Monday, June 19, 2023

MUMMY BOX TREE SCARLET CORDIA 43. மம்மி பெட்டி மரம் அச்சி நறுவிலி

 

மம்மி பெட்டி மரம்
அச்சி நறுவிலி 

அச்சிநறுவிலிஎன்று சொன்னால் லத்தீன் மொழி பேசுவது மாதிரி அந்நியமாய்ப் பார்க்கிறார்கள், ‘கார்டியாஎன்று சொன்னதும் அப்பிடி தமிழ்ல சொல்லுங்க என்கிறார்கள். தமிழ்ல பேசிப்பழகலாம் வாங்க ! அச்சிநறுவிலி !

தமிழ்ப்பெயர்: அச்சிநறுவிலி (ACHINARUVILI)

பொதுப் பெயர்கள்: ஸ்கேர்லட் கார்டியா> ஆரஞ்சு ஜீஜர் ட்ரீ> செபஸ்டியன் பிளம் ட்ரீ> ஜீஜர் ட்ரீ  (SCARLET CORDIA, ORANGE GEIGER TREE, SEBASTIAN PLUM TREE, GEIGER TREE)

தாவரவியல் பெயர்; கார்டியா செஸ்டினா  (CORDIA SABESTINA)

தாவரக் குடும்பம் பெயர்: போரோஜினேசி (BOROGINACEAE)

தாயகம்: கரிபியன் தீவுகள்> மத்திய மற்றும் வட அமெரிக்கா> கியூபா  (CARIBBEAN ISLANDS, CENTRAL & NORTH AMERICA, CUBA)

அச்சி நறுவிலியின் பலமொழிப் பெயர்கள்:

பெங்காலி: கம்லி> புகல் ரக்டாரக்  (KAMLI, BUGAL RAKTARAG)

இந்தி: லால் லசோரா> போகாரி  (LAL LASORA, BOGARI)

கன்னடா: சல்லி கெண்டலா  (CHALLE KENDALA)

தெலுங்கு: விரிகி  (VIRIGI)

அறிமுகம்: 

அழகான பூ மரம், என்பது இதன் சிறப்பு, பூங்காக்களில் மற்றும் தோட்டங்களுக்குக் கூட ஏற்றது.

ஆண்டு முழுவதும் இலைகளை உதிர்க்காமல், ஆழ்ந்த பச்சை நிற இலைகளின் பின்னணீயில், ஆரஞ்சு நிறப் பூக்களைப் பார்க்க அம்சமாக இருக்கும்.  நிறம் கனகாம்பரம் பூக்களை நினைவு படுத்தும். ஆனால் அளவில் பெரியவை. பூக்கள் ஏறத்தாழ ஆண்டு முழுவதும் கொத்துக்களாகப் பூக்கும். கோடையில் கூடுதலாய் பூத்து களைகட்டும்.

 நடுத்தரமான அளவுள்ள மரம், 7 முதல் 10 மீட்டர் உயரம் வளரும்> அழகான ஆரஞ்சு நிற பூக்களைக் கொண்டது, 5 முதல் 7 இதழ்களைக் கொண்ட புனல் வடிவ பூக்களாக மலரும், நான்கு செ.மீ. நீளமுள்ள பூக்கள், கிளை நுனிகளில் பூக்கும். பழங்கள், வெள்ளை நிறத்தில் கூம்பு வடிவத்தில், 2 - 4 விதைகள் கொண்டதாக இருக்கும். பழங்களை சாப்பிடலாம்.

     இலைகள் பெரியவை: அடர்த்தியான பச்சை நிறம் உடையவை: மேற்புறம் சொரசொரப்பாக இருக்கும்: சேண்ட் பேப்பருக்குப் பதிலாக இதன் இலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

அச்சி நறுவிலியின் பல மொழிப் பெயர்கள்:

ஆங்கிலம்: லசோடா  (Lasoda)

அரபிக்: டாலெக்  (Dalek)

மியான்மர்: லாசுரா> தானாட்  (Sanura, Thanat)

பொதுப் பெயர்கள்:

     அலோ வுட்> ஜெரானியம் ட்ரீ> லார்ஜ்; லீஃப் ஜீஜர் ட்ரீ> ஆரஞ்சு> ஜீஜர் ட்ரீ> கீ டிரம்பட்> செபஸ்டின் பிளம் ட்ரீ> ஸ்பேனிஷ்; கார்டியா> டெக்ஸாஸ் ஆலிவ்> சிபி கோட்டி> (Aloe Wood, Geranium Tree, Large Leaf, Geiger Tree, Orange Geiger Tree, Key Trumphet, Sebestian Plum Tree, Spanish Cordia, Texas Olive, Zibi Cote)

மம்மி:

மரங்கள் மிருதுவானவை: எகிப்தில் உள்ள பிரமிடுகளில் மம்மிக்கள் வைப்பதற்காக செய்யும் பெட்டிகளை  (Mummy Cases) இந்த மரத்தில் செய்திருக்கிறார்கள்> என்பது ஆச்கரியமான செய்தி.

மம்மிப் பெட்டிகள்

பிரமிடுகளில்> இறந்தவர்களின் உடல்களை வைக்கும் பெட்டிகளைச் செய்ய ஒரு சில மரங்களை மட்டுமே பயன்படுத்துவார்கள்> அவ்வகையில் அச்சிநறுவலியின் மரங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். 

அச்சி நறுவிலி

அத்தோடு சைகாமோர் அத்தி மற்றும் லெபானான் நாட்டு செடார் மரங்களிலும் இந்தப் மம்மிப் பெட்டிகளைச் செய்துள்ளனர்.  இதில் முதலிடம் செடார் மரங்களுக்கு> இரண்டாவது> மூன்றாவது> நான்காவது  இடங்கள்> சைகாமோர்> அத்திமரங்கள் மற்றும் அச்சிநறுவிவிக்கு.

கடினத்தோல் விதைகள்:

பழங்களை உலர்த்தி> உடைத்து அதிலிருந்து விதைகளை எடுக்க வேண்டும்.  விதைகள் கடினமான தோலுடன் இருப்பதால்.  நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். 

இதற்கு கொதிக்கும் நீரில் விதைகளை 24 மணிநேரம் முக்கி வைத்திருக்க வேண்டும்.  அதன் பின்னர் விதைகளை> ஒரளவு நிழலாக இருக்கும் இடத்தில் விதைத்தால் 100 க்கு 80 விதைகள் பழுதில்லாமல் முளைக்கும். 

முளைத்து வந்த செடிகள் 6 முதல் 10 செ.மீ.  வளர்ந்த பின்னால் பாக்கட்டுகளில் எடுத்து நடலாம்.  சுமார் ஏழு மாதங்கள் வளர்ந்த கன்றுகளை எடுத்து தேவையான இடங்களில் நடவு செய்யலாம்.

45 செ.மீ. நீள> அகல ஆழமுள்ள குழிகளை எடுக்க வேண்டும்.  குழிகளை எடுத்த பின்னர் ஒரு வாரம் ஆறவிடுவது நல்லது. 

பின்னர் பத்து கிலோ மக்கிய குப்பை உரம் மற்றும் ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கை> குழியிலிருந்து எடுத்த மேல் மண்ணுடன் நன்கு கலக்க வேண்டும். 

குழியில் முதலில் அடியில் இருந்து எடுத்த மண்ணை நிரப்ப வேண்டும்.  பின்னர் தொழு உரம் கலந்த மேல் மண்ணை நிரப்ப வேண்டும்.  குழியினை முழுமையாக நிரப்க் கூடாது.  அரையடி முதல் முக்கால் அடிக்கு குழியினை மூடக் கூடாது.  பின்னர் குழியில் நடுவில் கன்றுகளை நட வேண்டும்.

பழங்கள் சிறியவை வெண்மையானவை. பழங்களை இந்தியா மற்றும் சில நாடுகளில் பச்சையாகவும் சமைத்தும் சாப்பிடுகிறார்கள். ஊறுகாய் போடுவது பரவலாக நடைமுறையில் உள்ளது. பழத்தின் தசையில் ஒரு விதமான பசை தயாரிக்கும் பழக்கம் காலம் காலமாக உள்ளது.

இதன் மரங்கள் வணிகரீதியில் பயனாகிறது: குறிப்பாக கதவுகள், மேiஐ நாற்காலி போன்ற மரச் சாமான்கள் செய்ய மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் உபயோகமாகிறது.  அகவ்ஸ்டிக் கிட்டார் (ACOUSTIC GUITAR) போன்ற இசைக் கருவிகள் செய்யவும் பயன்படுகிறது.  இசைக் கருவிகள்> மற்றும் அதற்கான உதிரிபாகங்களைச் செய்ய தரமான மரவகை வேண்டும்.  மேலும் கடைசல் வேலைக்கு உதவும் மரங்களில் மட்டுமே இவற்றைச் செய்ய முடியும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 185 மீட்டர் உயரம் வரை அச்சி நறுவிலி மரங்கள் நன்றாய் வளரும்.

மகரந்த சேர்க்கை:

பறவைகள்> பட்டாம் பூச்சிகள் மற்றும் இதர பூச்சி வகைகளை அச்சி நறுவிலி தேனும் மகரந்தமும் தந்து கவரும். அதற்கு பிதி உபகாரமாக வற்றின் மகரந்த சேர்க்கைக்கு உதவும்.

மண்மற்றும் சூழல்:

ஈரச் செழிப்புடைய மண்> வடிகால் உள்ள மண்> மணற்பாங்கான> பாறைகள் நிறைந்த கடற்கரைப் பிரதேசங்கள் அச்சிநறுவிலிக்கு ஏற்ற மண்வகைகள். 

பிரச்சினையான மண்கண்டத்தைக் கூட சமாளிக்கும். கடுமையான வறட்சியைத் தாங்கும். வெள்ளத்தையும் தாங்கும். நிறைய சூரிய வெளிச்சம் தேவை. பனிப் பொழிவைத் தாங்காது.  மில மண் மற்றும் காரத் தன்மை உள்ள மண்ணிலும் நன்கு வளரும்.

விதைகளிலிருந்து எண்ணெய் (Essential Oil) எடுக்கலாம்: இதனை பலவிதமான நோய்களை குணப்படுத், பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். 

மருத்துவப் பயன்கள்

நாட்டுப்புறங்களில் தங்கள் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில், இதன் பட்டைகள், பூக்கள், மற்றும் பழங்களை மருந்துப் பொருட்களாக உபயோகப் படுத்துகிறார்கள்.

இருமல் மற்றும் சுவாசமண்டலம் தொடர்பான மற்றும் பாலியல் நோய்களை  நோய்களை குணப்படுத்த இதன் பூக்களிலிருந்து தேனீர் தயாரித்து அருந்தும்படி தருகிறார்கள்.

மரத்தின் பட்டை சாற்றினை தடவி காயங்களை குணப்படுத்துகிறார்கள்:

இலைகளின் வடிநீர் மற்றும் எண்ணெயை வெதுவெதுப்பான நீரில் கலந்து ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தலைவலி சுளுக்கு போன்றவற்றை குணப்படுத்தலாம்.

ஆராய்ச்சி மாணவர்கள் கவனிக்க

நிறைய மருத்துவ குணங்களும்> ஆன்டி ஆக்ஸிடெண்ட்களும் கொண்ட இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டால் மேலும் பயனுடையதாக இருக்கும்.

FOR FURTHER READING

WWW.TOPTROPICALS.COM – EGYPTIAN MUMMY CASES  

 WWW.TNTREEPEDIA.COM – SCARLET CORDIA, CORDIA SABESTINA 

 WWW.SITES.SODGEE.COM – EGYPTIAN MUMMY CASES

WWW.FLOWERSOFINDIA.NET / CORDIA SABESTINA 

WWW.MYBAGEECHA.COM / CORDIA SABESTINA  - GEIGER TREE

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

 

 

   

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...