Wednesday, June 21, 2023

NATIONAL TREE OF USA REGAL PRINCE OAK 95. ரீகல் பிரின்ஸ் ஒக் அமெரிக்காவின் தேசிய மரம்

அமெரிக்காவின்
தேசிய மரம் 
ஒக் 


ரீகல் பிரின்ஸ் ஒக் மரம், இரண்டு ஓக் மரங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது, வட அமெரிக்காவின் அரசு மரம், முக்கிய நிழல் மரம்>  முக்கிய சாலை மரம், மரச்சாமான்கள் செய்யவும், கட்டிடங்கள் கட்டுமானங்களுக்கும் உதவும் மரம்.  காடுகளில், வனங்களில் பறவைகளுக்கம், வன விலங்குகளுக்கும் உணவாகும் மரம், உறைவிடமாகும் மரம்.  சூழலை பாதுகாக்கிறது,  சூழலை மேம்படுத்துகிறது,  ருவக்கால மாற்றத்தினால் ஏற்கும் பாதிப்புகளை குறைக்கிறது.

தமிழ்ப்பெயர்: ரீகல் பிரின்ஸ் ஒக் மரம்  (REGAL PRINCE OAK TREE – HYBRID TREE)

பொதுப் பெயர்: ரீகல் பிரின்ஸ் ஒக் மரம்  (REGAL PRINCE OAK TREE – HYBRID TREE)

தாவரவியல் பெயர்: அப் ரைட் இங்லீஷ் ஒக் X சுவேம்ப் ஒயிட் ஒக் (QUERCUS ROBUR FASTIGIATA  X  QUERCUS   BICOLOR )

தாவரக்குடும்பம் பெயர்: பேகேசி (FAGACEAE)

தாயகம்: வட அமெரிக்கா (NORTH AMERICA)

வட அமெரிக்க மக்களின் கலாச்சார வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை ஒக் மரங்கள்.  அதனால்தான் 2004 ம் ஆண்டிலிருந்து வட அமெரிக்காவின் அரசு மரமாக (NATIONAL TREE) அறிவித்துள்ளார்கள். முக்கிய நிழல் மரம்.  முக்கிய சாலை மரம். இந்தியாவுக்கு ஆலமரம் மாதிரி அமெரிக்காவுக்கு ரீகல் பிரின்ஸ் ஓக் மரம்.

சூழலை மேம்படுத்தும்    

இன்று பொதுவாக அழகுமரமாக வளர்க்கப்பட்டு வந்தாலும், அது உணவாக உதவுகிறது.  டிம்பர் மரமாக மரச்சாமான்கள், செய்ய உதவுகிறது.  கட்டிடங்கள் கட்டுமானங்களுக்கு உதவுகிறது.  காடுகளில், வனங்களில் பறவைகளுக்கம், வன விலங்குகளுக்கும் உணவாகிறது உறைவிடமாகிறது.  சூழலை பாதுகாக்கிறது.  சூழலை மேம்படுத்துகிறது.  ருவக்கால மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க மற்றும் தடுக்க உதவுகிறது.    

ஓக் மரங்கள் கொர்கஸ் என்னும் தாவர னத்தைக் சேர்ந்தது.  பேகேசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.  இந்தத் தாவர வகையில் சுமாராக 600 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் இருப்பதாக பட்டியல் இட்டுள்ளனர்.  தில் ஒன்றுதான் இந்த ரீகல் பிரின்ஸ் ஒக் மரம்.

கையடக்கமாஅழகு மரங்கள்

வட அமெரிக்காவில் வளர்க்கப்படும் அழகு மரங்களின் இலைகள் அழகாக இருக்கும்.  இந்த மரம் இலை உதிர்க்கும் மரங்களாக இருக்கும்.  பசுமையாக துளிர்க்கும் இலைகள் அவற்றை உதிர்ப்பதற்கு முன்னால் மஞ்சள்,  ஆரஞ்சு,  சிவப்பு,  ஊதா என்று பல நிறங்களில் மாறி அழகுக்கு அழகு சேர்க்கும். 

பல மரங்களின் பூக்களும்.  அழகு வண்ணங்களில் அம்சமான வாசத்துடன் மக்கும்.  அத்தோடு பெரும்பாலான மரங்கள் 15 அடி 20 அடி உயரம் என்று கையடக்ககான மரங்களாக வளரும்.  அப்படிப் பட்ட பண்புகளை உள்ளடக்கிய மரங்களில் ஒன்றுதான் இந்த ரீகல் பிரின்ஸ் ஒக் மரங்கள். 

ஒட்டு சேர்த்து உருவாக்கிய மரம்    

அழகான இரண்டு மரங்களை தேர்வு செய்து அவற்றை ஒட்டு சேர்த்து மிகவும் அழகான மரங்களை உருவாக்குகிறார்கள்.  அப்படி உருவாக்கப்பட்ட மரம்தான்>  இந்த ரீகல் பிரின்ஸ் ஒக் மரம்.  அப்ரைட் இங்கிலீஷ்; ஒக் (UPRIGHT ENGLISH  OAK – QUERCUS ROBUR FASTIGIATA) மற்றும் ஸ்வேம்ப் ஒயிட் ஒக் (SWAMP WHITE  OAK – QUERCUS BICOLOR) என்ற இரண்டு ரகங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்ட மரம் இது.

அழகுத் தோட்டத்திற்கு அற்புதமான மரம்.    

இந்த ரீகல் பிரின்ஸ் மரம்,  பரவலான மண்வகைகளில் வளரும்.  ஈரப்பசை உள்ள மண்ணில் வளரும்.  வறண்டுபோன மண்ணில் வளரும். ஐம்பது அடி உயரத்திற்கு  குறைவு படாமல் வளரும்.  குறுக்கு வசத்தில் 20 முதல் 25 அடிக்கு பரந்து வளரும். வேகமாக வளரும்.  நிமிர்ந்து வளரும். அழகுத் தோட்டம் அமைக்க அற்புதமான மரம்.   

பூக்கள் ஏப்ரல் மாதத்தில் பூக்கும்.  பூக்கள் பச்சை,  ஆரஞ்சு,  வெள்ளை,  மஞ்சள் என பல வண்ணங்களில் இருக்கும். 

பூச்சி நோய் தாக்குதலை தாங்கும்   

ஓக் மரங்கள் பெரும்பாலும் சாம்பல் நோய் (POWDER  MILDEW) மற்றும் தண்டுதுளைக்கும் வண்டுகளின் (STEM BORER BEETLE) தாக்குதலுக்கு உள்ளாகும்.  ஆனால் இந்த மரம் சாம்பல் நோயைத் தாங்கும்.  வண்டுகளின் தாக்குதலையும் தாங்கும். 

இதன் இலைகள் அடர்த்தியான பச்சை நிறத்தில் இருக்கும்.  வட்ட வடிவில் இருக்கும்.  ஆறு அங்குல நீளம் உடையதாக இருக்கும்.  இலைகளின் மேற்புறம் பளபளப்பாக இருக்கும்.  வளர்ந்த மரங்களின் இலைகள் உதிரும் சமயம் அதில் சிவப்பு நிறம் சேரும்.

சாலைகளில் சோலைகளில் நடலாம்    

இந்த மரங்கள் சாலைகளில் நடுவதற்கு ஏற்ற மரம்.  இது சாலைகளில் உயிர்வேலியாக உள்ளது.  வேகமாக வீசும் காற்றினைத் தடைச் செய்கிறது.  போக்குவரத்தினால் ஏற்படும் தூசுத்துப்பட்டைகளைக் தடுக்கிறது.  கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரம் வரை உள்ள பகுதிகளில் நன்கு வளர்கிறது. 

இந்த மரத்தின் அகார்ன்கள் (ACORNS) எனும் விதைக்கனிகள், எலுமிச்சை பழ நிறத்தில் இருக்கும்.  குளிர்ப்பருவக் காலத்தில் இதன் இலைகளும்> அகார்ன்களும் காவி நிறமாக மாறும் இலைகள் உதிரும்போது தங்க மஞ்சள் நிறமாகப் பளபளக்கும்.

FOR FURTHER READING

WWW.FAST-GROWING-TREES.COM / REGAL PRINCE OAK TREES FOR SALE

WWW.PLANTS.CONNON.CA / REGAL PRINCE OAK

WWW.TREES.COM / REGAL PRINCE OAK

WWW.MCKAYNURSERY.COM  QUERCUS REGAL PRINCE OAK TREES FOR SALE

WWW.KELOWNA.CA / REGAL PRINCE OAK

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...