம்பு இலைகளை கொதிக்கவைத்து வடிகட்டிய னீரில் தலை முடியை கழுவ பொடுகுகள் காணாமல் போகும்.

வேம்பு இலைகளை கொதிக்கவைத்து வடிகட்டிய னீரில் கண்களைக்கழுவ கண் எரிச்சல், கண்கள் சிவப்பாதல் ஆகியவை குணமாகும்.

வேம்பு இலைப்பசையை,  அக்கியினால் ஏற்படும் புண்களில் தடவ அதனால் ஏற்படும் வலி குறைந்து விரைந்து குணம் கிடைக்கும்.

வேம்பு இலைகளை தேனில் ஊறவைத்து காதுகளில் சொட்டு சொட்டாக விட காதுகட்டிகள் குணமாகும்.

வேம்பு இலைகளை ஊறவைத்து கசக்கிப்பிழிந்து தண்ணீரில் கலந்து தினம் தினம் ஒரு டம்ப்ளர் குடித்து வந்தால்  உடலின் தடுப்பு சக்தியை மேம்படுத்தும்.

பலமொழிப் பெயர்

தமிழ் :  வேப்ப மரம் (VEPPA MARAM)

மலையாளம்: அரியவேப்பு (ARIYAVePPU)

தெலுங்கு: வெப்பா (VEPPA)

கன்னடம்: துரக்காபேவு (THURKHABEVU)

குஜராத்தி: லிம்பா (LIMBA)

சமஸ்கிருதம்:; நம்பிகா (NAMBIKA)

தாவரவியல் பெயர்  : அசாடிரக்டா இண்டிகா (AZADIRACHTA INDICA)

பொதுப்பெயர்  ஃ ஆங்கிலப் பெயர்   :   நீம் ட்ரீ  (NEEM TREE)

தாவரக்குடும்பம் :  மிலியேசி (MILIACEAE)

மரத்தின் வகை :  மருத்துவ மரம்

 மரத்தின் பயன்கள் :

வேப்பந்தழை  விளை நிலங்களுக்கு உரமாகும். இதன் பட்டைகளில் டேனின் நிறைந்து இருப்பதால் , தோல் பதனிடலாம்.. மரத்தில் வழியும் பிசின்னில் கோந்து தயாரிக்கலாம், மார்ச், ஏப்ரல் மாதங்களில்  மலரும் மலர்கள் தேனீக்களுக்கு தேன்  தரும் . கிளிகளுக்கும்  இதர பறவைகளுக்கும் தின்ன பழங்கள் தரும்.

விதைகள் எண்ணெய் தரும். எண்ணையில்  சோப்பு தயாரிக்கலாம். அதனை  கிருமி நாசினியாகப் பயன்படுத்தலாம்.

மரத்தின் தாயகம் :  இந்தியா

மணல்சாரி    வறண்ட மண், உட்பட பரவலான மண்வகைகளில் நன்கு வளரும். விதைநாற்று, வேர்க் குச்சி  ஆகியவற்றின் மூலம் புதிய மரங்களை உருவாக்கலாம். மரங்கள் முதல்  8  மீட்டர்  உயரம் வளரும்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...