Friday, June 30, 2023

MANGOSTEEN MOST DELICIOUS JUICY FRUIT 198. சாறு நிறைந்த ஐஸ்கட்டி பழம் மங்குஸ்தான்

 

ஐஸ்கட்டி பழம் 
மங்குஸ்தான்


(MANGSSTHAN, MANGOSTEEN, GARCINIA MANGOSTANA, CLUSIACEAE  )

தாவரவியல் பெயர்: கார்சீனியா மங்குஸ்தானா

(GARCINIA MANGOSTANA)

தாவரக் குடும்பம் பெயர்: குளுசியேசி (CLUSIACEAE)

பொதுப் பெயர்கள்: கோகம், கோவா பட்டர் ட்ரீ, கோகம் பட்டர் ட்ரீ, மங்குஸ்டீன் (KOGAM, GOVA BUTTER TREE, KOGAM BUTTER TREE, MANGUSTEEN)   

தாயகம்: சுந்தா தீவுகள் – தென் கிழக்கு ஆசியா

மலைப்பகுதிகளில் வளரும் வித்தியாசமான ஒரு பழமரம்.

மங்குஸ்தான் பழங்களை பார்க்க வேண்டுமானால் ஊட்டி கொடைக்கானல் போக வேண்டும்.  அல்லது அந்த மலையடிவார பழக்கடைகளில் பார்க்கலாம்.  பரவலாக மங்குஸ்தான் என்றே அழைக்கப்படுகிறது.  வித்தியாசமான ஒரு பழம்.

வெப்பமண்டலத்தில் வளரும் பசுமை மாறா மரம் என்றாலும் கூட, நம்மைப் பொறுத்தவரை குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களில் தான் வளர்கின்றன.

சாறு நிறைந்த ஐஸ்கட்டி பழம்

இந்தோனேசியா நாட்டின் சந்தா தீவுகளுக்கு சொந்தமான மரம், இந்தியாவின் வடமேற்குப் பகுதி, தென்கிழக்கு ஆசியா, போர்டோ ரிகோ, புளோரிடா ஆகிய பகுதிகளில் மங்குஸ்தான் அதிகம் பரவியுள்ளன.

மங்குஸ்தான் பழங்கள் அடர்த்தியான ஊதா நிறத்தில் இருக்கும்.  பழங்கள் தொட்டால் மெத் மெத் தென்று இருக்கும்.

மேல் தோலை சுலபமாக உரித்தெடுக்கலாம்.  ஐஸ்கட்டியில் செய்ததுபோல சாறு நிறைந்த ஐந்தாறு சுளைகளாக இருக்கும்.      

மலேஷியா, போர்னியோ, தென்கிழக்கு ஆசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய பகுதிகளில்; எல்லாம் மிகவும் தொன்மையானது இந்த மங்குஸ்தான்.  பிறகு மெல்ல இது மேற்கத்திய நாடுகளிலும் பரவியது.  அவை வெஸ்ட் இண்டிஸ் தீவுகள், குறிப்பாக  ஜமெய்கா, கவுட்டிமாலா, ஹோண்டுராஸ், பனாமா மற்றும் ஈக்வேடர்.

மங்குஸ்தான் மரத்தின் பலமொழிப் பெயர்கள்.

தமிழ்: மங்குஸ்தான், கனிப்பொன்னா, முர்கல், மோர்கல் மரம் (MANGUSTHAN,KANIPPONNA, MURGAL, MORGAL)

இந்தி: கோகம் (KOGAM)

மராத்தி: பெராண்டா, பிராண்டா, கோகம்பா, கோகம்பி, ராடம்பா, ராடம்பி, டாம்படா, அம்பு (PERANDA, PIRANDA, KOGAMBA, KAGAMBI, RADAMBA, RADAMBI, TAMBUDA, AMBU)

மலையாளம்: காட்டம்பி, கோகம் (KATTAMBI, KOGAM)

கன்னடா: முர்கினா,  புனர்புலி, தேவன குளி (MURGINA, PUNARPULI, DEVANAKULI)

ஒரியா: டின்டாலி (TINDALI)

குஐராத்தி: கோகம் (KOGAM)

கொங்கணி: பிரிண்ட் (BRINT)

சமஸ்கிருதம்: விருக்வுமியா, அம்லபிஜா அம்லபுரா, அம்லஷகா (VRIKSHAMIYA, AMLABIJA, AMLAPURA, AMLASHAKA)

வெப்பம் தாங்காத மரம்

மங்குஸ்தான் விதைக் கன்றுகளை நடுவதுதான் சிறந்தது.  இதன் விதைகளை உலரவிடக் கூடாது.  உடனே விதைகளை தண்ணீரில் முக்கி வைத்திருந்து விதைப்பதால் 14 முதல் 21 நாட்களில், முளைத்துவிடும்.  முளைத்த இளம் கன்றுகளை குறைந்தது இரண்டு ஆண்டுகள், நாற்றங்காலில் வைத்திருக்க வேண்டும்.  அதன் பின்னர் நடுவது நல்ல பலன் கொடுக்கும்.

இளம் மங்குஸ்தான் மரங்களுக்கு நிறைய நிழல் வேண்டும்.  அதனால் வாழை, ரம்பூட்டான், துரியன், தென்னை ஆகியவற்றின் ஊடாக பெரும்பாலும் இதனை நடவு செய்து வளர்க்கிறார்கள்.  வளர்ந்த மரங்கள் நிழல் தாங்கி வளரும்.  வெப்பமும் 20 டிகிரி சென்டிகிரேடுக்குக் குறையாமல் இருந்த வேண்டும்.  அதுபோல 35 சென்டிகிரேடுக்கு மேல் வெப்பத்தையும் தாங்காது.

மங்குஸ்தான் மரங்களின் வேர் அமைப்பு மிகவும் பலவீனமானது.  அதனால் அதற்கு, ஆழமான மண்கண்டம், நல்ல வடிகால் வசதி, ஈரம் காத்திருக்கும் நிலவாகு, இதற்கு பொருத்தமான சூழல்.  பொரும்பாலும் ஆற்றங்கரை அல்லது ஒடக்கரைகளில் நன்கு வளரும்.  குறிப்பாக சில மண் வகைகளில் மங்குஸ்தான் சரியாக வளராது.  அவை, சுண்ணாம்புக்கல் நிறைந்த மண், மணல் சாரி, லேசான வண்டல்மண், மற்றும் குறைவான அங்ககப் பொருள் உடைய பூமி.

ஒரு மரம் மூவாயிரம் பழங்கள் தரும்

மங்குஸ்தான் மரங்கள் 100 வயது தாண்டியும் காய்த்துக் கொண்டிருக்கின்றன.  நன்றாகக் காய்க்கும் ஒரு மரம் 3000 பழங்கள் கூட தரும்.  ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி 8 முதல் 10 ஆண்டுகளில் மரத்திற்கு 500 காய்கள் கூட காய்க்கும்நன்றாகக் காய்க்கும்படியான மரங்கள் ஐந்து பத்து இருந்தால் கூட வெள்ளம் என்கிறார்கள், மலை விவசாயிகள்.

மங்குஸ்தான் என்றால் அதிகம் உற்பத்தி செய்வது. தாய்லாந்து அதற்கு அடுத்த முன்னணி வரிசையில் இருக்கும் நாடுகள், இந்தோனேசியா, மலேசியா மற்றும்  பிலிப்பைன்ஸ்.

மங்குஸ்தான் பழங்கள் ஊட்டம் நிறைந்தது

மங்குஸ்தான் பழத்தில், தையமின், ரைபோபிளேவின், நயசின், வைட்டமின் பி, வைட்டமின் சிஆகிய வைட்டமின்களும், கால்சியம், இரும்பு, மக்னீசியம், மங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டசியம், சோடியம், ஜிங்க் ஆகிய தாது உப்புக்களும் உள்ளன, இவை தவிர கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்தும்  அடங்கி உள்ளன.

மங்குஸ்தானின் பழத்தோல், பட்டை, இலைகள், வேர்கள், போன்றவற்றை பல்வேறு தோய்களை குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.  உதாரணமாக, சீதபேதி, சிறுநீர் தாரையில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தோல் சம்மந்தமான நோய்கள்.  மருந்துகள் தயாரிக்க உலர்ந்த பழங்கள் எல்லாம் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி ஆகின்றன.  ஆனால் இது குறித்த பூர்வாங்கமான மருத்துவ ஆய்வுகள் ஏதும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

பல்துலக்கலாம், பெட்டிகள் செய்யலாம்

மங்குஸ்தான் மரத்தின் குச்சிகளை கானா நாட்டு மக்கள் பல்துலக்கியாக (MANGUSTHAN) பயன்படுத்துகிறார்கள்.  மங்குஸ்தான் குச்சிகளில் பல்விளக்கினால் பல்சொத்தை, ஈறுகள் வீக்கம், ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்றவை வராது என்கிறார்கள் கானா நாட்டினர்.

வனங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள், மங்குஸ்தான் மரத்தின் நெளிவு சுளிவு இல்லாத நேரான கம்புகளை வெட்டி அதில் ஈட்டிகள் செய்யப் பயன்படுத்துகிறார்கள்.  இந்த மரங்கள் அழகழகான பெட்டிகள் செய்ய தோதானவை என்கிறார்கள், இந்தோனேசியா கார்பென்டர்கள்.

டேனின் சத்து அதிகமாக இருக்கும் மங்குஸ்தான் தோலை சேமித்து  தோல் பதனிடும் தொழிலை சிக்கலில்லாமல் செய்கிறார்கள் சீனாக்காரர்கள்.

மங்குஸ்தான் பல நாடுகளில் உற்பத்தி செய்தாலும் இதன் உற்பத்தி மிகவும் குறைவு.  சர்வேதேச சந்தையில் இதற்கென ஒரு இடம் இன்னும் பிடிபடவில்லை.  இன்னும் கூட பல நாடுகளிலும் சாலைகளில் சிறுசிறு கடைகளில்தான் விற்பனை ஆகின்றது.

அமெரிக்காவில், புளோரிடாவில் சில இடங்களில் மங்குஸ்தான் பயிரிட்டாலும், கரிபியன் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி ஆகிறது.  ஆனாலும் மங்குஸ்தான் பழங்கள் அமெரிக்காவில் ஆனைவிலை குதிரைவிலை.

உலகிலேயே தாய்லாந்து நாட்டில்தான் அதிகம் மங்குஸ்தான் சாகுபடி ஆகிறது.  அங்கு 1,15,000 ஏக்கர் பரப்பில் மங்குஸ்தான் மரங்கள் உள்ளன. 

மருந்துகள் தயாரிக்கும் கம்பெனிகளை பார்மசூட்டிகல்ஸ் (PHARMACEUTICALS) என்கிறார்கள்.  அதுபோல இப்போது புரூட்டசூட்டிகல்ஸ்;’ (FRUITACEUTICALS) கம்பெனிகள் வந்துள்ளன.  பழங்களிலிருந்து ஐஸ் தயாரித்து விற்பனை செய்யும் கம்பெனிகள் என்று அர்த்தம். 

சேங்கோ(SANGO) என்பது அதுபோல ஒரு கம்பெனி.  அவர்களுக்கு உலகம் முழுக்க 5 லட்சம் கிளைகள் இருக்காம்.  அவர்கள் தயாரித்து விற்பனை செய்வது பழங்களிலிருந்து தயாரிக்கும் ஜூஸ்கள் மட்டும்தான்.

ஒரு சமயம் மங்குஸ்தான் பிரபலமாக இருந்தது ஆனால் சாப்பிடக் கிடைக்காது.  யாரும் சாப்பிட்டதும் கிடையாது அதனால் பிரபலமான எழுத்தாளர் ருடியட் கிப்ளிங்மங்குஸ்தான் பற்றி இப்படி எழுதினார்.  நான் எழுதியதை முழுவதுமாக புரிந்துகொள்ள வேண்டுமானால் நீங்கள் மங்குஸ்தான் பழத்தை சாப்பிட வேண்டும்” (அவ்வளவு சுலபத்தில் அது கிடைக்காது என்ற அர்த்தத்தில்)

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...