Thursday, June 22, 2023

MEXICAN SYCAMORE PORTRAYED BY PLATO 108. பிளேட்டோ வியந்த மரம் மெக்சிகன் சைகாமோர்

பிளேட்டோ வியந்த 
மெக்சிகன் சைகாமோர்


மெக்சிகன் சைகாமோர், அமெரிக்காவின் கிழக்குப்பகுதிக்கு சொந்தமான  அழகு மரம், வறட்சியைத் தாங்கும். அமில மற்றும் உப்புத் தன்மையைத் தாங்கும். ஆறு மற்றும் ஓடைக்கரைகளில் வளரும். ஐம்பது அடிக்கு மிகாமல் ஓங்கி வளரும். பிளாட்டோ தனது பேட்ரஸ்   நூலிலும், மார்கோபோலோ தனது பயணக் கட்டுரைகளிலும் இதுபற்றி எழுதியுள்ளார்.

தமிழ்பெயர்: மெக்சிகன் சைகாமோர், (MEXICAN SYCAMORE)

பொதுப் பெயர்கள்: மெக்சிகன் சைகாமோர், மேக்சிகன் பிளேன்.  (MEXICAN SYCAMORE, MEXICAN PLANE)

தாவரவியல் பெயர்: பிளாட்டேனஸ் மெக்சிகானா

(PLATANUS MEXICANA)

தாவரக் குடும்பம் பெயர்: பிளாட்டேனேசி (PLATANAECEAE)

தாயகம்: அமெரிக்காவின் கிழக்குப்பகுதி

அழகு மரம்    

இங்கு சாலைகள்  மற்றும் பூங்காக்களில் நடுவதற்கான மரம் இது. இதனை பராமரிக்க அதிக அளவு தண்ணிர் தேவை இல்லை. வெள்ள  நீரைத் தாங்கும் தன்மையுடையது. ரங்கள் 50 அடி உயரம் நிமிர்ந்து வளரும் 30 அடிக்கு படர்ந்து வட்ட வடிவமாகவும் குடைபோல வளரும். கொஞ்சம் கூடுதலான இடம் தேவைப்படும். இலை உதிர்க்கும் மரம். இதன் வயது சுமார் 150 ஆண்டுகள்.

கைவிரல் மாதிரி இலைகள்   

இலைகள் கைவிரல்கள் போன்ற அமைப்புடையவை வெளிர் பச்சை நிறத்தில் தோன்றும் இதன் இலைகள் முதிர்ந்தவுடன் வெண்கல நிறம் மற்றும் தங்கநிறச் சாயை பெறும் உதிர்வுக்கு முன்னால்.    

பூக்கள் பற்றி சிறப்பாக சொல்வதற்கு எதுவும் இல்லை.  துளிர்விடும் காலத்தில் (SPRING) பூக்கும்.  ஆண் பெண் பூக்கள் தனித்தனியாக ஒரே மரத்தில் பூக்கும் (MONOECIOUS).  இலையுதிர் அல்லது குளிர்ப்பருவங்களில்  ( FALL & WINTER) காய்க்கும்.

அழகுக்காக நிழலுக்காக

ஒரு மரத்தை வீடுகளில் அல்லது பொது இடங்களில் அழகுக்காக அல்லது நிழலுக்காக என்று நடும்போது அதில் வந்த அளவு குப்பை விழும் ? எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை அவற்றை சுத்தம் செய்ய வேண்டும் ன்பது பற்றி எல்லாம் தெரிந்த கொண்டு பின்னர் தான் அந்த மரம் நட அனுமதி தருகிறார்கள். 

உதாரணமாக இந்த சைகோமோர் மரங்களிலிருந்து, லர்ந்த பழங்கள்இலைகள், குச்சிகள் போன்றவை குப்பைகளாக விழ வாய்ப்பு உள்ளது.

எப்படிப்பட்ட இடங்களில் வளரும்?      

சைகோமோர் மரங்களுக்கு முழுமையான சூரிய வெளிச்சம் அவசியம்.  சுமாரான அளவு நிழலைத் தாங்கி வளரும்.  ஈரம் மிகுந்த மண்கண்டம் மற்றும் வறண்ட பிர தேசங்களிலும் நன்கு வளரும். 

வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை உடைய மரம்.  களிமண்> இருமண்பாடான மண் மற்றும் மறை;சாரியான மண்பரப்பில் இந்த மரங்கள் நன்கு வளரும்.  அமிலத்தன்மை மற்றும் உப்புத்தன்மை மிகுதியான மண்கண்டத்திலும் நன்கு வளரும்.  கடற்கரைப் பகுதி மணலிலரும்> அதன் உப்புத்தன்மையைத் தாங்கி சுமாராக வளரும்.

ஆற்றங்கறைகளில் வளரும்   

இந்த மெக்சிகன் சைகோமேர் மரங்கள்> வேகமாக வளரும்.  அதிகபட்சமாக 50 அடி உயரம் வரை வளரும். இதன் வயது சுமார் 60 ஆண்டுகள்.  இந்த மரங்கள் ஆற்றங்கரைகள் மற்றும் ஒடைக்கரைகளில் அதிகம் வளர்ந்துள்ளன.    

சைகோமோர் மரங்கள் உலகின் எந்த மூலையில் இருத்தாலும்> அவை ஏதாச்சும் ஒரு வகையில் மெக்ஸிகோவுடன் தொடர்புடையவையாக இருக்கும் என்கிறார்கள். தாவரவியல் நிபுணர்கள்.  அடுத்த 20 ஆண்டுகளில்> அழகுமரமாக இதற்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்றும் சொல்லுகிறார்கள்.  

இதன் மரப்பட்டை> வெள்ளையடித்தது போல தென்படும்.  இலைகள் கரும்பச்சை நிறத்தில் ஐம்பிரிவுகளாக பார்ப்பதற்கு பருத்திச் செடியின் இலைகள் போல இருக்கும்.    

தற்போதுள்ள சூழலில் அழகுத் தோட்டம் அமைக்கும் பணிகளில் எல்லாம்> அமெரிக்கன் சைகாமோர் மரங்களுக்குப் பதிலாக மெக்சிகன் சைகாமோர் மரங்களை சிபாரிசு சொல்கிறார்கள்.

ஆக்கிரமிக்கும் மரம் அல்ல   

வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் நட சிபாரிசு செய்யும் போதெல்லாம் அதனை ஆக்கிரமிப்புத் தன்மையுடைய மரமா ? (INVASIVE TREE SPECIES) என்று பரிசோதனை செய்து பார்த்த பின்னர்தான் சிபாரிசு செய்வார்கள்.    

இதன் இலைகள் மற்றும் பழங்களை தும்மல்> இருமல் போன்ற சுவாசம் தொடர்பான நோய்களை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.  இந்த மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களில் பொதுவான மரத் தேவைகளுக்காக உபயோகப்படுத்துகிறார்கள்.   

விதைகளை விதைத்தும்> கிளைத் துண்டுகளை நட்டும் பதியன்கள் மூலமாகவும் புதிய மரங்களை உருவாக்கலாம்.  நன்கு முளைக்க புதிய விதைகளை உடனே விதைக்கலாம்.  விதைகளை சேமித்து வைத்தும் விதைக்கலாம்.

தத்துவ அறிஞர் பிளாட்டோவால் எழுதப்பட்டது   

சைகாமோர் மரங்கள் மிகவும் பழமையானவை.  பிளாட்டோ தனது பேட்ரஸ் (PHAEDRUS) என்னும் நூலில் சைகோமோர் மரங்கள் பற்றி எழுதி உள்ளார்.  மேலும் டிரை ட்ரீ (DRY TREE) என்று மார்கோPபோலோ தனது குறிப்பகளிலும் எழுதி உள்ள மரமும் இது தான் என்றும் சொல்லுகிறார்க்ள.    

இந்த சைகோமோர் மரங்கள் பைகஸ் சைகோமோரஸ் (FICUS SYCOMORUS) என்று சொல்லப்படும் அந்த மரத்துடனும் சைகோமோர் மே;ப்பிள் (SYCOMORE MAPLE) என மேப்பிள் மரத்துடனும் தொடர்புடையது எனத் தெரிகிறது.  

இப்போதைக்கு நாம் அதுபற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம்.  வட அமெரிக்காவில் அழகுமரமாக அதிகம் பயன்படுத்தும் மரங்களில் ஒன்று இந்த மெக்சிகன் சைகோமோர் மரம்  -

FOR FURTHER READING

WWW.SELECT TREE.CALPOLY.BDU/- “ URBAN FOREST ECO SYSTEMS INSTITUTE- SELECT TREE: MEXICAN SYCAMORE – PLATANUS MEXICANA.

WWW.AUSTINTREEEXPENTS.COM “MEXICAN SYCAMORE”

WWW.LANDSCAPE PLANTS.OREGON STATE.EDT – “ LANDSCAPE PLANTS – “ PLATANUS MEXICANA”.

WWW.NWD DISTRICT.IFAS.UFL.EDU. – UNIVERSITY OF FLORIA – MEXICAN SYCAMORE.

WWW.TROPICALTHEFRNS.INFO /  USEFULTROPICAL PLANTS/   – PLATANUS MEXICANA.

WWW.EN.WIKIPEDIA.ORG-“PLATANUS MEXICANA”

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...