மொராகோவின் ஆர்கானியா மரம் |
(ARGANIA
TREE, ARGANIA SPECIOSA, SAPOTACEAE )
தாவரவியல்
பெயர்: ஆர்கானியா ஸ்பினோசா (ARGANIA SPINOSA)
தாவரக்
குடும்பம்: சப்போட்டேசியே (SAPOTACEAE)
தாயகம்: மொராக்கோ
ஆடுகளைத் தனது கிளைகளில் ஏறிமேய அனுமதிக்கும் ஆர்கானியா மரம், ஓலிவ் எண்ணெயைவிட மதிப்புமிக்க எண்ணை தருவது, வறண்ட பாலைவன பகுதிகளில் வளர்வது ஆகிய சிறப்புகளை உடையது.
இதன்
கொட்டையிலிருந்து எடுக்கும் எண்ணெய்க்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும்,
ஏகப்பட்ட கிராக்கி. அவ்வளவு ஏன் ..? ஆர்கன் எண்ணெய் சென்னை
அண்ணாநகரில்கூட கிடைக்கிறது என்கிறார்கள்.
ஆன்லைனில்
ஆர்டர் கொடுத்தால், ஆண்டிப்பட்டியில் கூட கொண்டு வந்து சப்ளை செய்வார்கள்.
ஆலிவ் எண்ணெயைவிட விலை அதிகம்
இஸ்ரேல்
நாட்டில் ஒரு லிட்டர் ஆலிவ் எண்ணெய் விலை நான்கு யு.எஸ். டாலர்; ஆனால் ஆர்கானியா எண்ணெய் விலை நாற்பத்திமூன்று யு.எஸ்.
டாலர். கிட்டத் தட்ட பத்து மடங்கு
மதிப்பு அதிகம் கொண்டது
ஆர்கானியா எண்ணெய்.
ஆர்கானியா
எண்ணெய் உற்பத்தி செய்வதில் மொரோக்கோவின்
பெண்கள் கூட்டுறவு அமைப்புக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அப்பகுதியில் வசிக்கும்
மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு வழிவகை
செய்கிறது;
அழகு
சாதனப் பொருட்களும், மருத்துவப் பொருட்களும்
அழகு
சாதனப் பொருட்களும், மருத்துவப் பொருட்களும் தயாரிக்க,
இந்த எண்ணெய் உதவுவதால், பலநூறு
ஆண்டுகளாக மொராக்கோ பெண்கள் ஆர்கானியா எண்ணெய் தயாரிப்பில் ஆர்வமாக
ஈடுபட்டு வருகிறார்கள்.
மொராக்கோ
ஒரு ஆப்ரிக்க நாடு. உலகின் 58 வது பெரிய நாடு. அல்ஜீரியா, ஸ்பெயின், வெஸ்டர்ன்
சஹாரா ஆகிய நாடுகள் இதன் எல்லையில் உள்ளன.
ஆர்கானியாவின் பலமொழிப்
பெயர்கள்:
தமிழ்:
ஆர்கானியா (ARGANIA)
பிரென்ச்:
ஆர்கானியர் (ARGANIAR)
ஸ்பேனிஷ்:
ஆர்கன் (ARGAN)
போர்சசுகீஸ்;:
ஆர்கானியா (ARGANIA)
டட்ச்:
ஆர்கன்பூமி (ARGANBUMI)
ஜெர்மன்:
ஆர்கன்பாம் (ARGANBAM)
இத்தாலியா:
ஆர்கானியா (ARGANIA)
அழகுசாதன எண்ணெய்
ஆர்கன்
எண்ணெய் உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும் .
உங்கள்
தலை முடியை கன்டிஷன் செய்யும். உதிராமல்
பராமரிக்கும்.
உங்கள்விரல்
நகங்களை அழகாக பராமரிக்கும்.
வயது எத்தனை ஆனாலும் பரவாயில்லை 'ஆர்கனை" தடவுங்கள். உங்கள்
உடல் தோல் சுருங்காது. முகத்தில்
தோன்றும் முகப்பருக்கள் கூட யோசனை செய்யும்.
சோரியாசிஸ்,
எக்சிமா தோல் சம்மந்தமான நோய்கள் கூட தொலைதூரத்தில் நிற்கும்.
இப்படியாக
'ஆர்கன்" எண்ணெய்க்கான வியாபார விளம்பரம் வியாசர்பாடிவரை நீட்டி முழக்குகிறது.
பாலைவனப்
பகுதியின் உயிர்ச்
சூழலை மேம்படுத்துகிறது
பாலைவனப்
பகுதியின உயிர்ச் சூழலை மேம்படுத்த உதவுவதால் யுனெஸ்கோ
ஆர்கானியா மரத்தை வேல்ட் ஹெரிட்டேஜ் (WORLD HERRITAGE) பட்டியலில் சேர்த்துள்ளது.
ஆர்கானியா மரம் ஒரு ஆட்டுத் தீவனமரம். மொரோக்கோ நாட்டு மரம். மொரோக்கோ வட ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்று. முஸ்லிம்கள் அரசாளும் நாடு.
மரங்களின்
அமைப்பு
மரங்கள்;,
8 முதல் 10 மீட்டருக்கு மேல் வளராத
குட்டையான மரங்கள். இதன்
கிளைகள் தரையில் தாழப் பரவி வளரும்.
பயன்கள்
ஆடுகள்,
மரங்களில் ஏறி நின்று மேய
அனுமதிக்கும் மரம் அநேகமாய் ஆர்கானியா மரம் மட்டுமாகத்தான் இருக்கும்.
இதன் வயது 200
ஆண்டுகள்.
மரத்தின்
உயரம் இருபது இருபத்தைந்து அடியாக
இருந்தாலும், கிளைகள் 230 அடிக்கு பரவி இருப்பது ஆச்சரியமான செய்தி. ஒரே மரத்தில் பத்திருபது
ஆடுகள் கூட ஏறி மேய்வதற்கு
விஸ்தாரமாக வளர்ந்து வளைந்து வாகாக
நிற்கும்.
பாலைவனத்தில்
கூட வளரும்
ஆர்கானியா
ஒரு பாலைவன பணப்பயிர். இஸ்ரேலின் நெகேவ் பாலைவனத்தில் கூட வளர்கிறது. இப்போது
இருக்கும் வறட்சியான சூழலில் மொராக்கோ’வைவிட
தமிழ்நாட்டில் நன்றாக வளரும். குறிப்பாக அரேபிய மணல்
பிரதேசங்களில் ஆர்கானியாவை நட்டு
வளர்க்கலாம். வளர்க்க அற்புதமான ஆடுகளுக்கான பிரியாணி மரம் !
பெண்கள்
கூட்டுறவு அமைப்பு
சூழலுக்கு
உதவும் மரம்
ஆழமான வேர் அமைப்பு கொண்ட இந்த மரம் மண் அரிப்பைத்
தடுக்கிறது ; பாலைவனத்தில் வளரும் இந்த மரங்கள்
பாலைவனம் மேலும் பரவாமல் தடுக்க உதவியாக உள்ளது;
மருத்துவப்பயன்
வைட்டமின்
‘இ’ அதிகம் இருப்பதால் இருதய நோய்களைக் குறைக்கும் சக்தி உடையது
என்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஆபூர்வமான, அழகு சாதனமாகப் பயன்படும் எண்ணெயும் கூட.
தார்ப்
பாலைவனம் இந்தியாவிற்கும்
பாகிஸ்தானுக்கும் இடையேயுள்ள இயற்கையாக அமைந்த எல்லை. இதன்
மொத்தப் பரப்பு 2 லட்சம் சதுர கிலோ மீட்டர்.
தார்ப் பாலைவனத்தின் ஆண்டு
சராசரி மழை 25 மி.மீ.; அதிகபட்சமான வெப்பநிலை
39 முதல் 50 டிகிரி சென்டிகிரேட்.
ஒரு செல்லில் இரண்டு சிம்கார்ட்
தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தில் சிலமலை சில்லமரத்துப்பட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் குதிரைமொழித்
தேறி ஆகிய பகுதிகளில் மணல் பிரதேசம் பரவாமல் தடுக்க இது போன்ற மரங்களை நட
முயற்சிக்கலாம்.
மணலும்
சொன்ன பேச்சைக் கேட்கும் பணமும் கிடைக்கும். ஒரே செல்லில் இரண்டு சிம்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment