வேகமாய் வளரும் மலைவேம்பு |
(MALAIVEMBU,
CHINA BERRY, INDIAN LILAC, TEXAS UMBRELLA, MELIA AZADIRACHTA, MILIACEAE )
தாவரவியல் பெயர் : மீலியா அசாடிரக் (MELIA AZADIRACH)
பொதுப்பெயர்
/ ஆங்கிலப்பெயர் : சைனா பெரி, இந்தியன் லிலாக், பீட்
ட்ரீ, டெக்சாஸ் அமப்ரெல்லா, அம்ப்ரெல்லா செடார், ஒயிட் செடார், சிலான் செடார், சிலான் மகோகனி, சிரிங்கா பெரி
ட்ரீ (CHINA BERRY, INDIAN
LILAC, PEAT TREE, TEXAS UMBRELLA, UMBRELLA CEDAR, WHITE CEDAR, CEYLON CEDAR,
CEYLOM MAHAGONY, SIRINGA BERRY TREE)
தாவரக்குடும்பம்
: மிலியேசி (MILIACEAE)
தாயகம்: இந்தியா,
மலேசியா, ஆஸ்ட்ரேலியா, ஆசியா.
டெங்குவை
குணப்படுத்தும் அரிய 3 வகை மூலிகைகளில் ஒன்று மலைவேம்பு. மற்றவை
இரண்டு பப்பாளி மற்றும் நிலவேம்பு.
மலைவேம்பு
அற்புதமான கால்நடைத்தீவனம். பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்றால் கென்யா
விவசாயிகள் தேடுவது மலை வேம்புதான். 1880
லிருந்து அழகான மரமாக அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட மரம்.
சமீப
காலத்தில் தனிப் பயிராகப் பயிரிடும் அளவிற்கு தமிழக விவசாயிகளால் விரும்பப்படும்
மரம் மலைவேம்பு.
ஆயர்வேதம்,
சித்த மருத்துவம், பழங்குடி மக்கள் வைத்தியம், யுனானி மருத்துவம், சீனாவின்
பாரம்பரிய மருத்துவம் அனைத்திற்கும் கைகொடுப்பது மலைவேம்பு.
வெளிர்காவி
முதல் அடர் சிவப்பு நிறம், நடுத்தரமான அடர்த்தி (DENSITY), பர்மா தேக்கு மாதிரியான தோற்றம் தரும். தரமான மரம் என்று சொல்லலாம்.
இன்னும் சரியாகப் பயன்படுத்தப்படாத மரம். சுலபமாக இதனை பதப்படுத்தலாம் (SEASONING).
நீண்டநாள்
உழைக்கும் மரம்
மலைவேம்புக்கு
ஒரு சிறப்பு உண்டு. நீண்டநாள் உழைக்கும்.
பத்தே நாளில் பல்லிளிக்காது. நீரில் அழுகிப் போகாது. நீரில் மூழ்கியிருந்தாலும்
மழையில் நனைந்தாலும் மற்ற மரங்களைப்போல
ஜலதோஷம் பிடிக்காது. இதன் இலைகள் வேப்ப இலைகளைப்போல கசக்காது.
என்னுடைய
தோட்டத்தில் ‘மியாவாக்கி’ மாடலில் ஒரு சிறு வனத்தை உருவாக்கி உள்ளோம். அதில் 1100 மரங்கள்
உள்ளன. மொத்தம் 100 வகையான மரங்கள் வைத்திருக்கிறோம். அதில் அதிக வேகமாக உயரமாக வளருவது
மலைவேம்பு மரங்கள்தான். மூங்கிலுக்கு இணையாக வளருமா என்று கேட்காதீர்கள்.
மலைவேம்பின் பலமொழிப் பெயர்கள்:
தமிழ்:
மலைவேம்பு, காட்டுவேம்பு (KATTU
VEMBU)
இந்தி:
பக்கெயின்(BAKKAIN)
மணிப்புரி:
சீஸ்ராக்(SEESRAK)
மராத்தி: பக்காய் நிம்ப் (BAKKAY NYMB)
பெங்காலி;: பக்கர்ஜாம், கோரா நீம் (BAKKARJAM, KORA NEEM)
உருது:
தாரெக் (THAREK)
தெலுங்கு:
துரக்கா வேப்பா (DURKKA
VEPPA)
கன்னடா:
ஹெப்புவு (MALAIVEMBU)
நேப்பாளி:
பக்கேனு, பகெயினோ, மகாநீம்(BAKKENU,
BAKKEYINO, MAHA NEEM)
ஆப்ரிக்கன்:
செரிங் பூம் (CHERING BUM)
அரபி:
சான்சலாக்த் (SANSALAKTH)
மடகாஸ்கர்:
வோண்டலிகா (WONDALIKA)
இஸ்ரேல்:
இஸ்டாரெக்கேத் (ISTAREKETH)
மரத்தின்
தமிழ்ப் பெயர் : மலை வேம்பு (MALAIVEMBU)
பால்
உற்பத்தி பெருகும்
விளை
நிலங்களுக்கு தழை உரமாகும். கால்நடைகளுக்கு தீவனமாகும். பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்றால்
கென்யா விவசாயிகள் தேடுவது மலை வேம்புதான்;
உலர்ந்த இலைகளை பயன்படுத்தி சேமிப்பில் தானியங்களை பூச்சிகள் தாக்காமல்
பாதுகாக்கலாம்; இலைகளை இயற்கையான பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்தலாம்.
பாடும்
பறவைகளுக்கு பிடிக்கும்
வெள்ளாடுகளுக்கும்,
செம்மறி ஆடுகளுக்கும் தீவனமாகும் கனிகளைத்தரும் மரம். ‘கிக்’
குக்காக பறவைகள் இதன் பழங்களை விரும்பி சாப்பிடுகின்றன. ‘
ஹம்மிங்பேர்ட்’ என்று சொல்லப்படும் பாடும் பறவைகள் இந்த பழங்களுக்கு அடிமை. ஆனால்
அதற்கு பிரதி உபகாரமாக இதன் விதைகளை பல இடங்களிலும் தங்களது எச்சத்தினால் பரப்புகின்றன.
ஆனால் மனிதர்கள் சாப்பிட்டால் விஷம். ஆப்ரிக்காவில் ஒரு வகையான காட்டு பழமரம் இருக்கிறது. அதன் பெயர் பெயர் மரூலா (MARULA). அந்த மரத்தின் பழங்கள் நம்ம ஊர் நாட்டு சரக்கைவிட ரொம்ப ‘காட்’. பயங்கர ‘கிக்’. யானைகளே தடம் மாறி தடுமாறிப் பொகின்றன என்றால் பாருங்கள். மலைவேம்பு பழங்கள் அவ்வளவு ‘கிக்’ தருமா என்று தெரியவில்லை. விதையிலிருந்து எடுக்கும் எண்ணெயில் சோப்பு தயாரிக்கலாம்.
கடைசல்
சாமான்கள் கூட செய்யலாம்
மரத்தில்
பொம்மைகள், பெட்டிகள், வேளாண்மைக் கருவிகள், மேஜை, நாற்காலி இசைக்கருவிகள், கடைசல் சாமான்கள் செய்யலாம். அழகு மரமாக தோட்டத்தில், வீட்டு
முகப்பில், சாலை ஓரங்களில், நடலாம். இலைகள், கிளைகள், மரம், அடுப்பெரிக்க விறகாக தரும்;; மரம். சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்தும்.
இலைகள், பூ, காய், கனி, பட்டை, வேர், அனைத்தும் பூச்சிக் கொல்லி திறன் பெற்ற மரம்.
வளர்த்தால் பணம் தரும் மரம்
வடிகால்
வசதி வேண்டும். களிமண், அமில மண், உப்பு மண், மற்றும் ஆழம் குறைந்த மண்ணிலும் அதிகபட்சம் 45 மீட்டர்
வரை நன்கு வளரும்.. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் மரம் என்று இந்த
மரத்தைப் பார்த்து பயப்படுகிறார்கள் அமெரிக்காவில் தெற்கு கரோலினா மற்றும்
ஜார்ஜியா மாநிலத்து மக்கள்.
தமிழ்நாட்டில்
பணம் தரும் மரம் என்று பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். எந்த மரம் ஒரு
வருஷத்தில் 30 அடி வளர்கிறது ?
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment