Monday, June 12, 2023

MARAMALLIGAI TREE OF MESMARISING FLOWERS - மணக்கும் மரமல்லிகைப் பூமரம்

 

மரமல்லிகை TREE JASMINE
Millingtonia hortensis

எப்படி என் பூக்களின் வாசம்?” என்று கேட்கும்படியாக மரமல்லி பூக்களின் மணம் நம்மை அசத்தும்.  பூக்கும் சமயம் வெண்ணிறப் பாய் விரித்த மாதிரி பூக்களை கொட்டி வைத்திருக்கும்.  ஒரு தோட்டத்திற்கு ஒரு மரம் இருந்தால் போதும் அந்தப் பூக்களின் மணம் அந்தத் தோட்டம் முழுக்க நிறைந்திருக்கும்.

04. மரமல்லிகை

(INDIAN CORK TREE)

888888888888888888888888888888888888

தாவரவியல் பெயர்:  (MILLINGTONIA HORTENSIS)

தவாவரக்குடும்பம் பெயர்: (BIGNONIACEAE)

தாயகம்: இந்தியா

என் பூவின் வாசம் எப்படி ?

எப்படி என் பூக்களின் வாசம்?” என்று கேட்கும்படியாக மரமல்லி பூக்களின் மணம் நம்மை அசத்தும்.  பூக்கும் சமயம் வெண்ணிறப் பாய் விரித்த மாதிரி பூக்களை கொட்டி வைத்திருக்கும்.  ஒரு தோட்டத்திற்கு ஒரு மரம் இருந்தால் போதும் அந்தப் பூக்களின் மணம் அந்தத் தோட்டம் முழுக்க நிறைந்திருக்கும்.

மரமல்லியிலும் கார்க்குகள் செய்யலாம்.

இண்டின் கார்க்வுட் ட்ரீஎன அழைத்தாலும்இந்தியாவில் கார்க்உற்பத்தித் தொழில் ஏதும் பெரிதாக இல்லை.  உலகத்தின் பாட்டில்களில் பொருத்தப்படும் மூடிகளைத்தான் நாம் கார்க்என்கிறோம்.  உலகத்தின் மொத்த கார்க் தேவையை பெரும்பகுதி பூர்த்தி செய்யும் மரவகை ஓக் மரங்கள் தான் (OAK TREES). கார்க்குகள் செய்ய மரங்களின் பட்டைகளைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள். மரமல்லி மரத்தின்  பட்டை மற்றும் மரத்தில், பாட்டில்களுக்கான கார்க்குகள் செய்யலாம்.  ஆதனால்தான் ஆங்கிலத்தில் இதற்கு இண்டியன் கார்க் ட்ரீ என்ற பெயர் வழங்குகிறது. 

இப்படி உலக அளவில் பட்டைகள் உற்பத்தியில் பட்டையைக் கிளப்புவது  போர்ச்சுக்கல் நாடு.  இதர நாடுகள், த்தாலி, பிரான்ஸ், மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் துனிசியா.  கார்க் தரும் இந்த ஒக்மரங்களிலிருந்து 9 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பட்டைகளை எடுக்கலாம்.  இந்த மரங்களின் வயது 150 ஆண்டுகள்.  அதுவரை பலமுறை பட்டைகளை எடுக்கலாம்.

பொம்மலாட்ட மரம்

மியான்மர் என்று சொல்லும் பர்மாவில் 500 (அ) 600 ஆண்டுகளுக்கு முன்னால் பாவைக் கூத்துஎன்னும் பொம்மலாட்டம் பிரபலமாக இருந்தது.  1400 ம் ஆண்டு வாக்கில் மரியாதைக்குரிய நாட்டுப்புறக் கலையாக இருந்தது, 1930 வரை அது தொடர்ந்து  தற்போது ஒரு சில குழுக்கள் மட்டுமே, அதனைப்; பாதுகாத்து வைத்துள்ளன.  இந்தப் பாவைக்கூத்துக்குத் தேவையான பெரும்பாலான பொம்மைகள்,  மரமல்லி மரத்தில் செய்யப் பட்டவை என்பது ஆச்சரியமான செய்தி.

ஒரு பாவைக் கூத்து நடந்த அதிகபட்சமாக 28 பாத்திரங்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.  இதில் ராஜாக்கள், மந்திரிகள், முனிவர்கள் போன்ற மரியாதைக்குரிய பாத்திரங்கள் செய்ய மட்டுமே மரமல்லி மரத்தைப் பயன்படுத்தினர்.  இதர பாத்திரங்களான, குதிரை, யானைகள், பாம்புகள், குரங்குகள் போன்றவற்றை செய்ய வேறு வகை மரங்களைப் பயன்படுத்தினர். அவை, ஒரு வகையான கடம்ப மரம், வாரநாராயணன் மற்றும், குமிழ் மரங்கள். 

ஹாளக்கி சுக்கி குனிதா

பொம்மைகளைச் செய்யும் முன் மரத்துண்டுகளை தண்ணீரில் அமிழ்த்திப் பார்ப்பார்கள். மிதக்கும் மரங்களில் ஆண் பொம்மைகளைச் செய்வார்கள்.  தண்ணீரில் மூழ்கி விடும் எடை அதிகமான மரத்துண்டுகளில் பெண் பொம்மைகளைச் செய்வார்கள்.  பாவைக் கூத்தை நிகழ்த்தும் ஒரு கலைஞர் 17 முதல் 18 கயிறுகளை கைகளில் வைத்துக்கொண்டு அவற்றை அசைத்து கூத்தை நடத்துவார் என்ற செய்தி ஆச்சரியமாக உள்ளது.  இந்த பொம்மைகளை எல்லாம் மிகவும் கவர்ச்சிகரமான நிறங்களில் தயார் செய்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தின் பொம்மலாட்டத்தின் பெயர் ஹாளக்கி சுக்கி குனிதாஎன்பது. அதன் பொம்மைகளும் மிகவும் அற்புதமான நிறங்களில் 3 டைமன்ஷனில் செய்கிறார்கள்.  மியான்மரின் பொம்மைகளும்  த்ரீ டைமன்ன்தான்.  ஆனால் தமிழ்நாட்டின் பொம்மலாட்டம்.  என்பது தோற்பாவைக் கூத்து.  தோலில் செய்த பொம்மைகளால் நடத்தப்படும் பொம்மலாட்டம்.  மியான்மரின் பொம்மைகள், பலவிதமான ஆடை ஆபரணங்களை அணிந்தவைகளாக உள்ளன. கர்நாடக பொம்மலாட்டத்தின் பொம்மைகள், ‘யட்சகானபாத்திரங்களாக வடிவமைக்கப் பட்டிருக்கும்.  தோற்பாவைக் கூத்து என்பது இந்த இரண்டையும் விட பழமையான வடிவமாக இருக்கலாம்.

1. மரமல்லிகையின் பலமொழிப் பெயர்கள்:

1.1தமிழ்: மரமல்லிகை, ஆகாச மல்லிகை மௌவல், பன்னீர் புஷ்பம். (MARAMALLIKAI)

1.2. மராத்தி: டாக் சந்தனி, புச் (LADAK CHANDINI, BUCH)

1.3. கன்னடா: ஆகாவு; மல்லிகே (MALLIGE)

1.4. தெலுங்கு: கவுக்கி (KAVUKI)

1.5. தாய்: மினி சமேலி (MARAMALLIKAI)

1.6. இந்தி: ஆகாவு (AKAVU)

1.7. மலையாளம்: ஷவம் நாரி பூ  (SHAVAM NAARI POO)

1.8. ஒரிசா: ஆகாஷமல்லி  (AKASHMALLI)

1.9. பெங்காலி: சித்தகார்  (SITAKAR)

1.10. பொதுப் பெயர்கள்: இண்டியன் கார்க் ட்ரீ, ட்ரீ Nஐஸ்மின்  (INDIAN CORK TREE, TREE JASMINE)

பலவீனமான மரம்

மரமல்லிகை மரம் 18 முதல் 25 மீட்டர் உயரம் வளரும்.  இதன் வயது 40 ஆண்டுகள்.  பரவலான மண் விதைகளில் வளரும்.  ஈரச் செழிப்பான சூழல் ஏற்றது.  வெளிர் மஞ்சள்நிற மரம், மிகவும் மிருதுவானது.  இளங்காற்றில்  கூட முதுபெரும் மரங்கள்கூட முறிந்துபோக வாய்ப்பு உண்டு.

பூக்கள் வெண்மையான, வாசமான பெரிய பூங்கொத்துக்களாக பூக்கும்.  அவை நீண்ட கோவில் மணி மாதிரி தோற்றம் தரும்.  பார்க்க வெள்ளைநிற நாதஸ்வரம் மாதிரியும் தோன்றும்.

இருமல் மருந்துகள் செய்யலாம்

ஆஸ்துமா, சைனுசைட்டிஸ் (SINUSITIS), சோளகோக்  (CHOLA GOGUE), மற்றும் உடல் நலத்தை மேம்படுத்தும் டானிக் தயாரிக்கவும் இதன் பூ மொட்டுக்கள் பயனாகின்றன.  சிகரெட்டுகளில் புகையிலையுடன் இதன் பூக்களைச் சேர்த்து பிடித்தால் தொண்டையில் ஏற்படும் அத்தனைப் பிரச்சினைகளும் சரியாகும்.  இதன் மரமே மருத்துவ மகத்துவம் கொண்டது.  நுரையீலில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் இருமலுக்கு வேண்டிய மருந்துகள் இதிலிருந்து தயார் செய்கிறார்கள்.  இதன் இலைகள் மற்றும் வேர்களிலிருத்து தயார் செய்யும் மருந்துகளை ஆஸ்துமா, மற்றும் நுண்ணுயிரிகளை கட்டுப்படுத்தத் தருகிறார்கள்.

 

புற்றுநோய், எலும்புருக்கி நோய், பூசணங்கள், மற்றும் பாக்டீரியாக்கள், இவற்றால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் பண்புகள் இந்த மரத்தில் உள்ளன.

இந்தியா முழுக்க பரவலாக பரவியுள்ளது மரமல்லிகை.  ஆனால் கூட சில பகுதிகளில் மட்டும் விதைப் பிடிப்பதில்லை.  அவை ஆக்ரா, டெல்லி, கங்கை சமவெளிப் பகுதிகள் (INDO GANGETIC PLAINS) மற்றும் பூனா.  சென்னை, ஹைத்ராபாத், பெங்களுர், ஜம்மு. கொல்கத்தா மற்றும் பனாஜி ஆகிய இடங்களில் விதைப் பிடிப்பதில் பிரச்சினை ஏதும் இல்லை.

இரவில் பூத்து காலையில் உதிரும்

இதன் பூக்கள் பெரிய சைஸ் மல்லிகைபோல தோன்றும்.  இரவில் பூக்கும் இதன் பூக்கள் விடியற் காலையில் ஒன்றுகூட மரத்தில் இருக்காது, மரத்தின் அடியில் பாய்ப் போட்டிருக்கும். 

இதன் பழங்கள் நெற்றுக்கள் மிருதுவாக தட்டையாக இருக்கும்.  விதைகள் அகன்ற சிறகுகளுடன் இருக்கும்.  நெற்றுக்கள் வெடித்தால் பறத்து சென்று பரவ தோதாக இருக்கும். 

பறவைகள் பார்க்கும் உத்தியோகம்

ஆனால் பழங்களை சுவைத்துவிட்டு விதைகளை மட்டும் எடுத்துச் சென்று பல இடங்களில் முளைக்கச் செய்யும் உத்தியோகத்தை பறவைகள் பார்க்கின்றன. 

பழங்கள் கனிந்தவுடன் விதைகளை எடுத்து விதைக்க வேண்டும்.  காரணம் முளைக்கும் தன்மையை விரைவாக அவை இழந்துவிடும்.  ஆனால் கிளைகள்  அல்லது போத்துக்களை வெட்டி நடுவதுதான், புதிய மரங்கள் உருவாக்க சிறந்த வழிமுறை.  பிரச்சினை இல்லாதது.  சீக்கிரமாக மரமாகும்.

Post your comments please, regards - Gnanasuria Bahavan D (Author)

8888888888888888888888888888888888

 

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...