Thursday, June 15, 2023

MONKEY JACK 4. குரங்குப்பலா

 

குரங்கு பலா


குரங்குப்பலா
, இந்தியாவை தாயகமாகக் கொண்ட மரம்> பழங்கள் மற்றும் பூக்களை சாப்பிடலாம். மரங்கள் இருக்கும் இடங்களில் இவை பழக்கத்தில் உள்ளது: இதன் பழங்கள் வயதாவதை தள்ளிப்போடும் சக்தி உள்ளது, அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்க ஏற்ற தாவர ரசயனங்களை  உள்ளடக்கியது, பழங்கள்> பூக்கள்> பட்டை> விதைகள் அத்தனையும் மருந்தாகின்றன. மேலும் மரச்சாமான்கள் அத்தனையும் செய்வதற்கு உரிய தரமான மரக்கட்டைகளைத் தருகிறது. இதன் இலை தழை கால்நடைகளுக்கு தீவனமாகின்றன: ஆக இதனை ஒரு சகலகலா சக்திமரம் என அழைக்கலாம்.

பொதுப்பெயர்: மங்கி ஜேக் (MONKEY JACK)

தாவரவியல் பெயர்: அர்டோகார்ப்பஸ் லக்கூச்சா (ARTOCARPUS LACUCHA)

தாவரக் குடும்பம் பெயர்: மோரேசி (MORACEAE)

தாயகம்: இந்தியா 

குரங்குப் பலாவின் பல மொழிப் பெயர்கள்

தமிழ்: இலகுசம்> இராப்பலா> சோலைப்பாக்கு> தீனிப்பலவு (ILAGUSAM, IRAPPALA, SOLAIPPAKKU, TINIPALAVU)

மணிப்புரி: ஹீரிகாக்தாங் (HEIRIKOKTHONG)

மராத்தி: பதார்> சுத்ரப்பனாஸ்> பாலா (BADHAR, KSUDHTHRAPHANAS, PHALA)

மலையாளம்: சிம்பா> லக்கூச்சம்> புளிஞ்சக்கா (CHIMPA, LAKUCHAM, PULINJAKKA)

கன்னடா: ஈசுலுஹூலி> கூச்சா> ஒட்டிஹூலி> வட்டிஹூலி (ESULIHULI, KAKUCHA,VATEHULI )

பெங்காலி: டிபால் டாகு (DEPHAL, DAHU)

ஒரியா: லகூச்சா(LAKOOCHA)

உருது: தீடட் (THEITAT)

அசாமிஸ்: போகாட் (BOHOT)

சமஸ்கிருதம்: ஐராவதா, அம்லக்கா> டாகு> திரிதவல்கலா, கிரந்திமட்பலா (AIRAWATA, AMLAKA, DAHU, DRIDHAVALKALA, GRANTI MATPHALA)

நேப்பாளி: பத்தார் (BADHAR)   

பரவி இருக்கும் இடங்கள்

இந்தியாவை தாயகமாகக் கொண்ட மரம்: இதன் பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை: ஆசிய நாடுகளில் இந்த மரங்கள் பரவலாக உள்ளது> அவை பங்ளாதேஷ், பூடான்> நேபாளம்> மியான்மர். ஸ்ரீலங்கா> தாய்லாந்து> மலேசியா> சிங்கப்பூர்> வியட்நாம்> கம்போடியா> மற்றும் லாவோஸ்.

குரங்குப்பலா மரங்கள்> இந்தியாவில் தமிழ்நாடு உட்பட அந்தமான் நிகோபார் தீவுகள்> அஸ்ஸாம்> பீஹார்> கர்நாடகா> கேரளா> மகாராவு;ட்ரா> நாகாலாந்து> சிக்கிம் தமிழ்நாடு ஆகிய இடங்களில் பரவியுள்ளன.

குரங்குப்பலாவின் அடிப்படை குணாம்சங்கள்

குரங்கு பலா மரங்கள் அதிகபட்சமாக 25 முதல் 30 அடி உயரம் வரை வளரும். 

 வளர்ந்த மரத்தின் தலைப்பகுதி விட்டம் 8 அடி அளவிற்கு பரந்து இருக்கும். 

பலா மரங்கள் போல் மூடாக்கு போட்டது போல இல்லாமல் இந்த மரங்களின் கிளைகள் திறந்த கிளைகளாக இருக்கும்.

 இந்த மரத்தின் பட்டைகள் அழுத்தமான காவி நிறத்தில் இருக்கும்.

 இலைகள் உதிரும் தன்மையுடையவைநீள்வட்ட வடிவில் இருக்கும். எதிரெதிராக அமைந்தவை. 

ஆண் பெண் இருவகை பூக்களும் ஒரே மரத்தில் உருவாகும். ஆண் பூக்கள் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் இருக்கும். பெண் பூக்கள் சிவப்பு நிறமாக இருக்கும்.

 பழங்கள் ஏறத்தாழ உருண்டை வடிவாக இருக்கும். சிலசமயம் கன்னாபின்னாவென்று எந்த வடிவத்திலும்  சேராத மாதிரியும் இருக்கும்.

 இரண்டு முதல் நான்கு அங்குல  விட்டம் உடையதாக இருக்கும்.  தொட்டுப்பார்க்க வெல்வெட் மாதிரி மெத்'தென்று இருக்கும்.  

பழங்கள் அழுக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் நிறத்தின் ஊடாக லேசான ஊதா நிறச் சாயை தெரியும். அப்பழத்தின் தசை இனிப்பும் புளிப்பும் கலந்தது போல இருக்கும். 

மருத்துவப் பண்புகள்   

மருத்துவப் பண்புகள் நிறைந்த இந்தப் பழங்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.   

குரங்குப் பலாப்பழங்களில் விட்டமின்கள் அதிகம் உள்ளன. அதிலும் குறிப்பாக ஆன்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்த விட்டமின் சி மற்றும் பீட்டா காரோட்டீன் ம் உள்ளன.

அத்துடன் துத்தநாகம்> தாமிரம் மாங்கனீஸ்> இரும்பு ஆகிய தாது உப்புக்களும் நிறைந்திருக்கின்றன. இதில் கூடுதலாக இருக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்ட்டுகள் புற்றுநோய் மற்றும் இருதய நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அனிக்கின்றன. 

இதனால் ஆராய்ச்சிக்காரர்கள்> மருந்துக் கம்பெனிகள்> மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள்> குரங்குப்பலாவினை குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டுள்ளார்கள்.

குரங்குப் பலா போன்ற பல  மரங்கள்> செடிகள்> கொடிகள் போன்றவை குறித்த போதுமான விழிப்புணர்வு நமக்கு இல்லை. அப்படிப்பட்ட விழிப்புணர்வு அதிகரிக்கும் போது பல

அழகு சாதன பொருட்கள்.   

இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடெண்ட்கள் பல நோய்களை கட்டுப்படுத்துவதோடு வயதாகுதல் என்றும் நடைமுறையை கட்டுப்படுத்துகிறது. வயதாவதைத் தள்ளிப்போடும் சக்தி இதில் உள்ளது.

அத்தோடு இதில் இருக்கும் பிளேவனாய்டுகள் மற்றும் பினாலிக் அமிலங்கள் பல்வேறு நல்ல காரியங்களைச் செய்கின்றன.  தோலின் நிறத்தை வெண்மையாக மாற்றும் சக்தியும் இதில் அதிகம் உள்ளன. 

எதிர்காலத்தில்; இயற்கைப் பொருட்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் அதிகமான அளவில் வரப்போகின்றன. அந்த சமயங்களில்டீவிவிளம்பரங்களில் அடிக்கடி குரங்குப்பலாவின் பெயரை கேட்க முடியும். 

சிவப்பழகு வெள்ளழகு கிரீம்கள்     

குரங்குப்பலா பழங்களைச் சாப்பிடுவது அவர்களின் ஈரலுக்கு புத்துணர்ச்சி தருகிறது.  பட்டைகளை பயன்படுத்தி சருமத்தில் ஏற்படும் சிராய்ப்புகளை குணப்படுத்தலாம்: பட்டைப் பொடி> கட்டிகள் மற்றும் காயங்களை குணப்படுத்தும்.

விதைகளும் பட்டையும் வயிறு மற்றும் ஈரலில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்யும். கனிந்த பழங்கள் ஈரலுக்கு நல்ல டானிக்.  இதன் பழங்கள் சக்கரை நோய்க்கு நல்ல மருந்து.

மரத்தின் வயிரப்பகுதி கட்டையில்> சருமத்தின் நிறத்தை மாற்றும்: சிவப்பழகு மாதிரி வெள்ளழகு கிரீம்கள் தயார் செய்யலாம்.     

சிலர் இளமையிலேயே வயதான தோற்றம் தருவார்கள்.  சிலருக்கு வயதாவது தெரியாது.  பாக்க அவ்ளோ வயசு சொல்ல முடியாது என்பார்கள். 

அதற்கு முக்கியக் காரணம் தோலில் ஏற்படும் சுருக்கங்கள்.  தோலில் ஏற்படும் சுருக்கங்கள்தான் நமது வயதை வெளியே சொல்லாமல் சொல்லுபவை. 

வயதாவது தெரியாமல் இருக்க அநேக லேகியங்கள் இருப்பதகாக சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.  இப்போது கூட அதுபோன்ற மருந்துகளுக்கு டிவி விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

அது போன்ற அபூர்வ சத்தி குரங்கு பலா வில் குடி கொண்டு இருப்பாதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். 

ஏற்கனவே இந்தோனேசியாவில் குரங்குப்பலா பழங்களைப் பயன்படுத்தி இளமையாக்கினார் லேகியம் கிண்டி விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.  என்ன விலை சொன்னாலும் பதில் பேசாமல் வாங்கிக் கொள்ளுகிறார்களாம். 

பழங்கள் சாப்பிடலாம்

இந்த மரத்தின் பழங்கள்> ஆண் பூக்கள் ஆகியவற்றை பச்சையாகவும் சமைத்தும் சாப்பிடுகிறார்கள். இவற்றை அவித்தும் வறுத்தும் இதர வடிவங்களில் சமைத்தும் சாப்பிடுகிறார்கள். 

முக்கியமான தீவன மரம்.

குரங்குப்பலாவின்வின் இலைகள் கால்நடைகளுக்கு அற்புதமான தீவனம்: கால்நடைகள் விரும்பிச் சாப்பிடுகின்றன. விவசாயிகள் இதனை விரும்பி வளர்க்கிறார்கள்.

இமையமலையின் அடிவார மலைச்சரிவுகளில்> குறிப்பாக   நேப்பாளத்தில் இது முக்கியமான தீவன மரம். பால் உற்பத்திக்கு உதவியாக உள்ளது. இலைகளில் 16 சதம் கச்சாப் புரதம் உள்ளது. வளர்ந்த ஒரு மரம் ஒர் ஆண்டில் 200 முதல் 250 கிலோ தீவனம் தருகிறது.    

அது மட்டுமல்லாமல் இது ஒரு நல்ல விறகு மரமும் கூட. இந்த மரத்தில் எல்லா பாகங்களிலும் பிசுபிசுப்பான பால் வடியும். இதனை பல வழிகளில் பயன்படுத்துகிறார்கள். 

மேஜை நாற்காலி வகையறா சாமான்கள்     

இது நல்ல மரக்கட்டை தரும் மரமும் கூட.  எல்லாவிதமான மரச்சாமான்களும் செய்யலாம்.  படகுகள்> பெட்டிகள். கட்டுமானச் சாமான்கள்> கம்;பங்கள்> மேஜை நாற்காலி வகையறா சாமான்கள் ஒட்டுப் பலகைகள் அனைத்தும் செய்யலாம்:          

திசுவளர்ப்பு முறை

குரங்குப் பலா> வெப்ப மண்டலம்> மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளுக்கு ஏற்றது.  புதிதாக விதைகளை எடுத்தவுடன் விதைக்க வேண்டும்.  ஒடைக்கரைகள்> இந்த மரங்களை வளர்க்க ஏற்ற இடம்.  இளம் செடிகளை சூரியனின் வெப்பத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.

ஒரு பழத்தில் 20 முதல் 30 விதைகள் உள்ளன.  ஆயினும் கூட புதிய கன்றுகளை உருவாக்குவதில் பிரச்சினைகள் உள்ளன.  முக்கியமான காரணம் இதன் முளைப்புத் திறன். 

இந்த முளைப்புத் திறன் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிப்பதில்லை.  கிளைகள் அல்லது போத்துகளை வெட்டி வைத்தால் கூட சரிவர முளைப்பதில்லை.

சிலசமயம் இதன் விதைகள் ஒரு சில நாட்களிலே கூட முளைப்புத் திறனை இழந்து விடுகிறது.  அதனால் இதற்கு திசுவளர்ப்பு முறைதான் லாயக்கு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.    

பறவைகளும் குரங்குகளும் இதன் விதைகளைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஏற்கனவே இந்தியாவின் பல மாநிலங்களில் குரங்குப்பலா. ரொம்பப் பிரபலமாம்.  நம்ம ஊரில் பண்ருட்டி பலாவைத்தான் கேள்விப்படுகிறோம்.  தமிழ் நாட்டில் குரங்குப்பலாவை யாரும் அறிமுகப்படுத்தியதாகத் தெரியவில்லை. 

இதைப்பற்றித் தெரிந்தவர்கள் கு.ப. வின் ஊட்டச்சத்துக்கள் பற்றி மருத்துவ உபயோகம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறார்கள். 

கூடுதல் விவரம் பெற..

21 “NUTRITIONAL VALUE AND MEDICINAL USES OF MONKEY JACK FRUIT( ARTOCARPUS LAKOOCHA)

WWW.HORT.PRODUCE.EDU/LAKOOCHA: MULTIPURPOSE TREE OF WARM CLIMATE.

WWW.WORLD AGROFORESTY.ORG /ARTOCARPUS LAKOOCHA.

WWW.INDIABIODIVERSITY.ORG/ARTOCAPPOS LAKOOCHA. (681 words)

PLEASE POST A COMMENT, REGARDS - GNANASURIA BAHAVAN D (AUTHOR)

 9999999999999999999999999999999999

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...