மந்தாரை அழகிய இந்திய பூ மரம் |
(MANTHAARAI, CAMEL
FOOT TREE, BAUHINIA VARIEGATA,
CEASALPINEACEAE)
தாவரவியல்
பெயர்: பாஹினியா வேரிகேட்டா (BAUHINIA
VARIEGATA)
தாவரக்
குடும்பம்: சிசால்பீனியேசியே (CEASALPINEACEAE)
ஆங்கிலப்
பெயர்: கேமல் ஃபூட் ட்ரீ, ஆர்க்கிட் ட்ரீ, கச்னார் ட்ரீ, மவுண்டெய்ன் எபனி(CAMEL
FOOT TREE, ORCHID TREE, KACHNAR TREE, MOUNTAIN EBONY)
தாயகம்:
இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி
இந்தியாவிலேயே
அழகான, பத்து பூ மரங்களுள் ஒன்று மந்தாரை என்னும் ஆத்தி. மிக அழகான பூக்களைத் தரும்
மரம். இதன் இலைகளின் தோற்றத்தை வைத்துத்தான் ஆங்கிலத்தில் இதனை ஒட்டகக்கால்
மரம் என்கிறார்கள்.
சங்ககாலத்தில் இதன் பெயர் ஆத்தி. அவ்வைக்கு பிடித்த பூ மரம். இல்லை என்றால் தனது நூலுக்கு ஆத்திச்சூடி
என்று பெயர் வைத்திருப்பாரா ? தமிழ்
கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது, மந்தாரை என்னும் ஆத்தி. இமைய மலையில்
தொடங்கி, குமரிவரை பரவலாக வளரும் மரம்,
ஆத்தி.
ஆத்தி மரத்தின் பலமொழிப் பெயர்கள்
தமிழ்:
ஆத்தி (AATHI)
தெலுங்கு: போதந்தா, தேவகாஞ்சனமு
(BODANTA, DEVAKANCHANAMU)
கன்னடம்:
அரிசிநந்திகி, அயாட்டா, பிலிகஞ்சிவாலா, இர்க்குபாலித்து (ARISINANTIGE,
AYATA, BILIKANJIVALA, IRKUBALITU)
மலையாளம்:
சோவன்ன மந்தாரு, சுவன்ன மந்தரம் (SOVANNA
MANDARU, CHUVANNA MANTHARAM)
மராத்தி:
கானராஜ, கவிதரா, காஞ்சன், ரக்தா காஞ்சன்;
(KANARAJA, KANCHAN, RAKTHA KANCHAN)
மிசோரம்:
மாவ்-பேவாங், வாப், வாவ்வேங் (MAO-BAVONG,
VAP, VAVENG)
பெங்காலி:
ரக்தா காஞ்சன் (RAKTHA
KANCHAN)
மணிப்புரி:
சிங்த்ராவ்; (SINGTHRAO)
ஒரியா:
வாவ் பேபாங், வாப், காஞ்சன் (VAV
BABONG, VAP, KANCHAN)
இந்தி:
கச்னார்; (KACHNAR)
சம்ஸ்கிருதம்:
அஷ்மன்டகா, அஷ்போட்டா, சாமரிகா, சாமரி (ASHMANTAKA,
ASHPOTTA, SAMARIKA, SAMARI)
நேபாளி: கொய்ராலோ (KOIRALO)
அசாமீஸ்:
கொட்டோரா, குரால் (KOTARO,
KURAL)
பொதுப்
பெயர்: கச்னார் ஆர்கிட் ட்ரீ, வேரிகேட்டட் பாஹினியா (KACHNAR
ORCHID TREE, VARIEGATED BAUHINIA)
தாவரவியல்
பெயர்: பாகினியா வேரிகேட்டா (BAUHINIA VARIEGATA)
தாவரக்குடும்பம்:
சிசால்பைனியேசி (CAESALPINEACEAE)
பண்புகள்
சுமார் 10 மீட்டர்
உயரம் வளரும் நடுத்தரமான மரம் இது; கிளைகள் பெரும்பாலும் மெல்லியதாக இருக்கும். பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதங்களில் பூக்கள் அதிகம் பூக்கும். நுனிக் கிளைகளில் பூக்கள் அடர்ந்திருக்கும்.
பயன்கள்
இலைகள்
கால்நடைகளுக்கு தீவனமாகும். இதன் தழைகள் 10 முதல் 15 சதம்
வரை புரதம் தரும்; முற்றிய இலைகளில், டேனின் அதிகம் உள்ளது; அதனால் இளம் இலைகளையே கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்துவர்.
ஆத்தி இலைகளை பீடி சுற்றுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். சில
வகையின் இலைகள் அகலமாக இருக்கும். இவற்றில்,
உணவு விடுதிககளில் பொட்டலங்கள் கட்டுகிறார்கள். தையல்
இலைகள் கூட தயாரிக்கிறார்கள்.
ஐந்து
இதழ்களைக் கொண்ட இதன் பூக்கள் தேனீக்களுக்கு தேன், மகரந்தம்
தரும். ஆத்தி மரங்கள் அதிகமிருந்தால், அங்கே தேனிப் பெட்டிகள் வைத்து, தேன்
உற்பத்தி செய்யலாம்; சிலர்
இதன் பூக்களை சமைத்து சாப்பிடுகிறார்கள்.
மரத்தில்
வேளாண் கருவிகள் செய்யலாம்.
பூக்கள்,
பட்டை, வேர், அனைத்தும் மருந்து தரும்.
சிலசமயம் கன்று ஈன்ற பின்னர், நச்சுக் கொடி தாய்ப்; பசுவின்
வயிற்றுக்குள்ளேயே தங்கிவிடும்; அவற்றிற்கு ஆத்தி இலையைக்
கொடுத்தால், நச்சுக்கொடி இயல்பாக
வெளியேறும்.
பட்டைகளில்
டேனின் சத்து அதிகமிருப்பதால், தோல் பதனிடலாம், சாயமேற்றலாம்; இதிலிருந்து,
நார் உரித்தெடுக்கலாம்.
மந்தாரை உள்ளவரை நொந்தாரை காணமுடியுமா
?
பல நோய்களை மந்தாரை குணப்படுத்தும்.
அதனால்தான் “மந்தாரை உள்ளவரை நொந்தாரை காணமுடியுமா
?” என்ற பழமொழி தமிழில் புழக்கத்தில் உள்ளது.
பேதி மருந்தாக பயன்படுதல், சீதபேதி,
மூல நோய், வயிற்றுப்போக்கு, ரத்தக்கட்டிகள், குரல்வளை சுரப்பி வீக்கம் அஜீரணம்,
தலை முடிகொட்டாமல் பாதுகாத்தல், உடலுக்கு குளிர்சி
அளித்தல், தைராய்டு சுரப்பினை சீராக்குதல், ஆகியவற்றிற்கு பரம்பரியமுறையில் சிகிச்சை அளிக்கிறது மந்தாரை.
எங்கு
நடலாம் ?
ஆத்தி
மரங்கள், சிறு
குன்றுகளின் சரிவுகளிலும், ஏரி ஓரங்களிலும், தோட்டங்களிலும், பொது இடங்களிலுள்ள வீடுகள் அல்லது இதர கட்டிட முகப்புக்களில், அழகூட்டுவதற்காக நடவு செய்கிறார்கள்.
ஏற்ற
மண்வகை
செஞ்சரளை
மண், சுண்ணாம்பு நிலங்கள், இருமண்பாடான நிலங்கள், போன்ற எல்லா மண் வகைகளிலும் ஆத்தியை நட்டு வளர்க்கலாம்; ஆனால் வடிகால் வசதி தேவை.
விதை
சேகரிப்பு
நீளம்குறைந்த
நெற்றுக்கள், ஆழ்ந்த காவி வண்ணமுடையதாக இருக்கும்; இவை
வெடித்துச்சிதறும் முன், இதை பறித்து விதைகளை சேகரிக்கலாம்; விதைகள் நீளமான வட்ட வடிவில், காவி வண்ணத்தில் இருக்கும்; ஒரு கிலோ எடையில் 2800 முதல் 3,800 விதைகள் வரை இருக்கும்.
விதை
முளைப்பு
100 விதைகளை
விதைத்தால், 95 விதைகள் அப்;பழுக்கு இல்லாமல் முளைக்கும்; தண்ணீரில் ஊறவைத்து விதைத்தால், அவை
விரைவாக முளைக்கும்; ஆனால் முளைப்பு
முப்பது நாள்வரை நீடிக்கும்;
ஆத்தி மரக் கன்றுகளை நட்டு வளர்ப்பதைவிட, விதைகளாக
விதைப்பதே சிறந்தது.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment