Friday, June 30, 2023

MONKEY PUZZLE NATIONAL TREE OF CHILE 182. குரங்கு ஏறா மரம் மங்க்கி பஸ்சிள் ட்ரீ

 

குரங்கு ஏறா மரம் 
மங்க்கி பஸ்சிள் ட்ரீ


(KURANGU ERA MARAM, MONKEY PUZZLE TREE, PEHUEN TREE, ARAUCARIA ARAUCANA, ARAUCARIACEAE )

தாவரவியல் பெயர்: ஆரவ்கேரியா ஆரவ்கானா (ARAUCARIA ARAUCANA)

பொதுப்பெயர்: மங்கி பஸ்சில் ட்ரீ, பீ ஹூயன் (MONKEY PUZZLE TREE,PEHUEN TREE )

தாவர குடும்பம்: ஆரவ்கேரியேசியே (ARAUCARIACEAE)

தாயகம்: சைல் மற்றும் தென் மேற்கு அர்ஜென்டினா

 “ யோவ் பாண்டிய மன்னா நீ என்ன பெரிய ஆளா ? நான் தமிழ் படிச்சவன்.. எந்த ராஜாவும் என்னை வேணாம்னு சொல்ல மாட்டான் தெரியுமா குரங்கை வேணாம்னு சொல்லும் மரம் ஏதாச்சும் இருக்கா ? ” இப்படி ஒரு பாட்டை எழுதியவர் கம்பர் பெருமான்.

இதோ அந்தப் பாட்டு.

மன்னவனும் நீயோ வளநாடும்

உன்னதோ ?

உன்னை அறிந்தோ தமிழை

ஓதினேன் ? என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத

வேந்துண்டோ ? வுண்டோ

குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு ?”

குரங்குகள் ஏற பயப்படும் மரம்

இந்தப் பாட்டுக்கு பதில் சொல்ற மாதிரி ஒரு மரத்தைப் பார்த்தேன் நான், லண்டன் கியு கார்டன்ல் (முநுறு புயுசுனுநுN). அந்த மரத்தின் பெயர் மங்கிபஸ்சில் மரம். அதாவது குரங்கு ஏற பயப்படும் மரம். அல்லது குரங்கால் ஏறமுடியாத மரம். அல்லது குரங்கை ஏற அனுமதிக்காத மரம். இந்த மரத்திற்குப் பக்கத்தில் ஒரு சின்ன பெயர்ப் பலகையில் எழுதி இருந்தது மங்கி பஸ்சில் ட்ரீ’.

நெருப்பை சமாளிக்கும் மரம்

மங்கிபஸ்சில்  மரத்தின் பட்டைகள் நெருப்பில கூட எரியாது; எரிமலைக்; குழம்பு வழிந்தோடும் வழியில் இருந்தால் கூட இந்த மரங்கள் சாகாது. நெருப்பைக் கூட சட்டைபண்ணாத மரம். ஆச்சரியம் தரும் செய்தி. உலகில் நெருப்பை சமாளிக்கும் சக்தி படைத்த வேறு மரம் இருப்பதாகத் தெரியவில்லை.

மரம் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். தூரத்தில் இருந்து பார்த்தால் நம்ம ஊர் நெட்டிலிங்கம் மரம் மாதிரி கூம்பு வடிவத்தில் இருக்கும். வளர்ந்த மரங்கள் வித்தியாசமான குடை மாதிரி இருக்கும். அதன் இலை கிளை எல்லாவற்றிலும் ஏகப்பட்ட முள் இருக்கும்.

சைல் நாட்டின் தேசிய மரம்

மரங்கள் வஞ்சனை இல்லாமல் வளரும். 100 முதல் 130 அடி உயரம் வரை வளரும்.  3 முதல் 5 அடி குறுக்களவு வளரும். இதன் தாயகம், தென் அமெரிக்காவின் ஆண்டஸ் மலைப் பகுதி, மேற்கு அர்ஜெண்டினா, மற்றும் மத்திய, தெற்கு சைல் நாடு. சைல் நாட்டின் தேசிய மரம் என்பது ஒரு முக்கிய செய்தி. பனை மரம்போல ஆண் பெண் மரங்கள் இதில் தனித்தனி. மரங்களில் விதைகள் உருவாக 6 பெண்மரத்திற்கு ஒரு ஆண் மரம் அவசியம் வேண்டும். இந்த மரங்களின் வயது 1000 ஆண்டுகள்.

முரட்டு மரத் தேவைகளை பூர்த்தி செய்யும்

ரயில் பாதைகள் போட, இரும்பு நிலக்கரி சுரங்கங்கள், பேப்பர் பீங்கான் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் முரட்டு மரத் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்பட்டன் மெல்ல மெல்ல தச்சுக் கலைஞர்கள் இதனை இதர வேலைகளுக்கும் திறமையாகப் பயன்படுத்தினர்.

இலைகள், கற்றாழை போல இலைகள் முரட்டுத்தனமானவை; முக்கோண வடிவில் இருக்கும்.

இலைகள் உதிர 24 ஆண்டுகள் பிடிக்கும்

இந்த மரங்கள், வடிகால் வசதி கொண்ட மண், அமிலத்தன்மை உள்ள மண், சாம்பல் மிகுந்த எரிமலைப் பகுதிகளிலும் நன்கு வளரும். பரவலாக எல்லா மண் வகைகளிலும் வளரும்.

மரக்கொட்டைகளை ஒரு வகையான எலிகள் சாப்பிட்டுவிட்டு விதைகளை கழிவுடன் வெளித்தள்ளுகிறது. பெரும்பாலாக புதிய மரங்கள் இப்படித்தான் முளைக்கின்றன. அப்ரோத்ரிக்ஸ் லாங்கிபிலிஸ் (ABROTHRIX LONGIPILIS) என்னும் இவை நீளமான மயிர்கொண்ட எலிகள்.

எலிகளின் விருப்ப மரம்

இவை  இந்த மரத்தின் விதைகளை பூமிக்குள் புதைத்து சேமித்தும்; வைக்கின்றன. எலிகள் ஏப்பம் விட்டது போக மீதியுள்ள விதைகள் தப்பித்து முளைத்து மரமாகின்றன. அர்ஜெண்ட்டினா மற்றும் சைல் தேசத்தின் பழங்குடி மக்களுக்கு இந்த மரக் கொட்டைகள் வேர்கடலை மாதிரி. விரும்பிச் சாப்பிடுகிறார்கள். முதிர்ந்த கனிகள் தானாக உதிரும்; அதனால் அறுவடை செய்வது சுலபம். வளர்ந்த மரங்கள் 30 முதல் 40 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பிக்கும்.

அராவ்கேனியன்பழங்குடி மக்களுக்கு நெருக்கமான மரம்

அராவ்கேனியன்என்ற பெயருடைய பழங்குடி மக்கள் அதிகம் இந்த மரத்துடன் தொடர்புடையவர்கள். இதன் விதைகளைப் பொடித்து அதிலிருந்து முடேஎன்னும் பானம் தயார் செய்து அருந்துகிறார்கள். அதைக் கொஞ்சம் குடித்தால்தான் அவர்களுக்கு மூட் செட்ஆகுமாம் எதையும் செய்ய. விதைகளை சாப்பிட்டது போக மீதியை கால்நடைகளுக்குத் தீவனமாகவும் கொடுக்கிறார்கள்.  

இந்த மரங்களை தோட்டங்களில் அழகு மரமாக வளர்க்கலாம். குளிர்ச்சியான மற்றும் அதிக மழை பெறும் இடங்களில் இந்த மரம் சொகுசாக வளரும். மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, கனடா, நியுஸ்லேண்ட், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த மரம் காணப்படுகின்றன.

உருளை வடிவ மூக்கு கொண்ட ஒருவகை கிளிகளுக்கு (SLENDER BILLED PARAKEETS) அடைக்கலம் தரும் மரம் இது. நம்ம இலுப்பை மரம் மாதிரி.

குளிர்ப் பிரதேசமாக இருந்தால் குரங்கு வராமல் தடுக்க இந்த மரங்களில் வேலி அமைக்கலாம். சிங்கம் வராமல் தடுக்கக் கூட ஆப்ரிக்காவில் மரம் இருக்கிறது என்கிறார்கள்.

இந்த மரத்தில் ஏற முடியவில்லை என சைல் நாட்டில் குரங்குகள் வருத்தப்படுவதில்லை, காரணம் அங்கு குரங்குகளே கிடையாதாம்.

நமக்கு அறிமுகமான கிறஸ்மஸ் மரம் கூட பைன் மரம்தான். இதற்கு கூக் பைன் (COOK PINE)என்று பெயர். காரணம் இது தெற்கு ஆஸ்திரேலியாவின் கூக் தீவைச் சேர்ந்த மரம்.  இதுவும் ஆரவ்கேரியேசி குடும்பத்தைச் சேர்ந்ததுதான். அதில் முள் எல்லாம் கிடையாது. குரங்குகள் சுலபமாக ஏறும்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...