Monday, June 19, 2023

MULTIPURPOSE TREE CEYLON IRON WOOD 36. பட்டை பழம் கட்டை தரும் உலக்கைப் பாலை

பட்டை பழம் கட்டை தரும் 
உலக்கைப் பாலை

உலக்கைப் பாலை, சப்போட்டா ஒட்டு கட்ட உபயோகப்படுத்தும் வேர்ச் செடிக்கான இலுப்பை மரம், இதன் மரம் மிகவும் கடினமானது மற்றும் உறுதியானது, இலங்கையில் ரயிலை அறிமுகம் செய்தபோது, ரயில் பெட்டிகள்  கட்ட, ரயில் பாதைகளில் ஸ்லிப்பர் கட்டைகள் போட என்று இதனைப் பயன்படுத்தினார்கள், மரத்தின் பட்டைகளில் மருந்து செய்கிறார்கள், கொட்டைகளில் சமையல் எண்ணெய் எடுக்கிறார்கள், பழங்களை சாப்பிடலாம், ராஐஸ்தான், குஐராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பழங்குடி மக்களின் வாழ்வாதாரமாக  உள்ளது.

பொதுப் பெயர்கள்: சிலோன் அயன் வுட், மில்க் ட்ரீ, வெட்ஜ்; லீவ்டு ஏப் பிளவர் (CEYLON IRON WOOD, MILK TREE, WEDGE LEAVED APE FLOWER)

தாவரவியல் பெயர்: மணில்காரா ஹெக்சாண்ட்ரா (MANILKARA HEXANDRA)

தாவரக் குடும்பம் பெயர்: சப்போட்டேசி (SAPOTACEAE)

தாயகம்: இந்தியா

உலக்கைப் பாலை மரத்தின் பிற மொழிப் பெயர்கள்

தமிழ்: உலக்கைப்பாலை (ULAKKAI PALAI)

இந்தி: ட்ரூத், கிர்னி (DRUTH, KHIRNI)

மராத்தி: கரனி, கிரனி, ரஐனா, ரஞ்சனா, ராயன், ராயனி (KARANI, KIRANI, RAJANA, RANJANA, RAYAN, RAYANI)

மலையாளம்: கிரீனி, பழமுன்பாலா (KRINI, PAZHAMUNPALA)

தெலுங்கு: அங்கலு, நந்திவிரிக்ஷமு, பழசேட்டு (ANKALU, NANDIVRIKSHAMU, PALASETTU)

கன்னடா: பத்குலா (BAKULA)

பெங்காலி: கிரிக்கியூர் (KRIKHIYUR)

கொங்கணி: கர்ணி, ரஞ்சனா (KARNI, RANJANA)

குஐராத்தி: கிர்ணி, ராயன் (KHIRNI, RAYAN)

சமஸ்கிருதம்: ஷ்;ரீனி, நிம்பிஜா, ரஐதனா (KSHRINI, NIMBIJA, RAJADHANA)

கல்லூரியில் படித்த காலத்திலிருந்து நான் மறக்காத தாவரவியல் பெயர் மணில்காரா ஹெக்சாண்ட்ரா (MANILKARA HEXANDRA), சப்போட்டா ஒட்டுகட்ட உபயோகப்படும் இலுப்பைச்செடி.

இலுப்பை குடும்ப மரம்

அது இலுப்பை குடும்பத்தைச் சேர்ந்தது. சப்போட்டா ஒட்டு கட்ட இந்த செடிகளைத்தான் உபயோகப்படுத்துவார்கள், இவை எல்லாமே எனக்கு மறக்காத செய்திகளாக என் மனசுக்குள் இருந்தவை> ஆனால் உலக்கைப்பாலை, என்ற தமிழ்ப்பெயர்தான், நான் புதியாதக் தெரிந்து கொண்டது.

கணுப்பாலை என்பது இன்னொரு பெயர்

மரத்தின் பெயரொடு பாலை என்ற சொல் சேருவதால் இது நமது பாலை நிலத்துக்கு உரியமரம் என்பது புரிகிறது. உலக்கை? அந்த நாளில் அதிகம்> நம்ம ஆட்கள் உலக்கைகள் செய்யப் பயன்படுத்தி இருப்பார்கள் என நினைக்கிறேன்.  கணுப்பாலை என்ற இன்னொரு பெயரும் இதற்கு உண்டு.

இது மரமும் இல்லை, செடியும் இல்லை, பெருஞ்செடி சிறுமரம் என்று சொல்லலாம்: ஆனால் கிட்டத்தட்ட 12 மீட்டர் உயரம் வரை வளரும்: இலைகள் ஆழ்ந்த பச்சை நிறத்தில் கோள வடிவில் இருக்கும்> சிறிய பூக்கள் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் பூக்கும்: அக்டோபர் வரையான காலங்களில் பூக்கும்.  ஏப்ரல் மே மாதங்களில் பழங்கள் தரும்.

இந்தியா, சைனாவுக்கு சொந்தம்

இந்தியா, சைனா உட்பட பல தெற்கு ஆசிய நாடுகளை சொந்தமான மரம் இது.  இதர நாடுகள், பங்ளாதேஷ், ஸ்ரீலங்கா, இந்தோசைனா, கம்போடியா,மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்.

ஒட்டு கட்ட உகந்ததுலக்கைப்பாலை

முக்கியமாக சப்போட்டா செடிகளில் ஒட்டு கட்டுவதில் உலக்கைப்பாலை செடிகளை வேர்ச் செடிகளாகப் (ROOT STOCK) பயன்படுத்துகிறார்கள்.  ஒட்டுக் கட்டுவது என்பது இரண்டு பண்புகளை ஒன்று சேர்க்க இரண்டு வகைச் செடிகளை ஒன்றாகச் சேர்ந்து ஒரே செடியாக உருவாக்குவது.

ஒட்டுச் செடிகள்

மண்ணில் வேர்ப்பிடித்து வளர பயன்படுத்தும் செடிக்கு வேர்ச்செடி என்று பெயர்> தரமான நிறைய மகசூல் தரும் ஒரு ரகத்தை மேலே ஒட்டும்படி செய்வார்கள்.  இதைத்தான் ஒட்டுச் செடிகள் (GRAFTED PLANTS) என்கிறோம்.  மேலோ ஒட்டுவதற்கு பயன்படுத்தும் செடியின் பெயர் சயான்(SCION).

இதுபோன்ற ஒட்டுச் செடிகளை தயார் செய்வது என்பது ஒரு உயர் தொழில் நுட்பம். மிகுந்த பயிற்சி பெற்றவர்கள் தான் இதனைச் செய்வார்கள்.  ஆனால் கொரியா> ஐப்பான் போன்ற நாடுகளில்> நிலப்பரப்பு ரொம்பக் குறைவு.

மணிக்கு 800 ஒட்டுச் செடிகள்

அவர்கள் எதையும் மிகவும் கவனமாக, சீராக செய்ய வேண்டுவது அவசியமாகிறது: அதனால் அவர் ஒட்டு வேலைகளைச் செய்ய கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள்: அந்தக் கருவிகள் கொண்டு ஒரு மணி நேரத்தில் 800 ஒட்டுச் செடிகளை உருவாக்குவதாக சொல்லுகிறார்கள். நாம் கூட இதனை கற்றுக் கொள்ளலாம்.

இதன் மரம் மிகவும் கடினமானது மற்றும் உறுதியானது. இலங்கையில் வட கிழக்கு> மத்தியப்பகுதிகள்> மற்றும் தென் பகுதியில் அம்பாந்தோட்டை> மாத்தறை மாவட்டங்களில் அதிகம் உள்ளன.

இலங்கையில் ரயிலுக்கு உதவியது

இலங்கையில் ரயிலை அறிமுகம் செய்தபோது> உலக்கைப் பாலைதான் உதவியாக இருந்தது. ரயில் பெட்டிகள்  கட்ட> கட்டைகள் தந்தது. ரயில் பாதைகளில் ஸ்லிப்பர் கட்டைகள் போடவும்  இதுதான் கட்டைகள் தந்தது.  இன்னும் கூட அந்த கட்டைகள் பார்த்த மாதிரியே இருக்கிறது  என்கிறார்கள்.

சொன்னார்கள் இரும்பு மரங்கள்

உறுதியான இதன் பண்புகளை வைத்துத்தான் வெள்ளைக் காரர்கள், இதனை சிலோன் இரும்பு மரங்கள் (CEYLON IRON WOOD) என்று சொன்னார்கள்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளிக் கூடங்களில் உலக்கைப்பாலை  மரங்கள்தான் உபயோகம் ஆனது.  அந்த மரங்கள் எதுவும் இன்றளவும் இம்மியும் பழுதுபடவில்லை என்று சொல்லுகிறார்கள். 

அதனால் உலக்கைப்பாலை  மரங்கள் அதன் உறுதியான தன்மைக்கு பெயர் போனவை.

இரவல் நாக்கு வேண்டும்

லக்கைப்பாலை பழங்கள் இனிப்பானவை, சுவையானவை, சாப்பிட இரவல்  நாக்கு வாங்க வேண்டும். ஊட்டச் சத்துக்கள் நிறைந்தவை, வைட்டமின் மாத்திரைகள் என்று அழைக்கப்படுபவை..

இதில் 675 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் சத்து அடங்கி உள்ளது எங்கிறார்கள்.

பழங்குடி மக்களின் வாழ்வாதாரம்

அவர்களுக்கு உணவாகவும், வருமானம் தரும் வகையிலும் வாழ்வாதாரமாக உள்ளது. ராஐஸ்தான், குஐராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக உள்ளது, குறிப்பாக சிறு விவசாயிகளுக்கும், நிலமில்லாதவர்களுக்கும் உறுதுணையாக உள்ளது.

பழங்குடி மக்கள் அனைவரும் இந்த பழங்களை முக்கியமான உணவாகப் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் இதன் பழங்களை விற்பதன் மூலம்> ஆயிரம் இரண்டாயிரம் என வருமானமாகக் கிடைக்கிறது. 

பட்டைகளும் விற்பனை ஆகிறது

இந்த மரத்தின் பட்டைகளை எடுத்து உலர்த்தி அவற்றையும் விற்பனை செய்கிறார்கள்.  இதன் பட்டையை மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்யப் பயன்படுத்துகிறார்கள்.  பழங்குடி மக்கள் இதன் பட்டையில் அவர்களே மருந்துகள் தயார் செய்கிறார்கள்.

எண்ணை தரும் கொட்டைகள்

இதன் கொட்டைகளில் எடுக்கும் எண்ணெயை சமையல் செய்யப் பயன்படுகிறது. இதில் 25 சதம்  எண்ணெய்ச் சத்து உள்ளது.

பழங்களில் வைட்டமின் மட்டுமின்றி புரதசத்து, மாவுச்சத்து சக்கரைச்சத்துக்கள், இரும்புச்சத்து உட்பட பலவித தாது உப்புக்களும் அடங்கி உள்ளன.

வீட்டுத்தோட்ட மரம்

இந்தியாவில், தென்னிந்தியா, வடக்கு மத்திய இந்தியா, குஐராத், மற்றும் ராஐஸ்தான் ஆகிய பகுதிகளில், இந்த மரங்கள் அதிகம் உள்ளன.  குறிப்பாக சில இடங்களில் வீட்டுத் தோட்டங்களிலும் இந்த மரங்களை வளர்க்கிறார்கள்.  வீட்டுத் தோட்டங்களில் வளர்க்க எல்லா தகுதிகளையும் உடைய மரம் இது.

இந்த மரங்கள் பரந்துபட்ட மண் வகைகளில் வளரும்,  வெப்பமான மற்றும் மித வெப்பமான பகுதிகளில் வளரும்.  விதை மூலம் பயிர்ப் பெருக்கம் செய்கிறார்கள்.

லக்கைப்பாலை தேவை அதிகம்

வியாபார ரீதியில், அதிகபட்சமாக இதன் செடிகளை ஒட்டு கட்டுவதற்காப் பயன்படுத்தி வந்தார்கள்.  ஆனால் சமீபகாலமாக லக்கைப்பாலை க்கு பதிலாக இலுப்பைச் செடிகளையே வேர்ச்செடிகளாகப் பயன்படுத்துகிறார்கள். 

இதற்குக் காரணம் போதுமான உலக்கைப்பாலைச் செடிகள் கிடைக்காததுதான் என்கிறார்கள்.  இலுப்பையும் இதுவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது, என்பதனால் பிச்சினை எதும் ஏற்படாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கொசுறு

இந்தியாவில் அத்தனை நர்சரிக் காரர்கள் பெரும்பாலும் ஆந்திரா ராஐமுந்திரியில் செடிகளை வாங்கி விற்பனை செய்வதால்> உலக்கைப்பாலை பற்றி உள்ளபடியே கவலைப்படுவதில்லை>  இலுப்பையாவது உலக்கையாவது என்கிறார்கள்.

FOR FURTHER READING

WWW.FLOWERSOFINDIA.NET “CEYLON IRON WOOD”

WWW.EN.WIKIPEDIA.ORG- “GRAFTING”

WWW.EN.WIKIPEDIA.ORG-“MANIKARA HEXANDRA”

WWW.TA.WIKIPEDIA “PALAIMARAM”.

WWW.RESEARCHJOURNAL.CO.IN / “UNDER UTILIZED FRUIT MANILKARA HEXANDRA”

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...