Thursday, June 15, 2023

MANGO TREE 06. மாமரம்

  

மாதா ஊட்டாத சோற்றை
மாங்கா ஊட்டும்

06. மா

(MANGO TREE)

மாமரம் இந்திய மரம், மாம்பழம் இந்தியாவின் தேசிய பழம், தமிழ்நாட்டின் முக்கனிகளில் முதல்கனி, மாவில் இந்தியாவில் இருப்பவை மட்டும் சுமார் 1500 வகை, உலக அளவில் மாம்பழ உற்பத்தியில் முதலாக இருக்கும் நாடு  இந்தியா, இரண்டு தமிழ்க் கடவுள்கள் எனக்கு உனக்கு என போட்டி போட்டதும்பழனி என்ற ஊர் உருவானதற்கு காரணமும் மாம்பழம்தான், உலகின் தரமான சுவையான மா ரகம் என்பது இந்தியாவின் அல்ஃபோன்சாமா ரகம்தான்.      

பொதுப் பெயர்: மேங்கோ (MANGO)

தாவரவியல் பெயர்: மேங்கி பெரா இண்டிகா (MANGIFERA INDICA)

தாவரக் குடும்பம் பெயர்: அனாகார்டியேசி (ANACARDIACEAE)

தாயகம்: இந்தியா

பலமொழிப் பெயர்கள்:

தமிழ்: மாங்கா, மா, மாமரம், (MANGA, MAA, MAMARAM)

அரபி: மாங்கா (MANGA)

அசாமிஸ்: ஆம் (AAM)

பெங்காலி: ஆமா (AAMA)

டட்ச்: பாபி மாஞ்சா (BOBBIE MANJA)

ஆங்கிலம்: மாங்கோ, கூக்கூஸ் ஜாய் (MANGO. CUKOO’S JOY)

பீஐியன்: ஆம், மாங்கா (AAM, MANGA)

பிலிப்பினோ: பகோ, மாங்கா (PAHO, MAANGA)

பிரென்: மங்கூயர், மங்கூச் (MANGUIER, MANGUCH)

ஐர்மன்: மேங்கோ பாம் (MANGO BAUM)

குஐராத்தி: ஆம்போ (AAMBO)

ஹவாயன்: மனாகோ (MANACO)

இந்தி: ஆம் (AAM)

இந்தோனேசியா: மாங்கா (MAANGA)

இருளா: மாமரம், காரே மாங்கா (MAAMARAM, KARAE MANGA)

கன்னடா: மாவு, பலிமாவு (MAAVU, BALIMAVU)

காஷ்மீரி: ஆம்ப் (AMB)

கொங்கணி: அம்போ (AMBO)

லாய்: மாங்கா (MANGA)

மலையாளம்: மாம்பழம் (MAAMBAZHAM)

மணிப்புரி: ஹீனவ் (HEINAV)

மராத்தி: அம்பா (AMBA)

நேப்பாளி: மேங்கோ (MANCO)

பஞ்சாபி: ஆம்ப் (AMB)

சமஸ்கிருதம்: அம்ரா, சூட்டா (AMRA, CHUTA)

சிங்களா: அம்பா (AMBA)

ஸ்பேனிஷ்;:மாங்கா (MAANGA)

தாய்: மாமாங் (MAMAUNG)

உருது: ஆம் (AAM)

வியட்நாமிஸ்:சோ  (XO)

மாங்கா எனும் தமிழ்ச்சொல்    

இந்தியாவின் தேசிய பழம்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது மாமரம், இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தேசியப்பழமும் மாம்பழம்தான்.  

ஏசுகிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்தாகவே இந்தியாவில் மாமரங்களை வளர்க்கும் பழக்கம் பிரபலமாக இருந்துள்ளதுசுமார் 100 அடி உயரம் வரை வளரும் பெரிய மரம் இது.

ஞானப்பழம் எனும் மாம்பழம்  

இரண்டு தமிழ்க் கடவுள்கள் எனக்கு உனக்கு என போட்டு அதற்கான போட்டியில் இறங்கியதும், பழனி என்ற ஊர் உருவானதற்கு காரணமும் ஞானப்பழம் எனும் இந்த மாம்பழம்தான்.  

பழம் நீயப்பா  பழம் நீயப்பாஎன்று கே பி சுந்தராம்பாள் பாடிய பிரபலமான சினிமா பாட்டும், தமிழ்க் கடவுள் முருகனை  மாம்பழத்தோடு ஒப்பிட்டு பாடியதுதான்.  

மா, பலா, வாழை என்ற தமிழ்நாட்டின் முக்கனிகளில் முதல்கனியாகவும், மூத்த கனியாகவும் உள்ளது மா. 

உலகின் சிறந்த 10 மா வகைகள்

உலகின் மிகச் சிறந்த 10 மா ரகங்களில் முதன்மையானது இந்தியாவின் அல்ஃபோன்சோ மாவகை தான், மற்றவை எல்லாம் பல   நாடுகளையும் சேர்ந்தவை,

அவை பிலிப்பைன்ஸ் நாட்டின் கராபாவோ (CARAPOA), பாக்கீஸ்தானின் சிந்திரி (SINTHIRI), பர்மாவின் சீன் டா லோன் (SIN TA LON), மெக்சிகோவின் அடால்ஃபோ (ATAULPHO), வட அமெரிக்காவின் ஹேடன் (HADEN), ஜமைகாவின் ஜூலி(JULIE), தெற்கு ஆசியாவின் மேடம் ஃபிரான்சிஸ் (MADAM FRACIS), தாய்லாந்தின் ஐவரி மேங்கொ (IVORY MANGO), மற்றும் ஆஸ்திரேலியாவின் கென்சிங்க்டன் பிரைட் (KENSINGTON PRIDE).

அல்போன்சோமா வின் ராஜா

உலகின் தலை சிறந்த மாரகம்தான் அல்போன்சோ. இது இந்தியாவின் தலை சிறந்த மா ரகம், அல்போன்சோவை மாரகங்களில் ராஜா என்று வருணிக்கப்படுகிறது. 25 % கூடுதலான விலையில் விற்பனை ஆகிறது, இதர மா ரகங்களை விட. இதன் கொட்டைகள் சிறியதாக இருக்கும்

மாம்பகைகள்

மாமரம் என்றாலே முதல் பயன் அதன் பழங்கள்தான்காய்த்து ய்ந்த பின் மரங்களைப் பயன்படுத்தலாம்கதவுகள், மற்றும் வாசல்கால்கள் செய்ய சர்வசாதாரணமாக மாம்பகைகள் பயன்படுத்தப் படுகின்றன

பிளைவுட்என்னும் ஒட்டுப்பகைகள் மற்றும் விலைமலிவான மேஜை நாற்காலிகள் போன்றவை தயார் செய்யவும் பயனாகிறது.    

மரத்தின் சுற்றளவும் 100 முதல் 125 அடிவரை பருக்கும் என்கிறார்கள்முன்னூறு ஆண்டு வயதுடைய மாமரங்கள் கூட காய்க்கின்றன, என்பது ஆச்சரியப்படும்படியான செய்தி.

மாம்பூக்கள்    

இதன் பூங்கொத்துக்களில் பார்க்க அலங்கரித்த தேர்போல இருக்கும்ஒரு பூங்கொத்தில் 3000 முதல் 5000 பூக்கள் இருக்கும்அவற்றில் 25 முதல் 98 சதம் ஆண்பூக்கள்மீமுள்ளவை இருபால் பூக்கள்சந்தனம் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும் இதன் பூக்கள்.

தமிழில் மா, மாங்காய், மாம்பழம் என்று அழைக்கப்படுகிறதுபல நாடுகளில் பல மொழிகளில் பல பெயர்களில் அழைத்தாலும் மாங்காஎன்ற தமிழ்ச் சொல்தான் பல நாடுகளிலும் பரவியுள்ளது.

ஸ்பேனிஷ் மொழியிலும் மாங்காதான்

ண்மையில் பிரேசில் நாட்டிற்கு சென்றிருந்தேன்அங்கு எந்த ஹோட்டலுக்கு சென்றாலும், வாசலிலேயே, பல்வேறு விதமான பழஜூஸ்புட்டிகள் அடுக்கி வைத்திருக்கும்.

த்துப் பன்னிரண்டு வகையான ஜூஸ்கள் இருக்கும்ஒரு ஹோட்டலில் மேங்கோ ஜூஸ்என்று ஆர்டர் செய்தேன்கொண்டு வந்த சர்வரிடம் ஸ்பேனிஷ் மொழியில் இதற்கு என்ன பெயர் என்று கேட்டேன், அவர் சொன்ன பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்ததுவர் சொன்னது மாங்கா”. 

இன்னொரு பிரேசில் நாட்டு நண்பரிடம் கேட்டேன்மாங்கா என்பது தமிழ் மொழிநீங்களும் அப்படியே சொல்லுகிறீர்கள் ?” என்றேன். அப்போது அவர் சொன்னார் இது உங்கள் நாட்டில் இருந்து வந்ததுதானே அதனால் அந்தப் பெயரை அப்படியே வைத்துக் கொண்டோம் என்றார். 

போர்ச்சுக்கீசிய வியாபாரிகள்   

போர்ச்சுக்கீசிய வியாபாரிகள்தான், இந்தியாவிலிருந்து மாங்காவை பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்தவர்கள்அங்கிருந்து மொசாம்பிக், அங்கோலா, மெக்சிகோ, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சென்றதுஇன்று உலகின் வெப்பப் பகுதிகளில் எல்லாம் நமது இந்திய மாவின் ரகங்கள்தான் உலா வருகின்றன.    

இந்தியாவிற்கு அடுத்துதான் சீனா

நீண்டகாலமாக உலகத்திலேயே அதிக மா உற்பத்திப் செய்யும் நாடாக இருந்து வந்தது இந்தியா மட்டுமேஆனால் 2009 ம் ஆண்டு வாக்கில் உலகின் இரண்டாவது அதிக மா உற்பத்தியாளர் என்ற இடத்தைப் பிடித்துள்ளது சீனாஉலகின் மொத்த உற்பத்தியில் 42.2 % மாவினை இந்தியா உற்பத்தி செய்கிறது.

இந்தியாவின் முக்கிய மாவகைகள்

இந்தியா உற்பத்தி செய்யும் முக்கியமான மாவகைகள், அல்போன்சோ, பங்கனபள்ளி, நீலம், செந்தூரா, ருமானி, மல்கோவா, பங்களூரா, சுவர்ணரேக்கா, பீட்டர், ஜெகாங்கீர், சவ்சா, லங்ரா, மல்லிகா, மற்றும் அம்ரபாலி. 

விதையில்லா மா ரகம்

சிந்து என்ற மா ரகத்தை விதையில்லா ரகம் என்று சொல்லுகிறார்கள், இந்த ரகத்தில் கொட்டைகள் காகிதம் போல மெல்லியதாக இருக்குமாம், வெண்குர்லா என்ற ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.  

உலக மா உற்பத்தியில் இரண்டாவதாக இருக்கும் சைனா உலக உற்பத்தியில், 11.2 %  மாவினை உற்பத்தி செய்கிறதுலகில் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகள், இந்தியா, சைனா, தாய்லாந்து, பாகிஸ்தான், மெக்சிகோ, இந்தோனேசியா, பிரேசில், பங்ளாதேஷ்,  நைஜீரியா, மற்றும் பிலிப்பைன்ஸ்.    

மா உற்பத்தியின்   நாயகன்

மா உற்பத்தியில் அதிகம் செய்யும்நாடு என்ற கேடயத்தை பல ஆண்டுகளாக கையில் வைத்திருக்கும் நாடு இந்தியாஆனால் ஏற்றுமதி பற்றி கேட்டால் கவலைக்கிடம்.

 மா ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருக்கும் நாடு மெக்சிகோஅநேகமாய் நாம் ஆறவாது இடத்தில் இருப்போம் என்று நினைக்கிறேன்கீழே இருக்கும் அட்டவணையைப் பாருங்கள், 2018 ம் ஆண்டின் படி முதல் ஐந்து இடங்களில் இருக்கும் நாடுகள்.  

       1. மெக்ஸிகோ        2. நெதர்லேண்ட்ஸ்        3. தாய்லாந்து 275.1. மில்லியன் யுஎஸ் டாலர்

       4. பிரேசில்        5. பெரு

கூடுதலான கவனம் செலுத்தும் 10 உலக நாடுகள்

மா உற்பத்தியில் கூடுதலான கவனம் செலுத்தும் 10 உலக நாடுகள் பற்றிய ஒரு பட்டியல் போட்டிருக்கிறார்கள். அதில் 10வது இடத்தில் கூட இந்தியா இல்லை என்பது மானமாக உள்ளது, வருத்தமாக உள்ளதுஇதோ 2018 ம் ஆண்டின் பட்டியல்.

1.         உகாண்டா 2. கம்போடியா 3. ப்பான் 4. பங்களாதேஷ்; 5. கேமரூன் 6. சுலோவேக்கியா 7. கானா 8. வெனிசுலா 9. கென்யா 10. சைனா 11. குரோசியா.   

சந்தேகம் இருந்தால், WWW.WORLDRICHCOUNTRIES.COM/TOP MANGO EXPORTERS என்ற இணைப்பில் வலைத்தளத்தை பார்வையிடுங்கள்.     

இந்தியாவில் மா உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம்.  தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளதுஇரண்டாவது, மூன்றாவது இடத்தில் இருப்பவை ஆந்திரா மற்றும் கர்நாடகா.

இளைஞர்களுக்கு வேண்டுகோள்

புதியதாக விவசாயத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் ஆா்வ முள்ள இளைஞர்கள் இந்தப் பட்டியலைப் பார்க்க வேண்டும்தரமான உற்பத்திக்கு போதுமான விழிப்புணர்வு தந்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்

நமக்கு வாய்ப்புக்கள் ஏராளமாய் உள்ளதுஅதில் நாம் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதுதான் உண்மைஆா்வமுள்ள இளைஞர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறேன்.

WWW. THE DAILY RECORDS.COM – TOP 10 LARGEST MANGO PRODUCING COUNTRIES IN TO WORLD

WWW.WORLDRICHCOUNTRIES.COM/TOP MANGO EXPORTERS (893  WORDS)

PLEASE PST A COMMENT, REGARDS – GNANASURIA BAHAVAN D (AUTHOR)

9999999999999999999999999999

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...