Wednesday, June 21, 2023

MUSIC INSTRUMENTS MAKING AFRICAN ROSEWOOD BUBINGO 87. முதல்தர ரோஸ்வுட் புபிங்கோ

  

முதல்தர ஆஃப்ரிக்க ரோஸ்வுட் 
புபிங்கோ


உலகின் முதல் தரமான புபிங்கோ எனும் ரோஸ்வுட் வகை, கிட்டார், பியானோ உட்பட பலவகை இசைக் கருவிகள், அவற்றிற்கான உதிரி பாகங்கள் செய்ய பயன்படும். இது ஒரு  பிரபலமான மரம். மரங்கள் ஊதா நிறமாக, அத்துடன் சிவப்பு மற்றும் காவி நிறம் கலந்தவைகளாக கவர்ச்சிகரமாக தோன்றும். பூசணங்கள்,  மரவண்டுகள் மற்றும் கரையானால் தாக்கப்படாதது. உலகின் மிகச்சிறந்த 10 கட்டை மரங்களில் (TIMBER WOODS) ஒன்று. குய்போர்ஷியா எனும் தாவரப்பிரிவில்  நான்குவகை மரங்களை புபிங்கோ மரம் என்கிறார்கள்

தமிழ்ப்பெயர்: புபிங்கோ, ஆஃப்ரிகன் ரோஸ்வுட் (BUBINGO, AFRICAN ROSEWOOD)

பொதுப் பெயர்கள்: ஆப்ரிகன் ரோஸ்வுட், அமேசிக்யூ,  புபிங்கா,  கெவாசிங்கோ,  ஒவங்கால், அக்கியூம்,  எபனா,  எசிங்காங்,  ஒக்வேனி, ஒவாங்,  மற்றும் விகா (APRICAN ROSE WOOD, AMAZIQUE, BUBINGA, KEVAZINGO, OWENGAL, AKIYUM, EBANA, ESINGONG, OKVENI, OVANG, WIKA)

தாவரவியல் பெயர்: குய்போர்ஷியா டெமியூசி (GUIBOURTIA DEMEUSEI)

தாவரக் குடும்பம் பெயர்: பேபேசி (FABACEAE)

தாயகம்: மேற்கு ஆப்ரிக்கா, கேரான், காங்கொ, ங்கோலா

பிறமொழிப் பெயர்கள் (VERNACULAR NAMES)

ஆங்கிலம்: ஆப்ரிகன் ரோஸ்வுட் (AFRICAN ROSE WOOD)

கேமரூன்: எசின்கேங்,  பின்பிங்கா (ESSINGANG, BINBINGA)

யு எஸ் ஏ அக்யூம் (AKUME)

ஈக்ட்டேரியல் கினியா: ஒவங்,  புபிங்கோ (OVENG, BUBINGO)

மூன்று ரோஸ்வுட் மரங்கள்

ரோஸ்வுட் என்றால் அதற்கு பெயர் போனவை இரண்டு: ஒன்று இந்தியன் ரோஸ்வுட்  இன்னொன்று பிரேசில் ரோஸ்வுட்.

கடினத்தன்மை,  மற்றும் எடை இரண்டிலும் இந்த இரண்டையும், கொஞ்சம் பின்னால் தள்ளிவிடும் தம் உடையது,  ஆப்ரிகன் ரோஸ்வுட்.

இந்திய ரோஸ்வுட் டின் தாவரவியல் பெயர்,  டால்பெர்ஜியா லேட்டிபோலியா (DALBERGIA LATIFOLIA),  பிரேசில் ரேஸ்வுட், டால்பெர்ஜியா நைஜ்ரா (DALBERGIA NIGRA).

கிட்டார் மரங்கள்

ஒரு காலத்தில் பிரேசில் நாட்டு ரோஸ்வுட் கொடிகட்டிப் றந்தது.  உலகம் முழுவதும் கிட்டார் இசைக் கருவி செய்ய எல்லோரும் பிரேசில் ரோஸ்வுட்டின்  பின்னால்தான் அலைந்தார்கள். 

அதன் விளைவாக சீக்கிரமாகவே பிரேசில் நாட்டு ரோஸ்வுட் ஐ விற்க வாங்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அதற்கு அடுத்தது புபிங்கோ என்னும் ஆப்ரிக்கன் ரோஸ்வுட் டுக்கு அடித்தது அதிர்ஷ்டம். 

சொல்லவா வேண்டும்? டிம்பர் மார்கெட்டில் இதற்கு மவுசு கூடியது.  விலையும் மளமள வென அதிகரித்தது.

கிட்டார் செய்யும் கம்பெனிக்கார்ர்கள் எல்லாம் ஆப்ரிகன் ரோஸ்வுட் புமிங்கோ புமிங்கோ என்று அலைந்தார்கள். புபிங்கோ கிட்டார் கம்பெனிகளின் தாரக மந்திரம் ஆனது.

இதுதான் ஆப்ரிகன் ரோஸ்வுட் பிரபலமான கதை,  புபிங்கோ சரித்திரம்.

காசுக்கேத்த பணியாரம்

காசுக்கேத்த பணியாரம் என்பது தமிழ்ப் பழமொழி.  ஒரே பொருள் ஒரு ருபாய்க்கும் கிடைக்கும்.  ஒன்பது ரூபாய்க்கும் கிடைக்கும்.  அப்படி கிட்டார் கம்பெனிகள் பல மரங்களை இதற்கு பயன்படுத்தினார்கள். 

கிட்டார் மரங்கள்

அவற்றையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.  இவற்றை கிட்டார் மரங்கள் என்றே அழைத்தார்கள் (GUITAR TONE TREES).  அந்த மரங்கள், ஆல்டர், பாஸ்வுட்,  மகோகனி,  ஸ்வேம்ப்ஷ், வால்நட்,  மேப்பிள்,  ரோஸ்வுட்,  எபனி,  வென்ஜ்; (எ) நெக்வுட்,  மற்றும் க்கோவா (ALDER, BASS WOOD, MAHOGANY, SWAMP ASH, WALNUT, MAPPLE, ROSE WOOD, EBONY, VENGE (NECK WOOD), KOA). இந்த மரங்கள் எல்லவற்றிலும் செய்யலாம் கிட்டார். காசுக்கேற்ற பணியாரம்.

கரையான்கள் யோசிக்கும்.

ஆப்ரிகன் ரோஸ்வுட் பார்க்க அசப்பில் இந்தியன் மற்றும் பிரேசில் ரோஸ்வுட் மரங்கள் மாதிரியே இருக்கும்.  ஆனால் அவை இரண்டையும் விட எடையும் அதிகம் ! உறுதியும் அதிகம் !

விலை உயர்ந்த அத்தனை மரச் சாமான்களையும் ஆப்ரிக்கன் ரோஸ்வுட் மரத்தில் செய்கிறார்கள்.  பூசணங்கள்,  மரவண்டுகள் மற்றும் கரையான்கள் புபிங்கோ அருகில் வர யோசிக்கும்.

கவர்ச்சிகரமான மரம்

இந்த மரத்தில் சுலபமாக வேலை பார்க்கலாம்.  ஆனால் இதன் மிகையான கடினத்தன்மை காரணமாக,  இதில் பயன்படுத்தும் கருவிகள் முனை மழுங்கிப் போகலாம்.

மரங்கள் ஊதா நிறமாக, அத்துடன் சிவப்பு மற்றும் காவி நிறம் கலந்தவைகளாக கவர்ச்சிகரமா தோற்றம் தரும்.

எந்த மரச்சாமான்களுக் கெல்லாம் உறுதியும், அழகும் வேண்டுமோ, அத்தனைப் பொருட்களையும் புபிங்கோ மரத்தில் செய்யலாம்.

முரட்டு வேலைகளுக்கு தோதானது

கிட்டார், பியானோ உட்பட பலவகை இசைக் கருவிகள், அவற்றிற்கான உதிரி பாகங்கள், மரச் சாமான்களை அலங்கரிப்பதற்கான வீனீர்கள், தரம் மிகுந்த மேஜை நாற்காலி போன்ற மரச்சாமான்கள், ரயில் பாதைகளுக்கான அடிக்கட்டைகள், படகுகள் கட்டுமானம், மற்றும் கட்டிடங்களில் படிக்கட்டுகள் அமைப்பது ஆகியவை. இப்படிப்பட்ட முரட்டு வேலைகளுக்கு தோதான மரம்.

புபிங்கோ மரங்கள் 20 முதல் 40 மீட்டர் உயரம் வளரும்.  இதில் நெளிவு சுளிவுகள் இல்லாமல்   நெட்டுக்குத்தான கம்பம்போலவே> 10 முதல் 20 மீட்டர் உயரம் வளரும். 

அடிமரம் ஏகப்பட்ட கனத்திற்கு குந்தாணிபோல பருத்து வளரும்.  அடி மரத்து விட்டம் ஒரு முதல் இரண்டு மீட்டர் மிரட்டும் அளவுக்கு அகன்று இருக்கும்.

உலகின் சிறந்த கட்டை மரங்கள்

உலகின் மிகச்சிறந்த 10 கட்டை மரங்களில் (TIMBER WOODS) ஒன்று இந்த புபிங்கோ மரம். அந்த 10 மரங்களில் 2 வது நிலையில் இருக்கும் மரம் புபிங்கோ.  முதல் நிலையில் இருப்பது பர்ப்பிள் ஹார்ட் வுட் (PURPLE HEART WOOD) என்பது.  அடுத்து இருப்பவை, ரோஸ்வுட் மரம், லிக்னம் விட்டே, எபனி,  போகட் வுட் மற்றும் அகார் வுட் (ROSE WOOD, LIGNUM VITAE, EBONY, BOGOT WOOD, AGAR WOOD).

சதுப்பு நிலக்காடுகள்

சதுப்பு நிலக் காடுகள்,  ஆற்றுப் படுகைகள்,  ஏரிக்கரைகள் ஆகியவற்றில் இந்த மரங்கள் நன்கு வளரும்.  பருவக் காலங்களில் மழைநீர் தேங்குவதால் மரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. 

சுண்ணாம்பு கலந்த மண்

அமிலத்தன்மை,  உள்ள மண்ணிலும் நடுத்தரமான காரமண்ணிலும் வளரும்.  ஆனாலும் வடிகால் வசதி வேண்டும்.  புபிங்கோ மரங்கள் வளர நல்ல சூரிய வெளிச்சம் வேண்டும். களிமண்,  சுண்ணாம்புத் தன்மை,  இருமண்பாடான மண்> போன்றவை இதற்குப் பொருத்தமான மண்வகைகள்.

மேலே சொல்லப்பட்ட மரவகைகளில் அதிக விலைக்கு விற்பனை ஆவது போகாட்டி மரம்(BOCOTE TREE).

FOR FURTHER READING

WWW.TROPICAL.THE FERNS.INFO – USEFUL TROPICAL FRUITS – AFRICAN  ROSE WOOD)

WWW.EN.M.WIKIPEDIA.ORG-‘GUIBOURTIA

WWW.THOMPSON MAHOGANY-COM.  “EVERY THING YOU NEED TO KNOW ABOUT BUBINGO”

WWW.BREED LOVE MUSIC.COM – “BUBINGO”

WWW.SOUNDUN LIMITED.CO.UK – “GUITAR TONE WOODS’

WWW.WOODWORKERSSOURCE.COM  – WOOD DATABASE AND SHARABLE LIBRARY.

WWW.HITCH COCK AND KING.CO.UK “TOP 10 HARDEST WOODS IN THE WORLD”

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

    

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...