மலைச்சவுக்கு அழகான நிழல் மரம் |
(MALAI
SAVUKKU, SIVER OAK, )
தாவரவியல் பெயர்:-- கிரிவில்லியா ரோபஸ்டா (GREVILLEA ROBUSTA )
பொதுப்பெயர்
/ ஆங்கிலப்பெயர் :-- (MALAI SAVUKKU, SIVER OAK, )
தாவரக்குடும்பம் :-- புரோடியேசி (PROTEACEAE)
மலைச்
சவுக்கு என்னும் சில்வர் ஓக் மரம் ஒரு ஆஸ்திரேலிய மரம். காப்பி தேயிலைத்
தோட்டங்களில் நிழல் தர, மிளகுக்கொடி ஏற்றிவிட, மூடாக்கு போட, மரச்சாமான்கள் செய்ய, சாயம் மற்றும் பிசின் எடுக்க சாலைகளில் அழகு மரமாய் வளர்க்க அம்சமான மரம்.
ஆஸ்திரேலிய
மரமாயினும் சீனா, எரித்ரீனா, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஜமைக்கா, கென்யா, லாவோஸ், மலாவி, மலேஷியா, மாரிஷியஸ், நேப்பால், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் ஆப்ரிக்கா, ஸ்ரீலங்கா, தான்சானியா, உகாண்டா, அமெரிக்கா, வியட்நாம்;, ஜாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் இந்த சில்வர் ஓக் மரம் பிரபலம்.
சிறுமலைப்
பகுதிகளில்தான் நான் முதன் முதலில் காப்பித் தோட்டங்களில் இந்த மரங்களைப்
பார்த்தேன். மரங்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கும். அதிகம் படராத கிளைகளையுடைய
பருமனான மரங்கள். மலைகளுக்கு அழகு தரும் மரங்கள்.
இதன்
அழகான பூங்கொத்துக்களை சமீபத்தில்தான் ஜவ்வாது மலையில் பார்த்தேன். அடர்த்தியான
ஆச்சர்யமான மஞ்சள் நிறத்தில் கொத்துக்கொத்தான பூக்கள். அதன் பூங்கொத்துக்களைப்
பிடித்து உலுக்கினால் ஒருபடி தேன்
தூரலாகத் தூறுமாம். பூவில் வாயை வைத்துக்கூட உறிஞ்சலாம் எனத் தோன்றுகிறது.
அது சரி
தும்பைப் பூவில் தேன் குடித்திருக்கிறீர்களா ? குடித்திருந்தால்
அதன் சுகம் தெரியும் (தேன்). விடிந்தும் விடியாதப் பொழுதில், பனி ஈரத்தில் ! அதுவும் சூரியன் வெளி கிளம்புவதற்கு முன்னால்.
இதையெல்லாம்
பையன்களாய் இருக்கும் போது செய்யலாம். பழங்களாகி கிழங்களாகிய பின்னால் செய்தால், இன்னும் சுகமாய் இருக்கும்.
பலமொழிப்
பெயர்கள்:
தமிழ்:
மலைச்சவுக்கு (MALAI
SAVUKKU)
மணிப்புரி:
கவுபிலா (KAVUBILA)
பெங்காலி:
ருபாசி (RUPASI)
அசாமிஸ்:
டெலி வி (TELI VI)
கன்னடம்:
சில்வர் ஓக் (SILVER OAK)
இந்தி:
கஜூர் (KHAJUR)
பாமிஸ்:
கடாவ் எச் எம் ஐ (KADAV
HMV)
பிரென்ச்:
செனி டி ஆஸ்ட்ரேலி (SENE
DI AUSTRELI)
ஹவாயன்:
ஓக்கா கிளிக்கா (OKKA
KLIKKA)
நேப்பாளி:
கன்ஜியோ (KANGIO)
ஸ்பேனிஷ்:
அக்ரவில்லா (AGRAVILLA)
ஸ்வாகிலி:
மெக்ரிவியா (MGRIVIYA)
தாய்:
சன் இண்டியா (SUN INDIA)
உருது:
பெக்கார் (BEKKAR)
வியட்நாமிஸ;
டிரைபாம் (TRIPAM)
வேனிலா
கொடிகளை மேலே
ஏற்றிவிடலாம்
மலைத்
தோட்டங்களில் அழகூட்டும். . தழைகளை,
விளை நிலங்களுக்கு உரமாக்கலாம். பயிர்களுக்கு
மூடாக்கு போடலாம். தேயிலை மற்;றும்
காபித் தோட்டங்களுக்கு நிழல் தரும். மிளகுக் கொடி மற்றும் வேனிலா கொடிகளை மேலே
ஏற்றிவிட கொழு கொம்பாகும்.
காப்பி தோட்டங்களுக்கு நிழல் தரும்
தேயிலைத்தோட்டங்களில்
அதிக நிழல் தேவைப்படாது. ஆனால் காப்பித் தோட்டங்களில் கூடுதலான நிழல் தேவை. ஒரு
சல்லடையை வெயிலில் பிடித்தால் அதனடியில் விழும் நிழல் மற்றும் வெயில்தான் காப்பி
செடிகளுக்கு தேவையான அளவு என்று பட்டிவீரன்பட்டி காப்பி விவசாயிகள் சொல்லக்
கேட்டிருக்கிறேன்.
ஒட்டுப்பலகைகள் செய்யலாம்
இதன்
மரத்தில், மேஜை , நாற்காலி, கதவுகள், ஒட்டுப்பலகைகள்
செய்யலாம். பெட்டிகள், விறகு,
கரி, நீராவி படகுகளுக்கு
மற்றும் பாய்லர்களுக்கு எரிபொருளாக,
காகிதக்குழம்பு தயாரிக்க இப்படி பலவகைகளில் பயனாகும்.
சமூக்க்காடுகள் வளர்ப்பு
ஈரச்செழிப்பான
பகுதிகளில் சமூகக் காடுகள் வளர்ப்பிற்கும், சீர்கேடடைந்த
காடுகளை மீண்டும் சீரமைக்கவும் உகந்தது என நிரூபிக்கப்பட்ட மரம். உதாரணமாக
இதுபோன்ற பணிகளில் நேப்பாள நாட்டில் இந்த சிலவர்ஓக் மரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
வலிகளை காய்ச்சலைப் போக்கும்
கென்யாவின் பழங்குடி மக்கள், இதனை
தொண்டைப்புண், காது வலி, மார்புவலி,
பல்வலி, ஃப்ளூ காய்ச்சல், தோல் சம்மந்தமான நோய்களை குணப்படுத்த இந்த சில்வர் ஓக் மரத்தினை பயன்படுத்துகிறார்கள்.
மிதமான
வெப்பமுள்ள பகுதிகளில் வளரும்
வெப்ப
மண்டலப் பிரதேசங்களில்
வளர்ந்தாலும் மிதமான வெப்பமுள்ள பகுதிகளிலும், ஈரச்செழிப்பான
நிலங்களிலும் லேசான கார அமிலநிலை உள்ள பகுதிகளிலும் நன்கு வளரும். வளர்ந்த மரங்கள்
ஓரளவு வறட்சியைத் தாங்கும்.
இதன்
விதைகளை இரண்டு மணிநேரம்
குளிர்ந்த நீரில் ஊறவைத்து விதைத்தால் இரண்டு
முதல் மூன்று
வாரங்களில் முளைக்கும். ஒரு வாரத்தில் எடுத்து பாலித்தீன் பைகளில்
நடலாம். நட்ட முதல் 2 முதல் வாரங்களுக்கு
செடிகளுக்கு நிழல் வேண்டும். ஆறு முதல் 8 மாதக் கன்றுகளை நிலங்களில் நடலாம்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment