பல பயன் தரும் பழமரம் டெக்சாஸ் பெர்சிமான் |
டெக்சாஸ்
பெர்சிமான் அழகான மரம். மரவேலைகளுக்கு
பயன்படும், பறவைகள், பட்டாம் பூச்சிகள், பாலூட்டி விலங்குகள் ஆகியவற்றிற்கு தேனும், பழமும், மகரந்தமும் தரும், இதன் பழங்களை சாப்பிடலாம், அதிலிருந்து சாயம் எடுக்கலாம், இலைகள்
அழகானவை, பூக்கள் வாசம் உடையவை, மெக்சிகோவினர் இன்னும் கூட
தோலுக்கு சாயமேற்ற இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள், இதில் சிற்பம் செய்யலாம், சிலைகள் செய்யலாம், கருவிகளுக்கு கைப்பிடிகள் செய்யலாம், மேஜை
நாற்காலி என மேலான மரச்சாமான்களும் செய்யலாம், குறைந்த
அளவே மக்களால் பேசப்படும் மரம்.
தமிழ்ப்பெயர்: டெக்சாஸ்
பெர்சிமான் (TEXAS
PERSIMON TREE)
பொதுப்
பெயர்கள்: பெர்சிமான், மெக்சிகன் பெர்சிமான், பிளாக் பெர்சிமான்> சப்போட்டி பிரிட்டோ (PERSIMON, MEXICON PERSIMON, BLACK
PERSIMON, CHAPOTE, CHAPOTE PRETO)
தாவரவியல்
பெயர்: டயோஸ்பைரோஸ் டெக்ஸானா (DIOSPYROS TEXANA)
தாவரக்
குடும்பம் பெயர்: எபனேசி (EBENACEAE)
தாயகம்:
வட அமெரிக்கா, மெக்சிகோ (NORTH AMERICA & MEXICO)
பழங்குடிகள்
பயன்படுத்திய மரம்
பிரி கொலம்பியன்
பழங்குடிகள் (PRE –
COLUMBIAN PEOPLE) இதிலிருந்து ஒரு வகையான கருப்புச் சாயம் தயாரித்து
பயன்படுத்தினார்கள். மிருகங்கள் அல்லது
கால்நடைகளின் தோல்களில் அழகான
ஆடைகள் மற்றும் இதர ஆபரணங்கள் செய்து பயன்படுத்தினர்.
மெக்சிகோவினர்
இன்னும் கூட தோலுக்கு சாயமேற்ற இதனைப்
பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மரத்திற்கு
மெக்சிகோவும் தாய்மண் என்பது குறிப்பிடத்தக்கது.
“எபனி” என்றால்
தரமான மரம்
இது ஒரு எபனி வகை மரம், எபனி
என்றால் தரமான மரம். எபனி என்றால் கருப்பு
வயிரப் பகுதி (HEART WOOD) கொண்ட மரம். எபனி என்றால் இழைத்தும் கடைசல் செய்தும்
பயன்படுத்தும் மரம். எபனி என்றால் சிற்பம்
செய்யலாம். அதில் சிலைகள் செய்யலாம். அதில் கருவிகளுக்கு கைப்பிடிகள் செய்யலாம். அதில் மேஜை நாற்காலி என நாலாவிதமான மரச் சாமான்களும் நறுவிசாக செய்யலாம்.
அத்தனை வேலைகளும் செய்ய ஈடு
கொடுக்கும் இணையற்ற மரம் இந்த டெக்ஸஸ் பெர்சிமான் மரம். இதன் வயிரப்பகுதி
கருப்பாக இருக்கும். வயிரப்பகுதி வாகாக
வளர்ந்த மரங்களில்தான் இருக்கும். இதன்
மேற்புற மரம் (SOFT
WOOD) மஞ்சளாக இருக்கும்.
பழங்களை
சாப்பிடலாம்
இதன்
பழங்களை சாப்பிடலாம். இனிப்பாக இருக்கும்
இன்றும் கூட புட்டிங் மற்றும் கஸ்டர்ட் (PUDDING
& CUSTARD) போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்க> இந்தப்
பழங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
“புட்டிங்” என்பது
இறைச்சியோடு சேர்ந்துத் தயாரிக்கும் “சாசேஜ்;”
போன்ற ஒரு உணவுப்பொருள். “கஸ்ட்டர்ட்” என்பது
பால் அல்லது “கிரீம்”
சேர்த்துத் தயாரிக்கும் ஒருவகையான உணவுப்பொருள்.
மார்ச் -
எப்ரல் மாதங்களில் பூக்கும்
மார்ச்
மற்றும் ஏப்;ரல் ஆகிய இரு மாதங்களில் பூக்கும்.
பூக்கள் வெள்ளை> மற்றும் பச்சை நிறங்களில் பூக்கும்.
பூக்கள் நறுமணம்
மிக்கவை. பூக்கள் ஜாடி அல்லது குடுவை போல (URN
SHAPED) தோற்றம் தரும்.
எங்கு
வளரும்?
முழுசாக மற்றம் சுமாராக சூரிய வெளிச்சம்
கிடைக்கும் இடங்கள், ஒரளவு
உப்புத்தன்மை உள்ள நிலங்கள், 7.2 க்கும் மேல் உள்ள கார அமில நிலை (PH),
பொதுவான வறண்ட சூழல், அதிகமான வெப்பம் மற்றும் வறட்சி நிலவும் பகுதிகள், நல்ல வடிகால் வசதி உள்ள சுண்ணாம்புக்கல் கொண்ட இருமண்பாட்டு நிலங்கள்
(LIMESTONE LOAMS),
களிமண், சரளையும் மணலும்
நைட்ரேட் உப்பும் உடைய பகுதிகள் ஆகியவற்றில் நன்கு வளரும்.
கால்சியம்
கார்பனேட் உப்பு நிறைந்த வறண்ட நிலப்பரப்பை “காலிச்சி” நிலப்பரப்பு
(CALICHE SOILS) என்று
சொல்லுவார்கள். கடல் மட்டத்திலிருந்து 5100 அடி
உயரம் வரை இந்த மரங்களை வளர்க்கலாம்.
மரங்கள்
மற்றும் இலைகள்
ஒன்றுக்கும்
மேற்பட்ட அடிமரத் தூர்களுடன் வளரும் சிறு
மரம். இந்த மரம் 9 முதல் 12
அடி உயரம் வரை வளரும். இலைகள் கரும்பச்சை நிறமாக
இருக்கும். இலைகளின் மேற்பரப்பு பளபளப்பாக
இருக்கும். இலைகளின் அடிப்புறம் நுட்பமான மயிர்க் கற்றைகளால் மூடி இருக்கும். மரங்கள்
20 முதல் 50 ஆண்டுகள் வரை உயி;ர் வாழும்.
விதைகளை
விதைக்கலாம்
விதைகள்
மூலம் புதிய கன்றுகளை உருவாக்கலாம்.
விதைகளை புதியதாகப் பயன்படுத்தலாம்.
சேகரித்தவுடன் விதைக்கலாம்.
சேமித்து வைத்தும் விதைக்கலாம். ஜூPலை முதல் செப்டெம்பர் வரையான மாதங்களில்
பழங்களைப் பறிக்கலாம்.
முதிர்ந்த
கனிந்த பழங்கள் ஊதா மற்றும் கருப்பு நிறமாக இருக்கும். விதைகளை சேகரித்து, உலர்த்தி
காற்றுப்புகாத பாத்திரங்களில் போட்டு பத்திரமாக சேமிக்கலாம். ஒவ்வொரு பழத்திலும் 3 முதல் 8 விதைகள்
இருக்கும். விதைகள் செக்கச்சிவந்ததாக
முக்கோண வடிவில் இருக்கும்.
மரத்தின்
பட்டைகள் (BARK OF
TREES)
இந்த
மரத்தின் பட்டை வழுவழுப்பாக இருக்கும்.
சிவப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும். மரங்கள் முதிர முதிர பட்டைகள் உறியத் தொடங்கும்
பட்டைகள் உறிந்து உதிர்ந்த பின்னால் மரங்கள், ஊதா,
வெள்ளை, சாம்பல் நிறம் என்று பல வண்ணங்களைக் கலந்தது போன்று கவர்ச்சியான
தோற்றம் தரும்.
FOR
FURTHER READING
WWW.WILDFLOWER.ORG – “TEXAS PERSIMON TREE”
WWW.EN.WIKIPEDIA.ORG – “DIOSPYROS TEXANA”
WWW.AGGIEHORTICULTURE.TAMU.EDU – “TEXAS PERSIMON”
WWW.TXMN.ORG/ TEXAS PERSIMON (DIOSPYROS
TEXANA)
WWW.AGGIE-HORTICULTURE.TAMU.EDU/ DIOSPYROS TEXANA – TEXAS NATIVE
PLANT SPECIES
A REQUEST
I LOVE TO
SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment