Monday, June 12, 2023

NAMMAZHVAAR DREAM FARMERS SELF SUFFICIENCY நம்மாழ்வார் கனவு விவசாயிகள் தன்னிறைவு

இயற்கை விவசாயத் தந்தை
நம்மாழ்வார்


இன்று தமிழ்நாட்டில் உள்ள வீடுக
ளில்; அரசியல் அல்லாத தலைவர்களின் புகைப்படம் அதிகம் இருப்பது யாருடைய புகைப்படம் ? சொல்லுங்கள் பார்ப்போம். நிச்சயமாக அது இயற்கை விஞ்ஞானி என்று விவசாயிகளால் பிரியமுடன் அழைக்கப்படும் நம்மாழ்வார் அவர்களாகத்தான் இருக்கும். இது அவர் தொண்டுக்கு, தியாகத்திற்கு சேவைக்கு கிடைக்கும் அங்கீகாரம் எனச் சொல்லலாம்.

விவசாயிகள் தன்னிறைவு (SELF SUFFICIENCY OF FARMING COMMUNITY) 

தனது புதியகொள்கைகளின் அடிப்டையில் மக்கள் பங்கேற்பு முறைப்படி கிராமப்புற விவசாயிகளுடன் விவாதித்து அவர்களுடைய தேவை அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய பயிர் சாகுபடி முறைகளை வடிவமைத்தார். அவற்றின் அடிப்படையில் விவசாயிகள் தன்னிறைவு அடைய வேண்டும் என்பது அவர் விருப்பம்.

நெதர்லாந்து பணிமனை (WORKSHOP IN NETHERLAND)

1987 ம் ஆண்டில் நெதர்லாந்தில் உள்ள டி சி பவுண்டேஷன் என்னும் அமைப்பு நடத்திய நான்கு வார பணிமனையில் நம்மாழ்வார் கலந்துகொண்டார்.

குறைவான இடுபொருள் வேளாண்மை (LOW EXTERNAL INPUT SUSTAINABLE AGRICULTURE)

1990 ம் ஆண்டு குறைவான இடுபொருட்களை பயன்படுத்தும் நீடித்த விவசாய முறைகளை  செயல்படுத்தக் கூடிய கூட்டமைப்பைத்  தொடங்கினார். இதனை லீசா (LEISA) என்று அழைத்தனர். அதுதான் ஆங்கிலத்தில் லோ எக்ஸ்டெர்னல் இன்புட் ச்ஸ்டெய்னபிள் அக்ரிகல்ச்சர் அப்படியென்றால் குறைவான இடுபொருள் பயன்படுத்தும் நிலைத்த வேளாண்மை என்று பொருள். 

பிரச்சனைகள் வந்தாலும் ஏமாற்றாத விவசாயம் (SUSTAINABLE AGRICULTURE)

ஆங்கிலத்தில் சஸ்டெய்னபிள் அக்ரிகல்ச்சர்என்றால் நீடித்த வேளாண்மை என்று பொருள். புரியும்படி சொல்வதென்றால் பிரச்சனைகள் பல வந்தாலும் ஏமாற்றாத விவசாயம் என்று அதற்கு அர்த்தம். 

விவசாயத்திற்குத் தேவையான விதை எரு உரம் நீர் பூச்சிமருந்து முதலீடு போன்றவைதான் இடுபொருட்கள் (INPUTS). குறிப்பாக அதிக காசுகொடுத்து வெளியிலிருந்து வாங்கும் உரம் பூச்சிக்கொல்லி போன்றவற்றை அளவாக இடவேண்டும் எனும் மேலாண்மை முறைதான் லீசா. 

சாகுபடி செலவை உயர்த்தும் (MORE INPUTS MORE EXPENSES)

ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் நிலம் நீர் காற்று மற்றும் இதர இயற்கை வளங்களை மாசுப்படுத்திவிடும் என்பது ஒன்று. இரண்டாவதாக சாகுபடி செலவை உயர்த்தி விவசாயத்தை லாபமில்லாத் தொழிலாக மாற்றிவிடும் என்பதுதான். 

மானாவாரி இயற்கை சாகுபடி

1999 ம் ஆண்டு மானாவாரி பயிர் சாகுபடிக்கான இயற்கை ஆராய்ச்சி நிலையம் ஒன்றை புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கினார். 

இந்த காலகட்டத்தில் புதுவை ஆரொவில் லில் பணிசெய்த பெர்னார்ட் டி கிளார்க் என்பவருடன் இணைந்து நீடித்த சுற்றுச்சூழலுக்கான புதிய விவசாயம் என்னும் திட்டத்தில் பணிபுரிந்தார். 

இயற்கை வேளாண்மை பிரச்சாரம் (CAMPAIGN ON ORGANIC FARMING)

இதுவும் இயற்கை வேளாண்மை சார்புடைய ஒரு திட்டம்தான். இந்தத் திட்டத்தின் உதவியுடன் இந்தியா முழுவதும் பயணம்செய்து நீடித்த வேளாண்மைக்கான வழிமுறைகளை பிரச்சாரம் செய்தார்.

சுனாமி நிவாரணப்பணி (TSUNAMI REHABILITATION)

2004 ம் ஆண்டு சுனாமியினால் தமிழகத்தின் கடலோரப்பகுதிகள் சிதைந்து சீர்குலைந்தபோது நாகப்பட்டினம் பகுதியில் பல கிராமங்களில் நடைபெற்ற நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 

2006 ம் ஆண்டு இந்தோனேசியா சென்று சுனாமியினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சீரமைப்பதற்கான பணிகளைச் செய்ய உதவி செய்தார். 

டாக்டர் பட்டம் (AWARDED DOCTORATE) 

இயற்கை வேளாண்மையில் ஒட்டுமொத்தமாகச் செய்த சேவைகளுக்காக திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம் கிராமியப் பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்துப் பெருமை சேர்த்தது. 

நிறைய புத்தகங்கள் (WROTE MANY BOOKS)

நம்மாழ்வார் உலகம் முழுக்க சுற்றி பல நாடுகளில் இயற்கை வேளாண்மை குறித்த தனது அனுபவங்ளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டதுடன் அங்கிருந்த புதிய தகவல்ளைத் திரட்டி அவற்றை நம்மூர் விவசாயிகளுக்கும் களப்பணியாளர்களுக்கும் பயிற்சி தந்தார். இயற்கை வேளாண்மைத் தொடர்பாக நிறைய புத்தகங்ளையும் பத்திரிக்கைகளில் எண்ணற்ற கட்டரைகளையும்  எழுதியுள்ளார். 

பயிற்சி மையங்களை  உருவாக்கினார் (TRAINING CENTRES)

சமீப காலங்களில் இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களை  உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கரூர் மாவட்டத்தில் ருமன்பட்டி கடவூர் ஆகிய இடங்களில் இந்த மையங்களைத் தொடங்கினார். உலகில் பல பகுதிகளில் செயல்படும் பல அமைப்புகளை அத்துடன் இணைக்கும் பணியைச் செய்துவந்தார். 

மீதேன்திட்டப் போராட்டம் (STRUGGLE AGAINST METHANE)

2013 ம் ஆண்டு டிசம்பர் 30 ம் நாள் மீதேன் வாயு திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ள புதுக்கோட்டை சென்றபோது அவர் அமரரானார்.

நீங்கள் வெற்றிகரமான மனிதரா ? என்று கேட்டபோது நான் ஒரு வெற்றிகரமான மனிதனாக வாழ்வதைவிட உபயோகமான மனிதனாக வாழ விரும்புகிறேன் என்று சொன்னார் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். அதுபோல நம்மாழ்வார் விவசாய மற்றும் கிராமப்புற மக்களுக்கு மிகுந்த உபயோகமான மனிதராகவும் வெற்றிகரமான மனிதராகவும் வாழ்ந்து காட்டினார்.

அவருடைய வாழ்க்கை இயற்கை விவசாயத்தின் வரலாறாகத் தொடர்கிறது. இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்குகிறது. 

GNANASURIA BAHAVAN D

gsbahavan@bahavan  

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...