Monday, June 12, 2023

MOTHERS’ MILK HAVE PESTICIDE RESIDUES நேற்று சிக்கன் குனியா…

என் அப்பா என்ன செய்யவில்லை என்றால்  விவசாய உற்பத்திக்காக டவுனிலிருந்து எதையும் வாங்கவில்லை இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்

----------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவு எண்: 3 

MOTHERS’ MILK HAVE PESTICIDE RESIDUES

 நேற்று சிக்கன் குனியா…

வேளாண்மை அறிவியலின் முரட்டு முள்தோல் நீக்கி சிக்கலான பழப் பிரதேசத்தின் குடல் நீக்கி  முட்டி நிற்கும் கொட்டை நீக்கி சுளைகளை மட்டும் சுவைக்கத் தரும் சுலபமான இயற்கை விவசாய கட்டுரைத் தொகுப்பு இது.

ரூரூரூரூரூரூரூரூரூரூரூரூரூரூரூரூரூ

இயற்கை விவசாயம் பற்றி சொல்லுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். அவை அனைத்தும் வெறுமனே கட்டுரையாக இல்லாமல் கொஞ்சம் உரையாடல் கொஞ்சம் நாடகம்; கொஞ்சம் விவரணை என இருக்கலாம் என்று யோசித்தேன். இந்த கட்டுரைக்கு நடையும் மற்றும்; உடையும் மாற்றி உள்ளேன்> அவ்வளவுதான்.

ரூரூரூரூரூரூரூரூரூரூரூரூரூரூரூரூரூரூ

இங்கு ஒரு கிராமத்தின் ஒரு குடும்பத்தில் பாஞ்சாலி கந்தசாமி எனும் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் ஒரு வைகறைப்பொழுது குடும்பச் சித்திரம் இது.

-------------------------------------------------------------------------------------------------------------------------

பாஞ்சாலி .. பாஞ்சாலி

எதுக்குங்க இப்படி கத்தறிங்க ?

ஒரு காலத்துல மச்சான் மச்சான்னு இந்த கந்தசாமி; காலையே சுத்திசுத்தி வருவே. இப்போ என்னடான்னா ஆசையா கூப்பிட்டாக்கூட கத்தறதா சொல்ற.. 

ஏய்யா நான் என்ன சும்மாவா இருக்கேன். பாத்திரப்பண்டம் தேய்க்க வேணாமா ? சமைக்க வேணாமா ? பிள்ளைங்கள பள்ளிக்கூடம் அனுப்ப தயார் செய்ய வேணாமா ? காலயில  என்னய்யா உனக்கு ஆசை வேண்டிக்கிடக்கு ?

ஆசையும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.. ஓரு அஞ்சாயிரம் குடு.. யூரியா ஒரம் வாங்கிட்டு வந்துடறேன். நெல் பயிரு அப்பிடியே உக்காந்துடுத்து. பாக்க சகிக்கலே.. இப்போ ஒரம் போடணும்.  போட்டாத்தான் அது எழுத்திருக்கும். பக்கத்துவீட்டு பரமசிவம் கூட சொன்னாரு.

பக்கத்து வீட்டு பார்வதி அக்கா என்ன சொல்லிச்சி தெரியுமா ?

என்ன சொல்லிச்சி ?

இந்தமாதிரி கண்;டகண்ட ஒரத்தை வாங்கிப் போடறதாலதான் சிக்கன்குனியா.. தக்காளிகுனியான்னு ஊருபேரு தெரியாத நோயெல்லாம் வருதாம். அவுங்களும் இனிமே இந்த ரசாயன உரங்கள பூச்சிக்கொல்லி மருந்துகள களைக்கொல்லி மருந்துகள அடிக்கறதில்;லன்னு முடிவு எடுத்துட்டாங்களாம்..

பாஞ்சாலி இதனாலதான் அந்த நோயெல்லாம் வருதுன்னு ஒனக்கு யாரு சொன்னாங்க ? 

தாய்ப்பால்ல கூட பூச்சி மருந்து விஷம் இருக்குன்னு ஆராய்ச்சியில கண்டுபிடிச்சி இருக்காங்க… ரசாயன ஒரங்கள தொடர்ச்சியா அளவுக்கதிகமா போட்டதால நம்ம நிலத்துமண்ணு கெட்டுப்போச்சின்னு விஞ்ஞானிகளே சொல்றாங்க இல்லன்னு  உங்களால சொல்ல முடியுமா ? 

ஆமா விஞ்ஞானிகள் கண்டுபிடிச்ச ஒடனெ ஒனக்கு நேரடியா வாட்ஸ்அப்ல அனுப்பறாங்க.. 

நீங்க சொல்ற இயற்கை விவசாயத்தப்பற்றி விஞ்ஞானிகள் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. தினமும் மக்கள் டீவியில மலரும் பூமியில ஏகப்பட்ட செய்திகள் சொல்றாங்க.. எண்ணைக்காவது என்னோட உக்காந்து பாத்திருக்கிங்களா ?

எண்ணைக்காவது என்னோட உக்காந்து மலரும்பூமி பாருங்க மாமான்னு கூப்டிருக்கியா ? 

இப்போ கூப்பிடறேன். இண்ணைக்கி இயற்கை விவசாயத்தப்பற்றி ஒரு கருத்துவிவாத நிகழ்ச்சியை மக்கள் டீவியும் வேலூர் இயற்கை விவசாய இயக்கமும் தொண்டை மண்டல  கூட்டமைப்பும் சேர்ந்து ஏற்பாடு செய்திருக்காங்க. ஆற்காட்டுல நடக்குது. இயற்கை விவசாயிகள் நிறையபேரு வருவாங்க. நானும் பார்வதியக்காவும் போறதா இருக்கோம். நீங்களும் வாங்க மச்சான்

பாஞ்சாலி நாம ரெண்டுபேரும் ஆற்காடு பேறோம். கருத்தவிவாத நிகழ்ச்சியில கலந்துக்கறோம்.  போயிட்டு வந்து இயற்கை விவசாயத்தை நாளைக்கே தொடங்கறோம்

8888888888888888888888    

நேற்று சிக்கன்குனியா இன்று டெங்கு பன்றிக்காய்ச்சல் நாளை ?

நாம் சாப்பிடும் சாப்பாட்டில் பாதிதான்  சாப்பாடு மிகுதி ?

தாய்ப்பாலில் கூட டீடீடீ பிஎச்சி விஷம் இருப்பது பழைய செய்தி ஆகிவிட்டது. ரசாயன உரங்களும் பூச்சி மருந்துகளும் நம் நிலத்து மண்ணை மலடாக்கிவிட்டன. விவசாயத்தை லாபம் இல்லாத தொழிலாக மாற்றிவிட்டது ரசாயன விவசாயம்.

இந்தியாவில் உற்பத்தி ஆகும் காய்கறி பழங்கள் என்றால் காத தூரம் ஓடுகிறார்கள் அயல் நாட்டினர். உலகம் முழுவதும் இன்று இயற்கை விவசாயம் முழு வீச்சில் தொடங்கிவிட்டது. ரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் ஓரங்கட்டிவிட்டால் விவசாயம் லாபகரமாகிவிடும் என்ற சூட்சுமம் அவர்களுக்கு புரிந்துவிட்டது. இயற்கை உரங்கள்தான் நம் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானது என்பதை தெரிந்து கொண்டார்கள்.

வெளிநாடுகளில்இது ஆர்கானிக் காய்கறியா ? இது ஆர்கானிக் பழமா ?" என்று மார்கெட்டில் கேட்டு வாங்குகிறார்கள். நம் நாட்டிலும்; விவசாயிகள் இயற்கை விவசாயம் பக்கம் திரும்பத்; தொடங்கி இருக்கிறார்கள். 

கூடுமானவரை ரசாயன உரங்கள் போடுவதை நாம் படிப்படியாக குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கழைக்கழகமும் சொல்லுகிறது. 

விவசாய விஞ்ஞானிகளும் வேளாண்துறை வல்லுநர்களும் இதைச் சொல்லுகிறார்கள். விவசாயத்தில் தேர்ச்சி பெற்ற விவசாயிகளும் இதனை ஏற்றுக் கொள்ளுகிறார்கள் 

தொழுஉரம் மக்குஉரம் பசுந்தழைஉரம் பசுந்தாள்உரம் கோழிஎரு மீன்எரு எலும்புத்தூள் உயிரியல்உரங்கள் மண்புழுஉரம் அமுதக்கரைசல் ஞ்சகவ்யம் இப்படி பலவகையான இயற்கை உரங்கள் நமக்கு பரிச்சயமாகிவிட்டன. 

இயற்கை உரங்களில் மண்புழு உரமும் பஞ்சகவ்யமும் அமுதக்கரைசலும் இடும் பழக்கம் பாஞ்சாலி கந்தசாமி போல பல விவசாயிகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. 

இயற்கை விவசாயம் தொடர்பான இந்தப்பதிவில் என்னவெல்லாம் சொல்லவேண்டும் ? என்று சொல்லுங்கள்.

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

 

 

 

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...