இலையழகு பூவழகு மஞ்சள் கொன்றை |
(SCIAMESE
SENNA)
தாவரவியல்
பெயர்: கேசியா சயாமியா (CASSIA
SCIAMEYA)
தாவரக்
குடும்பம்: சிசால்பினியேசியே (CAESALPINEACEAE)
பொதுப்பெயர்: சயாமிஸ் சென்னா (SCIAMESE SENNA)
தாயகம்: தென்
கிழக்கு ஆசிய நாடுகள்
பலமொழிப்
பெயர்கள்:
தமிழ்:
மஞ்சள்கொன்றை (MANJAL
KONRAI)
இந்தி:
சீமியா, கசோட் (SEEMIA,
CASODE)
மலையாளம்:
மஞ்சகொன்னா (MANJAKONNA)
தெலுங்கு:
சீமத்தங்கிடு (SEEMA
THANGIDU)
கன்னடம்:
சீமத்தங்கிடு (SEEMA
THANGIDU)
கால்நடைகளால்
மேயப்படாத மரம். விவசாய நிலங்களுக்கு தழைஉரம் தரக்கூடிய மரம். சாலை ஓரம், நீர்நிலைகள் ஓரம், வறண்ட பொது இடங்களில் நடுவதற்கு ஏற்ற மரம்.
தோண்டிப் போட்ட புது மண்ணிலும் வளர ஏற்ற மரம். பூங்காக்களில் அழகூட்ட வளர்க்கப்
படுவதற்குறிய மரம். அரக்குப்பூச்சி வளர்க்க உதவும் மரம்.
கால்நடைகள் மேயாத மரம்
வறட்சியான
காலங்களில்கூட குறைவான தழை உதிர்த்து
பசுமையாக தோன்றும் மரம். சரஞ்சரமாக இளம்பச்சை நிறமான இதன் இலைகள், பார்க்க
பரவமூட்டும். அடர்த்தியான
மஞ்சள் நிற பூக்கள் இதற்கு மேலும்
அழகூட்டும்.
மழை
மறைவு பிரதேசங்களில், கால்நடைகளின்
மேய்ச்சல் தொந்தரவில்லாமல் வளர்ப்பதற்கேற்ற அற்புதமான மரம்.
கட்டிட தூண்களுக்கு பொருத்தமான மரம்.
ஓர்
ஆண்டில் ஏறத்தாழ ஒன்பது மாதங்கள், தமது கிளை நுனிகளில், பொன்னிற பூக்களை ஏந்தியபடி, இதன் பூங்கொத்துக்கள், அரையடி
நீளத்திற்கு ஆடி அசைந்தபடி இருக்கும்.
இந்திய
மரமாக இருப்பினும், ஆப்பிரிக்க நாட்டின் விறகு மரமாக அறிமுகமாகி உள்ளது. கட்டிடங்களில் தூண்களாக இதன் அடிமரத்தை பயன்படுத்துகிறார்கள்.
நாங்கள்
நீர்வடிப்பகுதி திட்டங்களை செயல்படுத்தும்போது கூட, எங்களுக்கு
கை கொடுத்தது இந்த மஞ்சள் கொன்றை மரங்கள்தான். இதன் இளம் செடிகள் துளிர்த்து
வரும்போது, இதன் இலைச் சரங்கள் மிக அழகாக இருக்கும்.
மஞ்சள்கொன்றை
மரங்கள், நடுத்தரமான உயரம் வளரும்.
அதிகபட்சம் 15 மீட்டர் உயரத்திற்கும்,
அடிமர சுற்றளவாக 2 மீட்டரும் வளர்ந்து, அடர்த்தியான தழை அமைப்பைக் கொண்டிருக்கும்.
இதன்
கிளைக் கவைகளின் இருபக்கமும் 12 முதல் 18 ஜோடி இலைகளை உருவாக்கும். இதன் இலைகள் பெரிய அளவில் புளியன் இலைகளை ஒத்திருக்கும்.
ஒரு கிலோவில் நாற்பதாயிரம் விதைகள்
இதன்
விதைகள் அரக்கு நிற பொட்டினைப் போன்றது.
ஒருகிலோ எடையில் 30,000. முதல் 40,000. விதைகள்
வரை இருக்கும். விதைகள் மிகவும்
லேசானவை.
வளர்ந்த
மரத்தில், மேஜை, நாற்காலி, விவசாயக் கருவிகள், மரச்சுத்திகள், கைத்தடிகள்போன்ற பல, மரச்சாமான்களைச் செய்யலாம்.
கிழக்கு
தொடர்ச்சிமலை, மேற்கு தொடர்ச்சிமலை ஆகியவற்றின் அருகமைந்த, சிறு
சிறு குன்றுகளிலும், மணல் மேடுகளிலும், மண்ணரிப்பைத் தடுத்த மரங்கள் இந்த
கொன்றை மரங்கள்தான். மஞ்சள்
கொன்றை மரம்; மகத்துவமான
மரம்.
தழை உரமாகும் தழைகள்
சமீபத்தில்
ஒரு விவசாயியின் வயலுக்கு சென்றிருந்தேன்.
அப்போது நெல்வயலில், வரப்புகளில் ஏகப்பட்ட மஞ்சள் கொன்றை மற்றும் புங்கன் மரங்களை நட்டிருந்தார்.
அந்த
மரங்களெல்லாம் நான்கடி குரோட்டன்ஸ் செடி மாதிரி வெட்டப் பட்டிருந்தது. அடிமரம்
பெரிதாய். இருந்தது. நீளமான கிளைகள் இல்லாமல், இலைகள்
பந்து மாதிரி போர்த்தி இருந்தன.
விசாரித்தபோது தெரிந்தது. அந்த
விவசாயி பல ஆண்டுகளாக, இந்த மரங்களின் தழையை அறக்கி, நெல்
வயலுக்கு உரமாக போட்டிருக்கிறார் என்று.
ஆப்பிரிக்காவில்
'கானா" என்ற நாட்டில்,
விறகுப் பஞ்சத்தை தீர்த்து வைத்தது இந்த மஞ்சள் கொன்றைதான். வெட்டவெட்ட
துளிர்த்து தொடர்ச்சியாக அவர்களுக்கு விறகு விநியோகம் செய்து வருகிறது.
மஞ்கள்
கொன்றையை வளர்க்க வேண்டுமென்று முடிவு செய்தால், அதற்கான
நிலம் ஆழமான மண்கண்டம் உடையதாக இருக்க வேண்டும்
பரவலாக எல்லா மண் வகைகளிலும் இது வளரும்.
விதை
பந்துகள் தயார்செய்ய ஏற்ற மரம்
தற்போது
தமிழ்நாட்டில், பரவலாக இளைஞர்கள் மரம்நடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இது
பாராட்டிற்குறிய ஒன்று. பல மாவட்டங்களில் விதை பந்துகள் தயார்செய்து, விதைத்து
வருகின்றனர்.
அப்படி
விதைப்பந்து தயாரிப்பதற்கு ஏற்ற மரவகை இது. ஒரு கிலோ விதை சேகரித்தால், சேதாரம்
போக, இரண்டிரண்டு
விதைகளாக வைத்தால்கூட 15,000 விதைப்
பந்துக்களை தயாரிக்கலாம். நல்ல விதையாக இருந்தால், விதைக்கும்
விதைகள் 7 முதல் 10 நாட்களில் முளைத்துவிடும்.
சுற்றுப்
புறத்தில், காற்று மண்டலத்தில் கரைந்திருக்கும் மாசு மற்றும் கலந்திருக்கும் தூசுகளை
நீக்கி, நட்ட இடங்களுக்கு
பசுமை போர்த்தி, அழகூட்டும் அற்புதமான மரம்,
மஞ்சள் கொன்றை மரம்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment